Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா பேரணியை முன்னிட்டு நடைபெற்ற அரசியல் சந்திப்பு!

Featured Replies

 

15.09.2014 திங்கட்கிழமை அன்று புதிதாக பதவியேற்ற ஐ.நா பொதுச்செயலரின் பிரதம செயலாளருடன் ஒன்றரை மணிநேரங்கள் தமிழர் தரப்பு சந்திப்பை மேற்கொண்டிருந்தது.

இச்சந்திப்பின் போது பொதுமக்கள் பிரதிநிதிகளும், நீதிக்கான மிதிவண்டிப்பயணம் மேற்கொண்ட பிரதிநிதியும், அனைத்துலக மக்களவைப் பிரதிநிதியும், தமிழர்களுக்கான மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகளும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளை நேரில் பார்த்த முதன்மைப் பிரதிநிதியும் கலந்து கொண்டனர்.

தமிழர் தரப்பால் கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளாக சிங்கள அரசால் திட்டமிட்டு நடந்த, நடத்தப்படுகின்ற இனப்படுகொலைகள் யாவும் ஆதாரத்துடனும், சாட்சிகளுடனும் சமர்ப்பிக்கப்பட்டு, தமிழ்மக்களின் பூர்வீக நிலமான வடக்கு - கிழக்குப் பகுதிகள் இன்று சிங்களமயமாக்கப்பட்டுக் கொண்டு வருவதுடன், அடுத்து வரும் பத்து ஆண்டுகளில் தமிழர்களின் பூர்வீகப் பகுதிகள் யாவும் சிங்கள மயமாக்கப்பட்டு சிறீலங்கா அரசாங்கம் தான் திட்டமிட்டபடி தன் இனவழிப்பில் வெற்றியடைந்துவிடும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட முதன்மைப் பிரதிநிதியின் சாட்சி பதிவாகும் போது தமிழ்மக்களின் ஏக  பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் அமைப்பு 2002 ஆம் ஆண்டில் அனைத்துலகம் தமிழ்மக்களையும், தமிழர் நிலங்களையும் பாதுகாத்து தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் என நம்பியே பல கட்டப் பேச்சுவார்த்ததைகளில் ஈடுபட்டு, சிறீலங்கா அரசின் கபட நாடகங்கள் அரங்கேறிய அதேவேளை தமிழீழப் பகுதிகள் மீது சிறீலங்கா அரசு திட்டமிட்டு  அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மீதான தடையை விதித்து ஆரம்பத்தில் தமிழினத்தை பட்டினியாலும், மருந்தின்மையாலும் பல உயிர்களைப் பலி கொள்ள வைத்ததுடன், பின்னர் விமானத்தாக்குதல், கிளைமோர் தாக்குதல் என பல தமிழர் உயிர்களைக் காவு கொண்டதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களை அங்கவீனர்களாக்கியது.

2008 ஆம் ஆண்டில் சிறீலங்கா அரசாங்கம் தனது அடுத்த திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ( UNHCR உட்பட) வெளியேற்றிவிட்டு தனது படுகொலையை ஆரம்பித்தது. இக்காலகட்டத்தில் தமிழ்மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழ் மக்களின் விடுதலைப் போராளிகள் தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப் போராளிகளின் தற்பாதுகாப்பு யுத்த முயற்சியால் 2008 காலப்பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.

பின்னர் சிறீலங்கா அரசாங்கத்தின் பொய் அறிவுறுத்தலை நம்பி, பாதுகாப்பு வலயமென அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்து, குறுகிய பகுதிக்குள் அதிகளவான மக்கள் குவிக்கப்பட்டனர். இவ் வேளை சிறீலங்கா அரசின் தரைப்படை, வான்படை, கடற்படை மூன்றும் சேர்ந்து பாதுகாப்பு வலயமென அறிவித்து மக்கள் செறிந்திருந்த பகுதி மீது பல்குழல் எறிகணைகள், கொத்துக் குண்டுகள், பொசுபரசுக் குண்டுகள் போன்ற அனைத்துலகத்தால் தடைசெய்யப்பட்ட ஆயதங்களைப் பாவித்து தமிழினத்தைக் கொன்றுகுவித்தது.

வைத்தியசாலை, பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதிகள் கூட சிங்கள அரசபடைகளின் திட்டமிட்ட நடவடிக்கையால் அழித்தொழிக்கப்பட்டன. தமது உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு பதுங்குகழிகளுக்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் அக் குழிகளுக்குள்ளேயே அரச படைகளின் கனரக வானகங்கள் கொண்டு வயது வேறுபாடின்றி மூடப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்த அனைத்து தடயங்களும் இன்று யுத்தப்பகுதிகளில் கண்கூடாகப் பார்க்க் கூடியதாக இருப்பதால் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்குழு இறுதியுத்தம் நடைபெற்ற வன்னிப்பகுதியில் வந்து தனது விசாரணையை மேற்கொள்வதன் ஊடாகவே  சிங்கள அரசினால் நடாத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையை அறிந்து, தமிழருக்கான நீதியைப் பெற்றுத்தருவதற்கான அவசியத்தை உணரமுடியும் .

யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர்களின் பூர்வீக நிலப்பகுதியான ஏழாயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு இராணுவத்தின் பாவனையிலும் இன்றும் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பகுதிகள் சிறீலங்கா அரசாங்கத்தால் அபிவிருத்தித் திட்டங்கள் எனக் கூறிக்கொண்டு சிங்கள மக்களைக் குடியேற்றும் திட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் புகைப்படங்களுடனும், புள்ளி விபரங்களுடனும் பிரதம செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டன.  

அத்துடன் மே மாதம் அங்கு இராணுவத்திடம் சரணடைந்த மற்றும்  ஒப்படைக்கப்பட்ட இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகளின் நிலைமை இன்றுவரை தெரியவில்லை. இராணுவத்திடம் சரணடைந்த மற்றும்  ஒப்படைக்கப்பட்டவர்கள் குடும்பத்தினரிடம் மீள ஒப்படைப்பது சிறீலங்கா அரசின் கடமை. அப்படியிருக்கும் போது சிறீலங்கா அரசானது காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் ஆணைக்குழுவை எதற்காக உருவாக்க வேண்டும. இந்த ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யச் சென்றவர்கள் சிறீலங்கா புலனாய்வுக் குழுவினரால் அச்சுறுத்தப்பட்டு, அனைத்துலகத்தை ஏமாற்றும் பொருட்டு சிறுதொகையான மக்களே பதிவுகளை மேற்கொண்டனர்.

யுத்தம் முடிவடைந்த இந்த ஐந்து ஆண்டுகளில் சிறீலங்கா அரசினால் நாள்தோறும் துன்பப்படும் தமிழ்மக்கள்  இத் துன்பத்திலிருந்து தம்மை மீட்க விடுதலைப் புலிகள் மீண்டும் வரமாட்டார்களா என்ற ஆதங்கத்துடனே காத்திருக்கிறார்கள்; என்பதோடு, தமிழினத்தை திட்டமிட்டு அழிக்கும் சிங்கள அரசிடமிருந்து ஒரு போதும் தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்காது.

ஆகவே இன்று இயற்கையையும் சூழலையும் பாதுகாக்கும் ஐ.நா அவை அங்கு அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டதுடன்  ஐ. நா அவையால் உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு வன்னிப்பகுதியில் வந்தே தனது விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென மீண்டும்; வலியுறுத்தப்பட்டது.

இவை அனைத்தையும் கரிசனத்துடன் கேட்டறிந்த பிரதம செயலாளர், வன்னியிலிருந்து வந்த பிரதிநிதியை பாதுகாக்கும் பொருட்டு சில உறுதிமொழிகளை அளித்ததுடன், புலம் பெயர் பிரதிநிதிகளிடம் சர்வதேசம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை அறிந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விசாரணைக்கான பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு அத்துறைசார் நிபுணர்கள் நியமிக்கப்பட்டு, இன்று நடைபெற்ற வண்ணம் உள்ளது. சிறீலங்கா அரசாங்கம் இக்குழுவை அங்கு அனுமதிக்காத போதும் அக்குழு திறம்படச் செயற்பட புலம்பெயர்தமிழர்கள் தமக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 2002 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டுவரையான சாட்சிகளைப் பதிவு செய்யம்படி கேட்டுக் கொண்டதுடன், சிறீலங்கா அரசாங்கத்தின் கடும் போக்கிற்கு தாங்களும் தங்களால் முடிந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறியிருந்தார்.

மேலும் தற்போது பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் பல இனவழிப்பு சார்ந்த விசாரணைக்குழுக்களில் அங்கம் வகித்து அனுபவம் உள்ளவர் எனவும், நீதிக்காக நிச்சயம் உழைப்பவர் எனவும், அழிக்கப்பட்ட  இனங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தவர் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

ஆகவே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அனைவரும் தமது வரலாற்றுக் கடமையை உணர்ந்து தமிழீழத்திற்கான வாசல் திற்குகும் வேளையில் பொறுப்புணர்ச்சியுடன் தமிழீழத்திற்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து தமக்காக கடமையினை விரைவில் செய்து விடுதலையை விரைவுபடுத்தமாறு கேட்டுக் கொள்கிறோம்.http://www.pathivu.com/news/33938/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.