Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் படங்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜீவா, ஆர்யா, சிம்பு, அஜீத், அர்ஜூன், சரத்குமார், விஜயகாந்த் ஆகியோர் நடித்துள்ள 7 புதிய படங்கள் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகின்றன. மேற்படி நடிகர்களின் ரசிகர்கள் இதனால் சந்தோஷ மிகுதியில், இந்த தீபாவளியை தங்களது தலை தீபாவளி போன்று கொண்டாடும் உற்சாகத்தில் உள்ளனர். விஜய், விக்ரம், கமல், ரஜினி உள்பட இன்னும் பல நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாக வில்லை... என்பதால் அவர்களது ரசிக்ரகள் சற்றே வருத்தத்திலும் உள்ளனர். இனி, இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள அந்த 7 படங்களின் பட்டியல் வருமாறு;-

தலைமகன்

சரத்குமார் கதாநாயகனாக நடித்து, இயக்கியப் படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். தண்ணீர் பிரச்சனைதான் இந்தப் படத்தின் மையக் கரு. படத்தில் சரத்குமார் பத்திரிகை ஆசிரியராக வருகிறார். நேர்மையாகவும், துணிச்சலாகவும் பத்திரிகை நடத்தும் அவரையும், பத்திரிகையையும் அழிப்பதற்கு ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அந்த கும்பலின் சதிதிட்டங்களை சரத்குமார் எப்படி முறியடிக்கிறார் என்பது தான் கதை.

வரலாறு

அஜீத்குமார் நடித்த 'காட்பாதர்' படம்தான் 'வரலாறு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜீத்குமார் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். அஜீத் ஒரு பரதநாட்டிய கலைஞர். நடனம் ஆடிஆடி அவருடையத் தோற்றத்தில் பெண்மைத்தனமும், நளினமும் வந்துவிடுகிறது. அவருக்கு கனிகாவை பெண் கேட்கிறார்கள். 'பார்ப்பதற்கு பொம்பளை மாதிரி இருக்கும் இவருக்கு நான் எப்படி மனைவியாகி குழந்தை பெறுவது? என்று கனிகா அவமரியாதை செய்துவிடுகிறார். அவரை அஜீத் கடத்திப்போய் கற்பழித்துவிடுகிறார். கனிகாவுக்கு பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒருவன் தாதாவாகவும், இன்னொருவன் அந்த தாதாவை எதிர்த்து நிற்கும் நல்லவனாகவும் வளர்க்கிறார்கள். இப்படிப் போகிறது 'வரலாறு' படத்தின் கதை.

வல்லவன்

சிலம்பரசன் கதாநாயகனாக நடித்து,இயக்கியப் படம். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, ரீமாசென், சந்தியா ஆகிய மூவரும் நடித்துள்ளனர். ஒரு கல்லூரியின் பின்னணியில் அமைந்த கதை. சிலம்பரசன் கல்லூரி மாணவராக வருகிறார். கதைப்படி ரீமாசென் ஏறக்குறைய வில்லி. படையப்பா படத்தில் ரஜினியும், ரம்யாகிருஷ்ணனும் அடிக்கடி மோதிக்கொள்வது போல், இந்தப் படத்தில் சிலம்பரசனும், ரீமாசென்னும் மோதிக்கொள்கிறார்கள். இந்த மோதலில் யார் ஜெயிக்கிறார்? என்பதே கதை.

தர்மபுரி

விஜயகாந்த் கதாநாயகனாக நடித்து, பேரரசு இயக்கியப் படம். கதாநாயகி லட்சுமிராய். இந்த படத்தில் விஜயகாந்த் திருமண மண்டபங்களுக்கு நாற்காலி, மேசைகளை வாடகைக்கு விடுபவராக வருகிறார். மணிவண்ணன், பிரகாஷ்ரெட்டி(தெலுங்கு), ராஜ்கபூர், பாபி ஆகிய நான்கு பேரும் வில்லன்களாக வருகிறார்கள்.

கெட்டது பண்ணபோனால் 40 பேர் கூட வருவார்கள். நல்லது பண்ணபோகும்போது 4 பேர் எதிரியாக வருவார்கள். இவர்களை மீறி கதாநாயகன் எப்படி ஜனங்களுக்கு நன்மை செய்கிறார் என்பதே கதை.

வாத்தியார்

அர்ஜூன் நடிக்கும் படம். அவருக்கு ஜோடியாக புதுமுகம் சுஜா நடித்துள்ளார்.இந்தப் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஒரு மோசமான அரசியல்வாதி, தனது சுயநலத்திற்காக பள்ளிக்கூடத்திற்கு தீ வைக்கிறான்.அந்த விபத்தில் அப்பாவி மாணவ-மாணவிகள் கருகி பலியாகிறார்கள். இதை நேரில் பார்க்கும் பள்ளிக்கூட ஆசிரியர் அர்ஜூன், அந்த அரசியல்வாதியைப் பழிவாங்குவதற்காக தாதாவாக மாறுகிறார். அந்த அரசியல்வாதி முதலமைச்சராக ஆவதற்கு கனவு காண்கிறான். அவனது ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்துக் காட்டுகிறார் அர்ஜூன்.

ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகி நயன்தாரா. 'இயற்கை' படத்தை இயக்கிய ஜனநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். மாநகராட்சியில் கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கும் அடிமட்டத் தொழிலாளி ஜீவா. அப்பாவியானவர். அவர் அரிவாள் தூக்கவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அது ஏன்? என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.

வட்டாரம்

ஆர்யா நடித்து சரண் இயக்கியுள்ளப் படம். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக புதுமுக நாயகிகள் கீரத் பட்டேல், அதிசயா ஆகியோர் நடித்துள்ளனர். அவன் பெயர் 'பர்மா' வெளிநாட்டில் இருந்து துப்பாக்கிகளை வரவழைத்து விற்பனை செய்வதுதான் அவனது தொழில். இவனுடைய வாழ்க்கையில் மூன்று எதிரிகள் குறுக்கிடுகின்றனர். அவர்களை எப்படி பர்மா எதிர்கொள்கிறான்? என்பது கதை.

இங்கு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் 7 படங்கள் தவிர, '18 வயசுப் புயலே,' 'குப்பி (சயனைடு)' உள்பட இன்னும் இரண்டொரு படங்கள் கடைசி நேரத்தில் தீபாவளி ரேஸில் கலந்து கொள்லலாம், அல்லது கலந்து கொள்ளாமலும் போகலாம்... ஏன்? இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் படங்களிலேயே ஒன்றிரண்டு கடைசி நேரத்தில் காலதாமதமாகி, தீபாவளிக்குப் பிறகு ரிலீஸாகலாம் என்றும் கூறிவருகிறது கோடம்பாக்கம்!

எப்படியும், இந்த வருட தீபாவளியை தமிழ் சினிமா ரசிகர்கள் சந்தோஷமாக கொண்டாட அரை டஜனுக்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் ரிலீஸாகும் என்பது நிச்சயம்! அப்புறமென்ன, ஆயில்பாத், பட்டாசு, புத்தாடை, பலகாரங்களுடன்... இப்படஙகளையும் பார்த்து, தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டியதுதான் பாக்கி!

Thanks:Tamilcinema.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீபாவளிக்கு படங்கள் பார்ப்பது முக்கியம் இல்லையா

Posted

தீபாவளிக்கு படங்கள் பார்ப்பது முக்கியம் இல்லையா

ஆமாம். முதல் காட்சியிலேயே பார்க்கவேண்டுமில்லையா? :shock: :shock: :shock:

Posted

ஆமாம். முதல் காட்சியிலேயே பார்க்கவேண்டுமில்லையா? :shock: :shock: :shock:

கறுப்பில சீட்டு(ticket) எடுத்து பாருங்கோ அப்பதான் ஒரு கிக்காயிருக்கும் :lol: :wink:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.