Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம்!-வீடியோ & படங்கள்

Featured Replies

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அந்நாட்டுப் படைகளால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதாபிமற்ற குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் நியமித்துள்ள பன்னாட்டு விசாரணை குழு, இந்தியாவிற்கும் வந்து, தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் இருந்துவரும் ஈழத் தமிழ் ஏதிலிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஈழத் தமிழரை திட்டமிட்டு இன அழிப்பு செய்த இலங்கை இனவாத அரசு நடத்திய அந்த சாட்சிகளற்ற போரின் வாழும் சாட்சிகளாக இருப்பவர்கள், இன்றளவும் ஈழத்திலும், தமிழ்நாட்டின் முகாம்களிலும் வாழும் தமிழர்களே. போரினால் தங்கள் உறவுகளை இழந்து, உடமைகளை இழந்த பல தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து அயல் நாடுகளுக்கும் சென்று தஞ்சமடைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்படும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற நவநீதம் பிள்ளை அவர்கள் கூறியிருந்தார்கள்.

இந்த நிலையில், மார்டி அட்டிசாரி தலைமையிலான ஐ.நா. பன்னாட்டு விசாரணைக் குழு, இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காது என்று பரவலாக பேசப்படுகிறது. இனப்படுகொலை செய்த இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தந்திரோபாயக் குழுவின் தலைவராக இருக்கும் சுப்ரமணியன் சாமி இலங்கை சென்று, அங்கு அளித்த பேட்டிகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆதரவாக நிற்குமோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
seeman-1.JPG
ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி, தமிழினத்தையே திட்டமிட்டு அழித்தொழித்த இலங்கை இனவாத அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்த பன்னாட்டு விசாரணைக் குழு இந்திய வர அனுமதிக்க வேண்டும் என்பது தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வாகும். இதனை பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்தான் எடுத்துரைக்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சி விடுக்கும் கோரிக்கையாகும்.
seeman-2.jpg
 தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் மக்களிடம் ஐ.நா. விசாரணைக் குழு நேரிடையாக விசாரணை நடத்த மத்திய அரசு விசா வழங்கிட வேண்டும்.
seeman-3.jpg
 விசாரணை நடத்த வரும் ஐ.நா. குழுவிடம் அகதிகள் முகாம்களில் உள்ளவர்கள் உண்மைகளைக் கூற, உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேணடும், ஏனெனில், ஐ.நா. குழுவின் விசாரணையில் பங்கேற்றாலும், அவர்களிடம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக பேச வேண்டும் என்று முகாம் வாழ் ஈழத் தமிழ் மக்கள் மிரட்டப்படுகின்றனர்.
seeman-4.jpg
 ஐ.நா.விசாரணைக் குழு இந்தியா வர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசே முன்மொழிந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
seeman-5.jpg
அதுமட்டுமல்ல, ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவரும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை ஐ.நா. பொது அவையில் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனை வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.
seeman-6.jpg
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, சேப்பாக்கத்திலுள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகை அருகே நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓவியர் வீரசந்தானம் மேலும் பலர் கலந்து கண்டன உரை ஆற்றினார்கள். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.