Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகப் பிரதேசத்திலுள்ள ஆழ்கடற்பிரதேசங்கள் யாவும் கடற்படையினரின் அனுசரணையுடன் சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிப்பு

Featured Replies

தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி 160க்கு மேற்பட்ட மீனவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வல்வெட்டித்துறையில் திங்கட்கிழமை காலை முதல் மாலை 05 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அவ் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து, அம்மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது தாயகப் பிரதேசத்திலுள்ள ஆழ்கடற்பிரதேசங்கள் யாவும் ஸ்ரீலங்கா கடற்படையினரின் அனுசரணையுடன் தென்னிலங்கையின் சிங்கள மீனவர்களாலும், இந்திய மீனவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு எமது கடல்வளங்கள் சுர்ண்டப்பட்டு சூறையாடப்பட்டு வருகின்ற இந்நேரத்தில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையைப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எமது மீனவர்கள் சிலர் இப்பொழுது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் சட்டத்தை அறிந்தவர்களுடன் உரையாடுகின்ற போது ரோலர் மீன்பிடி முறையிலும் இயந்திரங்களைப் பாவிக்காமல் கைகளால் வலையை இழுத்து அத்தொழிலை மேற்கொள்ளும் போது அது சட்ட விரோதமானதல்ல எனத் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் பாதிக்கப்பட்டிருக்கும் இம்மீன்பிடி முறையைப் பின்பற்றுபவர்களுக்கு சட்டத்தின் உதவியுடன் அவர்களுக்குரிய நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும்.

அதுவரைக்கும் அவர்களுக்குரிய இடைக்கால நிவாரணங்கள் சரியான முறையில் வழங்கப்படுவதற்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் செய்ய வேண்டிய மத்திய அரசாங்கம் தான் செய்ய வேண்டிய கடமையைச்செய்யாமல், ஆழ்கடல்கள் தொடர்பான அதிகாரங்கள் எதுவும் அற்ற எமது மாகாண அரசாங்கம் தான், இம்மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்பதான பொய்த்தோற்றப்பாடு ஒன்றை ஏற்படுத்தி எம்மக்களைக்குழப்பி வருகின்றது.

ஆனால் எம்மக்கள் மிகவும் தெளிவாக இன்றைக்கு வெளிக்காட்டியுள்ள இந்த ஒற்றுமை உணர்வை மிகப்பெரிய அளவில்கட்டியெழுப்பி தங்கள் உரிமைக்காக, இவை தொடர்பான அதிகராங்களையுடைய மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக்கொடுக்கக்கூடிய அளவிற்கு ஒன்றுபட்டு செயற்பட்டு உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.

எமது ஆழ்கடல் மீனவர்களின் பிரச்சினைகளைக் களையும் அதிகாரங்களைக் கையில் வைத்துள்ள மத்திய அரசு, மக்களிடம் பொய்த்தகவல்களைக்கூறி குழப்பாமல் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும். அதேவேளை மக்களுக்கான சரியான தகவல்களைக் கொடுத்து மக்களை அணிதிரட்டி தீர்வுகளைப்பெறும் முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டிய கடப்பாடும் மாகாணசபைக்கு உண்டென்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் - என அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான க.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் சதீஸ், மற்றும் உறுப்பினர்கள், ஊரவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.http://www.pathivu.com/news/34382/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.