Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்குப் போர்க்கப்படும் துண்டுகள் போருக்கான தூண்டுதல்கள்! மாவை சேனாதிராஜா வீராவேசம்

Featured Replies

mavai%209554.jpg

 

இன்று எமக்கு போடப்படும் மாலைகளும் பொன்னாடைகளும் எம்மை மேலும் போராடவேண்டும் என்றே தூண்டுகின்றன. போருக்கு செல்வதற்கான தூண்டுதலாகவே அவை அமைக்கின்றன. போருக்கு செல்வதற்கான ஆடை அணிகளாகவே நான் அவற்றைப் பார்க்கின்றேன். - இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.
 
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டமையை பாராட்டி காங்கேசன்துறை தமிழரசுக் கட்சி அலவலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்புக் கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: -
 
நாங்கள் தோற்றுப் போனவர்கள் அல்லர். இதனால்தான் நாம் இன்று அஹிம்சை வழியிலான போராட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளோம் அஹிம்சைப் போராட்டம் என்றும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை. நான் தலைவனாக இருக்கவில்லை. ஆனால் தலைமைப் பொறுப்பையே ஏற்றுள்ளேன். என்னை யாரும் தலைவர் என்று கூறத் தேவையில்லை. 'அண்ணன்' என்ற சொற்பதம் மிகவும் சிறந்ததாக இருக்கின்றது. நான் சிறையில் இருந்த காலத்திலும் கூட என்னிலும் வயதில் குறைந்தவர்களும் கூட என்னை 'அண்ணன்' என்றே அழைப்பார்கள்.
 
நேரு, இந்திராகாந்திக்கு எழுதிய நூலை நான் மறியலில் இருந்த காலத்தில் காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர் கனகசபாபதி எனக்கு அன்பளிப்புச் செய்திருந்தார். நான் அதனை இன்றும் என்னுடன் வைத்துள்ளேன். அதனையே எனது வரலாற்று பட்டப் படிப்புக்கும் ஒரு பாடமாக எடுத்து அதில் பட்டமும் பெற்றுள்ளேன். நான் எல்லாவற்றையும் சுமப்பேன் என்று கூறவில்லை.
 
நீங்களும் என்னுடன் இணைந்து சுமக்கவேண்டும். நாங்கள் யாரும் தூங்கிவிடக் கூடாது. எமது இலக்கை நோக்கி நகர வேண்டியது அத்தியவசியமாகும். கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஒரு நாட்டின் தூதுவர் வந்து என்னுடன் தனியாக பேசினார். உள்நாட்டுப் பிரச்சினையில் தாங்கள் தலையிடுவதை அரசு விரும்பவில்லை என்றார். ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள் பலர் சிறை சென்றதும் அஹிம்சை வழியில் தம்மை வருத்தி அங்கு மாண்டுள்ளார்கள்.
 
சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அந்த வேளையில் காங்கிரஸ் கொள்கைக்கு ஆபத்து வந்துள்ளது என்ற கூறிய காந்தி வேறு ஒருவரை போட்டிக்கு நியமித்தார். ஆனால் அதில் வெற்றிபெற்றவர் சுபாஸ் சந்திபோஸ். துன்பத்தை எந்தளவுக்கு ஒருவன் தாங்கிக் கொள்கின்றனோ அவனே அந்த நிகழ்வில் வெற்றி பெறுகின்றான். கடந்த காலத்தில் எமது புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஜபக்‌ஷவால் எமது பகுதியில் எந்தவொரு வெற்றியையும் பெறமுடியவில்லை.
 
இதனை நீங்கள் சரியான முறையில் ராஜபக்‌ஷ அரசுக்கு விளக்கியுள்ளீர்கள்; காட்டியுள்ளீர்கள். நாங்கள் பாண்டவர்கள் போல் வெற்றி பெற முடியும். அறம் பிழைப்போருக்கு அறம் கூற்றாகும் என்பது நியதியாகும். இந்த வகையில் இதற்கு நாம் உரிய முறையில் விடை காணவேண்டும். நாம் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் எம்மிடம் பல மாணவாகள், இளைஞர்கள் வருவார்கள் கலந்துரையாடுவார்கள்.
 
இத்தகையவர்கள் இன்றும் கூட இங்கு இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் நாம் செல்லும் சந்தர்ப்பங்களில் வந்து கலந்துரையாடி வருகின்றார்கள். அவர்கள் இங்கு இருந்தால் இன்னும் பலம் மிக்கதாக இருக்கும். ஆனாலும் இன்றும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து தமது பங்களிபுக்களை நல்ல முறையில் மேற்கொள்கின்றார்கள். நாம் ஒரு சிற்றெறும்பை மிதித்ததும் அது எம்மை யாருடைய பாதம் என்றும் பார்க்காது கடிக்கின்றது. அதே போன்று நாமும் இன்று மிதி படுகின்றோம். அதற்காக சும்மா இருக்க முடியாது. நாம் அன்று சிறையில் இருந்த வந்த வேளையில் எமக்கு போடப்பட்ட மாலைகளை ஏற்கமாட்டோம் என்று கூறினோம். அந்த மாலைகளை நாம் ஏலத்தில் விற்று அன்று இளைஞர் பேரவைக்கு நிதியை சேகரித்தோம். இன்று எமக்கு போடப்படும் மாலைகளும் பொன்னாடைகளும் எம்மை மேலும் போராடவேண்டும் என்றே தூண்டுகின்றன. போருக்கு செல்வதற்கான தூண்டுதலாகவே அவை அமைக்கின்றன.
 
போருக்கு செல்வதற்கான ஆடை அணிகளாகவே நான் அவற்றைப் பார்க்கின்றேன். எமது சிறு பிள்ளைகள் மீண்டும் ஒரு போராட்டத்திற்குச் செல்லும் நிலமைக்கு செல்லவிடாது நாம் இந்த போராட்டததை நடத்தி அவர்களை நல்ல முறையில் வாழ வழி செய்ய வேண்டியது அவசியமாகும். எமக்கு கிடைக்கப்போகும் 'தமிழீழம்' எங்கு கிடைக்க வேண்டும் என்றால் எமது மண்ணில் தான் கிடைக்க வேண்டும். இதனை விடுத்து நாம் மொழியை இழந்து மண்ணை இழந்து வேறு எங்கும் பெற முடியாது. எமது மண் நாளை அளக்கப்படப் போகின்றது - இராணுவத்தினரின் உல்லாச வாழ்க்கைக்காக. இதனை நாம் அங்கீகரிக்க முடியாது. இதனை தடுக்க வேண்டியது எமது கடமையாகும். - என்றார்.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் வரை ஆயுதம் தூக்கி போராடியவர் சொல்றார் கேளுங்கோ.

அமிர் சாகும் போது மாடியில் டீவி, மக்கள் சாகும் போது சென்னையில் வாசம், பிரபாகரன் சாகும் போது கொழும்பில் சுகவாசம்.

இப்போ இன்னொரு கொலைக்களத்துக்கு உசுப்பேத்தம்.

சம்பந்தரை தூக்கி விட்டு இவரைப்போடும் போதே எதிர்பார்த்தேன் -அண்ணன் மாவை இன்னொரு முள்ளிவாய்காலுக்கு கோடில்லை கார்பெட் ரோட்டே போடுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.