Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறையில் மீண்டும் மகாத்மா காந்தி சிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் மீண்டும் மகாத்மா காந்தி சிலை! photo.png 

[Friday 2014-10-03 09:00]
gandhi-150-news.jpg

பருத்தித்துறையில் மகாத்மா காந்தி சிலை நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது. பருத்தித்துறை நகர மத்தியில் நவீன சந்தைப் பகுதியில் அமைந்திருந்த மகாத்மா காந்தி சிலை போரின் போது படையினரால் அழிக்கப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்ட புதிய சிலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. நகர சபைத் தலைவர் சபா. ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதகரத்தின் பிரதி துணைத் தூதுவர் தட்சணாமூர்த்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிலையை திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார்.

   

இந்த விழாவில் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்திய சிற்பாசாரி ஒருவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சிலை காந்தியின் பிறந்த தினமான நேற்று திறந்து வைக்கப்பட்டது.

 

gandhi-pp-031014-seithy%20(1).jpg

 

 

gandhi-pp-031014-seithy%20(2).jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=117950&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தியின் 145ஆவது பிறந்த தினமும் சர்வதேச அகிம்சை தினமும் யாழில்  நேற்று  அனுஸ்டிக்கப்பட்டது. 

 
இதில்  படையினர் தமது சார்பில் வெள்ளையுடை அணிந்து காந்தியின் பிறந்த தினத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
30000.jpg
 
50000(1).jpg
 
2000(3).jpg
 
fhgh.jpg
 
 

http://onlineuthayan.com/News_More.php?id=890933507603140287

  • கருத்துக்கள உறவுகள்

இதில் படையினர் தமது சார்பில் வெள்ளையுடை அணிந்து காந்தியின் பிறந்த தினத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

"காந்தி ரெஜிமன்ட்" .......இப்படியும் புலனாய்வு செய்யலாம்.......என்று எங்களுக்கு தெரியாதாம்....எருமைமாடு யாழ்தேவி ஓடுதாம்

வடக்கில், இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதை மக்கள் எதிர்க்கவில்லை என்றும், இது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இராணுவத்தினர் வட மாகாணத்தில் இருக்க வேண்டும் என்றே மக்கள் வாக்களிப்பாளர்கள் என்றும் கிளிநொச்சி இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கக் கூடாது என்ற காரணத்திற்காகவே கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கைப் பொறுத்தவரையில் மக்களுக்கு தெரியக் கூடிய வகையிலேயே உளவு மற்றும் புலனாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடக்கில் நடைபெறும் நிகழ்வுகள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் கண்காணிக்கப்படுவது உண்மைதான். அரச விரோத நடவடிக்கைகள், பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றனவா என கண்காணிக்கப்படுகின்றன. உளவுப் பணிகளினால் நிகழ்வுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படப் போவதில்லை. அருட்தந்தை அன்டன் ஸ்டீபனினால் எழுதப்பட்ட கவிதைப் புத்தகமொன்றில் பிரிவினைவாதத்தை போசிக்கும் வகையிலான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது. மாகாண பாடசாலை நூலகங்களில் இந்த பிரிவினைவாதத்தை தூண்டும் புத்தகங்களை வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். இளம்தலைமுறையின் தலைகளில் தீவிரவாத கிருமிகளை உட்புகுத்த முயற்சிக்கின்றனர். இராணுவம் சமாதனத்தையும் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டே செயற்பட்டு வருகிறது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் சமூகத்தில் குழப்பங்களை விளைவிக்கவில்லை. புனர்வாழ்வு அளிக்கப்படாத அப்பன், கோபி போன்றவர்களே மீளவும் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்தை வெளியேறுமாறு கோரிய போதிலும், மக்கள் இராணுவத்தினரின் பிரசன்னத்தை எதிர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.