Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! – ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பிளவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! – ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பிளவு.

[Thursday 2014-09-25 18:00]
UNHRC-meet-300-news.jpg

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை, ஐ.நா மனித உரிமை பேரவையில் சில நாடுகள் ஆதரித்துடன் சில நாடுகள் எதிர்த்துள்ளன. இதனால், ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளுக்கு தமது ஆதரவை நீடிப்பதாகவும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.

  

இலங்கைக்கு எதிராக ஐ.நா விசாரணைகளை பிரித்தானியா, மொண்டிநீக்ரோ உள்ளிட்ட நாடுகள் ஆதரித்தன. இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம், நீடித்த மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்ளில் இருந்து தப்பிக்கும் நடவடிக்கைகள் முடிவுக்கு வர வேண்டும் எனவும் பிரித்தானியா கூறியுள்ளது. இலங்கையின் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னமானது ஜனநாயகத்திற்கான இடத்தை சுருக்கியுள்ளதுடன் கருத்து சுதந்தித்திற்கான தடை, கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானிய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா விசாரணைகளுடன் ஒத்துழைப்பவர்கள் அச்சுறுத்தப்படவோ பதிலடி கொடுக்கப்படவோ கூடாது எனவும் ஆக்கப்பூர்வமான விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் எனவும் அயர்லாந்து கோரியுள்ளது.

அதேவேளை விசாரணைகள் மூலமாக இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பதாகவும் இந்த விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை பேரவையின் முழு ஆதரவு இலங்கைக்கு வழங்க வேண்டும் எனவும் சீனா, ரஷ்யா,கியூபா மற்றும் வெனிசூலா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன.

http://www.seithy.com/breifNews.php?newsID=117486&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதில எங்க பிளவு..???! வெனிசுலா.. கியூபா..சீனா.. ரஷ்சியா எப்பவுமே மனித உரிமைகள் குறித்த மேற்குலகின் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வரும் நாடுகள். சிறீலங்கா விடயத்திலும் அதையே ஆரம்பத்தில் இருந்து கையாண்டு வருகின்றன. இந்த நிலையில்.. இதில எங்க பிளவு...????! ஏன் இப்படி ஒரு தலைப்பு. தமிழ் மக்களின் முயற்சிகளை சோர்வடையச் செய்யவா..?????????????????????! மக்கள் இப்படியான ஊடகச் செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.