Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோனி, ரெய்னாவிடம் விசாரணை * விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல்

Featured Replies

தோனி, ரெய்னாவிடம் விசாரணை * விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல்
அக்டோபர் 28, 2014.

 

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து முத்கல் தலைமையிலான குழு, கேப்டன் தோனி, இவரது நண்பர் அருண் பாண்டே மற்றும் ரெய்னாவிடம் விசாரணை நடத்தியது. இந்த வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆறாவது ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு தலைமையிலான குழு நேரடியாக விசாரிக்கிறது.

இதன் முதற்கட்ட அறிக்கையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்த வார கடைசிக்குள்  (நவ., 2) முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்பிக்க வேண்டும். இதனால், விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

எப்போது நடந்தது:

 

 

கடந்த 11ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க, இந்திய அணி டில்லி சென்றது.

அப்போது, தங்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக இருக்கும் தோனி, ரெய்னா மற்றும் இரு வீரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் தோனியிடம் மட்டும் நான்கு மணி நேரம் விசாரணை நடந்ததாம். அடுத்து ரெய்னா மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டுள்ளார்.

நண்பரிடம் விசாரணை:

இதனிடையே, முன்னாள் நடிகர் மற்றும் விளையாட்டு நிறுவனத்தை சேர்ந்த ஆஷிம் கேதர்பால், தோனியின் நண்பர் மற்றும் மானேஜராக உள்ள அருண் பாண்டேயிடமும் சமீபத்தில் விசாரணை நடந்துள்ளது.

 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘ ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் அருண் பாண்டேயை விசாரிக்க அழைத்தது உண்மை தான். அப்போது, இந்நிறுவனத்தில் தோனிக்கு உள்ள பங்கு, தோனியின் தொழில் விவரங்கள் குறித்து கேட்டுள்ளனர். தவிர, இதில் ஒப்பந்தம் ஆன போது, தோனி எவ்வளவு பணம் தர முன்வந்தார், இவை அவருக்கு எப்படி வந்தது என, பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்,’’ என்றார்.

என்ன செய்கிறார்:

இச்செய்தியை அருண் பாண்டே உறுதி செய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இந்த விசாரணைக்கு தலைமை வகித்த மிஸ்ரா கூறுகையில்,‘‘தோனி எத்தனை நிறுவனங்கள் நடத்துகிறார். வேறு ஏதாவது கட்டுமான பணிகள் அல்லது ‘ரியல் எஸ்டேட்’ வேலைகளில் ஈடுபடுகின்றாரா என, கேட்டோம்,’’ என்றார்.

இதேபோல, ஆஷிம் கேதர்பால் கூறுகையில்,‘‘ என்னிடம் 25 நிமிடம் விசாரித்தனர். எனது தொழில், அருண் பாண்டேயுடன் உள்ள உறவு குறித்து கேட்டனர்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/10/1414517348/DhoniquestionedforfourhoursMudgalcommitteeDelhiIPL.html

  • தொடங்கியவர்

ரெய்னாவுக்கு புதிய சோதனை
அக்டோபர் 31, 2014.

 

புதுடில்லி: சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல், நவ., 3ல் அறிக்கை தாக்கல் செய்கிறார். ரெய்னாவின் கடந்த காலம் குறித்து இவர் விசாரித்துள்ளதால், புதிய பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு.

கடந்த 2010ல் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இலங்கை சென்றது. தம்புலாவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த போது, ரெய்னாவுடன் ஒரு பெண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியாக, இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி.,), இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) முறையிட்டது.

இதை பி.சி.சி.ஐ., மறுத்தது. அந்தப் பெண் ரெய்னாவின் ஏஜன்ட் என்றும், ரெய்னா உறவினர் ரித்திகா எனவும் கூறப்பட்டன. சில வீரர்களுடன் விளம்பர ஒப்பந்தம் சம்பந்தமாக பேச வந்ததாகவும் கூறப்பட்டன.

ரெய்னா, சென்னை அணி வீரர் என்பதால், அப்பேது பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன், இவ்விஷயத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே, ஆறாவது ஐ.பி.எல்., தொடர்  சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில், முத்கல் குழு விசாரித்து வருகிறது. இக்குழு, இலங்கை விவகாரத்தையும் விசாரித்துள்ளது.

இது தொடர்பாக, இலங்கை போர்டு நிர்வாகிகள் சிலரை, முத்கல் சந்தித்துள்ளார். ஆனார், யார் யாரை சந்தித்தார் என்ற விவரம் தெரியவில்லை. வரும் நவ., 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யவுள்ள அறிக்கையில், இந்த விவகாரங்கள் இடம் பெறவுள்ளதால், ரெய்னாவுக்கு சிக்கல் ஏற்படலாம்.

ரெய்னா மறுப்பு:

முத்கல் குழு விசாரணை குறித்து ரெய்னாவிடம் கேட்ட போது, 2010 சம்பவம் குறித்து பேச மறுத்துவிட்டார். யாரும் தன்னிடம் விசாரிக்கவில்லை என்று கூறி நழுவினார்.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1414775511/rainaindiacricket.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். சூதாட்டம்: உச்ச நீதிமன்றத்தில் முத்கல் குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல்
 

 

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை முகுல் முத்கல் குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முக்தல் குழு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் அனுமதி கோரினார். அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

 

இதனையடுத்து, ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அப்போது அவர், உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விசாரணை நடத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அறிக்கையில் புதிய தகவல்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

மேலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்தரா உள்ளிட்டோர் ஐ.பி.எல். அணிகளின் மீது பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

 

இதுகுறித்து விசாரிக்க பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், அசாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா ஆகியோர் அடங்கிய மூவர் கமிஷனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article6560208.ece

 

  • தொடங்கியவர்

ஐபிஎல் சூதாட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான முட்கல் கமிட்டி அறிக்கையில் டோணி பெயர்?

 

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக முன்னாள் நீதிபதி முட்கல் கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இறுதி விசாரணை அறிக்கையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பெயரும், ஆதாயம் தரும் பதவி குறித்த குற்றச்சாட்டில் கேப்டன் டோணியின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 6வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் 2 நபர்களை கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அந்த குழு மீது நம்பிக்கையில்லை என்று கூறி, பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மா என்பவர், 2013ம் ஆண்டு ஜூன் மாதம் பாம்பே ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐபிஎல் சூதாட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலான முட்கல் கமிட்டி அறிக்கையில் டோணி பெயர்? இந்த மனுமீது விசாரணை நடத்திய ஹைகோர்ட்டும், பிசிசிஐ விசாரணை குழு சட்ட விரோதமானது என்று அறிவித்தது. இதை எதிர்த்து பிசிசிஐ உச்ச நீதிமன்றம் சென்றது.

 

ஆனால் அங்கும், பிசிசிஐக்கு எதிராகவே உத்தரவு வந்தது. ஓய்வு பெற்ற ஹைகோர்ட்டு நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் விசாரணை கமிஷன் விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த கமிட்டி தனது இறுதி அறிக்கையை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை இம்மாதம் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது. விசாரணை அறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து முட்கல் தெரிவிக்க மறுத்துவிட்டாலும், அதிலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன. இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், சூதாட்ட புக்கிகளிடம் பேசியதாக கூறப்படும் உரையாடல்கள் அடங்கிய சிடி ஆதாரம் அந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர் ஒருவர் பெயரும் புக்கிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் பட்டியலில் உள்ளதாம்.

 

அந்த வீரர், இந்திய அணிக்கு வருவதும் போவதுமாக இருக்கும் ஒருவர் என்று கூறப்படுகிறது. மேலும், இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணியின் பெயரும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. ஆனால் புக்கிகளுடன் டோணிக்கு தொடர்பு இருந்ததாக அறிக்கை குற்றம்சாட்டவில்லையாம். டோணி ஆதாயம் தரும் பொறுப்புகளில் இருந்ததாக முட்கல் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் டோணி தனது நண்பர் நடத்தும் ரித்விக் நிறுவனம் மூலம் பலன் அடைந்து உள்ளார். இந்த நிறுவனத்தில் டோணிக்கு 15 சதவீத பங்குகள் இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதுதவிர அவர் ஆதாயம் தரக்கூடிய பொறுப்புகளில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நவம்பர் 10ம்தேதி விசாரணை ஆரம்பிக்கும்போது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயல் வீசப்போவது என்னவோ நிச்சயம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/ms-dhoni-s-conflict-interest-mentioned-mudgal-report-214172.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு ஒத்திவைப்பு
நவம்பர் 10, 2014.

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு விசாரணையை வரும் 14 ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்திய விசாரணையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதில் நிலே தத்தா, நாகேஷ்வர ராவ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இடம் பெற்றிருந்தனர். இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, கடந்த பிப்.,10ல் தாக்கல் ஆனது.

 

நீண்ட விசாரணை:

இதில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டன. இதையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கினார் சீனிவாசன்.

தவிர, சூதாட்டம் குறித்து தொடர்ந்து விசாரித்த முத்கல் குழு இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னாவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது.

முத்கல் குழு விசாரணையின் இறுதி அறிக்கையை, கடந்த 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, தாக்கூர் அடங்கிய ‘பெஞ்ச்’ முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, முத்கல் அறிக்கையை இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எதிர்தரப்பு சார்பில் பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ஆதித்ய வர்மா, சூதாட்ட அறிக்கையை அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் என்றார்.

இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தவிர, முத்கல் அறிக்கையில் எதுவும் இல்லை என்றால், சீனிவாசன் பி.சி.சி.ஐ., தலைவராக வர அனுமதிக்க வேண்டும் என, மீண்டும் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று விசாரணை அறிக்கையை வெளியிடுவது குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும் எனத் தெரிகிறது

 

http://sports.dinamalar.com/2014/11/1415612611/IPLCaseSupremeCourtadjournshearing.html

  • தொடங்கியவர்

மருமகன் மீது குற்றச்சாட்டு இருக்கும் போது சீனிவாசன் தேர்தலில் போட்டியிடலாமா? - உச்ச நீதிமன்றம்
 

 

ஐபில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது குற்றாம்சாட்டப்பட்டிருக்கும் போது உறவினரான சீனிவாசன் பிசிசிஐ தேர்தலில் போட்டியிட முடியுமா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் சுதாட்டத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி முத்கல் கமிட்டியின் இறுதி அறிக்கை மீதான விசாரணையின் போது உறவினர் மீது குற்றச்சாட்டு இருக்கும் போது கிரிக்கெட் வாரியத் தேர்தல்களில் சீனிவாசன் போட்டியிட முடியுமா என்று கேள்வி எழுப்புயுள்ளனர்.

 

நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் மற்றும் மொகமது இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ”நெருக்கமான உறவினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் போது, பிசிசிஐ தேர்தல்களில் சீனிவாசன் போட்டியிட முடியுமா? இந்த விஷயத்தில் அவருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை என்ற ஒரு விஷயம் தேர்தலில் போட்டியிட போதுமானதா?” என்று கேள்வி எழுப்பினர்.

 

2014, மே மாதம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக சூதாட்டத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தைப் பொறுத்த வரை மேல்விசாரணைத் தேவைப்பட்டது.

முத்கல் கமிட்டி அறிக்கை முழுதையும் இன்னும் படிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்ததையடுத்து மூத்த வழக்கறிஞர் அர்யமா சுந்தரம் இந்த வழக்கின் அவசர நிலை பற்றி நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.

 

ஆனாலும் நீதிபதிகள் இந்தக் கேள்வியை முன்வைத்தனர்: "முத்கல் கமிட்டி விசாரணை அறிக்கையில் சீனிவாசன் மீது எந்த வித தவறும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவருக்கு நெருங்கிய உறவினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடுவது முறையாகுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு வழக்கறிஞர் கபில் சிபல், “யார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோ அவர்தான் சட்டத்தின் விளைவுகளை சந்திக்க வேண்டுமே தவிர, உறவினர் என்பதற்காக நிரபராதியான ஒருவர் விளைவுகளுக்கு ஆளாக முடியாது” என்றார்

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6586717.ece

  • தொடங்கியவர்

சீனிவாசன், குருநாத் மீதான முத்கல் கமிட்டி விசாரணை விவரத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு
 

 

ஐபில் சூதாட்டம் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்த முத்கல் கமிட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள சீனிவாசன், குருநாத் மெய்யப்பன் பற்றிய விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதாவது ஐபிஎல் சூதாட்ட விசாரணையில் வீரர்கள் தவிர மற்றவர்கள் பற்றிய விசாரணை விவரங்களை வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக சீனிவாசன், குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ராஜ் குந்த்ரா, ஐபிஎல் கிரிக்கெட் சி.இ.ஓ. சுந்தர் ராமன் ஆகியோர் மீது முத்கல் கமிட்டி நடத்திய விசாரணை விவரங்களை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

 

பிசிசிஐ-யின் ஆண்டுப் பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக பிசிசிஐ, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும் முத்கல் கமிட்டியினால் விசாரிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பெயர்களை வெளியிடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முத்கல் கமிட்டியின் அறிக்கை நகலை பிசிசிஐ, சீனிவாசன் மற்றும் வீரர்கள் அல்லாத பிற நபர்களிடம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முத்கல் கமிட்டி அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள சீனிவாசன் மற்றும் மற்ற கிரிக்கெட் விளையாடாத நபர்கள் தங்கள் ஆட்சேபணைகளை, அறிக்கையை பெற்ற பிறகு நாட்களுக்குள் பதிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

 

"நாங்கள் விசாரணை அறிக்கையை படித்து விட்டோம். சில தனிநபர்கள் முறைகேடில் ஈடுபட்டதாக அது உணர்த்துகிறது. இவர்கள் நடத்தையும் முழுதும் கமிட்டியினால் விசாரிக்கப்பட்டுள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அடுத்த விசாரணை நவம்பர் 24ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article6599057.ece

 

srini_1749478h.jpg

 

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய முகுல் முத்கல் கமிட்டி, ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், அவருடைய மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா, ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர்ராமன் ஆகியோர் தவறிழைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
 
இவர்கள் தவிர 3 கிரிக்கெட் வீரர்களும் தவறிழைத்திருப்பதாகக் கூறியுள்ள நீதிமன்றம், அவர்களின் பெயரை தற்போதைய நிலையில் வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளது. சீனிவாசன் உள்ளிட்ட 4 பேருக்கும் முத்கல் கமிட்டி அறிக்கையின் சம்பந்தப்பட்ட பகுதியை அனுப்பவேண்டும். அது கிடைக்கப் பெற்றதிலிருந்து அடுத்த 4 நாட்களுக்குள் அவர்கள் தங்களின் ஆட்சேபத்தை தெரிவிக்கலாம் எனவும் நீதிமன்றம் பணித்துள்ளது.
 
2013 ஐபிஎல் தொடரின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் விஸ்வரூபமெடுத்ததைத் தொடர்ந்து அது தொடர்பாக விசாரணை நடத்த பிசிசிஐ சார்பில் இரு நபர் குழு அமைக்கப்பட்டது. அதை எதிர்த்து பிஹார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மா மும்பை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக் குழுவை சட்டத்துக்கு புறம்பானது என அறிவித்தது.
 
இதையடுத்து இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. அதை விசாரித்த நீதிமன்றம், ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்த முத்கல் கமிட்டியை அமைத்தது. விசாரணை நடத்திய முத்கல் கமிட்டி பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
 
இந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்குர், எஃப்.எம்.கலிஃபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, முத்கல் கமிட்டி அறிக்கையில் உள்ள விவரங்கள் மூலம் சிலர் தவறிழைத்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது எனக் கூறிய நீதிபதிகள், அவர்கள் என்ன தவறிழைத்தார்கள் என்ற விவரங்களை வெளியிடவில்லை. 
 
அப்போது மேலும் 3 வீரர்கள் பெயர்களையும் நீதிபதிகள் வெளியிட்டனர். ஆனால் பின்னர் அவர்கள் 3 பேரும் கிரிக்கெட் வீரர்கள் என்பதை உணர்ந்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட 3 வீரர்களின் பெயர்களும் தற்போதைய நிலையில் வெளியில் வரக்கூடாது என உத்தரவிட்டனர். 
 
பின்னர் விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். முத்கல் கமிட்டியின் அறிக்கை நகல்களை பிசிசிஐ, சீனிவாசன், பிகார் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையின்போது சம்பந்தப்பட்ட 4 பேரும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தின் முன்வைக்கலாம் எனக்கூறினர். 
 
பிசிசிஐ பொதுக்குழு ஒத்திவைப்பு
 
முன்னதாக வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதால் மேலும் ஒரு மாதத்துக்கு பிசிசிஐ பொதுக்குழுவை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள், முத்கல் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்த விசாரணை முடிவுக்கு வரும் வரையில் பிசிசிஐ பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை என்றனர்.
 
  • தொடங்கியவர்

சீனிவாசன் மீது குற்றச்சாட்டு: பி.சி.சி.ஐ., தேர்தல் தள்ளி வைப்பு
நவம்பர் 14, 2014.

 

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட அறிக்கையில் இடம் பெற்ற பெயர்கள் வெளியானது. இதில் ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன், குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா மற்றும் சுந்தர ராமன் என,நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால், பி.சி.சி.ஐ., தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் ஒரு குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதன் முதற்கட்ட விசாரணையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன், கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இதனால், பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கினார் சீனிவாசன். முத்கல் குழுவின் இறுதி அறிக்கை கடந்த 3ம் தேதி தாக்கல் ஆனது. இந்த வழக்கு நேற்று மீண்டும், நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, தாக்கூர் அடங்கிய ‘பெஞ்ச்’ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கிரிக்கெட் வீரர்கள் தவிர்த்து, சூதாட்டத்தில் தொடர்புடைய நிர்வாகிகள் பெயர்களை மட்டும் சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது. இதில் ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன், இவரது மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா, ஐ.பி.எல்., தொடரின் தலைமை அதிகாரியாக இருந்த சுந்தர ராமன் என, நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

 

இதுகுறித்து ‘பெஞ்ச்’ கூறியது:

சீனிவாசன் உள்ளிட்ட நான்கு பேரின் தவறான நடத்தை மற்றும் சூதாட்டத்தில் உள்ள பங்கு குறித்து முத்கல் குழு முழுமையாக விசாரித்து அறிக்கை தந்துள்ளது. இவர்கள் முறைப்படி விசாரிக்கப்பட வேண்டும். தவிர, இதில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள் பிறகு வெளியிடப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு, விசாரணை அறிக்கையின் நகல் கொடுக்கப்படும். தங்களுக்கு ஏதாவது ஆட்சேபம் இருந்தால், நான்கு நாட்களுக்குள் கோர்ட்டில் தெரிவிக்கலாம். வழக்கு 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட் ‘பெஞ்ச்’ கூறியது.

 

மீண்டும் தள்ளிவைப்பு:

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கடந்த செப்., மாதம் நடக்க இருந்தது. சீனிவாசன் தலைவர் ஆகக் கூடாது என, சுப்ரீம் கோர்ட் நிர்ப்பந்தம் செய்தது.

இதனால், செப்., 30க்கு பொதுக்குழு தள்ளி வைக்கப்பட்டது. அடுத்து, வரும் 20ம் தேதி நடக்க இருந்த கூட்டம், தற்போது  மீண்டும் 4 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

தவிர, சீனிவாசன் மீது குற்றம் சுமத்தப்பட்டது உறுதியானதால், இவர் மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

நற்பெயருக்கு களங்கம்

பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் சஷாங்க் மனோகர் கூறுகையில்,‘‘ சீனிவாசனின் சர்வாதிகாரமான நடத்தையினால், இந்திய கிரிக்கெட் போர்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. இதிலிருந்து சீனிவாசன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில், பொதுக்குழுவை தள்ளி வைத்துள்ளனர். ஆனால், பி.சி.சி.ஐ., சட்டப்படி இப்படிச் செய்யக் கூடாது,’’ என்றார்.

 

சிறையில் தள்ள வேண்டும்

லண்டனில் தலைமறைவாக உள்ள ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி கூறுகையில்,‘‘  பண பலம், மாபியா பலம் சுப்ரீம் கோர்ட் முன்பு எடுபடவில்லை. உண்மை நிலைத்துள்ளது. கிரிக்கெட்டினை காப்பாற்றிய நீதிபதி முத்கலுக்கு பாராட்டுக்கள். தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு மற்றும் பி.சி.சி.ஐ.,யில் உள்ள வலிமையான மாபியா கும்பல்களை களை எடுக்க இது தான் சரியான தருணம். அறிக்கையில் இடம் பெற்ற அனைவரையும் சிறையில் தள்ள வேண்டும்,’’ என்றார்.

 

சென்னை, ராஜஸ்தான் கதி?

ஐ.பி.எல்., விதிப்படி அணி உரிமையாளர்கள் ‘பெட்டிங்’, ‘பிக்சிங்’ போன்ற செயல்களில் ஈடுபட்டால், அந்தந்த அணிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். தற்போது சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தானின் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சுமத்தப்பட்டதால், சம்பந்தப்பட்ட அணிகளின் கதி என்ன ஆகும் என, மீண்டும் கேள்வி எழுந்தது.

9 வீரர்கள் யார்

கிரிக்கெட் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, 9 வீரர்கள் பெயர்கள் சூதாட்ட அறிக்கையில் உள்ளதாக தெரிகிறது. இதில் ராஜஸ்தான் வீரர்கள் ஸ்டூவர்ட் பின்னி, இங்கிலாந்தின் ஓவைஸ் ஷா இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. மீதமுள்ள வீரர்கள் பெயர் தற்போதைக்கு வெளியாகாது என்று தெரிகிறது.

 

என்னை விசாரிக்கவே இல்லை

சீனிவாசன் கூறுகையில்,‘‘ சூதாட்டத்தில் குருநாத்துக்கு எவ்வித பங்கும் இல்லை. இவர் ஒரு முறை கூட சென்னை அணியின் அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. ஆனால், ஆர்வம் காரணமாக போட்டிகளை காணச் செல்வார். தவிர, முத்கல் குழு என்னை விசாரிக்கவே இல்லை,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415985534/srinivasanbcci.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் முத்கல் கமிட்டி என்னை விசாரிக்கவில்லை: ஓவைஸ் ஷா மறுப்பு
 

 

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் கமிட்டி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஓவைஸ் ஷா மீது குற்றம்சாட்டியிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

முத்கல் கமிட்டி என்னை விசாரிக் காத நிலையில் உச்ச நீதிமன்றத் தில் எனது பெயர் குறிப்பிடப் பட்டது ஏமாற்றமளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முத்கல் கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப் பட்டுள்ள 7 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

 

ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், அவருடைய மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா, ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர் ராமன் ஆகியோருடன் மேலும் 3 பேருடைய பெயர்களையும் நீதிபதிகள் வெளியிட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் கிரிக்கெட் வீரர்கள் என தெரிய வந்ததையடுத்து அவர்களின் பெயரை வெளியிடுவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.

அந்த 3 வீரர்களில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஓவைஸ் ஷாவும் ஒருவர் என தெரியவந்தது. இதையடுத்து அவர் கூறியிருப்பதாவது: இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் என்னிடம் இருந்து எந்த விவரங்களையும் கேட்கவில்லை. அப்படியிருக்கையில் எனது பெயர் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது ஏமாற்றமளிக்கிறது.

நான் விசாரணை வளையத்துக்குள் இருப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது. முத்கல் கமிட்டி அறிக்கையில் எனது பெயரும் இடம்பெற்றிருப்பது எனக்கு இன்றுதான் (நேற்று) தெரிந்தது. முத்கல் கமிட்டி என்னை விசாரிக்கவும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

பிசிசிஐ செயற்குழு 18-ம் தேதி கூடுகிறது

பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக அதன் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் சீனிவாசன் பங்கேற்பார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போது நீதிமன்ற உத்தரவு உள்ளிட்டவை குறித்தும், சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிகிறது. பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்துக்கான புதிய தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6604859.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சீனிவாசனுக்கு தொடர்பில்லை: முத்கல் கமிட்டி
 

 

ஐபிஎல் 2013- டி-20 கிரிக்கெட் போட்டிகளின் போது நடந்ததாகக் கூறப்படும் மேட்ச் பிக்சிங் முறைகேட்டில் சீனிவாசனுக்கு தொடர்பில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முத்கல கமிட்டி அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், ஐபிஎல் சூதாட்ட விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் சீனிவாசன் செயல்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா, புக்கிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு ஆட்டத்தின் முடிவுகளை, போக்குகளை முன் கூட்டியே மாற்றியமைக்கும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று முத்கல் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முத்கல் கமிட்டியின் 35 பக்க விசாரணை அறிக்கையில் சில பகுதிகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

சீனிவாசனுக்கு மேட்ச் பிக்சிங்கில் தொடர்பில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. ஆனால், ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு மற்றும் சீனிவாசனுக்கு சூதாட்டம் நடைபெறுவது குறித்து அறிந்திருந்தும் அதனை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றம் கவனம் கொண்டுள்ளது.

ஐ.பி.எல். தலைமைச் செயலதிகாரி சுந்தர் ராமனுக்கு புக்கிகள் தொடர்பு இருப்பது தெரியும். ஒரு சீசனில் 8 முறை அந்த புக்கி இவரைத் தொடர்பு கொண்டுள்ளதாக முத்கல் அறிக்கை தெரிவித்துள்ளது.

 

மெய்யப்பனின் சூதாட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரியே அவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6608013.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல் சூதாட்ட விசாரணை: சீனிவாசனின் மவுனம் பற்றி கவாஸ்கர் சாடல்
 

 

ஐபிஎல் சூதாட்டம் பற்றிய முத்கல் கமிட்டி விசாரணை அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது பற்றியும், அதுபற்றி சீனிவாசன் சாதிக்கும் மவுனம் பற்றியும் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மெல்பர்னில் ‘இந்தியா டுடே குழு’-உடன் பேசிய சுனில் கவாஸ்கர் கூறியதாவது: “சட்டத்தின் முழு சக்தியும் மெய்யப்பன் மீது இறங்க வேண்டும். முத்கல் கமிட்டி அறிக்கையில் சீனிவாசனுக்கு, ஐபிஎல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது என்பது தெரியும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு நடந்த பின்பும் சீனிவாசன் மவுனம் சாதிப்பது ஏன்? சூதாட்டம் நடைபெறும் விவகாரம் அவருக்கு தெரிந்திருந்தது என்றால் அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

 

நியூசிலாந்து நாட்டில் சூதாட்டத்தை எதிர்த்து புதிய சட்டம் நடைமுறையில் உள்ளது. அதில் குற்றவாளி வீரர்கள் சிறையில் அடைக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அப்படிப்பட்ட சட்டம் தேவை.

இந்தியாவில் நிறைய சூதாட்டங்கள் நடைபெறுகின்றன. கருப்புப் பணம் புழங்குகிறது. சூதாட்டத்தை அதிகாரபூர்வமாக பந்தயம் என்பதாக மாற்றினால் அரசின் வருவாயும் கூடும். இப்படிச் செய்தால் சட்டவிரோத சூதாடிகளை பிடிக்க வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/article6614709.ece

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் ஒட்டுமொத்த அணியும் உள்ளே போய்விடும் அபாயம் உள்ளது.. :icon_idea:

  • தொடங்கியவர்

நான் அப்படி சொல்லவே இல்லையே: கவாஸ்கர் திடீர் பல்டி
நவம்பர் 20, 2014.

 

புதுடில்லி: ‘வீரர்கள் விதிகளை மீறியது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, இதற்கு சீனிவாசன் விளக்கம் தர வேண்டும் என்று நான் சொல்லவே இல்லை. ‘மேட்ச் பிக்சிங்’ சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறினேன்,’’ என, கவாஸ்கர் தெரிவித்தார்.

ஆறாவது ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் விசாரணை அறிக்கை வெளியானது. இதில்,‘ ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன் எவ்வித தவறும் செய்யவில்லை. ஆனால், விதிமீறிய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை,’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,‘‘ வீரர்கள் விதிகளை மீறியது தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, என்பதற்கு சீனிவாசன் தெளிவான விளக்கம் தர வேண்டும,’’ என, தெரிவித்து இருந்தார்.

 

தற்போது இவ்விஷயத்தில் அப்படியே ‘பல்டி’ அடித்துள்ளார். கவாஸ்கர் கூறியது:

பிரதமர் மோடி பங்கேற்ற மெல்போர்ன் நிகழ்ச்சியின் போது பல்வேறு செய்தி சேனல்களிடம் பேசினேன். இதில் முத்கல் அறிக்கை குறித்த கேள்விகள் எதுவும் இல்லை.

இனிமையான நினைவுகளுடன் துாங்கி எழுந்த எனக்கு, காலையில் மிகப்பெரிய அதிர்ச்சி. முத்கல் குழு அறிக்கை குறித்து நான் கூறியதாக, முற்றிலும் தவறான தகவல்களுடன், தலைப்புச் செய்திகளைப் பார்த்து ஆடிப்போய் விட்டேன்.

 

என்னைப் பொறுத்தவரையில் ‘மேட்ச் பிக்சிங்’ சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் தெரிவித்து இருந்தேன்.

கடைசியில் இவற்றை, தவறான முறையில் சித்தரித்து செய்திகள் வெளியிட்டு, கடந்த மூன்று நாட்களாக இருந்த இனிமையான நினைவுகளை முற்றிலும் சீரழித்து விட்டனர்.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416505260/GavasgarIPLFixingSrinivasan.html

 

  • தொடங்கியவர்

கிரிக்கெட்டின் மேன்மையை கொல்லாதீர்: பிசிசிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
 

 

ஐபிஎல் கிரிக்கெட் ‘ஸ்பாட் பிக்சிங்’ தொடர்பான முத்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையில், ‘கிரிக்கெட்டின் மேன்மையைக் காக்குமாறு’ உச்ச நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

"கிரிக்கெட் ஆட்டத்தில் இத்தகைய விரும்பத் தகாத விவகாரங்களை நீங்கள் அனுமதித்தால் நீங்கள் கிரிக்கெட்டை கொல்வதாகவே பொருள்.

நீதிபதி முத்கல் கமிட்டியின் விசாரணை அறிக்கையை நாங்கள் உண்மை உபதேசமாகவே காண்கிறோம்.

சந்தேகத்தின் பலனை கிரிக்கெட் ஆட்டத்திற்கு சாதகமாக்க வேண்டுமே தவிர தனிநபருக்குச் சாதகமாக்கக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் பிசிசிஐ-க்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஐசிசி தலைவர் சீனிவாசனுக்கு அறிவுறுத்தும் போது, “உங்கள் அணியின் அதிகாரி ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ள நிலையில், பிசிசிஐ தலைவர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் என்ற இரட்டை நலம் குறித்த கேள்விகளை சந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6630005.ece

  • தொடங்கியவர்

சீனிவாசனுக்கு சுப்ரீம் கோர்ட் ‘கிடுக்கிப்பிடி’: மீண்டும் தலைவராவதில் சிக்கல்
நவம்பர் 24, 2014.

 

புதுடில்லி: ஐ.பி.எல்., சூதாட்ட முறைகேடு தொடர்பாக சீனிவாசனிடம் சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது. பி.சி.சி.ஐ., தலைவராக இருந்து கொண்டு, ஐ.பி.எல்., அணியின் உரிமையாளராகவும் எப்படி இருக்க முடியும் என விளக்கம் கேட்டுள்ளது.      

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதன் இறுதி அறிக்கை கடந்த 3ம் தேதி தாக்கல் ஆனது. இதில், ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன், குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா, சென்னை அணியின் சுந்தர ராமன் என, கிரிக்கெட் வீரர்கள் இல்லாத, 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது தெரிந்தது.       

                 

கடந்த 17ம் தேதி நடந்த முத்கல் குழுவின் இறுதி அறிக்கையை சுப்ரீம்  கோர்ட் வெளியிட்டது. இதில் சீனிவாசன் ‘பெட்டிங்’, ‘பிக்சிங்’ உள்ளிட்ட எதிலும் ஈடுபடவில்லை. 2013 ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்த விசாரணைகளை தடுக்கும் முயற்சியையும் இவர் செய்யவில்லை. அதேநேரம் வீரர்கள் ஐ.பி.எல்., தொடர் விதிகளை மீறுவது குறித்து தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார் என தெரிவிக்கப்பட்டது.      

இதற்கிடையே தன்னை மீண்டும் பி.சி.சி.ஐ., தலைவராக நியமிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சீனிவாசன் மனு தாக்கல் செய்தார்.   

         

இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் மதம் போல கருதுகின்றனர். ஐ.பி.எல்., தொடரை பி.சி.சி.ஐ., தான் அறிமுகப்படுத்தியது. எனவே இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இப்படி இருக்கையில், ஒரு அணியின் உரிமையாளராக இருந்து கொண்டு, பி.சி.சி.ஐ., தலைவராக நடுநிலைமையுடன் எப்படி செயல்பட முடியும். ஒரு போட்டியின் முடிவு முன்கூட்டியே தீர்மானிப்பது தெரிந்தால், எப்படி ரசிகர்கள் போட்டியை காண வருவார்கள். சூதாட்டம் தொடர்ந்து நடந்தால், அது கிரிக்கெட்டை கொல்வதற்கு சமம். மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டால், கிரிக்கெட் காணாமல் போய்விடும். ‘ஜென்டில்மேன்’ உணர்வுடன் விளையாடப்படுவதால் தான் கிரிக்கெட் முன்னேற்றம் காண்கிறது. முத்கல் அறிக்கையை முழுமையாக நம்புகிறோம். அனைத்துக்கும் பி.சி.சி.ஐ., விளக்கம் அளிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416825125/SrinivasanBCCISupremeCourtIPLFixing.html

  • தொடங்கியவர்

முத்கல் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்ட வீரர்கள் பெயரை வெளியிட பரிசீலனை: உச்ச நீதிமன்றம்
 

 

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையின் போது, கமிட்டி குறிப்பிட்டிருந்த வீரர்கள் பெயர்களை வெளியிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த கோரிக்கையை எழுப்பினார். இதனையடுத்து உச்ச நீதிமன்ற பெஞ்ச் அடுத்த விசாரணையின் போது வீரர்கள் பெயர்களை வெளியிடுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

முத்கல் அறிக்கையில் தனிநபர் 2 மற்றும் தனிநபர் 3 என்று குறிப்பிடப்பட்ட வீர்ர்கள் பெயர்களை வெளியிடுவது அவசியம், இதனால் தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கலாம் என்று சால்வே கோரினார்.

 

சால்வேயின் இந்தக் கோரிக்கையை பிசிசிஐ கடுமையாக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குருநாத் மெய்யப்பனின் ஸ்பாட் பிக்சிங் செயல்பாடு குறித்து முத்கல் கமிட்டியின் விசாரணையின் அடிப்படையில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாக்கூர் மற்றும் கலிபுல்லா ஆகியோர், “குருநாத் மெய்யப்பன் தகவல்களைக் கசியவிடுகிறார் என்றால் மற்றவர்கள் அதன் பெயரில் சூதாட்டப் பந்தயம் கட்டுகின்றனர் என்பது உள்வியாபாரம்” என்று கூறினர்.

 

மேலும், முத்கல் கமிட்டி முதல் விசாரணை அறிக்கையில், குருநாத் மெய்யப்பன் பங்கு குறித்தும், அதன் மீதான சீனிவாசனின் மவுனம் பற்றியும் குறிப்பிட்ட அதே வேளையில் இரண்டாவது அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் ஒர் கிரிக்கெட் ஆர்வலர் மட்டுமே என்று கூறி அவருக்கும் அணிக்கும் இடையிலான உரிமைதாரர் தொடர்பு குறித்து மவுனம் காத்தது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இன்று நடந்த 2 மணி நேர விசாரணையின் போது, பிஹார் கிரிக்கெட் சங்க வழக்கறிஞர் சால்வே, முத்கல் கமிட்டியின் முதல் அறிக்கையை 2-வது அறிக்கையுடன் சேர்த்து வாசிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்படி வாசித்தால், இந்த வழக்கின் அனைத்து உண்மைகளையும் மனதில் கொண்டால் குற்றச்சாட்டை மறைக்கும் விஷயமும் நிரூபிக்கப்படும் என்றார்.

 

மேலும், அவர் கூறும்போது, உச்ச நீதிமன்றம் முதலில் கூறியதான, எந்த ஒரு அமைப்பின் நேர்மையும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சீனிவாசன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். பிசிசிஐ-யை நீதி மதிப்பாய்வின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நவம்பர் 27-ஆம் தேதி மீண்டும் நடைபெறும் விசாரணையில் வீரர்கள் பெயர்களை வெளியிட பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உறுதி அளித்தனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6633404.ece

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவுரை! 

 

டெல்லி: பெட்டிங், பிக்ஸிங்கில் வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நீக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு என். சீனிவாசன் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 6வது ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங், பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்தது.

 

ஐ.பி.எல். போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவுரை! இந்த அறிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அத்துடன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் என். சீனிவாசனுக்கு இதில் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் அவர் இந்த புகார்கள் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்று கூறியிருந்தது. ஆனாலும் தொடர்ந்து குருநாத் மெய்யப்பன் சென்னை அணி நிர்வாகி அல்ல, சென்னை அணியின் ஆதரவாளர் என்றே கூறப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பிசிசிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிதான் என்று ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உண்மையான உரிமையாளர் யார்? சென்னை அணிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்குமான தொடர்புகள் என்ன?

 

இதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் முகுல் முட்கல் அறிக்கையின்படியே, ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நீக்கலாம்; இதற்கு வேறு எந்த ஒரு விசாரணையுமே தேவையில்லை என்றும் தற்போதைய நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் என். சீனிவாசன் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதி நீக்கம் செய்யப்படும் நிலைமையை எதிர்கொண்டிருக்கிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/ipl-spot-fixing-sc-observes-that-chennai-super-kings-must-be-disqualified-215781.html

  • தொடங்கியவர்

சம்மதம் தந்தார் சரத் பவார்! *கோர்ட்டில் சீனிவாசன் பதில்
டிசம்பர் 01, 2014.

புதுடில்லி: பி.சி.சி.ஐ., முன்னாள் தலைவர் சரத் பவாரிடம் அனுமதி பெற்று தான் சென்னை அணியை வாங்குவதற்கான ஏலத்தில் பங்கேற்றதாக, சுப்ரீம் கோர்ட்டில் சீனிவாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் குழு, 35 பக்க விசாரணை அறிக்கை சமர்ப்பித்தது.

 

இதன் மீதான விசாரணை தற்போது நடக்கிறது.

இதில், பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சீனிவாசன் மீது கடுமையான கருத்துக்களை, சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இந்த வழக்கு மீண்டும் நேற்று, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஏ.கே.பட்னாயக் அடங்கிய சிறப்பு ‘பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கோர்ட்,‘ ஆதாயம் தரும் வகையில் இரண்டு பதவிகளில் இருக்கவில்லை என்பதை சீனிவாசன் தான் நிரூபிக்க வேண்டும். தவிர, ஐ.பி.எல்., ஊழல் தொடர்பாக இவர் ஏன் விசாரணை கமிட்டி அமைக்கவில்லை. ஐ.பி.எல்., தொடரில் வீரர்கள் எப்படி வாங்கப்படுகின்றனர், இந்த பணத்தை அணி உரிமையாளர்கள் எப்படி திரும்ப பெறுகின்றனர், டிக்கெட் விற்பனை, ஒளிபரப்பு உரிமம் தருவது உள்ளிட்ட நிதி நிர்வாக விவரங்களை பி.சி.சி.ஐ., தர வேண்டும்,’ என, கேட்டது.

 

இதற்கு சீனிவாசன் தரப்பில் கூறப்பட்ட பதில் விவரம்:

குருநாத், ராஜ்குந்த்ரா மீது ‘பெட்டிங்’ புகார் எழுந்தது குறித்து தெரியவந்தவுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதுகுறித்து விசாரிக்க அருண் ஜெட்லி ஆலோசனையின் பேரில் தான் குழு அமைக்கப்பட்டது. இதில் பி.சி.சி.ஐ., தலையீடு இருக்கக்கூடாது என, இவர் தான் தெரிவித்தார்.

தவிர, சென்னை அணியை வாங்கும் முன், அப்போதைய பி.சி.சி.ஐ., தலைவராக இருந்த சரத்பவாரிடம், அனுமதி பெறப்பட்டது. இதற்காக, பி.சி.சி.ஐ., விதிகளில் திருத்தம் செய்யப்பட்டன. இதனால் தான், கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்ற பலர், பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.பி.எல்., என, இரண்டிலும் பதவி வகிக்கின்றனர்.

தவிர, ஐ.பி.எல்., சூதாட்ட புகாரில் எனக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை. விசாரணை முழுமையாக நடைபெற ஒத்துழைப்பு தரப்பட்டது.

 

இவ்வாறு கோர்ட்டில் கூறப்பட்டது.

முடிவில்,‘ அருண் ஜெட்லியின் பெயரை திரும்ப திரும்ப கூறுகிறீர்கள், அவர் இங்கு இல்லை, இந்நிலையில் அவரது பெயரை கூறக்கூடாது. வழக்கு விசாரணை, வரும் 8, 9ம் தேதிகளில் நடக்கும்,’ என, கோர்ட் தெரிவித்தது.

 

ராஜினாமா செய்வாரா தோனி

ஐ.பி.எல்., சூதாட்ட விசாரணையில், ‘சென்னை அணி கேப்டன்,  இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் என, ஆதாயம் பெறும் வகையில், ஒரே நேரத்தில் இரு பதவிகளில் உள்ளார்,’ என, தோனி குறித்து சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்தது.

இதுகுறித்து சீனிவாசன் கூறுகையில்,‘‘சூதாட்ட புகார் குறித்து கோர்ட் விசாரித்து வரும் நிலையில், எதுவும் கூற முடியாது. தவிர, தோனி ராஜினாமா செய்ய வேண்டும் என, நான் ஏன் அவரிடம் கேட்க வேண்டும், நான் ஏன் இதைச் சொல்ல வேண்டும்.  சூதாட்ட விசாரணை காரணமாக இந்திய கிரிக்கெட்டின் ‘இமேஜிற்கு’ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/12/1417454691/SharadPawaropinionbeforebiddingforCSKSrinivasantellsSC.html

  • தொடங்கியவர்

ஐபிஎல் கிரிக்கெட் நிதி விவரங்களை கேட்டது உச்ச நீதிமன்றம்
 

 

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் நிதி நடைமுறைகள் என்ன என்பதையும் அதன் முழு விவரங்களையும் அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்டுள்ளது.

ஐபிஎல் அணிகள், உரிமையாளர்கள் தேர்வு, வீரர்கள் ஏலம், அணி உரிமையாளர்கள் முதலீடு செய்த பணத்திற்கான லாபம் எப்படி, ஆகிய விவரங்களை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும் விவாதம் டிசம்பர் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நேற்று நடைபெற்ற விசாரணை மற்றும் வாதங்கள் வருமாறு:

பிஹார் கிரிக்கெட் சங்க மனுவுக்கு பதில் கூறிய வழக்கறிஞர் சிபல், "என்னை (சீனிவாசன்) நீக்க வேண்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தகுதி இழப்பு செய்ய வேண்டும் என்ற ஒரே திட்டத்தை தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், பிஹார் கிரிக்கெட் சங்கம் மும்பை உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன், தோனி ஆகியோரது முரண்பாடான இரட்டை நலன் பற்றிய பிரச்சினையை எழுப்பவில்லை, ஆனால் உச்ச நீதிமன்றத்தில் எழுப்பியுள்ளனர். என்றும் குறை கூறினார்.

 

இந்த வாதத்தை ஏற்காத நீதிபதி தாக்கூர், "அதாவது ரிட் மனுவில் ஒரு விஷயம் எழுப்பபட்டதா இல்லையா என்பது இப்போது முக்கியமல்ல, முரண்பாடான இரட்டை நலன் இருக்கிறதா இல்லையா? ஒன்று இருக்கிறது அல்லது இல்லை இந்த இரண்டு பதில்களுக்கும் இடைப்பட்ட பதில் அல்லது 3-வது பதில் கிடையாது. எனவே முத்கல் அறிக்கையின் முன்பு முரண்பாடான இரட்டை நலன் இல்லை என்பதை தரவு பூர்வமாக எங்களுக்குக் காண்பியுங்கள்” என்றார்.

டிசம்பர் 8-ஆம் தேதி மீண்டும் விவாதம் தொடர்கிறது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6654980.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல்: குருநாத் மெய்யப்பன் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்
 

 

2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்பாட் பிக்சிங் குற்றம்சாட்டப்பட்ட குருநாத் மெய்யப்பன் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 

பிசிசிஐ-யின் செயல்பாடுகளில் குறுக்கிட விரும்பவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம் பிசிசிஐ-க்கு இது குறித்து 4 வழிகாட்டுதல்களை அறிவுறுத்தியுள்ளது.

1. சீனிவாசன் விலகியிருக்க வேண்டும். பிசிசிஐ கமிட்டி மெய்யப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. மெய்யப்பனுக்கு எந்த விதமான தண்டனை அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய 2 நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும்.

3. ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு மெய்யப்பனுக்கான தண்டனை என்னவென்பதை முடிவெடுக்கலாம்.

4. மெய்யப்பனுக்கு என்ன தண்டனை அளிப்பது என்பதை முத்கல் கமிட்டி முடிவு செய்வது.

என்ற 4 விருப்பத் தெரிவுகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 

நீதிபதிகள் கூறியதாவது: “மெய்யப்பனுக்கு எதிராக நடவடிக்கை அவசியம். தண்டனை அளவு என்னவென்பதை முடிவு செய்ய என்ன செய்ய வேண்டும்? நாங்கள் பிசிசிஐ-யின் செயல்பாடுகளில் குறுக்கிட விரும்பவில்லை. தண்டனை அளவுகளை அறிவிக்கவும்” என்று கூறியுள்ளனர்.

மேலும் முரண்பாடான இரட்டை நலன்கள் இல்லை என்று சீனிவாசன் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. "அனைத்துச் சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கூறுகிறோம், முரண்பாடான இரட்டை நலன்கள் இல்லை என்பதை ஏற்பது மிகக் கடினம். நீங்கள் இந்தியா சிமெண்ட்ஸின் நிர்வாக இயக்குநர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர், நீங்கள் பிசிசிஐ தலைவராக இருந்த போது உங்கள் அணியின் அதிகாரி ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே முரண்பாடான இரட்டை நலன்கள் இல்லை என்பதை ஏற்பது கடினம்” என்று கூறினர் நீதிபதிகள்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6676251.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல்- தலையிட மாட்டேன்: உச்ச நீதிமன்றத்தில் சீனிவாசன் உறுதி
 

 

சூதாட்ட வழக்கில் தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை ஐபிஎல் விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று உச்ச நீதிமன்றத்தில் என்.சீனிவாசன் தெரிவித்தார்.

பிசிசிஐ தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றில், சீனிவாசன் இந்த உறுதியை அளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் என்.சீனிவாசன் தரப்பில் இன்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், "பிசிசிஐ தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இவ்வழக்கில் நான் குற்றமற்றவர் என அறிவிக்கப்படும் வரை, ஐபிஎல் தொடர்பான எந்த விவகாரங்களிலும் தலையிடாமல் விலகி இருக்கத் தயாராகவுள்ளேன். ஆகையால், நான் பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தலில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும்" என்று சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

முன்னதாக, ஐபிஎல் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங், சூதாட்டம் நடைபெற்றது தொடர்பான வழக்கின் விசாரணையும், மீண்டும் பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்பதற்கு அனுமதி கோரி என்.சீனிவாசனின் கோரிக்கை தொடர்பான மனுவும் உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். தாகுர், இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, "பிசிசிஐயின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் நிலையில், அந்த அமைப்பின் சார்பில் நடைபெறும் கூட்டங்களில் என்.சீனிவாசன் பங்கேற்று வருகிறார். தேர்தலை தாமதப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற பிசிசிஐ செயற்குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார்

 

ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் மற்றும் சூதாட்டம் தொடர்பாக நீதிபதி முகுல் முத்கல் அளித்துள்ள அறிக்கை தொடர்பாக பிசிசிஐ நியாயமாகவும், நடுநிலையுடனும் விசாரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தேசத்தை ஏமாற்றியதாக கருத வேண்டியிருக்கும்.

இந்த விசாரணையை நடத்தவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான புகார் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வழங்க வேண்டிய தண்டனையை தீர்மானிக்கலாம்.

 

இரட்டை ஆதாயம் பெறும் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசித்து, அதைத் தடுப்பதற்கான விதிமுறைகளை கொண்டு வருவது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு என்.சினிவாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, "என்.சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்துதான் ஒதுங்கியிருக்கிறார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து பதவியில் உள்ளார். அந்த அடிப்படையில்தான் அவர் பிசிசிஐ கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்" என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/article6679047.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல் கேஸ்: பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஜனவரி 31 வரை தேர்தல் நடத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட்

 

l டெல்லி: ஐபிஎல் மேட்ச் பிக்ஸிங் வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் 2015ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை தேர்தலை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தாகூர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

ஐபிஎல் கேஸ்: பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஜனவரி 31 வரை தேர்தல் நடத்தக் கூடாது - சுப்ரீம் கோர்ட் விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ஐ.பி.எல். சூதாட்ட விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன் இரண்டு பொறுப்பில் இருப்பதினால் நிலவும் முரண்பாடு உள்பட பல பிரச்சினைகள் இருக்கிறது. எனவே இந்த வழக்கு விசாரணை முடிய இன்னும் சில காலம் பிடிக்கும் என்றனர். இதையடுத்து என்.சீனிவாசன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தல் நடத்த நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் டிசம்பர் 17-ம் தேதிக்குள் விசாரணை முடியாவிட்டால், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

இதேபோல் கிரிக்கெட் வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் சுந்தரம் வாதிடுகையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தல் நடத்துவதற்கு 3 வாரங்களுக்கு முன்பே உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டியது அவசியம். எனவே ஜனவரி 31-ம் தேதி வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். முன்னதாக கபில் சிபல் வாதிடுகையில், ஐ.பி.எல். வழக்கு முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்திலோ, ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூட்டத்திலோ கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்க என்.சீனிவாசன் தயார். அதற்கான உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாகவும் தாக்கல் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தலை ஜனவரி 31-ம் தேதி வரை தள்ளி வைக்க நீதிபதிகள் ஒத்துக்கொண்டனர். வாரிய தலைவர் தேர்தல் தேதி 3-வது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கு வருகிற 15 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/supreme-court-directs-bcci-postpone-elections-till-end-january-216779.html

  • தொடங்கியவர்

பி.சி.சி.ஐ., விதிமுறையில் திருத்தம்: சுப்ரீம் கோர்ட் ஆராய முடிவு
டிசம்பர் 15, 2014.

 

புதுடில்லி: கிரிக்கெட் நிர்வாகிகளுக்கு சாதகமாக பி.சி.சி.ஐ., விதிமுறையில் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய திருத்தம் குறித்து சுப்ரீம் கோர்ட் ஆய்வு செய்ய உள்ளது.      

ஆறாவது ஐ.பி.எல்., தொடர் (2013) சூதாட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரிக்கிறது. இதில் பி.சி.சி.ஐ., தலைவராக இருந்து கொண்டு, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை சீனிவாசன் வாங்கியது குறித்து சர்ச்சை எழுந்தது.       

 

நேற்று இவ்வழக்கின் விசாரணை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, ஏ.கே.பட்னாயக் அடங்கிய சிறப்பு ‘பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது.      

அப்போது, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) முன்னாள் தலைவர் பிந்த்ரா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘பி.சி.சி.ஐ., விதிமுறை 6.2.4ல் சர்ச்சைக்குரிய முறையில் 2008ல் திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி கிரிக்கெட் நிர்வாகிகளாக இருப்பவர்கள் ஐ.பி.எல்., அணிகளையும் வாங்க முடியும். இந்த திருத்தம் தான் ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிக்க வழிவகுத்தது. அனைத்து பிரச்னைகளுக்கும் இதுவே வித்திட்டது,’என, தெரிவிக்கப்பட்டது.     

 

இது குறித்து சிறப்பு ‘பெஞ்ச்’ கூறியது:     

பி.சி.சி.ஐ., திருத்தத்தை தார்மீக அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது குறித்து கோர்ட் ஆய்வு செய்யும் அல்லது ஒரு கமிட்டி அமைத்து  இத்தகைய திருத்தங்களை  விளையாட்டு அமைப்புகள் செய்யலாமா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்.      

 

ஐ.பி.எல்., தலைமை அதிகாரி சுந்தர ராமனுக்கு, இத்தொடரில் நடந்த அனைத்து தவறான விஷயங்களும் தெரிந்திருக்கும். இதை தடுத்திருக்க வேண்டும். பி.சி.சி.ஐ., தலைவரின் மருமகன் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் போது நீங்கள் என்ன செய்ய முடியும். வெறும் பார்வையாளராக இருந்து கொண்டு எதுவும் செய்யவில்லை. மெய்யப்பன் ‘பெட்டிங்கில்’ ஈடுபடுகிறார் என அனைவருக்கும் தகவல் கொடுத்திருக்க வேண்டும்.      

இவ்வாறு சிறப்பு ‘பெஞ்ச்’ தெரிவித்தது.     

இவ்வழக்கின் விசாரணை இன்று தொடர்ந்து நடைபெறும்.

 

http://sports.dinamalar.com/2014/12/1418663234/IPLCricketSpotFixingBCCISupremeCourt.html

 

  • தொடங்கியவர்

"பெட்டிங்கை" வேடிக்கை பார்ப்பதா? ஐ.பி.எல். சி.இ.ஓ. சுந்தர்ராமனுக்கு "செம டோஸ்" விட்ட உச்சநீதிமன்றம்!

 

டெல்லி: ஐ.பி.எல். போட்டிகளில் பெட்டிங் நடைபெறுகிறது என்று தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதா? என்று ஐ.பி.எல். சி.இ.ஓ. சுந்தரராமனை மிகக் கடுமையாக உச்சநீதிமன்றம் விமர்சித்தது. ஐ.பி.எல். போட்டிகளின் பிக்ஸிங் மற்றும் பெட்டிங் தொடர்பாக விசாரணை நடத்திய முட்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவைச் சேர்ந்த ஒய்.பி.சிங், சில அணி உரிமையாளர்கள் பெட்டிங்கில் ஈடுபடுவதாக வதந்தி பரப்பப்படுகிறது என்று ஐ.பி.எல். சி.இ.ஓ. சுந்தர் ராமன் தரப்பில் கூறப்பட்டது.

 

இதில் கடும் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த சிலர் பெட்டிங் ஈடுபடுவதாக புகார் வந்தும் நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு மற்றவர்கள் மீது குறை கூற வேண்டாம்.. பெட்டிங் போன்ற நடவடிக்கைகளில் பிசிசிஐ தலைவராக இருந்தவரின் மருமகன் ஈடுபடுகிறார் என்ற தகவல் கிடைத்த போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஒன்றுமே செய்யாமல் அமைதியாகத்தான் இருந்தீர்கள்.. என்றனர். மேலும் மெய்யப்பனும் குந்த்ராவும் பெட்டிங்கில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல் கிடைத்த போது அந்த தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டமா? இல்லையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சுந்தர் ராமன் தரப்பு வழக்கறிஞர், அப்படி எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என்றார்.

 

இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் ஆதித்ய வர்மா, முட்கல் கமிட்டியிடம் சுந்தர் ராமன் தெரிவித்தது வேறு.. தற்போது உச்சநீதிமன்றத்தில் அவர் கூறி வருவது வேறு... இரண்டும் முரண்பாடாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளது. சீனிவாசன் மீது புகார்கள் நிலுவையில் இருக்கும் போது அவர் தொடர்ந்தும் பதவியில் இருக்கக் கூடாது என்பதற்கான ஆவணங்களைக் கொடுத்துள்ளோம். அதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என்றார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/ipl-fixing-case-sc-slams-sundar-raman-217078.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.