Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

949cbeea-fdda-412e-9529-d7c2f8adec9a_S_s

 

ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்..

 

 

ஐரோப்பா கண்டத்தில் மட்டும் இந்து சமய ஆலயங்கள் அண்மைக் காலத்தில் தான் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டின் ஹம் நகருக்கு அருகில் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ள ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். 

ஜெர்மனி நாட்டில் ஆலமர விதையாய் ஊன்றிய இந்தத் திருக்கோவில், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலயமாகவும், எண்ணற்ற பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் தலமாகவும் திகழ்வது இதன் தனிச் சிறப்பாகும். இனி, இவ்வாலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றினையும் காண்போம். 

தமிழர் கட்டிய ஆலயம் : 

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் என்ற அருளாளர். அன்னை காமாட்சியின் திருவருளால் இவர் ஆட்கொள்ளப்பட்டு, ஆன்மிகப் பாதையில் பயணம் செய்து சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கர குருக்கள் என்ற திருநாமத்தோடு, ஜெர்மனி நாட்டில் வசித்தபடி, அங்கே உருவாக்கிய திருக்கோவிலே ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். 

இலங்கை போர்ச்சூழல் காரணமாக, 1986–ம் ஆண்டு இவர் பிரான்சு நாட்டிற்குப் பயணம் செய்தபோது, நண்பரின் வேண்டுகோளின்படி, ஜெர்மனி நாட்டின் ஹம் நகரில் தங்க நேர்ந்தது. அவர் தங்கியிருந்த இடம் அயல்நாடு என்றாலும், காமாட்சி வழிபாட்டினை தொடர்ந்து செய்து வந்தார். 

அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதிலுள்ள அறையையே கோவிலாக்கி அங்கே விநாயகர், முருகன், லட்சுமி முதலிய படங்களை வைத்து பூஜை செய்து வந்தார். இதையறிந்த அப்பகுதி வாழ் தமிழர்களும் அங்கு வந்து வழிபாட்டில் கலந்துகொண்டனர். 

வழிபாட்டிற்கு தடங்கல் : 

1989–ம் ஆண்டு மற்றொரு இடத்தில் படங்களை வைத்து வழிபட்ட போது, அங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. சுவாமிகளுக்கும் அவ்வூரில் தனி ஆலயம் அமைக்க ஆவலும் ஏற்பட்டது. ஜெர்மனியில் இங்கு நடைபெறும் பூஜைகளின் ஓசைகள் இடையூறாக இருந்ததால், அப்பகுதி மக்கள் அரசிடம் புகார் செய்தனர். 

இதனால் அரசு அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை செய்து ஆலயத்தை மூடலாமா? என்று வினவினர். அப்போது சுவாமிகளின் பதிலுரையைக் கேட்ட அதிகாரிகள் மனமுவந்து, ஹம் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உன்ட்ராப் கிராமத்தில் ஆலயத்திற்காக இடம் ஒதுக்கி தந்தனர். 

அடியார்களின் பொருளுதவியோடு அவ்விடத்தை விலைக்கு வாங்கிய சுவாமிகள் அங்கேயே ஆலயம் எழுப்பத் தொடங்கினார். கோவில் எழுப்புவதற்கு, இந்திய ரூபாயின் மதிப்பில் பதினைந்து கோடி தேவைப்பட்டது. அடியார்களின் பொருளுதவி மற்றும் வங்கியின் கடனுதவி ஆகியவற்றால் பல்வேறு தடைகளைத் தாண்டி முழுத் தொகையும் கிடைக்கப்பெற்று ஆலயம் எழும்பி நின்றது. 

நிறைவாக கடந்த 2002–ம் ஆண்டு மே மாதம் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

காமாட்சி அம்மன் : 

தொடக்கத்தில் படங்களை வைத்து வழிபட்டு வந்த நிலையில், ஜெர்மனியில் வசித்து வரும் பரம் வசந்தி என்பவரிடம் இருந்து காமாட்சி சிலை ஒன்று கிடைக்கப்பெற்று, அதை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. அதன்பிறகு ஆலயம் எழுப்பும் கட்டத்தில், இந்தியாவில் இருந்து சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு, ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டன. 

மூலவர் அன்னை காமாட்சி சிலை, இந்தியாவிற்கு சுவாமிகள் வருகை தந்தபோது ஒரு சிற்பக் கூடத்திற்கு சென்றார். அங்கிருந்த காமாட்சி அம்மன் சிலையைக் கண்டதும், அது காஞ்சி காமாட்சியின் மறுவடிவமாகவே இருந்ததைக் கண்டு வியப்படைந்தார். 

அச்சிலை ஜெர்மனி செல்வதற்காக செய்தது என்று கூறியபோது, திருவருளை நினைத்து மெய் சிலிர்த்தார். ஆனால், அந்தச் சிலையை வாங்க பணமில்லாத நிலையில், அரை மனதோடு ஜெர்மனி வந்து சேர்ந்தார். 

இந்த நிலையில் நெடுந்தீவைச் சேர்ந்த தில்லையம்பலம் குடும்பத்தார், உரிய தொகை கொடுத்து அந்தச் சிலையை ஜெர்மனிக்கு வரவழைத்தனர். அதுவே இன்று ஜெர்மனியின் காமாட்சியாக அருளாட்சி செய்து வருகிறது. இச்சிலை காஞ்சி காமாட்சியின் மறு வடிவமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 

ஆலய அமைப்பு : 

இயற்கை எழில் தவழும் உன்ட்ராப் கிராமத்தில், கிழக்கு முகமாய் ஐந்து ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட திருக்கோவில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், கொடிமரம், அதனடியில் கொடிமர விநாயகர், இடதுபுறம் விநாயகர் சன்னிதி, சிவபெருமான் சன்னிதி, வள்ளி– தெய்வயானையுடன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் சன்னிதி, லட்சுமிநரசிம்மர் சன்னிதி, கோமுகத்தின் எதிரே சண்டிகேசுவரி, வசந்தமண்டபம், சோமாஸ்கந்தர் சன்னிதி, நவக்கிரக சன்னிதி, ஐயப்பன் மற்றும் பைரவர் சன்னிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. 

இந்த சன்னிதிகளுக்கு நடுநாயகமாக அன்னை காமாட்சியின் கருவறை அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். ஆலயத்தின் மேற்கே மூன்று நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே தனிச் சன்னிதியில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். 

கோவிலின் வெளியே திருத்தேர் மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திருக்கோவிலுக்குத் தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் டால்ட்டென் கனால் என்ற ஜீவநதி ஓடுகிறது. இந்த நதியில்தான் இவ்வாலயத்தின் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 

விழாக்கள் : 

ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தமிழ்ப்புத்தாண்டு, சித்திரா பவுர்ணமி, திருவாதிரை, நவராத்திரி, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் இந்த ஆலயத்தில் பெரும் கூட்டம் சேர்வது வியப்பளிக்கும் விஷயமாகும். 

இந்த நாட்களில் ஆலயத்தில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. இது தவிர ஜூன் மாதத்தில் கோவிலின் பிரமோற்சவமும், ஜூலையில் தேரோட்டத் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. மேலும், அவ்வப்போது தேவி மகாத்மிய ஹோமமும் நடைபெறுகிறது. 

தரிசன நேரம் : 

காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம். இந்த ஆலயம் ஆன்மிகத்தில் முறையாக செயல்பட்டு வருவதுடன், சமுதாய சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. 

உள்நாடான ஜெர்மனியில் தமிழ் மக்களின் கலை, கலாசாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பரதம், இசை என பல்வேறு கலைகளையும் கற்பித்து வருகிறது. 

அயல்நாட்டில் குறிப்பாக இந்தியாவில் கடலூர் மாவட்டம் வெங்கட்டாம் பேட்டை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா திருப்பணியிலும், இலங்கை வவுனியாவில் ஸ்ரீ ஆதிசங்கரர் ஆசிரமம் அமைத்து, ஆதரவற்ற சிறுவர்களைப் பராமரித்து அவர்களுக்கு அறநெறிக் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. 

அமைவிடம் : 

ஜெர்மனி நாட்டின் மேற்கு மாநிலமான வடக்கு ரைன் வெஸ்ட் பேலியா மாநிலத்தில் உள்ள ஹம் நகரின் அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைதியான உன்ட்ராப் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சர்வதேச நகரமான பிராங்க்பட் நகரில் இருந்து வடமேற்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், டியுசல் டார்ப் நகரத்தில் இருந்து கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவிலும் ஹம் நகரம் அமைந்துள்ளது. 

விமானம் நிலையம் அமைந்துள்ள இந்த இரு நகரங்களிலிருந்தும், ரெயில் மூலமாகவும், சாலை வழியாகவும் ஹம் நகருக்கு எளிதில் செல்ல முடியும். அங்கிருந்து இந்த ஆலயத்தை எளிதில் அடையலாம். –

பனையபுரம் அதியமான்.

 

http://www.maalaimalar.com/

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரை... ஹம் காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போகும் பாக்கியம் கிடைக்கவில்லை.
பகிர்விற்கு நன்றி , குமாரசாமி அண்ணா.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று வரை... ஹம் காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போகும் பாக்கியம் கிடைக்கவில்லை.

பகிர்விற்கு நன்றி , குமாரசாமி அண்ணா.

 

 

அம்மனின் கிருபை இருந்தால்  நாங்கள் இரண்டு பேரும் ஹம் கோயிலிலை  சந்திப்பம்.  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.