Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண அளுநருக்கும் அரசாங்கத்திற்கும் அன்புக்கு உரியவராகிறாரா சி.விகே சிவஞானம்

Featured Replies

Exclusive%20news_CI.jpg

வடக்கு மாகாணத்தில் காணி சுவீகரிப்பு தொடர்பான புள்ளிவிபரங்களை திரட்டும் அரிய பணியை மட்டும் தற்போதைக்கு செய்யப்போவதாக வடக்கு மாகாணசபையினின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

எனினும் அத்தகவல்கள் சாதாரணமாக பிரதேச செயலகங்கள் தோறும் பெறக்கூடிய தொன்றெனவும் அதற்கு வடமாகாணசபை விசேட கூட்டத்தை கூட்டுவது கண்துடைப்பு என் சமூக நலன் விரும்பிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு வடக்கு மாகாண சபையில் நாளை விசேட அமர்வு நடைபெறவுள்ளது. கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற மாதாந்த அமர்வில் காணி தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து முழுநாள் விவாதம் ஒன்றினை ஏற்பாடு செய்யுமாறு உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய காணி தொடர்பிலான விவாதம் நாளை (09.10.14) காலை 9.30 மணிக்கு கைதடி அமைந்துள்ள வடக்கு மாகாண கட்டடத்தொகுதியில் நடைபெறவுள்ளது.

எனினும் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பு, மீள்குடியேற்றம் காணி பங்கீடு மற்றும் காணி இல்லாது இருப்பவர்கள் தொடர்பான பிரச்சினைகள் என்பன குறித்தும் ஆவணப்படுத்தப்பட உள்ளன. 'இந்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஆவணமாக்கல் ஒன்றினையே மேற்கொள்ளவுள்ளோம். அதனையடுத்தே எதிர்காலத்தில் எமது நடவடிக்கை இடம்பெறும்' என்றும் வடக்கு மாகாணசபையினின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இதே வேளை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுடைய பெறுமதி மிக்க நிலங்கள் இராணுவம் மற்றும்  கடற்படையினரின் தேவைக்கு என சுவீகரிக்கப்பட்டு வருகின்றது. இதனால் காணி உரிமையாளர்கள் பல்லாயிரக் கணக்கானவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாற இக்கட்டான நிலையில் அரசை சீற்றமுறச் செய்யும் வகையில் வடமாகாணசபை செயற்படமாட்டாதென கூறி வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தற்போது அரும்பாடு பாடுபட்டு வருவதாக சமூக நலன் விரும்பிகளும் புத்திஜீவிகளும் கவலை வெளியிட்டு உள்ளனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவர் -

கட்சியின் ஒற்றுமையை குலைக்கக் கூடாது என நாம் மௌனமாக இருக்கின்ற போதிலும் மாகாணசபையின் அவைத் தலைவரும் கட்சியின் முக்கியஸ்த்தருமான சி.வீ.கே சிவஞானத்தின் அண்மைக்கால போக்குகள் மாகாண சபையை மகிந்த சகோதரர்களிடம் அடகு வைத்து விடுவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரதான சட்ட மூலங்கள் கொண்டு வர முற்படும் போது அரசாங்கத்திற்கு கோபம் வந்து விடும் என சி.வீ.கே சிவஞானம் இடையிட்டு கவலை அடைகிறார் எனத் தெரிவித்த அந்த முக்கியஸ்த்தர் பல சட்ட மூலங்களை கிடப்பில் போட அல்லது அவற்றின் காத்திரங்களை குறைக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை மாகாண சபை உறுப்பினர்களை தாம் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாக சில தடவைகள் ஆளுநரிடம் தெரிவித்ததாகவும் அவர்களை கட்டுப்படுத்தும் கடிதங்களை அனுப்புமாறு ஆலோசனை வழங்கியதாகவும் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சி.வீ.கே சிவஞானம் பதிலளித்தால் அவரின் கருத்து முழுமையாகப் பிரசுரிக்கப்படும்....

 
 
  • கருத்துக்கள உறவுகள்
வடமாகாண அளுநருக்கும் அரசாங்கத்திற்கும் அன்புக்கு உரியவராகிறாரா
"அன்பே சிவம்" என்றதை மாத்தி "அன்பே மகிந்தா" எனறு யோசிக்கிறார் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.