Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து மூன்று மாதத்திற்கு முன்பு விடுதலையான இலங்கை நபர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்

Featured Replies

10380662_730262463678421_543017212995140

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து மூன்று மாதத்திற்கு முன்பு விடுதலையான இலங்கையை சேர்ந்த பட்டுகுணராஜ் த\பெ செபமாலை (வயது 50) அவர்கள் 20.10.2014 அன்று மாலை 3 மணிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் (GH) இயற்கை எய்தினார்.

இவர் கடந்த இரண்டு வருடமாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார் . உடல் நலக்குறைவுகாரணமாக பலதடவை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தும் அகதிகள் தனித் துணை மாவட்ட ஆட்சியர் நடராஜ் அவர்கள் மறுத்துவிட்டார். பின் செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசியதன் பயனால் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியாளர் அனுமதி வழங்கினார்.

உரிய காலநேரத்தில் தகுந்த போதிய சிகிச்சை வழங்காததினால் இவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என தஞ்சை மருத்துவமனையில் மருத்துவர்கள் கை விரித்து விட்டனர். இருந்தும் 15 நாட்கள் அங்கு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவம் வழங்கப்பட்டது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றநிலை ஏற்பட்ட போது அவரை அவசரமாக சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்தனர்.

இந்நிலையில் சிறப்பு முகாமில் இருந்து விடுதலையாகி மூன்று மாதங்களாக பல்வேறு மருத்துவ மனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போதும் சிகிச்சை பலனின்றி 20.10.2014 அன்று உயிரிழந்துள்ளார்.

பட்டுகுணராஜ் சிறப்பு முகாமில் அடைத்து வைக்க பட்டிருந்த போது உரிய நேரத்தில் சிகிச்சை ஒழுங்கு செய்யாது அலட்சியப்படுத்தி அவரின் இறப்புக்கு அகதிகள் தனித்துணை மாவட்ட ஆட்சியர் நடராஜ் அவர்களே காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகதிகள் தனித்துணை மாவட்ட ஆட்சியர் நடராஜ் தொலைபேசி இலக்கம் 9655473489

மேலும் தகவலுக்கு ஈழ நேரு 8122221286

https://m.facebook.com/story.php?story_fbid=730263093678358&id=100000840223516

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அநியாய உயிரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

  • கருத்துக்கள உறவுகள்

நடராஜனின் அலட்சியப்போக்கால் அநியாயமாக உயிரிழப்பு ..   :(  

ஆழ்ந்த இரங்கல்கள்..! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.