Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராஜபட்சேவின் முகத்திரையை கிழிக்க வத்திகானில் இன அழிப்புக்கு நீதி கேட்கும் புகைப்பட கண்காட்சி!

Featured Replies

மகிந்த இராஜபட்சே தான் செய்த இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காக ஒவ்வொரு நாடாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறது.
 

kajan_photos.1.png

இந்தவேளையில் மகிந்தா தான் தப்புவதற்கு வழியில்லாமல் கடந்த 3 ஆம் தேதி வத்திகானில் புனித பாப்பரசரை சந்தித்துள்ளார். தான் செய்த இனவழிப்பை மூடி மறைப்பதற்காகவும், சர்வதேச மக்களை ஏமாற்றுவதற்காகவும், இரத்தக்கறை படிந்த கையோடு புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்திருக்கிறார் இந்த இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபட்சே.
 

kajan_photos.2.png

இதே மகிந்த இராஜபட்சே இலங்கையில் பல கிறுஸ்துவ தேவாலயங்களை குண்டுகள் போட்டு அழித்தவர்.பல கிறுஸ்துவ மக்களை கொன்று குவித்தவர். 2009 ஆம் ஆண்டு இறுது கட்ட போர் நடந்த வேளையில் மக்களையும்,போராளிகளையும் அழைத்துச் சென்று இராணுவத்திடம் சரணடைந்த பிரான்ஸிஸ் ஜோசப் போன்ற மதகுருமார்கள் நிலை உயிரோடு இருக்கின்றார்களா என்று கூட இதுவரை தெரியவில்லை.அதற்கு காரணமானவர் இந்த மகிந்த இராஜபட்சே.

மனிதகுலத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத மனிதன் இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபட்சே புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்து கைகுலுக்கியது என்பது மனித குலத்திற்கே அழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்தவேளையில் எமக்கு நடந்த இனவழிப்புப் புகைப்படங்களை புனித பாப்பரசருக்கும், அங்குள்ள மக்களுக்கும் காண்பித்து, சர்வதேச மத்தியில் போலிப்பரப்புரை செய்யும் இனப்படுகொலையாளன் இராஜபட்சேவின் முகத்திரையை கிழிக்கும் முகமாய், மகிந்தா வந்து சென்ற அதே வத்திகானிலேயே காட்சிப்படுத்த உள்ளோம்.

அதற்கு புலத்தில் வாழ்கின்ற எமது மக்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

இப்படிக்கு
மனித நேய செயற்பாட்டாளர்
ம கஜன்
தொடர்புகளுக்கு 0033 752534892 http://www.pathivu.com/news/34402/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.