Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களிடத்தில் வணிகம் செய்யும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10632695_10204855902820896_6837704678490

 

 

20000க்கும் அதிகமான தமிழர்கள் நடத்திய பேரணியைப் பற்றி, பேரணியில் பங்குபெறும் தமிழர்க்ளிடத்தில் வணிகம் செய்யும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு.

ஊடகங்கள் தமிழர் போராட்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ள முயலுவோம்,.

தி இந்து ( தமிழ்) 
--------------------------
முகநூலில் ஆடு வளர்ப்பு,
திருப்பதி திருக்குடை ஊர்வலம், 
சமஸ்கிருத கல்வி முறையை வாழ்வியல் ரீதியாக மாற்ற வேண்டும்-முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி
தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் வாங்கியது எப்படி.

பேரணி - செய்தியும், படங்களும் வெளியிடப்படவில்லை.

தினகரன் 
--------------------------
ஆர்.எம்.கே கல்வி குழும வளாக தேர்வில் 1923க்கு வேலை.
மயிலாபூர் கபாலீசுவரர் கோவில் நவராத்திரி சிறப்பு பூசைக்கான வண்ணப்படம்.
தேசிய புலனாய்வு அதிகாரிகளை மிரட்டிய ஐ.எஸ்.ஐ உளவாளி.
பேரணிக்கு வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியால் வாகணவரி கேட்ட சுங்கச்சாவடி உடைப்பு.

பேரணி : 12ஆம் பக்கத்தின் அடிப்பகுதியில் ‘டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் செய்திக்கு கீழே ஒரு புகைப்படமாக கண்டுபிடிக்கலாம்.

தினத்தந்தி
--------------------------
ஒரே நாளில் 13.5 கிலோ தங்கம் பிடிபட்டது
மங்கள்யானுக்கு பக்கங்களாக வாழ்த்துக்கள்

பேரணி - 10வது பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய செய்தியை பார்க்கலாம்.

தினமலர்
--------------------------
பேரணியால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு, சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி அராஜகம்.

அண்ணா சாலையில் தமிழகவாழ்வுரிமை கட்சி நடத்திய பேரணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ்களும் சிக்கிதவித்தது (புகைப்படம்- என்று எடுத்தார்கள் என்பது தெரியவில்லை, எந்த இடம் என்றும் தெரியவில்லை) 
பரனூர் சுங்கச்சாவடியில் கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.

தினமணி
--------------------------

நவராத்திரி இசைவிழா- படத்துடன் செய்தி

பேரணி - 4வது பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி. போக்குவரத்து மூன்று மணி நேரம் பாதிப்பு.

டைம்ஸ் ஆஃப் இந்தியா -ஆங்கிலம்
---------------------------------------

சென்னை சமஸ்கிருத கல்லூரியை அமைத்த ’மகாபுருஷர்’ கிருஸ்னசாமி ஐய்யரின் 150வது பிறந்த நாள் - படத்துடன் செய்தி- 4வது பக்கம்

தனியார் பள்ளிகள் ஏழைக்குழ்ந்தைகளுக்கு இலவச ஆங்கில கல்வி அளிக்கின்றன. - 5வது பக்கம்

மக்களை துன்புறுத்திக்கொண்டிருந்த குரங்கு பிடிபட்டது,

பேரணி - செய்தி வெளியிடப்படவில்லை ( நான் தேடியவரை பார்க்க முடியவில்லை)

தி இந்து -ஆங்கிலம் 
-------------------------------
உடும்பு கறி சாலையோர கடைகளில் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது . ( கண்டுபிடித்தவர்கள் தி இந்துவிற்கு சிறப்புச் செய்தியை அளித்தார்கள்)

பேரணி- செய்தி, படம் வெளியிடப்படவில்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
-----------------------------------
பேரணி படம், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பதில் ஆரம்பித்து கோரிக்கைகள் செய்தியாக வெளியிடப்பட்டது

டெக்கான் க்ரானிகிள் - பார்க்க இயலவில்லை 
----------------------------------

தோழர்களிடம் பகிருங்கள். 20,000க்கும் அதிகமாக கலந்து கொண்ட பேரணிக்கு கிடைத்த முக்கியத்துவத்தின் தன்மையை உணர்ந்தால், 200 பேர் பங்கேற்கும் போராட்டங்களை எப்படி ஊடகங்கள் முன்னிலைப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இன்றய தினசரி ஊடகச் செய்திகளும், மக்கள் பேரணியும். டிவி ஊடகங்களைப் பற்றிய செய்திகள் தொகுக்கப்படவில்லை. அதையும் தோழர்கள் யாரேனும் தொகுத்தால் நலம். வார பத்திரிக்கைகள் எத்தகைய செய்திகளை பதிகின்றன என்பதையும் நாம் தொகுக்க முயலுவோம்.

தமிழர்கள் ஊடங்களை அறிந்து கொள்ளுதல் நலம்.

ஆகவே தோழர்களின் பங்கேற்பு என்பது மட்டுமே போராட்டம்-புரட்சி-பிரச்சாரம் ஆகிய எல்லாம். அடுத்த முறையாவது போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்.. ஊடகங்களை நம்பி போராட இயலாது...

 


இன்று காலை த இந்துவை ப் பார்த்தவுடன் கொதிப்பாகிவிட்டது. பேரணி செய்தியை முழுமையாக புறக்கணித்திருந்தார்கள். உடனடியாக எழுதியிருந்தால் இன்னும் கடுமையாக எழுதியிருப்பேன். கட்டுப்படுத்திக்கொள்ள சில மணி நேரங்கள் ஆயின.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிடுமா? இந்த மாற்றங்களை இவர்கள் பதிவு செய்யாமல் போனால் இதன் விளைவுகள் குறைந்துவிடுமா?

பதிவுசெய்யாத பத்திரிகைகளின் அரசியல்தான் நாளைக்கு பதிவுசெய்யப்படும்.

முட்டாள்களே, வெகுசன ஊடகத்தை மட்டுமே நம்பியிருந்த காலம் மலையேறிவிட்டது. இது சமூக ஊடகங்களின் காலம். உங்கள் புறக்கணிப்பு தந்திரம் வேலைக்காகாது. சாதாரண மக்களுக்கு இதை எடுத்துச்செல்வதற்கு நீங்கள் குறுக்கே நின்றால், மாற்று ஊடகங்கள் தானாகவே முளைக்கும். மையநீரோட்ட கட்சிகள் எப்படி அரசியல் அரங்கிலிருந்து தூக்கியெறியப்படுகின்றனவோ அப்படித்தான் மையநீரோட்ட ஊடகங்களும்.

பழைய காலத்தை திரும்பிப்பாருங்கள். இந்துவும் சுதேசமித்திரனும் தினமணியும் திராவிட இயக்கத்தை எப்படியெல்லாம் புறக்கணிக்கவும் திரித்தும் எழுதின என்பதெல்லாம் வரலாறு. ஆனால் திராவிட இயக்கம் வெற்றி பெறாமலா போனது? (இன்று அந்த வெற்றியாளர்கள் நமக்கெதிராக இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

இது வெகுசன ஊடகங்களின் தார்மீக மற்றும் தொழில்முறைசார் வீழ்ச்சி. எதிர்காலத்தில் செய்திகளை வெளிப்பாடு (break) செய்யப்போவது சமூக ஊடகங்களும் அவற்றின் அடிப்படையில் உருவாகப்போகிற அரை-வெகுசன ஊடகங்களும்தான். எனவே நிஜத்தை பிரதிபலிக்கத் தவறும் பேரூடக நிறுவனங்கள் விட்டு வாசகர்கள் மட்டுமல்ல, விளம்பரதாரர்களும் அகன்றுவிடுவார்கள்.

சேனல்களும் சரி. தினசரிகளும் சரி, நுகர்வோர் விழிப்படையாத வரைதான் ஆட்டம் போடமுடியும்.

தமிழகத்தின் ஊடக நுகர்வோர்களி்ன் உரிமைக் குரல் ஒலிக்கும்படி செய்யவேண்டும். ஊடக நிறுவனங்களை அவர்கள் போக்கில் அனுமதித்துவிட்டு பிறகு எதிர்த்துப்போராடுவது என்பது மட்டும் போதாது.

வருமுன் காப்போம்.

10330490_10152855066734046_9330377331817

 

எமது நீண்ட காலப்போராட்டத்தை கண்டுகொள்ளாமல் தமது பத்திரிகைகளை விற்பதற்காக மட்டும் எமது தொடர்பான சில செய்திகளை சூடாகப்போட்டு காசு பார்க்கும் இந்த ஊடக விபச்சாரிகளை நாம் கண்டு கொள்ளத்தேவையில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.