Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

அறிந்து கொள்வோம்... தெரிந்து கொள்வோம்....(புதிய முயற்சி)


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

அனைவருக்கும் வணக்கம். இது ஒரு புதிய முயற்சி. சில காலங்களாக அறிவை வளர்க்கும் முறையில் எந்த ஒரு படைப்புகளும் யாழில் வந்ததாக எனக்கு தெரியவில்லை. அனைவரும் தேவை இல்லாத விடயங்களை முன் வைத்து கருத்துகளை பகிர்ந்து வருவதால், அது பலரை மறுமுகம் கொள்ள வைக்கின்றது. இது ஒரு வருத்தத்துக்கு உரிய விடயம். விடயங்களை அறிவியல் சம்பந்தமாக இனைத்து அதனூடாக நகைச்சுவையாக கருத்துகளை பரிமாறலாம். இதன் மூலம் அறிவையும் வளர்க்கலாம் பொழுதையும் போக்கலாம்..... தயவு செய்து அனைவரும் முன்வைக்கும் விடயங்கள் உண்மையானதா என நன்றாக தெரிந்து விட்டு பதியுங்கள்.

இங்கு, நமக்கு கல்வி கற்கும் இடத்தில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தில் இருந்தோ அல்லது வேலை செய்யும் இடத்தில் இருந்தோ, ஏற்ப்பட்ட அனுபவம் மற்றவர்களுக்கு அறிவார்த்தமான ஒரு படிப்பினையை கொடுக்கும் என நினைத்தீர்களானால் அதனையும் பகிர்ந்து கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்.அனைத்து நண்பர்களும் ( உங்களுக்கு என்னை தெரியாவிட்டாலும்,யாழின் நீண்ட நாள் வாசகர் என்ற முறையில் எனக்கு அனைவரையும் தெரியும்) இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து உங்கள் அறிவை, நீங்கள் தெரிந்து கொண்டுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் நானே ஆரம்பித்து வைக்கின்றேன்.

கள மட்டுறுத்துனர்களிடம் அனுமதி பெறாமல் இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டது தப்பாக இருக்குமிடத்து, அவர்கள் என்னை சும்மா மன்னித்து சும்மா விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

சும்மா.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்த காலத்தில எவரைப்பார்த்தாலும் ஒரு கையடக்கத்தொலைபேசி வைத்திருப்பது ஒரு நாகரீகம் ஆகி விட்டது. சும்மா நாகரிகம் இல்லை.... ஒரு புதிய ரக தொலைபேசி வெளியானதும் உடனே அதை வாங்குவதும், ஆணாக இருந்தால் பெண்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு அதை சும்மா எடுப்பதும் வைப்பதும், பெண்ணாக இருந்தால், ஆண்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு, அதை எடுப்பதும் சிறு தகவல் அனுப்புவது போல பாவனை செய்வது எல்லா இன மக்களிடையேயும் இருக்கும் ஒரு பழக்கம்... எல்லாம் தொலைபேசியைக்காட்டி மடக்கலாம் என்று ஒரு நினைப்புத்தான்....

சரி விடயத்துக்கு வருவம் இப்ப...கையடக்கத்தொலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும் அதனுடைய முழு பயனும் தெரிவதில்லை... இதோ உங்களுக்காக ஒரு தகவல்...

ஒருக்கால் இப்படித்தான் கண்ணா ஒருமுறை கல்யாணம் ஆகிய பின்னர் ஜமுனாவை வீட்டில் இருக்க சொல்லி விட்டு, வேலை விடயமாக வெளியே கிளம்பிச்சென்றார். ( ஜமுனா பிறகு சோட்ஸ் ஒட வந்தா மரியாதை இல்லை என்ற படியால்) ஜமுனா தன்னை விட்டு விட்டு தனியாக போகின்றார் கண்ணா என்ற கோபத்தில் அவரை திட்ட... கண்ண போன இடத்தில தனது காரினது தன்னியங்கி திறப்பானை காரினுள் வைத்து விட்டு காரை பூட்டி விட்டு திறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தால்... இருட்ட வேறு தொடங்கிவிட்டது... தாமதமாகி போனால் ஜமுனா அடிப்பார் என்ற ஒரு பயத்திலாக இருக்கலாம்.... அப்போது அவ்வழியால வந்த யாழ் கள சும்மா விடம் கண்ணா விடயத்தை சொல்ல... சும்மாவோ இதுக்கு போய் ஏனப்ப கவலைப்படுகின்றீர்கள் என்று கூறி தன்னுடைய கைத்தொலைபேசியில் ஜமுனாவின் கைத்தொலைபேசியில் ஜமுனாவை அழைத்து, வீட்டில் இருந்த இரண்டாவது தானியங்கி திறப்பானை எடுத்து காரின் கதவைத்திறப்பதற்கு உரிய பொத்தானை அழுத்த சொல்ல, 100 மைல்களுக்கு அப்பால் இருந்த கண்ணனின் கார் கதவுகள் திறந்து கொண்டன...... அந்த சந்தோசத்தில் சும்மாவுக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் இரவுகளையும் ஜமுனாவையும் நினைத்து கொண்டு 100 மைல் தூரத்தையும் 10 நிமிடத்தில் கடந்து செல்ல போவபர் போல தனது டப்பா காரில் சென்றார்...( டப்பா கார் தான் சீதனமப்பா)

என்ன ஒன்றுமே புரியவில்லையா? சொல்கின்றேன் ....

கையடக்கத்தொலைபேசி வைத்திருப்பது ஒரு வகையில் நல்லது தான்....

நீங்கள் உங்கள் காரின் தானியங்கி திறப்பானை காரினுள் வைத்து காரை பூட்டிவிட்டால்... பயப்படதேவை இல்லை...உங்கள் காரினுடைய மற்றய திறப்பான் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் இருப்பவரின் கைத்தொலைபேசிக்கு உங்கள் கைத்தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்துங்கள். நீங்கள் உங்கள் காரின் அருகில் நின்று கொண்டு, உங்கள் வீட்டில் உள்ளவரை திறப்பானில் திறப்பதற்கு என்று இருக்கும் பொத்தானை அளுத்த சொல்லுங்கள். உங்கள் கார் திறந்து கொள்ளும். இது தூரம் சம்பத்தப்பட்டது அல்ல... யாழ் சும்மா.... 30 மைல் இடைவெளியில் வைத்து முயற்சி செய்ததில் நன்றாகவே வேலை செய்தது......

எங்கயாவது கார் களவு எண்ணிக்கை கூடினா என்னைக்கேட்க வேண்டாம். நான் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும் என்று தான் சொன்னேன்.....

இரசிகயும் , வெண்ணிலாவும்... கையடக்கத்தொலைபேசி வாங்க ஒரு சாட்டு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படுவது எனக்குத்தெரிகின்றது.

தொடருங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

என்னப்பா எவரும் எதுவும் எழுதவில்லை.....

Posted

நீங்கள் உங்கள் காரின் தானியங்கி திறப்பானை காரினுள் வைத்து காரை பூட்டிவிட்டால்... பயப்படதேவை இல்லை...உங்கள் காரினுடைய மற்றய திறப்பான் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டில் இருப்பவரின் கைத்தொலைபேசிக்கு உங்கள் கைத்தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்துங்கள். நீங்கள் உங்கள் காரின் அருகில் நின்று கொண்டு, உங்கள் வீட்டில் உள்ளவரை திறப்பானில் திறப்பதற்கு என்று இருக்கும் பொத்தானை அளுத்த சொல்லுங்கள். உங்கள் கார் திறந்து கொள்ளும். இது தூரம் சம்பத்தப்பட்டது அல்ல... யாழ் சும்மா.... 30 மைல் இடைவெளியில் வைத்து முயற்சி செய்ததில் நன்றாகவே வேலை செய்தது......

இப்பிடி எல்லாம் எங்களை காலாய்க்க முடியாது... கடைசியில் அந்த காரின் கதவுகள் AA காறன் வந்துதான் திறந்துவிட்டதாக அறிந்தேன்....! உண்மையா இல்லையா...??? சந்தேகம் எப்பிடி வந்துது எண்டால் டப்பா காருக்கு எல்லாம் தானியங்கி திறப்பான் இருக்குதா என்ன...??? :wink: :P :lol:

சரி அப்பிடியே என் கதையையும் ஒருக்கா சொல்லுறன்...! நண்பன் ஒருவர் Merce-Benz E 220 கார் ஒண்டை சில காலத்துக்கும் முன்னம் வாங்கி இருந்தார் (1 வருசம் இருக்கும்) சில வேண்டிய சாமான்களை அதற்குள்ள வைச்சுவிட்டு எங்களில் சிலரை சந்திக்க வந்து இருந்தார் பேச்சு வாக்கில் அந்த பொருட்டகளை பற்றி பேச்சு வர அவர் உடனேயே அந்த பொருட்களை எடுக்க கிழம்பினார். என் நண்பர் ஒருவர் அவருக்கு உதவ முன்வந்து தான் போய் அவற்றை எடுத்துவாறன் எண்டு கிழம்ப காரின் சொந்தக்காறரும் ஒரு சிமாட்காட் ஒண்டை அவரின் கையில் குடுத்து சொன்னார்... இதை கிட்ட கொண்டு போனீங்கள் எண்டால் தானியங்கியாய் கார் திறக்கும் நிலைக்கு வரும் தூரத்துக்குவர தானாக பூட்டிக்கொள்ளும் எண்டார்...! சரி எண்டு உதவ வந்த நண்பரும் கிழம்பி போய் விட்டார் போனவர் நீண்ட நேரமாய் வரவில்லை... காத்திருந்து களைச்சு போய் எல்லாருமா கிளம்பி போனம்...

போனவர் காறின் கதவுகளை திறந்து பாத்துக்கொண்டு நிண்டார்... என்னப்பா என்ன ஆச்சு எண்டு கிட்டப்போய் கேட்டால் சொல்லுறார். சாமானை எடுத்துப்போட்டு தூரப்போக பூட்டினமாதிரித்தான் கிடந்தது சரி செக்பண்ணிப்பாப்பம் எண்டால் காறின்ர கதவு உன்மையா பூட்டுது இல்லையப்பா... வந்து செக்பண்ணுவம் எண்டு கதவை திறந்தால் அது திறந்து தான் கிடக்குக்குது.... எண்டுறார்... ஒரு மாதிரி அவர் வச்சிருந்த சிமாட் காட்டை வாங்கி தூரத்தில வச்சுக்கொண்டு இப்ப திறந்து பாருங்கோ எண்டு சொல்லி விளங்கப்படுத்துறதுக்குள்ள போதும் போதும் எண்டு ஆகீட்டுது....!

இப்ப இதை ஏன் சொல்லுறன் எண்டால் யாராவது இப்படிப்பட்ட உங்கட காரை திறக்க வேணும் எண்டால் உங்களின் போண் நம்பர் தெரிஞ்சால் போதும் போல கிடக்கு...!

Posted

சும்மா நீங்கள் சும்மா ஆரம்பிச்சாலாம். சும்மாதான் நல்லா எழுதுறியள். நாங்களும் நேரம் கிடைக்கும் போது சும்மா உங்களுடன் இணையுறம். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Posted

தல அப்ப உந்தக் கார் பூட்டி இருக்கா திறந்து இருக்கா எண்டு பாக்க இரண்டு பேர் வேணுமாக்கும்.

Posted

தல அப்ப உந்தக் கார் பூட்டி இருக்கா திறந்து இருக்கா எண்டு பாக்க இரண்டு பேர் வேணுமாக்கும்.

ம்ம்ம்ம்.... ஓய்ஸ்ரர் காட் தத்துவமாம்...! காட்டை தூரத்தில வச்சிட்டு வந்துதான் பாக்க வேணும்.... எல்லாம் காலம் அண்ணா காலம்...! :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தல அப்ப உந்தக் கார் பூட்டி இருக்கா திறந்து இருக்கா எண்டு பாக்க இரண்டு பேர் வேணுமாக்கும்.

இதென்னப்பா இது... இரண்டு பேர் தேவை இல்லை அண்ணா...ஒழுங்கான கண் பார்வை இருந்தால் போதும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்த வுடன், சிக்னல் லைட் ஒளிர்வதை வைத்து கண்டு பிடிக்கலாம்...அலாரம் கூட வைத்துக்கொள்ளலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தல அப்ப உந்தக் கார் பூட்டி இருக்கா திறந்து இருக்கா எண்டு பாக்க இரண்டு பேர் வேணுமாக்கும்.

இதென்னப்பா இது... இரண்டு பேர் தேவை இல்லை அண்ணா...ஒழுங்கான கண் பார்வை இருந்தால் போதும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்த வுடன், சிக்னல் லைட் ஒளிர்வதை வைத்து கண்டு பிடிக்கலாம்...அலாரம் கூட வைத்துக்கொள்ளலாம்...

Posted

ம் ஆன உந்த சிக்னல் லயிட் மூடி இருக்கிறதுக்கு ஒளிருதா இல்லை திறந்ததைக் காட்ட ஒளிருதா எண்டு எனக்கு சந்தேகம் வாறது.எதுக்கும் ஒருக்கா கான்டில இழுத்து பாக்கிறனான்.கன பேரும் அப்படித் தான் எண்டு நினைக்கிறன். உந்தக் காரோட இது சரிவராது அல்லோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ம் ஆன உந்த சிக்னல் லயிட் மூடி இருக்கிறதுக்கு ஒளிருதா இல்லை திறந்ததைக் காட்ட ஒளிருதா எண்டு எனக்கு சந்தேகம் வாறது.எதுக்கும் ஒருக்கா கான்டில இழுத்து பாக்கிறனான்.கன பேரும் அப்படித் தான் எண்டு நினைக்கிறன். உந்தக் காரோட இது சரிவராது அல்லோ.

அது அண்ணா.. நீங்கள் அது ஒளிரும் தடவைகளை கணக்கு வைக்க வேண்டும்.... ஒருக்கா இப்படித்தான் கசாட் லைட் அ போட்டிட்டு ... 3 தடவை ஒளிர லொக் ஆகிட்டுது என்டு விட்டுட்டு போட்டன்... பிறகு வந்து பார்க்கத்தான் தெரிந்தது.. பூட்டாதது...

Posted

ம் ஆன உந்த சிக்னல் லயிட் மூடி இருக்கிறதுக்கு ஒளிருதா இல்லை திறந்ததைக் காட்ட ஒளிருதா எண்டு எனக்கு சந்தேகம் வாறது.எதுக்கும் ஒருக்கா கான்டில இழுத்து பாக்கிறனான்.கன பேரும் அப்படித் தான் எண்டு நினைக்கிறன். உந்தக் காரோட இது சரிவராது அல்லோ.

துப்பரவா சரிவராது அண்ணா...! :wink: :lol::lol:

Posted

அது அண்ணா.. நீங்கள் அது ஒளிரும் தடவைகளை கணக்கு வைக்க வேண்டும்.... ஒருக்கா இப்படித்தான் கசாட் லைட் அ போட்டிட்டு ... 3 தடவை ஒளிர லொக் ஆகிட்டுது என்டு விட்டுட்டு போட்டன்... பிறகு வந்து பார்க்கத்தான் தெரிந்தது.. பூட்டாதது...

பாத்தியளோ வயசான எனக்குத் தான் கண் சரியாத் தெரியாது எண்டு நினச்சன் , கோவியர் குலவும் கண்ணனுக்கும் அதே பிரச்சனை எண்டா உந்த மேக்குகளை யாரப்பா ஓடி கோவியரை மடக்கிறது? :wink: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பாத்தியளோ வயசான எனக்குத் தான் கண் சரியாத் தெரியாது எண்டு நினச்சன் , கோவியர் குலவும் கண்ணனுக்கும் அதே பிரச்சனை எண்டா உந்த மேக்குகளை யாரப்பா ஓடி கோவியரை மடக்கிறது? :wink: :lol:

:P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

பாத்தியளோ வயசான எனக்குத் தான் கண் சரியாத் தெரியாது எண்டு நினச்சன் , கோவியர் குலவும் கண்ணனுக்கும் அதே பிரச்சனை எண்டா உந்த மேக்குகளை யாரப்பா ஓடி கோவியரை மடக்கிறது? :wink: :lol:

:P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதுமைப் பெண்களடி . .........!  😍
    • மறவன்புலவும் சாவகச்சேரி ஏரியாதான் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 😂
    • ஓம்.  நான் கேட்ட கேள்விகளிலே இதற்கு பதில் இருக்கிறது 
    • வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---
    • சரியாக சொன்னீர்கள் விசுகர் நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை பார்க்க/வாசிக்க வேண்டிய தேவையே இல்லை.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.