Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா மீது போர் தொடுப்போம் - வடகொரியா எச்சரிக்கை

Featured Replies

அமெரிக்கா மீது போர் தொடுப்போம் - வடகொரியா எச்சரிக்கை

முந்தா நாள் வரை அவ்வளவாகப் பேசப்படாத நாடாக இருந்த வடகொரியாவைப் பற்றித்தான், இன்று அத்தனை நாடுகளும் கான்ஃபரன்ஸ் கால் போட்டு மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கின்றன. ஆனானப்பட்ட அமெரிக்காவே கதிகலங்கிப் போய், கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறது என்றால் சும்மாவா?

நம்புவதற்குச் சற்றுக் கடினமாக இருக்கும். ஆனால், நடந்திருப்பது இதுதான். ‘நீயா, நானா ஒரு கை பார்த்துவிடுவோம்!’ என்று புஷ்ஷின் மூக்குக்கு நேராக தனது ஆள்காட்டி விரலை உயர்த்திச் சவால் விட்டிருக்கிறார் வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் இல். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காரியத்தை, இப்படி படு கேஷ§வலாக வட கொரியா செய்திருக்கிறது.

ஆனால், எதற்காக அமெரிக்காவை இப்படிச் சீண்ட வேண்டும்? காரணம் இருக்கிறது. 9/11 சம்பவத்துக்குப் பிறகு, வட கொரியாவைக் கொலை வெறியோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட மறுகணமே, உலக வரைபடத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு, எந்தெந்த நாட்டைப் பழிவாங்கலாம் என்று சிவப்பு மையால் வட்டமிடத் தொடங்கிவிட்டார் புஷ். ஆப்கனிஸ்தான், ஈராக் என்று ஆரம்பித்து அவர் தயாரித்த ஹிட் லிஸ்ட்டில், வட கொரியாவின் பெயரும் உண்டு.

ஒசாமா பின்லேடன் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்பதற்காக ஆப்கனிஸ்தானை துவம்சம் செய்தார்கள். அதி பயங்கர ஆயுதங்களை ஒளித்துவைத்திருக்கிறார்கள் என்று சொல்லி, ஈராக்கை பார்ட் பார்ட்டாகக் கழற்றினார்கள். இன்னமும் வேலை முடிந்தபாடில்லை. வட கொரியா என்ன பாவம் செய்தது? ஒன்றல்ல, இரண்டு பாவங்கள். ஒன்று, கம்யூனிஸ்ட் நாடாக இருப்பது. இரண்டு, அணு ஆயுதப் பரிசோதனைகளில் ஆர்வம் காட்டி வருவது.

ஹிட் லிஸ்ட்டில் தனது பெயரைச் சேர்த்ததைக் கண்டு அதிர்ந்து போனது வட கொரியா. ‘எங்களை ஏன் இதில் இழுக்கிறீர்கள்? 9/11 சம்பவத்துக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் என்ன தீவிரவாதிகளா?’ என்று கேள்வி எழுப்பியது. ஆனால் புஷ் கண்டுகொள்ளவில்லை. ஐ.நா.விடம் பேசி, வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். ‘அணு ஆயுதப் பரிசோதனைகளில் எங்களைத் தவிர வேறு யார் ஈடுபட்டாலும் எங்களுக்குப் பிடிக்காது’ என்று பதிலளித்தார்.

வட கொரியா யோசித்தது. ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தால் பொருளாதாரத் தடை, அணு ஆயுதப் பரிசோதனைகள் செய்தால் மிரட்டல். யார் யார் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்று முடிவெடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கு மட்டுமே உண்டு! அமெரிக்காவின் கொட்டத்தை அடக்க, இந்தப் பூமிப்பந்தில் ஒருவருக்கும் தைரியம் இல்லையா?

சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கியது வட கொரியா. எந்தப் பரிசோதனைகளைச் செய்யவேண்டாம் என்று அமெரிக்கா தடுத்ததோ, அதே பரிசோதனைகளில் இன்னமும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்தே தீருவேன் என்று ராத்திரி முழுக்க கொட்டக் கொட்ட கண்விழித்து வேலை பார்த்தது. அணு ஆயுதங்கள் தயாரிக்க என்னென்ன தேவையோ, அத்தனையையும் தேடிப் பிடித்துச் சேர்க்கத் தொடங்கியது. காசு போனால் போகட்டும். கௌரவம்தான் முக்கியம். இல்லையா?

வட கொரியா எங்கிருந்தோ பை பையாக யுரேனியம் வாங்குகிறது, என்னென்னவோ செய்கிறது என்று ஜூலை 2002_ல் அமெரிக்க உளவுத்துறை புஷ்ஷ§க்கு ஓர் அவசரச் செய்தியை அனுப்பியது. புஷ் வட கொரியாவை அழைத்துக் கட்டப் பஞ்சாயத்து நடத்தினார். தாட் பூட் என்று நாலு கத்துக் கத்திவிட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார். அவருக்குப் பரமதிருப்தி. ‘நன்றாக பயமுறுத்திவிட்டோம். பயல்கள் இனி பயந்துவிடுவார்கள்.’

வட கொரியா அசரவில்லை. வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அதே ஆண்டு, அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது வட கொரியா. அப்போதே புஷ் சுதாரித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் மீண்டும் வட கொரியாவை அசட்டை செய்தார். ‘அணு ஆயுதத்தின் ஸ்பெல்லிங் கூடத் தெரியாது, பெரிதாக இவர்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள்!’ என்று முணுமுணுத்துக்கொண்டே ஈராக் பக்கம் ஒதுங்கிவிட்டார்.

உளவுத்துறை தொடர்ந்து புஷ்ஷ§க்குச் செய்திகள் அனுப்பிக்கொண்டே இருந்தது. ‘ஸார், புளுட்டோனியம் வாங்கறாங்க.’ ‘வாங்கட்டும்பா. அதை வச்சி என்ன செய்ய முடியும் அவங்களால?’ ‘ஸார் பெரிசு பெரிசா ரியாக்டர்களை உருவாக்கிட்டு இருக்காங்க’ ‘பயப்படாதய்யா. ரியாக்டர் இருந்தா போதுமா? சும்மா பயமுறுத்தறாங்க.’

சென்ற வாரம் உளவுத்துறை மெய்யாகவே அலறிவிட்டது. ‘ஸார்ர்ர்ர்ர்! மோசம் போயிட்டோம். அணு ஆயுதப் பரிசோதனைகளை வெற்றிகரமா செஞ்சி முடிச்சுட்டாங்க.’

முதல் முறையாக அதிர்ந்து போனார் புஷ். தயங்கித் தயங்கி வட கொரியாவைத் தொடர்பு கொண்டார். ‘நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா? இப்போது உங்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கிறதா?’ கிம் ஜோங் இல் தோளைக் குலுக்கிக்கொண்டார். ‘'ஆமாம் ஐயா! உங்கக்கிட்ட இருக்கிற அளவுக்கு இல்லேன்னாலும், ஏதோ கொஞ்சூண்டு வைச்சிருக்கோம். ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை!’

வெலவெலத்துப் போய் விட்டார் புஷ். கடுகு சைஸ் இருக்கும் வட கொரியாவிடம் அணு ஆயுதங்களா? விஷயம் இத்துடன் முடியவில்லை. தொடர்ந்து பல்வேறு பரிசோதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது வட கொரியா. ஜீரணித்துக்கொள்ளவே முடியாத பெரும் ஆபத்து இது.

அலறியடித்துக்கொண்டு ஐ.நா.வைத் தொடர்பு கொண்டார் புஷ். இன்னும் என்னென்ன பொருளாதாரத் தடைகள் பாக்கி இருக்கிறதோ, அத்தனையையும் விதிக்க முடியுமா என்று பேசிக்கொண்டிருக்கிறார். உலக அமைதியே சீர்கெட்டுவிட்டது, உலக உருண்டைக்கே ஆபத்து என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருக்கிறார். சீனா, ஜப்பான் என்று ஆள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

இப்படி எல்லாம் இவர் செய்வார் என்று வட கொரியாவுக்குத் தெரியும். அதனால்தான் இந்த முறை சற்று காட்டமாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ‘சும்மா இருந்த எங்களை உசுப்பி விட்டதே நீங்கள்தான். இப்படித் தொடர்ந்து எங்களை பயமுறுத்திக்கொண்டிருந்தால், தொடர்ந்து வெறுப்பேற்றிக்கொண்டிருந்தா

  • தொடங்கியவர்

வடகொரியாவை அடக்கி வைக்க தென்கொரியாவின் ஐ நா சபைச் செயலாளருக்கான வேட்பாளரை வெற்றி பெற வைக்க முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது அமெரிக்கா. இதன் மூலம் எனி நேரடியாக வடகொரியாவுடன் புதிய ஐ நா சபைச் செயலாளரையே மோதவிட்டு வேடிக்கை பார்ப்பார் உலகப் பொலிஸ்காரரான புஷ் நாட்டாமை.

  • தொடங்கியவர்

அணு ஆயுதம்: ஆசிய நாடுகளுக்கு யு.எஸ். எச்சரிக்கை

அக்டோபர் 14, 2006

வாஷிங்டன்:

வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை பின்பற்றி ஆசிய நாடுகள் அணு ஆயுதப் போட்டியில் இறங்கினால் விபரீத விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வாஷிங்டனில் ஒரு நிகழ்ச்சியில், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரத்துறைக்கான வெளியுறவு துணை அமைச்சர் கிறிஸ்டோபர் ஹில் பேசுகையில், வட கொரியாவின் அணு ஆயுத சோதனையைத் தொடர்ந்து மேலும் சில ஆசிய நாடுகள் அணு ஆயுதப் போட்டியில் குதிக்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக அமெரிக்கா கருதுகிறது.

ஆனால் இது மிகப் பெரிய ஆபத்தாக முடியும். அந்த நாடுகளுக்கு மட்டுமல்லாது ஆசிய கண்டத்திற்கும் இது பெரிய பின்விளைவை ஏற்படுத்தும்.

தங்களது சுய பாதுகாப்புக்காக அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை உருவாக்க வேண்டும் என அந்த நாடுகள் நினைக்கக் கூடாது. வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களை எப்படி உலகமும், அமெரிக்காவும் ஏற்றுக் கொள்ளவில்லையோ, அதேபோல ஆசிய நாடுகளின் அணு ஆயுதப் போட்டியையும் உலக நாடுகள் அனுமதிக்காது.

வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும், மோசமான பாதைக்கு ஆசிய கண்டத்தைத் திருப்பும் செயலிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் அந்த நாடு மீது பொருளாதார தடைகளை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

இந்த பொருளாதார தடையை மிகக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். சர்வதேச சமுதாயத்தை மிரட்டும் வகையிலான தனது போக்கை வட கொரியா புரிந்து கொள்ள வேண்டும் என்றார் ஹில்.

ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், ஹில் பேசியிருந்தாலும் கூட ஈரானை மனதில் கொண்டே அவர் இவ்வாறு பேசியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

வலாறும் உலகஉருண்டையை போலஉருண்டுகொண்டுதான் இருக்கும் இந்த உலகில் நிதந்தர சண்டியர் எண்றுயார் இருந்திருக்கிறார்கள் தன்ரை பிரச்னைகளை விட்டு விட்டு மற்்றவன் என்ன செய்வேண்டும் என்று தீர்மானித்தால் அமேரிக்கா மட்டுமல்ல எல்லா நாட்டிற்கும் இந்து ஆப்பிழுத்த நிலைதான் இதற்கு உலகின் வரலாறே

  • கருத்துக்கள உறவுகள்

அணுவாயுத பரிசோதனை மூலமாக வடகொரியா மேற்குலக நாடுகளுக்கு உணர்த்த முற்பட்டுள்ள `செய்தி'

-அ.ரஜீவன்-

வடகொரியா, கடந்த வாரம் தான் மேற்கொண்ட அணுவாயுத பரிசோதனையின் மூலம் அவமதிப்பையோ தனது இறைமை மீறப்படுவதையோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு வலியுறுத்தியுள்ளது.

முழுமையான இராணுவ நடவடிக்கையில் தோற்பதற்குத் தயாரில்லை என்பதையும் அது அணுவாயுத பரிசோதனை மூலம் தெரிவித்துள்ளது.

எனினும், இதற்கு மாறாக வடகொரியாவின் இந்த நடவடிக்கை சர்வதேச அமைதிக்கு எதிரானதாகவும் ஆயுத போட்டியை ஆசியாவில் உருவாக்கக் கூடியதாகவும் சித்திரிக்கப்படுகின்றது.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கொரிய தொழிலாளர்கள் கொரிய வளைகுடாவின் வடபகுதிக்கு வந்து சேர்ந்தனர். அப்பகுதி அவ்வேளை சோவியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது.

இவர்களில் பலர் ஹிரோசிமாவிலும் நாகசாகியிலும் பணி புரிந்தவர்கள். 1945 ஆகஸ்டில் அமெரிக்கா அணுகுண்டு வீச்சினை மேற்கொண்ட வேளை அங்கிருந்தவர்களில் பலர் அமெரிக்காவிடம் உள்ள அந்தப் பேரழிவு ஆயுதம் பற்றிய கதைகளைக் கொண்டு வந்திருந்தனர்.

கொரிய யுத்தத்தின்போது அணுவாயுதங்கள் குறித்து அச்சம் அதிகரித்து காணப்பட்டது.

அமெரிக்கா 1950 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் திகதி வடகொரியாவுக்கு எதிராக அணுகுண்டுத் தாக்குதலை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் டக்ளஸ் மக்ஆர்தர், வடகொரியா இராணுவத்தினதும் அதன் சீன சகாக்களினதும் முன்னேற்றத்தை தடுப்பதற்காக வடகொரியா மீது 26 ஆணுகுண்டுகளை வீசுவதற்கான இலக்குகளைத் தெரிவு செய்து வைத்திருந்தார்.

வடகொரியா இதன்பிறகே அணுவாயுதங்கள் குறித்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக வடகொரியா அணுவாயுதங்கள் தனக்கு அவசியம் எனக் கருதியது.

1998 இல் வடகொரியாவிலிருந்து தென் கொரியாவுக்கு தப்பிச் சென்ற வாங் யங்யொப் எனும் உயரதிகாரி வடகொரியாவின் அணுவாயுத தந்திரோபாயத்தை இவ்வாறு விபரித்திருந்தார்.

"தென்கொரியா யுத்தத்தை ஆரம்பித்தால் வடகொரியா அணுவாயுதங்களைப் பயன்படுத்தும். அமெரிக்காவும் இந்த யுத்தத்தில் இணைந்து கொள்வதைத் தடுப்பதற்காக ஜப்பானையும் வடகொரியா தாக்கும்."

கொரிய யுத்திற்கு சில வருடங்களுக்கு பின்னரே வடகொரியா தனது அணுவாயுத ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தது.

மொஸ்கோவிற்கு அருகில் உள்ள டுப்னா நகரில் 1956 இல் உருவாக்கப்பட்ட ஐக்கிய அணு ஆராய்ச்சி நிறுவகம் சோசலிஷ நாடுகளை விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான தளமாக விளங்கியது. வடகொரியாவும் இதில் உறுப்புரிமை பெற்றிருந்தது.

1965 இல் வடகொரிய தலைநகருக்கு அருகிலுள்ள பகுதியில் வட கொரியாவின் முதலாவது அணு ஆராய்ச்சி நிறுவனம் செயற்பட ஆரம்பித்தது. இதற்கும் சோவியத் யூனியனே ஆதரவு வழங்கியது.

இக்காலப் பகுதியிலேயே தனது சொந்த அணுசக்தியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்தது.

1960, 70 களில் மொஸ்கோவில் 300 இற்கும் மேற்பட்ட வட கொரிய அணுசக்தி விஞ்ஞானிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

1991 இல் சோவியத்தின் வீழ்ச்சியுடன் இந்தப் பயிற்சிகள் முடிவிற்கு வந்த போதிலும் 1990 களில் கிழக்கு ஜேர்மனி மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் பலர் தொடர்ந்தும் வட கொரியாவுடன் இணைந்து தனிப்பட்ட ரீதியில் செயற்பட்டுள்ளனர்.

1992 ஆம் ஆண்டு ரஷ்யாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் விக்டர் பரனிகொவ் 64 ரஷ்ய ஏவுகணை நிபுணர்கள் மூன்றாம் உலக நாடொன்றிற்கு செல்லவிருந்ததை தடுத்து நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இராணுவ நோக்கங்களுக்காக குறிப்பாக அணுவாயுதங்களைக் கொண்டு செல்லக் கூடிய ஏவுகணை நிலைகளை உருவாக்குவதற்காக குறிப்பிட்ட விஞ்ஞானிகளைப் பெறுவதற்கான முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்ட ஆசிய நாடு எதுவென குறிப்பிடாவிட்டாலும் ரஷ்ய செய்தியாளர்கள் அந்த நாடு வட கொரியா என்பதை பின்பு கண்டு பிடித்தனர்.

அணு உலைகள் தொடர்பான தொழில் நுட்பத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்ட வடகொரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் உண்டு.

எனினும், தற்போது சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளிடமிருந்து வட கொரியாவிற்கு உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை.

வடகொரியாவிற்கு வேறு சகாக்களும் உள்ளனர். யுரேனியத்தை பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை பாகிஸ்தானிடமிருந்தே வட கொரியா பெற்றுள்ளது.

பல வருடங்களாக பாகிஸ்தான், வடகொரியாவுடன் இந்த விவகாரத்தில் உள்ள தொடர்பை கடுமையாக மறுத்து வந்துள்ளது.

எனினும், அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் தொழில் நுட்பத்தையே வட கொரியா பயன்படுத்துகின்றது என்ற குற்றச் சாட்டை ஆணித்தரமாக முன்வைத்து வந்தனர்.

அக்டோபர் 2003 இல் பாகிஸ்தான் விமர்சகர் ஒருவர் தனது நாடு அணு முகப்புகளைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்திற்காக அணுவாயுத தொழில் நுட்பத்தினை வட கொரியாவிற்கு வழங்கியது எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், 1998 ஜூன் ஏழாம் திகதி இடம் பெற்ற படுகொலையொன்றே இரு நாடுகளுக்கும் இடையே இந்த விவகாரத்தில் உள்ள தொடர்பை பெருமளவிற்கு வெளிப்படுத்தியது.

பாகிஸ்தான் தலை நகரில் வட கொரியாவின் மூத்த இராஜதந்திரியொருவரின் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

குறிப்பிட்ட இராஜதந்திரி இதற்கு சில வாரங்களுக்குப் பின்னர் தலைமறைவாகியிருந்தார். இது குறித்த விசாரணைகள் தீவிரமடைந்த வேளையிலேயே குறிப்பிட்ட இராஜதந்திரியும் அவரது மனைவியும் பாகிஸ்தானின் அணுவாயுதத்தின் தந்தை என அழைக்கப்பட்ட அப்துல் காதீர்ஹானுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமை தெரிய வந்தது.

பாகிஸ்தான் தனது அணு குண்டினை பரிசோதனை செய்து ஒரு வார காலத்திற்குள் இந்தக் கொலை இடம்பெற்றிருந்தது. கொலைக்கான காரணம் தெரிய வந்தபோது இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் அதிர்ச்சியடைந்தன.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ. கொல்லப்பட்ட பெண்மணியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு வட கொரியாவினதும் பாகிஸ்தானினதும் இரகசிய தொடர்புகள் பற்றி அறிய முயன்றமை தெரிய வந்தது.

இதனை அறிந்த பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்புகள், வட கொரிய அதிகாரிகளை உஷார்படுத்தியுள்ளனர். அவர்களே இக்கொலை செய்தனர். எனினும், பல வருடங்களுக்குப் பின்னர் பாகிஸ்தான் வட கொரியா அணுவாயுத தொழில்நுட்பத்தைப் பெறும் உண்மையை ஏற்றுக் கொண்டது.

2004 ஜனவரி 23 இல் பாகிஸ்தான் ஜனாதிபதி தனது நாட்டின் விஞ்ஞானிகள் தனிப்பட்ட நலன்களுக்காக அணுத் தொழில் நுட்பத்தை பிற நாடுகளுக்கு வழங்கியதை ஏற்றுக்கொண்டார்.

எனினும், அரசாங்கத்திற்கு இது தெரியாது எனக் குறிப்பிட்டார். இதேவேளை, பாகிஸ்தானின் அணுவாயுதத்தின் தந்தை தொடர்ந்தும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களில் அணுவாயுதங்களைப் பெற்று விட வேண்டும் என வட கொரியா தீவிர ஆர்வம் காட்டியமைக்கு மிக முக்கியமான காரணம் உள்ளது.

வட கொரியா தான் இன்னுமொரு ஈராக்காக மாறும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காகவே அணுவாயுதத்தைப் பெற முயன்றது. அணுவாயுதப் பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக அக்டோபர் மூன்றாம் திகதி வட கொரியா அறிவித்தது.

நம்பத்தகுந்த யுத்தப் பாதுகாப்பு இல்லாத மக்கள் துயரமான மரணத்தை சந்திப்பார்கள். அவர்களது நாட்டின் இறைமை வேண்டுமென்றே மீறப்படும். உலகின் பல பகுதிகளில் காணப்படும் காட்டுத்தர்பார் மூலம் பெருக்கெடுக்கும் இரத்த ஆறு உணர்த்தியுள்ள உண்மை இதுவென அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002 ஜனவரி 29 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ். டபிள்யூ. புஷ், ஈராக், ஈரான், வட கொரியா ஆகிய நாடுகளை தீமையின் அச்சு எனவும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு ஆபத்தானவை எனவும் குறிப்பிட்டார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பதவியேற்ற வேளை வட கொரியா அணுவாயுத நாடுகளில் ஒன்றாக விளங்கவில்லை. அதன் புளுட்டோனியம் செறிவுபடுத்தும் நிலைகள் மூடப்பட்டிருந்தன. ஏவுகணைத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் அது தயாராக இருந்தது.

எனினும், புஷ் நிர்வாகம் இராஜதந்திர வழிவகைகளை பின்பற்றுவதற்கு பதில் வட கொரியாவைப் புறக்கணிக்க முயன்றது. பின்னர் தீமையின் அச்சு என வர்ணித்தது. இவை யாவற்றாலும் பயன் இல்லை என்பதை உணர்ந்த போது வட கொரியா யுரேனியத்தைப் பதப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியது. இதுவே 1994 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செயலிழந்து போவதற்குக் காரணமாக அமைந்தது. மேலும் வாஷிங்டன் வட கொரியாவை பொருளாதாரத் தடைகள் ஊடாக நசுக்க முயன்றது.

எனினும், வட கொரியா அழுவதற்கோ, அடங்குவதற்கோ மறுத்துள்ளது. தனது தற்போதைய அணுவாயுதப் பரிசோதனை மூலம் தன்னால் புஷ் நிர்வாகத்தைப் போல் பிடிவாதமாக இருக்க முடியும் என்பதைப் புலப்படுத்தியுள்ளது.

வட கொரியாவின் சமீபத்தைய பரிசோதனை புஷ் நிர்வாகத்தின் கணிப்புகள் அடிப்படையில் பிழையானவை என்பதைப் புலப்படுத்தியுள்ளது. புஷ் நிர்வாகம் தனது கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்கவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

புஷ் நிர்வாகம் வட கொரியாவை பொறுத்தவரை தனது முந்தைய நிர்வாகங்கள் பின்பற்றிய அதே கொள்கையை பின்பற்றுகின்றது.

வடகொரியாவை கிழக்கு ஐரோப்பா என்ற கண்ணாடியூடாக பார்க்கின்றது. ஏனைய கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் போல சிறிய அழுத்தத்துடனேயே வட கொரியா விழும் என வாஷிங்டன் எதிர்பார்த்தது. எனினும், வட கொரியா எதிர்த்துத் தாக்குப்பிடிப்பதற்கான பாரிய திறனை வெளிப்படுத்தியது. சோவியத்தின் வீழ்ச்சி கடும் வறுமை, புஷ் நிர்வாகத்தின் தந்திரோபாயங்கள் போன்றவற்றை அது வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது.

வட கொரியா பூனை, எலி விளையாட்டு குறித்து அதிருப்தியடைந்துள்ளது. அது தன்னிடமுள்ள உலகம் அதனிடமுள்ளதாக நினைக்கும் அணுவாயுத திட்டத்தை அடிப்படையாக வைத்து அமெரிக்காவையும் அதன் சகாக்களையும் தனது விருப்பதிற்கு இணங்க வைக்க முயற்சிக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களாக வட கொரியா கடைப்பிடித்த கொள்கையின் வெளிப்பாடே இந்த அணுவாயுத பரிசோதனை. அமெரிக்காவின் தாக்குதலை எதிர்கொள்ள அது அணுத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. எனினும், வர்த்தக அந்தஸ்து, நிதி போன்றவற்றிற்காக அது தனது அணுவாயுத திட்டத்தினை இடைநிறுத்தியது. அதேவேளை, சில எதிர்கால அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பதப்படுத்தப்பட்ட புளுட்டோனியத்தை கைவசம் வைத்திருந்தது. 2002 இல் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் தோற்றவுடன் அது தனது தந்திரோபாயத்தை மாற்றி அணுவாயுதம் தன்னிடமுள்ளதை அறிவித்தது.

எனினும், புஷ் நிர்வாகம் தொடர்ந்தும் அலட்சியம் செய்யவே ஜூலையில் ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டது.

இதன் மூலமும் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு மறுக்கவே மீண்டும் அணுவாயுத பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த தடையையும் மீறி தன் குறிக்கோளில் வெற்றி பெற்றது வட கொரியா! தமிழீழமும் எந்த தடையையும் கண்டு தளர்ந்து போகாமல் இருக்க வட கொரியாவின் இந்த அசாட்டுத் துணிவை மனதில் கொள்ள வேண்டும்!

எனினும் இந்தியாவுக்கு இந்த பாகி. வட கொரியா இணப்பினால் பாதிப்பு இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.