Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-1

Featured Replies

தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-Part1

தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-1

தமிழீழ, தமிழக நிலங்களின் பண்டைய புவியியல், தொன்மை, வரலாறு

மற்றும் வரலாற்றிலே ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாக சிங்கள இனவெறியால்

பாதிக்கப் பட்டு வரும் தமிழ்க் குமுகத்தின் இன்னல்களை அறியாதவர் குறைவு.

புவியியலும், வரலாறும், தொன்மையும் தெரிந்திருக்காவிடிலும் தமிழர் என்ற

உறவு உணர்வுகளை என்றும் பாதித்ததில்லை. ஆயினும், தற்காலத்திலே,

இந்த உறவுகளின் உணர்வுகள் துளியும் அற்றுப் போகவில்லை என்பது

எத்தனை உண்மையோ, அத்தனை உண்மை அது பல்வேறு சூழலுக்கு

உட்பட்டு இருக்கின்றது என்பதும்.

தமிழ்நாடு மற்றும் இந்தியா தமிழீழத்துடன் நல்லுறவும் பேருறவும் கொண்டிருந்த

காலத்திலும், அப்படியில்லாத தற்போதைய சூழலிலும் சரி, தமிழ்மக்களின் இழப்புகளும்

சாவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன; ஏறத்தாழ அதே அளவில்.

சிங்கள இனவெறி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறதே தவிர

அது குறைந்தபாடில்லை.

இன்றைய தமிழ் நில அரசியல் நிலவரங்களைப் பார்க்கும் எந்தத் தமிழருக்கும்,

அது ஈழத்தவராகட்டும் தமிழகத்தவர் ஆகட்டும், ஒரு வித கையறு நிலையும்,

உணர்வற்ற நிலையும், குழப்ப உணர்வும் சிந்தையில் ஓடவே செய்கின்றன.

இந்தச் சூழலை ஒரு பன்முகப் பார்வை கொண்டு பார்க்க வேண்டிய அவசியம்

இருக்கிறதாகப் படுகிறது. இதற்கு உணர்வு தேவையில்லை; சப்பைக் கட்டு தேவையில்லை;

"சால்சாப்பும்" தேவையில்லை; நிதர்சனமான உண்மைகளைக் கொண்ட

எதார்த்தப் பார்வை போதும்.

1) ஈழத்தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:

ஏறத்தாழ 50/60 ஆண்டுகளைத் தாண்டிவிட்ட ஈழ உரிமைப் போராட்டம், மக்களின்

பொதுவிருப்பத்தினை வாக்குப் பெட்டிகளின் மூலம் அறிந்து, அவர்களின் முழு ஆதரவைப் பெற்ற தனிநாடு போராட்டமாகக் கிளர்ந்தது. சிங்களர்களின் வன்முறை அதிகரிக்க அதிகரிக்க அது ஆயுதமேந்திய போராட்டமாக கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், பல குழுக்களாக, எட்டுப்பட்டிக்கொன்று,

பத்து, பதினெட்டு பட்டிக்கொன்று என்று இருந்த குழுக்கள் மெல்ல மெல்ல ஒரு இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தது மிகப் பெரிய விதயம் என்று சொன்னால் அது மிகையாகாது. சில குழுக்கள் இருந்தாலும் அவை நீர்த்துப்போன அல்லது இளைத்துப் போன அல்லது விட்டுக் கொடுத்துப் போன குழுக்கள். பல்வேறு குழுக்களும் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தால் ஈழப்போராட்டம் என்பதனை சிங்கள நரிகள் என்றோ இல்லாமல் அடித்திருக்கக் கூடும்.

அடுத்ததாக, திலீபன் போன்றோரின் ஈகைகள், பல்வேறு வெற்றிப் போர்கள் போன்றன ஈழத்தமிழர்களுக்கு உறுதியையும் வலிமையையும் சேர்த்திருக்கின்றன.

மிக முக்கியமாக, உலக நாடுகளின் பார்வையை தம் பக்கம் கொண்டு வந்த அரசியல்

மதிநுட்பமும் அணுகுமுறையும் நல்ல மாற்றங்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களின் உறுதியையும் ஆதரவையும் குலையாத வகையில்

பேணிவருவது போராட்டத்தின் பலம்.

இழந்து போனவைகள் என்று பார்த்தால், இந்திய அமைதிப்படையின் தவறான அணுகுமுறையாலும், தமிழர்களுக்கு எதிரான நிலைகளாலும், நம்ப வைத்துக் கழுத்தை அறுத்ததோ இந்தியா என்று தோன்றிய எண்ணங்களாலும், சிங்களவர்க்கு சிறிதும் இளைக்காமல் செய்த இந்தியப் படையினரின் கொடுமைகளாலும், இந்திய உளவுத் துறையின் சில மட்டமான செய்கைகளாலும் அதற்குப் பின்னர் ஏற்பட்ட இராசீவ் காந்தி அவர்களின் கொலையாலும் இந்திய ஈழ உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுப் போய்விட்டது.

தனது சுட்டு விரலின் அசைவிலே சிங்களத்தை அடக்கி, ஈழத்திலே அமைதியை ஏற்படுத்தி,

ஆசியாவின் இந்தப் பகுதியில் மிகுந்த மரியாதையுடன் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பை இந்தியா இழந்து விட்டது உண்மை. ஈழவிதயங்களைத் தாண்டி, மற்ற அண்டை அயல் நாடுகளிலும் இந்தியா தனது அவ்வளவாகச் சரியில்லாத ஒரு வெளியுறவைக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

அதேபோல, இராசீவ் காந்தியின்மேலான கொலைப்பழியை இந்திய நீதிமன்றம் விடுதலைப்புலிகளின்மேல் போட்டுள்ளது. மக்களும் அப்படித்தான் நம்புகின்றனர். இந்தச் சூழலில், ஈழத்தமிழர்கள் பால் நடக்கும் கொடுமைகளுக்கு எதிரான உணர்வுகள் கொந்தளிக்கும் போது, தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் அந்த உணர்வுகளைப் பார்த்து "இராசீவ் காந்தி தப்பு செய்திருந்த போதும், அவர் அன்னை இந்திரா காந்தி ஈழத்தமிழர்களுக்கு செய்த உதவிகளை எண்ணிப் பார்த்து அவர் மகனைப் பழிதீர்க்காது இருந்திருக்கலாமே" என்று குரல்கள் எழும்போது, எழும் உணர்வுகள் குழப்பத்திற்கோ அல்லது கையறுநிலைக்கோ ஆகிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கக்கூடிய தமிழகச் சூழலும் இழப்புத்தான்.

முன்னனிப் போராளிகளாக இருந்து பின்னர் இந்திய/சிங்களச் சதிகளினால்,

பிரிக்கப் பட்டு அதனால் ஏற்பட்ட இழப்புகளும் கடினமான இழப்புக்கள்தான்.

இந்த இழப்புகளையும் கடந்து இலங்கை அரசின் இனவெறிப் போக்கிற்கு எதிராக

அவர்களின் பேரெண்ணிக்கை இராணுவத்திற்கு சமமாக அல்லது அவர்களும் அஞ்சும்

வகையில் படைவலியைக் கொண்டிருப்பது தமிழ் மக்கள் பெருமை படக் கூடிய வரலாற்று

விதயங்களில் ஒன்றாகும்.

2) தமிழ்நாட்டில் 1980களின் நிலைகள்:

தமிழ்நாட்டின் நிலை என்பது 1980களுக்கும் தற்போதைக்கும் இடைப்பட்ட கால மாற்றங்களைக் கொண்டு அளக்கப் படவேண்டியது. ஏறத்தாழ 25 வருடங்கள்.

இந்திரா காந்தி அம்மையார் காலத்தைய வெளியுறவுக் கொள்கைக்கும், அவருக்குப் பின்னர் இராசீவ் காந்தியின் கொள்கைகளுக்கும் ஏராளமான வேறுபாடுகள். இந்திராவின் கொள்கைகளும், அவரின் முழுமனதான ஆதரவும்தான் தமிழீழப் போராட்டத்துக்கு பெரும் உதவியாக இருந்தன. பலபேர், மா.கோ.இராவிற்கு மேல் சிந்திப்பதேயில்லை.

இந்திராவின் ஆட்சி காலத்திலே, தமிழகத்தில் அரசு செய்யும் வாய்ப்பு கிடைத்த மா.கோ.இரா, இந்தியாவின் உதவிகளையும், தமிழகத்தின் உதவிகளையும் தமிழீழத்திற்கு கிடைக்க செய்ய வாய்ப்பு பெற்றிருந்தார்.

1990களிலும் தற்போதைய காலங்களிலும் இந்திய நடுவணரசின் ஈழம் தொடர்பான கடுபிடிகள் போன்று துளியும் இல்லாதிருந்த காலம் 1980கள். மாறாக பெரும் ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருந்த காலம். 1980க்கு சற்று முன்னர் சனதா கட்சி ஆட்சி செய்த போதும் எந்த விதத் தமிழர் விரோதப் போக்கும் இருந்ததில்லை.

இந்திய நடுவணரசில் கோலோச்சிய பேராயக் கட்சி, நடுவணரசாக செயல்பட்டு,

தமிழகத்தில் திராவிடக் கட்சியான தி.மு.க விடம் தோல்வி கண்டதின் பின்னர் தமிழக அரசியல் காரணமாக தமிழகத்திற்கு செய்த நற்காரியங்கள் குறைவு என்று சொல்லப்பட்ட அந்தக் கால கட்டத்திலும் வெளியுறவுக் கொள்கைகளுக்காக ஈழத்தமிழர் பால் செய்த நற்காரியங்கள் அளவிடற்கரியது என்பது பொதுவான கருத்து.

அப்படியான நடுவணரசின் ஈழ ஆதரவையும் உதவியையும், அரசியல் கூட்டணி நட்பைப் பெற்ற மா.கோ.இராவிற்கு ஈழத்தமிழர்க்கு சென்று சேர்த்திட எவ்விதச் சரவலும் இல்லாத காலக்கட்டம்.

இந்த வாய்ப்பினை மா.கோ.இரா தான் மலையாளியாக இருந்தாலும், தமிழர் நலன்பால்

அக்கறை கொண்டவராகக் காட்டிக்கொள்ள நன்கு பயன்படுத்திக் கொண்டார். நடுவணரசின் ஆதரவுக் கரங்களைப் பெற்ற அவருக்கு, அதையும் தாண்டி தன் கரங்களை நீட்டுவதற்குத் தடையேதும் இருந்திருக்கவேயில்லை. இது, தமிழினத் தலைவர் என்று சொல்லப்பட்ட சொல்லப்படுகின்ற கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்யவும் நன்கு உதவியது.

கருணாநிதியின், "மா.கோ.இரா ஒரு மலையாளி" "தமிழர்களே, தமிழர்களே" என்ற

குரலுக்கு அரசியல் கட்டம் கட்ட மா.கோ.இரா தமிழீழச் சங்கதிகளை செவ்வனே பயன்படுத்திக் கொண்டார் என்று சொன்னால் அது மிகையன்று. தமிழீழச் சரவல்களை தமிழக அரசியல் கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன என்று சொன்னால் அதனை முதன் முதலில் செய்தவர் மா.கோ.இரா.

இதை நான் எழுதுவது எதற்காகவென்றால், ஒரு பன்முகப் பார்வை வேண்டும் என்ற நோக்குடன். மா.கோ.இராவின் செயல்பாட்டிற்குக் களங்கம் ஏற்படுத்துவது நோக்கமில்லை; ஆயினும், ஈழ விவகாரத்தில் மா.கோ.இராவின் மயக்கத்திலேயே ஈழம் மற்றும் தமிழகத் தமிழ் மக்கள் காலம் கடத்தி விடக் கூடாது என்று சுட்டிக் காட்டுவதும் நோக்கமாகும்.

தமிழக அரசியல் கட்சிகளோடு ஈழப் போராளிகளுக்கு இருந்த உறவும் கூர்ந்து நோக்கத் தக்கன.

தமிழகத்தில் அ.தி.மு.க கட்சி தோன்றியபின், தி.மு.கவிற்கும் அ.தி.மு.கவிற்கும் ஆன

பகைமை அன்றில் இருந்து இன்று வரை பல பண்பாடுகளையே தகர்த்தெறிந்திருக்கிறது.

செயலலிதா அம்மையாரின் காலத்திலோ ஒரு கட்சிக் காரரின் முகத்தை மற்ற கட்சிக் காரர்

பார்த்துக் கொள்வதே பிழையென ஆகி ஒரு பெரும் பண்பாட்டு சீர்குலைவே நடந்திருக்கிறது.

மா.கோ.இராவின் ஆட்சிக் காலத்தில் அவரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் போட்டி போட்டிக் கொண்டு ஈழத்தமிழர் நலனுக்காக குரல் கொடுத்தாலும், அவர்கள் இரண்டு பேரும் இணைந்து குரல் கொடுத்ததேயில்லை.

மா.கொ.இராவும் கருணாநிதியும் தத்தம் வசதிகளோடும் கருத்தியல்களொடும் ஆதரவு தந்தனர் என்பதும் உண்மை. தமிழ்நாட்டிலே கருணாநிதிக்கும் மா.கோ.இராவிற்கும் எப்படிப் போட்டி இருந்ததுவோ, அதேபோல ஈழத்திலே பல குழுக்களுக்கிடையே போட்டிகள் இருந்தன என்பதும் வரலாறு. பெரிய குழுக்களாக இருந்தவர்கள் விடுதலைப்புலிகளும், தமிழீழ விடுதலை இயக்கமும் (TELO) ஆவார்கள். போராளிகளைக் கடந்து அமிர்தலிங்கம் தலைமையில் ஆன அரசியல் மற்றும் அமைதிவாத அமைப்பாக TULF என்ற அமைப்பும் தெரியுமளவிற்கு இருந்தது.

இதில் முக்கிய விதயம் என்னவென்றால் எல்லா அமைப்பினரும் தமிழ்நாட்டு மக்களின்பாலும் அரசியல் கட்சிகள் பாலும் அன்பு கொண்டவர்களாக இருந்தனர்.

ஆயினும், மா.கோ.இரா கருணாநிதி என்ற இருவருக்கான அரசியல் போட்டிகளில்

ஈழப்போராளிகள் அவர்களையும் அறிந்தோ அறியாமலோ சற்றே ஆன சார்பு நிலை

கொண்டிருந்தனரோ என்று நம்பக்கூடிய நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன.

மா.கோ.இராவின் அன்பை சற்று அதிகம் பெற்றவராக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கையில், கருணாநிதியின் அன்பை சற்று அதிகம் பெற்றவராக டெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரத்தினம் தெரிந்தார்.

இந்திராகாந்தியின் மடியில் அமர்ந்திருந்த மா.கோ.இரா ஒரு புறம் ஈழப்போராளிகளுக்கு

குறிப்பாக விடுதலைப்புலிகள் பால் அன்பைப் பொழிகையில், கருணாநிதியோ தமிழ்நாட்டிலே பழ.நெடுமாறன், கி.வீரமணி போன்றோரை இணைத்து டெசோ என்ற அமைப்பை ஆரம்பித்து அதன்வழியே இந்தியத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து ஒரு முகமாக்குவதில் முனைப்பு காட்டிக் கொண்டிருந்தார். அதோடு, போராளிகளுக்கிடையேயான சகோதர யுத்தம் தவிர்க்கப் படவேண்டும் என்று பிரச்சாரம் செய்துகொண்டடும் இருந்தார்.

கருணாநிதிக்கும் பிரபாகரனுக்கும் இடையே பெரிய உறவுகளோ தொடர்புகளோ இருந்ததாக பிரபாகரன் தமிழகத்தில் இருந்த காலத்தில் சொல்லிவிடமுடியாது. இது, மா.கோ.இராவிடம் சார்புத் தன்மை கொண்டதினால் கருணாநிதியிடம் இருந்து பிரபாகரன் தள்ளியிருந்தாரா?

அல்லது, மா.கோ.இரா + இந்திராகாந்தி என்ற இரு சக்திகளைத் தவிர்த்து

இருவருக்குமே அப்போது ஆகாத கருணாநிதியிடம் இருந்து தள்ளியிருப்பது நல்லது

என்று பிரபாகரன் நினைத்தாரா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது மிகவும் கடினம்.

ஒரு முறை கருணாநிதி ஈழப்போராட்டத்திற்கு என்று நிதி திரட்டி அதைப் பல குழுக்களுக்கும் பங்கிட்டு கொடுத்தார். விடுதலைப் புலிகளுக்கு என்று கொடுக்கப் பட்ட உரூவாய் 25 இலக்கத்தை வாங்க பிரபாகரன் மறுத்துவிட்டார் என்பது வரலாறு.(அது 25 இலக்கமா அல்லது 25 ஆயிரமா என்பது என் நினைவில் தெளிவாக இல்லை) அதே நேரத்தில் மா.கோ.இரா 4 கோடிகள் கொடுத்ததை பிரபாகரன் பெற்றுக் கொண்டார்.

இதுவும், கருணாநிதியின் நிதியைப் பெற்றுக் கொண்டால் ஒருவேளை மா.கோ.இராவின்

ஆதரவை இழக்கக் கூடுமோ என்று எண்ணி பிரபாகரன் பெற்றுக் கொள்ளவில்லையா?

அல்லது சிறுதொகையை நம்மிடம் கொடுக்கிறாரே என்று எண்ணினாரோ?

அல்லது மற்ற குழுக்களைப் போல நம்மையும் நடத்துகிறாரே என்று எண்ணி பெற்றுக்

கொள்ளவில்லையோ?

அல்லது, தமிழீழம் குறித்த கருத்தியலில் கருணாநிதியின் நிலையை அவருக்குப் பிடிக்காமல்

போனதினால் மறுத்து விட்டாரோ?

என்பது போன்ற கேள்விகளெல்லாம் சாதாரணப் பொதுமக்களில் ஒருவனான என்னைப் போன்றோருக்கு விடை காண முடியாத விதயங்கள்.

ஆனால் உண்மைகள் சில!

அ) தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும், காங்கிரசு என்ற பேராயக் கட்சியும் அன்றைக்கு

ஈழத்தைத் தமது தலையாய விதயங்களில் ஒன்றாகக் கருதின!

ஆ) தமிழகத்தின் அரசியல் கட்சிகளின் பேதங்களில் அறிந்தோ அறியாமலோ ஈழப்போராளிகளின் சார்பு சார்பற்ற நிலைகளும் இருந்தன.

இ) விடுதலைப்புலிகளும் பிரபாகரன் அவர்களும் மா.கோ.இராவிடம் அதிக அன்பையும் தொடர்பையும் வைத்திருந்தனர். அவர்களுக்கும் கருணாநிதிக்கும் ஏதோ இடைவெளி இருப்பது போன்ற தோற்றம் இருந்து கொண்டிருந்தது.

ஈ) தமிழகம் முழுவதிலும் ஏராளமான ஈழப்போர்ப்பயிற்சிப் பாசறைகளை நிறைந்திருந்தன.

அவற்றிற்கு இந்திய தமிழக அரசுகளின் முழு ஆதரவும் உதவியும் இருந்தன.

3) 1990களின் தமிழக அரசியல் சூழல் - ஒரு பார்வை:

தொடரும்....

நண்றி

நயனம்...!

http://nayanam.blogspot.com/2006/10/part1.html

இன்று தற்செயலாக சன் டிவியில் தங்கவேட்டை நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.

அதில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று .... "இலங்கை இராணுவத்தால் 50க்கு மேற்பட்ட சிறுவர்கள் குண்டுவீசி கொல்லப்பட்ட இடம்(காப்பகம்?) எது?" பதில் "செஞ்சோலை"

அகிலன் இணைத்த தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும் கட்டுரையை படித்த போது இந்த நிகழ்ச்சி மனதில் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம்-தமிழகம் உறவுகளும் உணர்வுகளும்-2

3) 1980களின் இறுதியில் தமிழக அரசியல் சூழல் - ஒரு பார்வை:

1980களின் இறுதி தமிழகத்திலும் இந்தியாவிலும் பெரிய மாற்றங்களை விட்டுச் சென்றது.

1984ல் இந்திராகாந்தியார் மறைந்தார். அதற்குப் பின்னர் பேராயம் அசுரபலம் கொண்ட நடுவணரசை இராசீவ் தலைமையில் அமைத்தது. பல கொள்கைகளில் மாற்றம் இருந்தன. குறிப்பாக ஈழம் தொடர்பான நிலைகளில், இராசீவ் தமது அனுபவக் குறைகளை தமிழகத்திலும் இந்திய மத்தியிலும் இருந்த பல தமிழ் எதிர்ப்பு அரைவேக்காடுகளின் ஆலோசனையையும் கருத்தியல்களையும் கொண்டு நிறை செய்ய ஆரம்பித்தார். இன்று அந்தச் செயல்பாடு இந்தியாவையும் பாதித்து, தமிழகத்தையும் பாதித்து தமிழீழத்தையும் பாதித்திருக்கிறது என்று சொன்னல் மிகையல்ல.

மா.கோ.இரா நோய்வாய்ப் பட்ட போதும், அதற்குப் பின்னர் அவர் மறைந்த போதும்

பல மாற்றங்கள் ஏற்படத் துவங்கின. மா.கோ.இரா + பேராயக் கூட்டு 80கள் முழுதும்

பெருமளவு உறுதியாகவே இருந்தது. அதை எதிர்த்து கருணாநிதியால் ஒன்றும் தாக்கத்தை ஏற்படுத்தி விடமுடியவில்லை.

இதே நேரத்தில் ஈழத்தில் டெலோ இயக்கத்தின் முகவரி ஏறத்தாழ மறைந்து போயிருந்தது.

விடுதலைப்புலிகள் மட்டுமே ஈழத்தீர்வுக்கான முகமாக முழு அளவில் வளர்ந்திருந்தார்கள்.

சிங்கள வன்கொடுமைகள் தொடர்ந்த போது, இந்தியப் பறனைப் படை உணவுகள் மருந்துகளை மேலிருந்து போட்டு சிங்கள இனவெறிக்கு ஒரு அச்சத்தைக் கொடுத்த போது தமிழ்நாட்டு மக்கள் இந்தியா மேல் அதிக நம்பிக்கை வைத்தது உண்மை. அதன் பின்னர் இராசீவ் - செயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட்டு அமைதிப்படை சென்ற போது அரைமனதோடு அதைப் பார்த்தபோதும், இந்தியா தமிழர்களுக்கு அரணாக இருக்கும் என்ற நம்பிக்கை பெரும்பாலும் இருக்கவே செய்தது.

ஆனால், இந்திய அசூசைகள் கையாளும் பிரித்தாளும் சூழ்ச்சியை இந்தியா மேற்கொள்வதாக அறிந்தபோது, அதாவது விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போட்டிக் குழுக்களை மீண்டும ஆயுத வலுப் பெறச் செய்த சூழலும், இராசீவ்-செயவர்த்தனா ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப் படாததை உணர்ந்த சூழலும், அதைத்தொடர்ந்து திலீபனின் உயிர்த்தியாகமும் தமிழ்நாட்டு மக்களை வருத்தமுறவும் கவலையுறவும் செய்தன.

அதன்பின் நடந்த இந்திய மற்றும் தமிழீழப் புலிகளின் போரின் போது,

இந்தியப்படையின் தாக்குதல், சிங்களத் தாக்குதல், மற்றும் விலைபோன தமிழ்க்குழுவினர்களின் தாக்குதல் போன்றவற்றால் ஈழத்தமிழர்கள் கொடுமைகளுக்குள்ளாயின போது தமிழ்நாட்டின் நெஞ்சில் குருதி வடிந்தது.

சோ இராமசாமி போன்ற சில்லறை அரசியல் தரகர்கள் கூட உற்சாகத்தால் கொக்கரித்தனர். தமிழ்நாட்டில் இந்தியப் படையினரைத் திரும்பச் சொல்லி குரல்கள் கிளம்பியபோது, சோ உள்ளிட்ட தமிழ் எதிர்ப்பாளர்கள் கருணாநிதிக்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும், "நீங்கள் போகச் சொன்னால் இந்தியப் படை அங்கு போகவேண்டும்! வரச்சொன்னால் வரவேண்டுமா?" என்று நக்கலடித்தது, இந்தியப் படைகளை ஈழத்திற்கு அனுப்புவதில் புதைந்திருந்த சதிகளை அம்பலப் படுத்தியதாக இருந்தது.

ஒரு தமிழனாக, இந்தியப் படையினரால் கொல்லப்பட்ட அழிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின்

நிலை கண்டு இரு கண்களும் அழுதன. அதே நேரத்தில் போர் என்று வந்துவிட்டால் சாவுகள் இருபுறமும் இருக்கத்தான் செய்யுமல்லவா? பெட்டி பெட்டியாக தமிழர்களால் கொல்லப்பட்ட இந்தியர்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டபோது ஒரு இந்தியனாகவும் கண்ணீர் விட வேண்டிய கட்டாயம் இந்தியத் தமிழர்களுக்கு ஏற்பட்டது உண்மை. மற்ற இந்தியர்கள் சற்று கொந்தளித்ததும் உண்மை.

"ஒரே நேரத்தில் போரிட்டுச் சாவும் இரண்டு பேருக்கும் வருத்தப் பட வேண்டிய அந்தச்

சூழ்நிலை தமிழகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட சோதனை. சதிவலைகளின் இறுகல் கண்டு

தமிழ்நாட்டு மக்கள் மலைத்துப் போன அந்தக் கால கட்டம் மிகக் கொடுமையானது."

இந்தியாவின் போருக்கு ஆதரவாக இந்திய நடுவணரசும், அச்சமயம் தமிழகத்தில்

இருந்த ஆளுநரின் அரசும் தங்கள் வானொலி, தொலைக்காட்சி, செய்திநிறுவனங்கள் போன்ற மிடையங்கள் செய்திருந்த பரத்தீடு அல்லது பிரச்சாரம் அளவிடற்கரியது. இக்கால கட்டமே தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுக்கு மிக இன்னலாக அமைய ஆரம்பித்த காலம். அரசுகளோடு சேர்ந்து கொண்டு சாதீயச் செல்வர்களால் நிறைந்திருக்கும்

தமிழக, இந்திய மிடையங்கள் செய்த தமிழர் எதிர்ப்புப் பிரச்சாரம் பெரும் அட்டூழியமாக

அமைந்தது.

அமெரிக்கா நாடு ஈராக்கில் செய்யும் வன்கொடுமைகளை அமெரிக்கர்கள் பலர்

விமர்சிப்பதை நாம் படிக்கிறோம். அமெரிக்கா தவறு செய்தால் அந்நாட்டு மக்கள்

தட்டிக் கேட்பதை ஏற்றுக் கொள்ளும் நாகரிகம் அவர்களிடம் நிறையவே இருக்கத்தான்

செய்கிறது. ஆனால், இந்தியாவில், தமிழகத்தில் இந்தியாவின் குறைகளைச் சொல்லிய

குரல்களை "தேச விரோதிகளாக" சித்தரித்தனர் சில்லறைத் தரகர்களும் சுயநலமிகளும்.

ஈழத்தமிழர்களை தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இருந்து தள்ளிவைக்க அவர்கள் இந்த

வன்குரலை பேராயுதமாக பயன்படுத்தி வெற்றி காணத் துவங்கினார்கள்.

பல கொடுமைகளைச் செய்த இந்தியப் படையினர் வீம்புக்காக மேலும் பல காலம்

அங்கு ஆட்டம் போட்டாலும் அங்கே அவர்களாலும், அவர்களால் நியமிக்கப் பட்ட

அரசாலும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் (இந்திய அளவிலும் கூட)

பயனற்ற போர் என்று வருணிக்கப் பட்டாலும் வீம்பு காட்டிக் கொண்டிருந்த

இந்தியப் படையை பிரேமதாசா மேலும் அவமானப் படுத்தி வழியனுப்பி வைத்தார்.

அப்போது தமிழ்நாட்டு மக்கள் சிறிது ஆறுதல் அடைந்தனர் என்றாலும் வலி

பெரிதும் குறைந்து விட்டது என்று சொல்ல முடியாது.

இந்தியப் படை கப்பல் கப்பல்களாக பாதங்களைச் செய்து விட்டு,

பல நூறு தமிழர்களைக் கொன்றுவிட்டு, பல தமிழ்க் குடும்பங்களை நடுத் தெருவில்

விட்டு விட்டு, பல தமிழ்ப் பெண்களை சீரழித்து விட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியது.

அச்சமயம் முதல்வராக ஆட்சியை அப்போதுதான் பிடித்திருந்த கலைஞர்,

"தானும் ஆடி, தசையும் ஆடி", தமிழர்களுக்கு எதிராக வன்கொடுமைகள் செய்த

இந்தியப் படையை வரவேற்று மரியாதை செய்யப் போகவில்லை.

அதைத் தெளிவாகவும் சொல்லி இருந்தார்.

இது இரண்டு உணர்வுகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் இருந்ததால், வலிக்கு சற்று மருந்து போட்டது போலவும் இருந்தது. ஆம் இது உண்மை. கருணாநிதி செய்த இந்தச் செயல் ஞாயமானது. இதைப் பாராட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால், இந்த உணர்வினை, இது என்ன பெரிய இதுவா என்று புறந்தள்ளி விடமுடியாது. அப்படிப் பட்டவர்கள் தமிழ் உணர்வாளர்களாக இருக்க முடியாது. அதை அரசியல் நாடகம் என்றெல்லாம் யாரேனும் வருணித்தால் அவர்கள் ஒன்று பைத்தியக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது முட்டாளாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

மற்றொரு உணர்வு, தமிழ் எதிர்ப்பாளர்களிடம் ஏற்பட்டது. இந்தியப் படையை

அவமானப் படுத்திய கருணாநிதி ஒழிக என்ற குரல்களை சிவப்புச் சீமான்களும்,

சில்லறைத் தரகர்களும் களத்தில் இறக்கினர்.

இந்தியச் சாதீயச் செல்வர்கள் மற்றும் தமிழ் எதிர்ப்பு நிலை கொண்டோரின் அழுக்காறால், ஒரு பெரிய இந்திய நாட்டிற்கு, பெருந்தொகையை தமிழர்களாகக் கொண்ட நாட்டிற்கு அவமானகரமான சூழலும் ஏற்பட்டது.

அகிலன் நீங்கள் கொடுத்த சில தகவல்கள் தவறு போல் எனக்கு தோன்றுகிறது. மேலதிக விளக்கங்கள் தேவை என்றால் தனி மடலில் தொடர்பு கொள்க.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.