Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றப் பாடுபடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – ஐ.நாவில் நிமல்கா வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்றப் பாடுபடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – ஐ.நாவில் நிமல்கா வேண்டுகோள்.

[Thursday 2014-09-18 17:00]
nimalka-fernando-200-news.jpg

இலங்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தை நிறைவேற்ற பணியாற்றும் மனித உரிமை பணியாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவசியம் என இலங்கை மனித உரிமை ஆர்வலர் நிமால்கா பெர்ணாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27 வது அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் அங்கு தெரிவித்துள்ளதாவது.

  

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நாங்கள் வரவேற்கிறோம், உலகம் முழுவதிலுமுள்ள மனிதஉரிமை பாதுகாவலர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியதும். ஐ.நாவுடன் ஒத்துழைப்பவர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறைகளை வலுப்படுத்துவதும் அவசியம். ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காதது துரதிஸ்டவசமானது.

மேலும் அரசாங்கம் இந்த பொறிமுறையின் முன்னால் சாட்சியமளிக்க முன்வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.அரச கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களும், ஆளும் கட்சியுமே இந்த அச்சுறுத்தலுக்கு பிரதான காரணம். அரசசார்பற்ற அமைப்புகளின் செயலகத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட உத்தரவு, கருத்துச்சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பவற்றிற்க்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அரசாங்கத்தை ஜனநாயக கொள்கைகளையும்,சட்டத்தின் ஆட்சியையும் பின்பற்றுமாறும்,காணாமல்போனவர்கள் தொடர்பாகவும், யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரும் அரசசார்பற்ற அமைப்புகளை தாக்கி, செயலிழக்கச் செய்து, அழிப்பதே இலங்கை அதிகாரிகளின் நோக்கம்.

இலங்கையின் ஏதேச்சதிகாரத்தை எதிர்ப்பதனால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள அதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தை நிறைவேற்ற பணியாற்றும் மனித உரிமை பணியாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், உட்பட்டோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்க்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை கோருகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

 

seithy.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.