Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆன்ட்ராய்டில் தமிழ் மொழி

Featured Replies

 

android.jpg

உலக மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. ஆன்ட்ராய்ட், ஆப்பில், பயர் பாக்ஸ் உள்ளிட்ட செயலிகள் (Mobile Application) ஸ்மார்ட் போன்கள் இயங்குவதற்கு உதவுகின்றன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்கள் வளர்ந்துவரும் நாடுகளின் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

நம் இந்தியாவிலும் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் மக்களின் மனதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. விளையாட்டு (Games), இணையம் (Internet) மற்றும் சமூக வலைத்தளங்கள் (Social Networking Sites) போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மொழி சார்ந்த பல்வேறு செயலிகளும் ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் கிடைக்கின்றன. 

குறிப்பாக தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் பயனுள்ள வகையிலான செயலிகளும் ஆன்ட்ராய்ட் செயலிகள் உருவிலுள்ளன. அதனை தமிழ் மொழி மீது பற்றுகொண்ட ஆர்வலர்களும், நிறுவனங்களும் வடிவமைத்து தமிழ் மக்களின் பயன்பாட்டிற்காக கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்துள்ளனர். 

இக்கட்டுரையின் மூலம் தமிழ் மொழிக்கு பயனளிக்கும் குறிப்பிட்டச் சில செயலிகளை குறித்துக் காண்போம்...

ஆன்ட்ராய்ட் போனில் தமிழ் எழுதவும், படிக்கவும் 

ஆன்ட்ராய்ட் செயலிகள் மூலம் ஸ்மார்ட் போன்களில் தமிழை எழுதவும், படிக்கவும் இயலும். 

tamil%2Bunicode.png

Tamil Unicode Keyboard (https://play.google.com/store/apps/details?id=com.KM.TK&hl=en)ஆன்ட்ராய்ட் செயலியின் மூலம் தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் தட்டச்சுச் (Type) செய்து Cnv எனப்படும் Convert பொத்தானை அழுத்துவதின் மூலம் அச்சொல்லை தமிழ் எழுத்தாக மாற்றாலாம். இது Phonetics (பனடிக்ஸ்) அடிப்படையில் செயல்படுகின்றது. உதாரணமாக AMMAA என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து CNV பொத்தானை அழுத்துவதன் மூலம் அம்மா என மாறிவிடும். 

அதே போல் Opera mini ஆன்ட்ராய்ட் செயலியை  பயன்படுத்தி தமிழ் மொழியை படிக்கலாம். 

அதுமட்டுமல்லாமல் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ் அறிஞர்களும், புலவர்களும் எழுதிய செய்யுள்கள், பாடல்கள், புதினங்கள் மற்றும் நூல்கள் முதலியவற்றையும் ஆன்ட்ராய்ட்  செயலிகளின் மூலம் படிக்கலாம்.

 

thirukkural.jpg
 
திருக்குறள் 

வள்ளுவரால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குறளை ஆன்ட்ராய்ட் போன்களில் படிக்க Thirukkural E-Book - Tamil (https://play.google.com/store/apps/details?id=shasunder.tirukural.ebook) என்ற செயலியை ஸ்மார்ட் போன்களில் நிறுவிக் கொள்வதன் மூலம் திருக்குறளை படித்து பயன் பெறலாம். இணைய இணைப்பின்றி பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர் இதன் வடிவமைப்பாளர்கள்.

avvai%2Bnoolga.jpg
அவ்வை நூல்கள் 

சங்கக்கால பெண்பால் புலவரான அவ்வையார் அவர்கள் எழுதிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை மற்றும் நல்வழி போன்ற நூல்களை ஆன்ட்ராய்ட் போனில் வாசிக்க Avvai Noolgal (https://play.google.com/store/apps/details?id=com.avvai.nools&hl=en) செயலி உதவுகின்றது. குறப்பாக அச்செயலியில் "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்"என்ற டேக் லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையும் இணைய வசதியின்றி பயன்படுத்தலாம்.

kamba%2Bramayanam.png

கம்ப இராமாயணம் 

இந்தியாவின் பழம் பெருமை வாய்ந்த இதிகாச நூலான இராமாயணத்தை கம்பர் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்தார். அந்நூலை இன்றுவரை தமிழகத்தில் இயங்கும் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் வாசித்து வருகின்றனர். அப்படிப்பட்ட புகழ் கொண்ட கம்ப இராமாயணத்தை ஆன்ட்ராய்ட் செயலியில் படிக்க உதவுகின்றது Kamba Ramayanam in Tamil (https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.ramayanam) செயலி.

bharathiyar.png
பாரதியார் படைப்புகள்

மகாகவி பாரதி அவர்கள் எழுதிய நூல்களாக பகவத் கீதை, சந்திரகையின் கதை, தேசிய கீதங்கள், ஞானப் பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை மற்றும் பாரதியாரின் சுயசரிதை உட்பட பாரதியின் தமிழ் பணிகள் அனைத்தையும் படிக்க உதவுகின்றது Mahakavi Bharathiyar Full Work (https://play.google.com/store/apps/details?id=com.varnaa.studio&hl=en) செயலி.

bharathidasan.png

பாரதிதாசன் நூல்கள் 

புதுச்சேரியில் வாழ்ந்த பாரதிதாசன் அவர்கள் செய்யுள் மற்றும் கவிதைகள் அனைத்தும் எளிய நடையில் கதை போல் விவரிக்கப்பட்டிருக்கும். அவர் எழுதிய நூல்களை ஆன்ட்ராய்ட் போனில் வாசிக்க Bharathidasan tamil Poems (https://play.google.com/store/search?q=BHARATHIDASAN%20KAVITHAIGAL%20FULL%20WORK&c=apps&hl=en) என்ற செயலி உதவுகின்றது.

 
மேற்கூறிய தமிழ் நூல்கள் மட்டுமின்றி மேலும் பல தமிழ் நூல்கள், புதினங்கள், அறிஞர்களின் சுயசரிதைகள் உளிட்டவையும் ஆன்ட்ராய்ட் செயலி வடிவில் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தவும், அதன் விவரங்களை அறியவும் Tamil Android (https://www.facebook.com/tamilandroid) என்ற முகநூல் பக்கத்தை பார்க்கவும்.
yosi.png

தமிழ் யோசி 

இந்த ஆன்ட்ராய்ட் செயலியின் (https://play.google.com/store/apps/details?id=com.handheldapplication.yosi&hl=en) மூலம் விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், சிந்தனைகள் மற்றும் பாடல்களை ஸ்மார்ட் போன் மூலம் அறிந்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாது கல்வி அறிவையும் இந்த செயலியின் மூலம் மேம்படுத்திக் கொள்ளலாம்.

unnamedCAOCPSVO.png

தமிழ் அகராதி 

ஆங்கிலம் மற்றும் தமிழியில் இயங்ககூடிய வகையிலான அகராதியை ஆன்ட்ராய்ட் செயலியில் கிடைக்கின்றன. Tamil Dictionary (https://play.google.com/store/apps/details?id=com.dictionary.ta&hl=en) என்ற செயலியின் மூலம் இணைய வசதியின்றி அகராதியை பயன்படுத்தி அர்த்தங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

சங்கப்பலகை 

ஸ்மார்ட் போன்களின் மற்றொரு இயங்கு தளமாகிய ஆப்பிள் செயலியில் சங்கப்பலகை செயலி (https://itunes.apple.com/us/app/sangapalagai/id591043265?mt=8) இயங்குகின்றது. அதன் மூலம் தமிழ் படைப்புகள் அனைத்தையும் அறிந்துக் கொள்ளலாம்.

logo4.jpg
 
www.openreadingroom.com என்ற இணைய தளத்தின் மூலமாகவும் தமிழ் நூல்களை இணையம் மூலம் அறியலாம். நவீன யுகத்தில் ஸ்மார்ட் போன் செயலிகளின் மூலம் தமிழ் நூல்கள் அனைத்தும் நமது கைகளினுள் இருப்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு நிச்சயம் உதவும்.

 

http://mozhyee.blogspot.ch/2014/08/blog-post_30.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.