Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் கிளிநொச்சி பயணத்தோடு சிங்கள மயமாகும் வன்னி:-குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்கள்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு எதிர்வரும் 12ஆம் திகதி பயணித்து திறந்து வைக்கும் சில கட்டடங்கள் சிங்கள மயமாகின்றன.

குறிப்பாக சிங்களப் பெயர்கள், சிங்கள மரபுகள் திணிக்கப்பட்டு அவைமீது சிங்கள அடையாளம் பூசப்படுவது மிகவும் திட்டமிட்ட செயல் என்று புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.

அபிவிருத்தி என்ற பெயரிலும் தமிழ் மக்களுக்கு வழங்கும் உரிமை என்ற பெயரிலும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகத்தை ஏமாற்றுகின்றார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

புதிதாக அமைக்கப்பட்டு ஜனாதிபதி மகிந்தவினால் திறக்கப்படவுள்ள கிளிநொச்சி கச்சேரி பௌத்த சிங்களக் கட்டட கலை மரபுகள் கலந்து அமைக்கப்பட்டுள்ளதாக யாழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் தாயகத்தில் சிங்கள பௌத்த கட்டட கலை மரபுகளை அரசியல் - அபகரிப்பு உள்நோக்கத்துடன் இவ்வாறு அமைப்பதாகவும் அந்தப் பேராசிரியர் கூறுகின்றார்.

தெற்குப் பகுதியில் சிங்கள பௌத்த மரபில் அமைக்கப்பட்ட பல்வேறு கட்டங்களுக்கும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளிநொச்சி கச்சேரிக்கும் இடையிலான ஒற்றுமைகளை மிகவும் இலகுவாக யாராலும் கண்டுகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களின் பண்பாடு வெளிப்படும் வகையில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி கலாசார மண்டபத்தை கிளிநொச்சியைக் கைப்பற்றிய இராணுவத்தினர் அழித்து துடைத்தெறித்திருந்தமையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு தமிழர்களுக்குரிய தனித்துவமான மரபுகள் கொண்ட கட்டங்கள், ஆலயங்கள், தொல்லியல் எச்சங்கள் பலவற்றையும் அழித்துவிட்டு சிங்கள பௌத்த அடையாளங்களை திணிக்க முற்படுவதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை தருகிறேன் என்று குறிப்பிட்டுக் கொண்டு இவ்வாறு ஆக்கிரமிப்பு அடையாள அழிப்பு அரசியல் செய்யும் நடவடிக்கையிலேயே அரசாங்கம் ஈடுபடுவதாக கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார்.

அத்துடன் மகிந்தோதயா, நெலும் பியச என்ற சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்ட கட்டங்களையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திறந்து வைக்கவுள்ளார்.

இவ்வாறான அடையாள அழிப்பு நடவடிக்கைகளை அபிவிருத்தி என்ற பெயரில் அரசாங்கமும் பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவமும் மேற்கொள்ளுவதாகவும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் உயர் அரச அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

இன்னும் சொற்ப வருடங்களின் கிளிநொச்சியின் - வன்னியின் மூத்த குடிகள் பௌத்த சிங்களவர்கள் என்று கூறத்தக்க வகையில் அரசின் தொடர் இன, பண்பாட்டு, வரலாற்று அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்கள்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112365/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.