Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற நான்...Stay Hungry, Stay Foolish

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற நான்...
 
STEVE+JOBBS.jpg Stay Hungry. Stay Foolish.
 

[sTANFORD UNIVERSITY-யின் பட்டமளிப்பு விழாவின் போது ஜூன் 12, 2005அன்று ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ்தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் "STAY HUNGRY. STAY FOOLISH" என்ற தலைப்பில் ஆற்றிய தலைமையுரை]
 
உலகத்தின் மிகச் சிறந்த சர்வகலாசாலைகளில் ஒன்றின்பட்டமளிப்பு விழாவிலே உங்களுடன் இருப்பதிலே நான் மிகுந்தபெருமையுறுகிறேன்.  நான் பட்டம் எதுவும் பெற்றவனல்லஉண்மையில்பட்டமளிப்பு விழா ஒன்றினையே இப்போதுதான்பார்க்கிறேன்மூன்றே மூன்று கதைகளை மட்டும் உங்களுக்குசொல்லுவதுதான் எனது நோக்கம்வேறெதுவுமில்லை
 
 முதல் கதை சிதறிக்கிடந்த புள்ளிகள் இணைந்தது பற்றியாகும்.ரீட் கல்லூரியில் சேர்ந்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே இடை நின்று,ஆனால் அதே இடத்திலே பதினெட்டு மாதங்கள் சுற்றித் திரிந்தேன்ஏன்கல்லூரிப் படிப்பை நான் பாதியில் நிறுத்த நேர்ந்தது?  இதற்கானகாரணம் நான் பிறப்பதற்கு முன்பே ஆரம்பித்திருந்ததுஎன்னைப் பெற்றதாய் திருமணமாகாதவள்கல்லூரியில் பட்டப் படிப்பைதொடர்ந்துகொண்டிருந்தவள்என்னை சுவீகாரம் தர முடிவெடுத்தாள்,ஒரே ஒரு நிபந்தனையின் பேரில்.  என்னை சுவீகாரம் எடுக்கும்பெற்றோர் பட்டப்படிப்பை பெற்றவர்களாயிருக்க வேண்டும் என்பதுதான்அந்த நிபந்தனைஇதனால்ஒரு வழக்கறிஞர் தம்பதியினர் என்னைசுவீகாரம் எடுக்க முடிவாயிருந்ததுஆனால்கடைசி நிமிடத்தில் இதுகைவிடப்பட நேர்ந்ததுஅவர்கள் ஒரு பெண் குழந்தையை சுவீகாரம்எடுக்க விரும்பியதுதான் காரணம்ஆகையால்காத்திருப்போர்பட்டியலில் அடுத்த இடத்தில் இருந்த எனது வளர்ப்பு பெற்றோருக்குஎன்னை சுவீகாரம் எடுக்க நேர்ந்ததுஆனால்எனது வளர்ப்பு பெற்றோர்பட்டதாரிகளல்ல என்று தெரியவந்த பெற்றவள்மிகுந்ததயக்கத்துடனேயே சுவீகாரம் சம்பந்தமான ஆவணங்களில்சிலமாதங்கள் கழித்துகையெழுத்திட்டாள்.  அதுவும்நான் வளர்ந்தவுடன்நிச்சயமாக கல்லூரிக்கு அனுப்பப்படவேண்டும் என்றநிபந்தனையின்பேரில் மட்டுமே.   
 
நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது எனக்கு 17 வயது.தெரியாத்தனமாகஇதோ இந்த Stanford சர்வகலாசாலையைப் போலவேமிகவும் பணக்கார கல்லூரி ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்இதற்கானகட்டணங்கள் எனது பெற்றோரின் சேமிப்பு முழுவதையுமே கரைத்துக்கொண்டிருந்ததுஆறு மாதங்கள் முடிந்திருந்த நிலையில் நான்யோசித்தேன்இவ்வளவு செலவழித்து நான் வாழ்க்கையில்ஆகப்போவது என்னஅதற்கு இந்தக் கல்லூரிப் படிப்பு எந்த வகையில்உதவி செய்யப்போகிறதுஎந்த அர்த்தமும் தெரியாமலேயே எனதுபெற்றோரின் ஒட்டுமொத்த சேமிப்பையே கரைத்துக்கொண்டிருப்பதுநியாயமாஎல்லாம் எனக்கு சரியாக நடக்கும் என்று நம்பிஉடனடியாககல்லூரியை விட்டு விலகினேன்அப்போதுஇந்த முடிவு என்னை பெரியஅளவில் பயமுறுத்தியதுஆனால்இப்போது திரும்பிப் பார்க்கையில்,வாழ்க்கையில் நான் எடுத்த மிகச் சிறந்த முடிவுகளில் இது ஒன்று எனப்புரிகிறது
 
இந்த முடிவிலே இன்னொரு லாபமும் இருந்தது.  மிகுந்தசலிப்பையும் மனச்சோர்வையும் தந்து கொண்டிருந்த கல்லூரிவகுப்புகளுக்கு நான் போகவேண்டியதில்லைமாற்றாகஎனக்கு பிடித்தவேலைகளைச் செய்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன்எனக்கெனஅப்போது தங்குமிடம் ஏதுமில்லைநண்பர்களின் அறைகளில் தரையின்மீது படுத்துறங்கினேன்கோக் பாட்டில்களை பொறுக்கியெடுத்து விற்றுஓரளவு பசியைப் போக்கினேன்ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் நல்லயோகம் எனக்குஹரே கிருஷ்ணா கோவிலில் ஜோரான  சாப்பாடுகிடைக்கும்எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது அதன் பிரசாதம்
 
என்னுடைய வாழ்விலே நான் கற்றுக்கொண்டது இதுதான்:எதேச்சையாகவும் ஆவலுடனும் உள்ளுணர்வு உந்தித்தள்ள நான்செய்ததெல்லாம் பின்னாட்களில் பெரும் பயன் தந்திருக்கிறது.உதாரணமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால்அலங்காரமானவடிவெழுத்துக்களை எழுத நான் கற்றுக் கொண்டதை சொல்லலாம்.அந்நாளில் ரீட் கல்லூரி எழுத்துருக்களை அழகாகவும்அலங்காரமாகவும் எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதில்மிகவும் பிரபல்யமாக இருந்ததுகல்லூரி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தஒவ்வொரு சுவரொட்டியும்துண்டுப் பிரசுரமும் அழகானவடிவெழுத்துக்களைப் பயன்படுத்தி கையால்எழுதப்பட்டிருந்தவையாகும்கல்லூரியில் தொடர்ந்துபடிக்காததினாலும்வகுப்புகளுக்கு செல்லவேண்டிய அவசியம் ஏதும்இல்லாததினாலும்நானும் இந்த அலங்கார எழுத்துக்களை எழுதகற்றுக்கொள்வது என்று முடிவு செய்தேன்செரிஃப் [serif] மற்றும் சன்ஸ்செரிஃப் [sans Serif] போன்ற வடிவெழுத்துக்களை எழுதவும் பயிற்சிபெற்றேன்எழுத்துருக்களின் வெவ்வேறு பரிமாணங்கள்,அவைகளுக்கிடையே வேண்டியுள்ள இடைவெளிஅவைகளின் சிலவகைகளை ஒட்டியமைத்தல் போன்றவற்றை அங்குகற்றுக்கொண்டேன்.  இது ஒரு கலை வடிவம்அறிவியலால் செய்யமுடியாததும் மிகவும் சூட்சுமமானதுமாகும்மிகுந்த விருப்பத்துடன்இதை கற்றுத்தேர்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
இது  உதவப் போகிறது என்பது பற்றி ஒரு யோசனையும்இருந்ததில்லை அந்த நாட்களில்.  ஆனால்பத்து வருடங்கள் கழித்து,மகிண்டோஷ் [Macintosh] கணினியை நாங்கள் வடிவமைக்கும்போது,கற்றுக்கொண்ட அந்தக் கலை பெரிதும் துணை வந்தது.    மகிண்டோஷ்கணினி இந்த அம்சத்தையும் கொண்டதாக வெளிவந்ததுசொல்லப்போனால்அழகான எழுத்துருக்கள் கொண்டு வெளிவந்தமுதல் கணினி அதுதான்.  கல்லூரியில் படிப்பு வேண்டாம் என்று நான்முடிவு செய்யாமல் இருந்திருந்தால்சும்மாயிருந்த நாட்களில்வடிவெழுத்து பயிற்சிக்கு செல்லாமல்  இருந்திருந்தால்மகிண்டோஷ்கணினிகள் அழகான எழுத்துருக்களைப் பெற்றிருக்க வாய்ப்பேயில்லை.விண்டோஸ் அச்சாக மகிண்டோஷை காப்பியெடுத்த ஒன்று என்பதால்,இன்று உலகத்தில் எந்த கணினியிலும் அழகான வடிவெழுத்துஅச்சுருக்கள் இருந்திருக்கவே வாய்ப்பில்லை.  பல்வேறு வடிவச்சுகளைகொண்ட எழுத்துருக்களும்அவைகளுக்கிடையேயான பொருத்தமானஇடைவெளிகளையும் கண்ணுறும்போதுபத்தாண்டுகளுக்கு முன்புநடந்தவைகள் எல்லாவற்றுக்குமே ஒரு அர்த்தம் இருப்பது புரிகிறதுகல்லூரியை உதறித்தள்ளியதுபுதிதாக வடிவெழுத்துப் பயிற்சி பெற்றது -எல்லாமே பொருள் நிறைந்தவைதான்ஆனால்அந்த நாட்களில்இவையெல்லாம் அர்த்தம் தேடி செய்தவை அல்லஅப்பொழுதுஎல்லாமே புள்ளிகள்கோலம் தெரியவில்லைபுள்ளிகள்வைக்கப்படுகின்றபோது கோலத்தை பார்க்க முடிவதில்லைகோலம்முடிந்த பிறகுஅதன் அழகை உணருகிறபோதுபுள்ளிகளின்முக்கியத்துவம் புரிகிறதுஆகஎதிர்காலத்தைப் பற்றிய எதோ ஒருநம்பிக்கை உங்களுக்கு வேண்டும்.  துணிச்சல்விதிவாழ்க்கை,கர்மவினைப்பயன் - எதையாவது ஒன்றை நம்பித்தான் ஆக வேண்டும்நம்பிக்கை என்னை கைவிட்டதேயில்லைஎன் வாழ்க்கையில்நடந்தவை எல்லாமே நம்பிக்கையின் அடிப்படையில்தான்.
 
நான் சொல்லப்போகும் இரண்டாவது கதை காதலையும்,இழப்பையும் பற்றியது.  ஆரம்ப நாட்களிலிருந்தேவிரும்பியதைமட்டுமே செய்வேன்எனது நண்பன் வோஸும் [Woz] நானும்எனக்கு 20வயதான நிலையில்என் பெற்றோரின் கார் ஷெட்டில் "ஆப்பிள்"நிறுவனத்தை தொடங்கினோம்.   கடுமையான உழைப்பின் பயனாககார்ஷெட் ஒன்றில் எங்கள் இருவரோடு மட்டும் ஆரம்பித்த நிறுவனம்பத்தேவருடங்களில் 4,000 பணியாட்களோடு 2 பில்லியன் டாலர் நிறுவனமாகவளர்ந்தெழுந்தது.  என்னுடைய 29-வது வயதில்எங்களின் ஆகப்பெரியதயாரிப்பான மகிண்டோஷ் வெளியிடப்பட்டதுஇந்த நிலையில் நான்"ஆப்பிள்நிறுவனத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டேன்ஒருவருடையசொந்த நிறுவனத்திலேயே அவருக்கு இந்த நிர்க்கதி நேருமா? "ஆப்பிள்"வளர்ந்தெழும் நிலையில்மிகவும் திறமைசாலி என்று நான் கருதியநண்பரொருவரை நிர்வாகப் பொறுப்பிலே வேலைக்கு அமர்த்தினோம்ஆனால் நிறுவனம் வளர வளர அதைப்பற்றிய எங்களின் தொலைநோக்கு வேறுபட்டனகடைசியில் மோதல் தவிர்க்கமுடியாததாயிற்றுமுறுகல் முற்றியபோதுநிறுவனத்தின்இயக்குனர்கள் எனக்கு எதிராகப் போனார்கள்முப்பது வயதிலேநான்மீண்டும் வேலையற்றவனானேன்அதுவும் அவமானகரமாகவெளியேற்றப்பட்டுபெரும் உழைப்போடும்சிறிய விஷயங்களில் கூடமிகக் கவனமாகவும் வளர்த்தெடுக்கப்பட்டஇளமைக் காலத்தைமுழுவதுமாக எதற்காக நான் செலவிட்டேனோஅந்தநிறுவனத்திலேயிருந்து வெளியேற்றப்பட்டது எனது நெஞ்சைநொறுக்கிப்போட்டதுசில மாதங்களுக்கு ஸ்தம்பித்துப் போனேன்.என்னை நம்பிய மிகப்பல தொழில் முனைவோர்களை நான்கைவிட்டதாக உணர்ந்தேன்இத்தொழிலிலே இணை யாரும் இல்லைஎன்ற நிலைக்கு கிட்டத்தட்ட வந்திருந்தபொழுதுதட்டிவிடப்பட்டுதடுமாறி தலைகுப்புற விழுந்தேன்டேவிட் பேக்கர்ட் [David Packard]மற்றும் பாப் நோய்ஸ் [bob Noyce]  போன்றோரை சந்தித்துஅவர்களைகைவிடும்படியாக ஆனதற்கு மன்னிப்புக் கோரினேன்.  எல்லோரும்பார்த்து சிரிக்கும்படியான தோல்விகேவலமாகவும் வெட்கமாகவும்இருந்ததுசிலிக்கன் பள்ளத்தாக்கை விட்டே ஓடிவிடலாமா என்று கூடதோன்றியதுண்டுஆனால்நண்பர்களேஅந்த நிமிடத்திலே எனக்குள்ஒரு எண்ணம்.  என்னைபற்றியதான ஒரு உண்மை அதுநான் செய்வதுஎனக்குப் பிடிக்கும்.  பிடித்தால் மட்டுமே அதை செய்வேன்.  "ஆப்பிள்"என்னை தூக்கி எறியலாம்ஆனால்இன்னமும் எனது வேலை எனக்குப்பிடித்ததாகவேயிருக்கிறதுநான் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்ஆனால்,செய்ய விரும்பிய செயலின் மேல் எனக்கிருந்த காதலை அவர்களால்பொசுக்க முடியவில்லை.  எல்லாவற்றையும் மீண்டும் முதலிலிருந்துஆரம்பிக்க ஆயத்தமானேன்.
 
எனக்கு முதலில் புரியவில்லைஆனால், "ஆப்பிள்நிறுவனத்தைவிட்டு விலகியதுதான் எனக்கு நேர்ந்தவைகளிலேயே மிகவும்அற்புதமானது.  பெரிய வெற்றியாளன் ஒருவனுக்கு இருக்கும்கவலையும் கவனமும் எனக்கு தேவைப்படவில்லை.  ஒன்றை புதிதாகதொடங்குபவனுக்கு இருக்கும் அசட்டுத் துணிச்சல் எனக்கு மீண்டும்வந்ததுஇந்தத் துணிச்சல் காரணமாகத்தான்எனது வாழ்க்கையிலேயேமிகப்பெரும் படைப்பூக்கங்களை வடித்தெடுத்த காலகட்டத்திற்குவந்துசேர்ந்தேன்.  அடுத்த ஐந்து வருடங்கள் என்னை பொறுத்தவரையில்மிக முக்கியமானவைஇரண்டு நிறுவனங்கள் - நெக்ஸ்ட் [NeXT] மற்றும்பிக்ஸார் [Pixar] - தொடங்கியது இக்காலகட்டத்தில்தான்இதைவிட,வாழ்க்கையில் ஒரு மகத்தான பெண்மணியை சந்தித்து காதலாகி,குடும்பமாக விளங்கப்பெற்றதும் இப்போதுதான்எமது பிக்ஸார்நிறுவனம் இன்று உலகிலேயே அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிப்பில்முதலிடம் பெற்றுள்ளதுமுதல் அனிமேஷன் திரைப்படமான பொம்மைக்கதை [Toy Story], பிக்ஸார்  தயாரிப்புத்தான்முதலிடத்தில் இருக்கும்அனிமேஷன் ஸ்டுடியோவும் "பிக்ஸார்"தான்அடுத்து நிகழ்ந்ததுதான்ஆச்சர்யமானது.    "ஆப்பிள்நிறுவனம் என்னுடைய நெக்ஸ்ட்-வாங்கியதும்நான் ஆப்பிளிடமே திரும்பியதும் வாழ்க்கையின்விநோதங்களில் ஒன்றுநெக்ஸ்ட்-ல் நாங்கள் உருவாக்கியதொழில்நுட்பம் இன்று "ஆப்பிள்புனர்ஜென்மம் எடுக்க மூலகாரணமாய்இருக்கிறது.  சொந்த வாழ்க்கையில்லாரினும் [Laurene] நானும் மிகவும்மகிழ்ச்சியாக எங்கள் குடும்பத்தை வளர்த்திருக்கிறோம். "ஆப்பிள்"என்னை தூக்கி எறிந்திருக்காவிட்டால்இவைகளில் எதுவுமேநடந்திருக்காதுஅது ஒரு கசப்பான மருந்துதான்சந்தேகமேயில்லைஆனால்நோயாளிக்கு தேவைப்பட்டது அதுதான்வாழ்க்கை சில சமயம்நமக்கு மரண அடி கொடுக்கிறதுநிலைகுலையாமல் நாம் நிற்கவேண்டியது இத்தருணங்களில்தான்நேசித்ததை மட்டுமே  செய்ததுஎன்னை எப்போதுமே காப்பாற்றியிருக்கிறதுஒன்றை பிடிக்காவிட்டால்அதைச் செய்யாதீர்கள்.  நீங்கள் மிகவும் நேசிப்பது என்ன என்றுகண்டுபிடியுங்கள்உங்களின்  வேலைகாதல் - எதுவாகயிருந்தாலும்இதே மந்திரம்தான்.  வாழ்க்கையின் கணிசமான பகுதியினை நமதுவேலையின் பொருட்டு கழிக்கிறோம்இப்படியிருக்கபிடித்ததைமட்டுமே நாம் செய்கிறோம் என்பது மிக முக்கியம்நம்மிடமிருந்து அரியசாதனைகள் பிறப்பது என்பது இந்த நிலையில் மட்டுமே சாத்தியம்.  எதுஉங்களின் காதல் என்று இன்னும் நீங்கள் கண்டுபிடிக்காமலிருந்தால்,உடனடியாக தேடுங்கள்கண்டுபிடிக்கும்வரை நிற்க வேண்டாம்இதுவேகாதலுக்கும் பொருந்தும்.  பிடித்தவரோடான வாழ்க்கையில்  நாள்படநாள்பட சுவை கூடிக்கொண்டே போகும்ஆகையால்உங்களுக்குப்பிடித்ததை/பிடித்தவரை கண்டுபிடிக்கும்வரைதேடிக்கொண்டேயிருங்கள்,  நிற்க வேண்டாம்.
 
நான் உங்களுக்கு சொல்லவிருக்கும் மூன்றாவது கதைஎதைப்பற்றியது தெரியுமாஇறப்புபதினேழாவது வயதில் நான் படித்தவாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது.  "இதுதான் உன்னுடைய கடைசிநாள் என்று வாழ்ந்து வருவாய் என்றால்என்றாவது ஒருநாள் நீ சரி." கடந்த 33 வருடங்களாக கண்ணாடியில் முகத்தை பார்க்கையில்என்னையே கேட்டுக்கொள்வதுண்டு. "இதுதான் என்னுடைய கடைசிநாள் என்றால்இன்றைக்குச் செய்ய இருப்பதைத்தான் நான்செய்வேனா?"  "இல்லைஎன்பது தொடர்ந்து பதிலாகவரும்போதெல்லாம் நான் மாற வேண்டியதின் தேவையை உணர்வேன்நான் விரைவில் இறந்துவிடுவேன் என்ற உண்மைதான் மிகப்பெரும்முடிவுகளை எடுக்க காரணமாய் இருக்கிறது.  ஏனென்றால்புறவுலகுசார்ந்த எதிர்பார்ப்புகள்அகங்காரம்தோல்வியைப்பற்றிய பயம் - இவைஎதுவுமேசாவுக்கு முன்னால் அடிபட்டு விடுகிறதுஉண்மையிலேயேஎது முக்கியம் என்பது இத்தருணத்தில் மட்டுமே தெரியும்.  நம்மிடம்இழப்பதற்கு எதுவுமே இல்லை என்பதை சாவின் பிடியில் இருக்கும்ஒருவன் உணர்வான்ஆகவே நண்பர்களேநான் சொல்கிறேன்: "பிடித்ததை மட்டுமே செய்யுங்கள்."
 
எனக்கு புற்றுநோய் என்பது ஒரு வருடத்திற்கு முன்புதான்தெரிந்தது.  கணையப் புற்றுநோய்அப்படி ஒரு உறுப்பு நம்முள் உள்ளதுஎன்பதே அப்போதுதான் தெரியும்குணப்படுத்த முடியாத வகையிலானபுற்றுநோய் இது என்றும்அதிகபட்சம் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள்வரை தாக்குப்பிடிக்கலாம் என்றும் மருத்துவர்கள் சொன்னார்கள்குடும்பம்வேலைவர்த்தகம் ஆகியவற்றை அதற்குள்ளாகஒழுங்குபடுத்துங்கள் என்ற மருத்துவ ஆலோசனை வேறு. "செத்துப்போவதற்கு தயாராகுஎன்பதுதான் இதனுடைய அர்த்தம்.  அதாவது,உங்கள் குழந்தைகளிடம் வாழ்நாள் முழுவதும் என்ன பேசுவீர்களோஅதை மூன்று மாதங்களுக்குள் பேசிவிடுங்கள் என்று அர்த்தம்.கும்பத்தில் நீங்கள் பார்த்து பார்த்து வாழ்நாள் முழுக்க செய்ய வேண்டியகடமைகளையெல்லாம் அடுத்த மூன்று மாதங்களுக்குள்செய்துமுடியுங்கள் என்று அர்த்தம்அதாவதுசீக்கிரமாகஎல்லோரிடமும் விடைபெற்றுக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.
 
 அன்று நாள் முழுதும் தொடர்ந்த சிகிச்சையின் முடிவில்நான்பீடிக்கப்பட்டிருப்பது ஒரு அரிய வகை புற்றுநோய் என்றும்முயன்றால்குணப்படுத்தக் கூடியதுதான் என்றும் மருத்துவர்கள் கூறினர்கணையத்தில் இருந்து பிய்த்து எடுக்கப்பட்ட சில செல்களைஊன்மக்கூறு [biopsy] பரிசோதனைக்கு அனுப்பிஅதன் முடிவை வைத்துஇதை உறுதி செய்ததாக அருகிலிருந்த மனைவி சொன்னாள்.  இவைஎல்லாம் முடிந்துநண்பர்களேஇதோ உங்கள் முன்பு நான் நலமாகநிற்கிறேன்.  
 
சாவின் மிக அண்மையில் நான் நின்றது இந்த   நாட்களில்தான்.இன்னும் சில தசாப்தங்கள் உயிர் வாழ முடியும் என்று நம்புகிறேன்சாவின் பிடியில் இருந்து மீண்டிருக்கும் நான் உங்களுக்கு சொல்வது, "இறப்பு என்பது நிச்சயமானதும், அறிவால் மட்டுமே அணுகக்கூடியதும் ஆகும்."  யாரும் சாவை விரும்புவதில்லை.  சொர்க்கத்திற்குப் போக விரும்புவன்கூட சாவை விரும்புவதில்லை.  ஆனாலும், அனைவரும் இறந்துதான் ஆக வேண்டும்.  யாரும் தப்ப முடியாது. வாழ்க்கையின் பெரிய கண்டுபிடிப்பே சாவுதான். வாழ்க்கையின் தன்மையையே முற்றாக மாற்றக்கூடியதும் அதுதான். இதனால் மட்டுமே பழையன கழிந்து புதியன வரும். இளமையின் வாசலில் நிற்கும் நண்பர்களே, உங்களுக்கும் வயதாகி, நடுங்கி, இங்கிருந்து விலகி எங்கோ போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. நான் சொல்வது நாடகத்தனமாக இருந்தாலும், உண்மையைத் தவிர இதில் வேறெதுவும் உண்டா?
 
நண்பர்களேஉங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம்குறைவானதுஇதில் வேறொருவர் கருத்துப்படி வாழ்ந்துவீணாக்காதீர்கள்எந்தக் கொள்கையிலும் பிடிவாதம் வேண்டாம்கொள்கை என்பதே மற்றவரின் சிந்தனைதானே?  உங்களின் வாழ்க்கைஅதில் ஏது?  உங்கள் மனசாட்சியின் குரலை வேறொருவரின் இரைச்சல்அடக்கிவிட அனுமதிக்காதீர்கள்.  உங்கள் உள்மனம் சொல்வதைஇதயம்சொல்வதை பின்தொடர்ந்து செல்லுங்கள்.  அவைகளுக்குஉங்களைப்பற்றி உங்களைவிட அதிகமாகத் தெரியும்.  மற்றவர்சொல்வது எல்லாமே அடுத்தபடிதான்
 
நான் சிறுவனாக இருந்தபொழுதுஎங்களுடைய தலைமுறையினரை மிகவும் கவர்ந்த "மொத்த பூமியின் விவரம்" [The Whole Earth Catalog] என்ற பத்திரிக்கை நினைவுக்கு வருகிறது.  அந்தஅற்புதமான இதழை நடத்தியவர்இதோ இங்கிருந்து மிக அண்மையில்இருக்கும் மென்லோ பார்க்-கில் [Menlo Park] வசித்து வந்த ஸ்டீவர்ட்ப்ராண்ட் [stewart Brand].  அவரின் கவித்துவமான சிந்தனை இதழ் முழுதும்பரவியிருக்கும்.  நான் சொல்லவரும் காலம் 1960-கள்.  கணினிகள்உலகை ஆக்கிரமித்திருக்காத ஒரு காலம்.  தட்டச்சுப் பொறிகளாலும்,கத்தரிக்கோல்களாலும்கைகளாலும் வடிவமைக்கப்பட்ட இதழ் அது.இன்று கூகுள் தேடுபொறி என்ன செய்கிறதோஏறக்குறைய அதை மிகச்சிறிய அளவிலே, 35 வருடங்களுக்கு முன்புஇந்த இதழ் எங்களுக்குசெய்து வந்ததுஎங்களுக்கு மிகவும் பிடித்தமான பத்திரிக்கை அதுதான்.
 
பல இதழ்களுக்குப் பிறகு,  ஸ்டீவர்ட் மற்றும் அவரது குழு இதைதொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 1970களின் மத்தியவருடங்கள் என்று நினைக்கிறேன்எனக்கு அப்போது உங்களுடையவயது இருக்கலாம்இந்த பத்திரிக்கையின் கடைசி இதழின் பின்அட்டையில்அதிகாலை கதிரவனின் பின்னணியில் நீண்டிருக்கும் ஒருமலையோர சாலையின் புகைப்படத்தின் அடியில் இந்த வாசகம்: "பசித்தவனாக இருதெரியாதவனாக இரு". [stay Hungry. Stay Foolish] இதுதான் அவர்களின் விடைபெறும் வாசகம்பசித்தவனாக இரு:தெரியாதவனாக இரு.  யோசித்துப் பார்க்கையில்இப்படித்தான் நானும்இருந்திருக்கிறேன்இப்படி இருந்ததால்தான்இன்று உங்கள் முன்னால்நிற்கிறேன்.  இன்று பட்டம் பெறுகின்ற உங்களையும் நான் இதையேசொல்லி வாழ்த்துவேன்:
      "பசித்தவனாக இருதெரியாதவனாக இரு"
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
 
 

 

பகிர்வுக்கு நன்றி பெருமாள்.
 
ஓர் நற்சிந்தனையை ஓர் நல்வாசிப்பில்  பெறமுடியும் என்பதை இன்னொருமுறை உணர்ந்து கொண்டேன்.
 
கொள்கை என்பதே மற்றவரின் சிந்தனைதானே?  உங்களின் வாழ்க்கை அதில் ஏது?  

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.