Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிருபாமா ராவே இலங்கைப் போர் இந்தியாவின் கை மீறி நடந்ததா? கைங்கரியமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிருபாமா ராவே இலங்கைப் போர் இந்தியாவின் கை மீறி நடந்ததா? கைங்கரியமா? 

nirubama.JPG
விகடன் குழும சஞ்சிகைகளை இந்திய உளவுத்துறையான் ரோ தமிழ் மக்கள் மத்தியில் பொய்ப்பிரச்சாரம் செய்வதற்கு தந்திரமாகப் பயன்படுத்துகிறதா என்ற சந்தேகம் நியாயமானதே. பல தடவைகளில் விகடன் கபடத்தனமான கட்டுரைகளில் தமிழர்களுக்கு ஆதரவாகவும் கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களில் தமிழர்களின் போராட்டத்தை படு மோசமாகக் கொச்சைப் படுத்தியும் எழுதி இருந்தது. இலங்கை அரசின் கைக்கூலியாக விகடனைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளர் செயற்பட்டதாக சந்தேகிக்கப்பட்டதும் உண்டு.

 

18/10/2012இலன்று வெளிவந்த ஆனந்த விகடன் இதழில் வெளியான இந்தியவின் வாஷிங்டனுக்கான தூதுவர் நிருபாம ராவின் பேட்டி வெளிவந்திருக்கிறது. இவர் முன்பு இந்தியாவின் கொழும்பிற்கான தூதுவராகச் செயற்பட்டவர். 200-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் திரைமறைவில் அமெரிக்க அனுசரணையுடன் இலங்கையில் ஒரு இடைக்கால தன்னாட்சி அதிகார சபை அமைக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் ஒரு வேண்டுகோளை முன்வைக்க அதை அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அதை ஏற்றுக் கொண்டார். அந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபை இந்தியாவில் உள்ள மாநில் அரசின் அதிகாரங்களை விடக் கூடியது. ஊடனே இந்தியா கொதித்து எழுந்தது. இந்தியப் பார்ப்பன ஊடங்கங்கள் இடைக்கால தமிழீழம் என எழுதி சிங்கள இனவாதிகளை உசுப்பி விட்டனர். அப்போது கொழும்பிற்கான இந்தியத் தூதுவராக இருந்த நிருபாமா ராவ் சிங்கள இனவாதிகளை ஒன்றிணைத்தார். விளைவு ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு மஹிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாக்கப்பட்டார். பெரும் இனக்கொலைக்கு வித்திடப்பட்டது.

இலங்கையில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடக்கும் போது அரச படைகள் மூர்க்கத்தனமான தாக்குதல் போரை ஆரம்பித்தால் விடுதலைப் புலிகள் பின் நோக்கி நகர்ந்து கொண்டே அரச படைகளுக்கு ஆளணி இழப்பை ஏற்படுத்துவர். இந்த ஆளணி இழப்பும் பல படையினர் படு காயமடைந்து களத்தில் இருந்து விலகுவதும் கள நிலமையை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக மாற்றும் அக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தி அரச படைகளைப் பின்வாங்கச் செய்வர். அதனால் அரச படையினர் கைப்பற்றியதிலும் பார்க்க அதிக அளவு நிலப்பரப்பை இழப்பர். இலங்கை அரசின் ஜெயசிக்குரு படை நடவடிக்கை இதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு. ஆனால் 2008இலும் 2009இலும் நடந்த போரில் நிலைமை மாறிவிட்டது. போரில் சிங்களப் படையினருக்கு ஏற்பட்ட ஆளணி இழப்பை இன்னொரு நாட்டில் இருந்து வந்த 20,000மேற்பட்ட படையினர் ஈடு செய்தனர். அது எந்த நாடு என்பதை யாவரும் அறிவர். இப்படி இருக்கையில் இலங்கைப் போர் இந்தியாவின் கை மீறி நடந்தது என்று நிருபாம ராவ் சொல்வது முழுப் பொய்.

சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை இணைந்து கொண்டது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை இந்தியா கண்டு கொள்ளாமல் இருப்பது பற்றி பல படைத்துறை ஆய்வாளர்கள் ஆச்சரியம் தெரிவித்தது உண்டு. சீனா இலங்கியில் பலவகையில் தனது பிடிகளை இறுக்குகிறது.

இலங்கைக்கு பண உதவி வழங்கும் நாடுகளில் சீனா முதலாமிடத்தில் நிற்கிறது.இலங்கைக்கு பெருமளவு படைக்கலன் விற்பனையையும் உதவியையும் சீனா செய்கிறது. சீனா தனது ரத்து(வீட்டோ) அதிகாரத்தைப் பாவித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் மனித் உரிமை தொடர்பாக பாதுகாப்புச் சபை விவாதிக்காமல் பார்த்துக் கொண்டது. எல்லாவற்றிலும் மேலாக சீனா அம்பாந்தோட்டையில் அமைத்த துறைமுகம் அமைகிறது. இதைப்பற்றி இருமுறை குன் ஜன் சிங் இந்தியாவை எச்சரித்துள்ளார். ஒன்று 2009 ஜூனில் மற்றது ஆகஸ்டில்:

“This increasing closeness between Colombo and Beijing is a reason for concern for New Delhi. During the construction of the (Hambantota) port a large number of Chinese experts are to be expected to be present in the region and this is proving to be a security concern for the Indian side.”

இலங்கையில் சீன செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட சீனர்கள் இருப்பதாக லங்கா ஈ நியூஸ் இணையத் தளம் செய்தி வெளியிட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் செம்படை உறுப்பினர்களும் சிறைக்கைதிகளும் ஆவர்கள். இப்படி இருக்கையில் நிருபாம ராவ் விகடனுக்குச் சொன்னது:

  • ”இந்தியாவைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பாதுகாப்புத் துறையும் வெளியுறவு அமைச்சகமும் 24 மணி நேரமும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன. இலங்கையின் வட பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்களுக்கு முதன்முதலாகச் சென்று வந்த வெளியுறவுச் செயலர் என்ற முறையில் சொல்கிறேன். அங்கே சீனாவின் ஆதிக்கம் இல்லை. சாலை போடுவதில் தொடங்கி வீடு கட்டித் தருவது வரை 500 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் ஆகியவற்றை இந்தியாவே செய்துகொண்டிருக்கிறது.”
இந்திய வெளியுறவுத் துறையும் பாதுகாப்புத் துறையும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இருந்தால்தான் தமிழர்களின் போராட்டத்தை அடக்க முடியும் என உணர்ந்தே இலங்கையில் சீன ஆதிக்கத்தை வளரவிட்டன. சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இருந்தால்தான் தமிழர்களின் போராட்டத்தை மீண்டும் தொடங்க முடியாமல் செய்ய முடியும் என்பதால் அவர்கள் இந்தியாவில் பாதுகாப்பைப் பலியிட்டாவது தமிழர்கள் போராட்டத்தை அடக்க முயல்கிறார்கள். தமிழன் எனப்பட்டவன் சூத்திரனோ இல்லியோ! அவாள் ஆளக்கூடாது. ஆளப்பட வேண்டியவாள். சிரிய துருக்கி மோதல் ஒரு சதி வலையா?

நாட்டின் மீது சிரியப்படைகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகக் கூறி துருக்கி சிரியப் படை நிலைகள் மீது பலத்த எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு பல சிரியப் படையினரைக் கொன்றுள்ளது. சிரியப் படையின் நடவடிக்கைக்குப் மேற்கு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரியா தனது அயல் நாடுகளின் இறைமையை மதிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.

பாதுகாப்புச் சபையின் கண்டனத் தீர்மானம்.

ஐநா பாதுகாப்புச் சபையில் துருக்கி சிரியாவிற்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை கொண்டுவரவுள்ளது. இதற்கு மற்ற நாடுகளுடன் ஆலோசனை நடாத்தியுள்ளது. நேட்டோ நாடுகள் தமது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். சிரிய ஆட்சியாளர்களுக்கு பெரும் ஆதரவு வழங்கும் இரசியா நாட்டின் ஐநாவிற்கான பிரதிநிதி தான் மாஸ்கோவுடன் கலந்தாலோசிக்க அவகாசம் கேட்டுள்ளார்.

சிரியாவிற்கு எதிரிகள் தேவையில்லை

சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி உள்நாட்டில் பெரும் சவாலை எதிர் கொண்டு இருக்கும் வேளையில் துருக்கி மீது தாக்குதல் நடாத்த வேண்டிய அவசியமோ அல்லது அவசரமோ அவருக்கு இல்லை. துருக்கி மீது தாக்குதல் நடாத்தினால் அது தனது ஆட்சிக்கு தானே பறிக்கும் குழியாகிவிடும் என்று சிரிய அதிபர் நன்கு அறிவர். சிரிய அரச படையில் இருந்து பலர் விலகி கிளர்ச்சிக்காரர்களுடன் இணைந்து வந்துள்ளனர். இப்போது இந்த விலகல் குறைந்துள்ளது. சிரிய அதிபர் அசாத்திற்கு எதிராகத் திரும்பும் படையினர் இப்போது விலகிச் சென்று கிளர்ச்சிக்காரர்களுடன் இணையாமல் உள்ளேயே உறங்கு நிலை வெடிகளாக (sleeper cells) ஆகச் செயற்படலாம். கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியில் லிபியத் தலைநகர் திரிப்போலி இலகுவாக கிளர்ச்சிக்காரர்கள் கையில் விழுவதற்கு இந்த உறங்கு நிலை வெடிகளாக (sleeper cells) ஆகச் செயற்பட்டவர்களே காரணம். துருக்கி மீதான எறிகணைத் தாக்குதல்களை இவர்கள் மேற்கொண்டிருக்கலாம். சிரிய அரசு துருக்கி மீதான தாக்குதல் ஒரு தற்செயலாக நடந்த விபத்து என்கிறது.

துருக்கிய சதி

முன்பு ஈராக்கில் உள்ள குர்திஷ் இன மக்கள் மீது எல்லை தாண்டித் தாக்குதல் நடாத்துவதற்காக துருக்கி தனது நாட்டின் மீது தானே ஏவுகணையை வீசிவிட்டு அது குர்திஷ் கிளர்ச்சிக்காரர்களின் வேலை எனக் குற்றம் சாட்டி ஈராக் எல்லை தாண்டிச் சென்று குர்திஷ் மக்களைத் தாக்கியது என்று முன்பு செய்திகள் வெளிவந்தன.  சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக 18 மாதங்களாக நடக்கும் போராட்டத்தால் பாதிப்படைந்த பல்லாயிரம் சிரியர்கள் துருக்கி நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இது துருக்கிக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது. இதனால் தனது படைகளை சிரியாவிற்குள் அனுப்பி அங்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி தனது நாட்டுக்குள் சிரிய மக்கள் வராமல் பார்த்துக்கொள்ள துருக்கி திட்டமிட்டுள்ளது. சிரிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து துருக்கிய பராளமன்றம் கூட்டப்பட்டு சிரியாவிற்குள் எல்லை தாண்டிப் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஆணையை சிரிய அரசு கோரியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் சிரியா மீது தாக்குதல்

சிரியா மீது தாக்குதல் செய்ய ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர முடியாது. ஏற்கனவே கொண்டுவரப்பட்ட இரு தீர்மானங்களை இரசியாவும் சீனாவும் தமது இரத்து அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்து செய்து விட்டன. சிரியாமீதான படை நடவடிக்கையை அமெரிக்க அரசு அதன் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் வரை ஒத்தி வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்திருந்தன. நவம்பர் ஆறாம் திகதி அமெரிக்கத் தேர்ந்தல் முடிவடைந்த பின்னர் சிரியாமீது ஒரு படை நடவடிக்கை மேற் கொள்ள அமெரிக்காவிற்கும் மற்ற நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சாட்டு தேவை. நேட்டோ நாட்டின் ஓர் உறுப்பினரான துருக்கிக்கும் சிரியாவிற்கும் மோதல் என்பதை சாட்டாக வைத்து சிரியாமீது நேட்டோப் படைகள் தாக்குதல்களை மேற் கொள்ளலாம்.

ஐநா மனித உரிமைக் கழகத்தின் Universal Periodic Review என்பது என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 21வது கூட்டத் தொடர் 10-09-2012இல் ஆரம்பமாகி நடக்கிறது. இக் கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அகில காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) இடம் பெற இருக்கிறது. 2008இல் இலங்கை மனித உரிமைகள் தொடர்பான அகில காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) கடைசியாகச் செய்யப்பட்டது. இப்போது 2008இல் இருந்து 2012 வரை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு செய்யப்படவிருக்கிறது.

ஐநா மனித உரிமைக் கழகத்தின் 193 அங்கத்துவ நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாக ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படும். ஒரு கூட்டத் தொடரில் 14 முதல் 16 நாடுகளின் மனித உரிமை  மீளாய்வு செய்யப்படும்.இந்த மீளாய்வு முக்கியமாக மூன்று ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும்:

1. மீளாய்வு செய்யப்படும் நாடு சமர்ப்பிக்கும்  இருபது பக்க அறிக்கை.

2. ஐநா மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை

3. மீளாய்வு செய்யப்படும் நாட்டின் குடிசார் அமைப்புக்கள், அரச சார்பற்ற

தொண்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளைச் சுருக்கி ஐநா

மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை.

ஐநாவின் பட்டயம் (the Charter of the UN), மனித உரிமைகளுக்கான அகிலப் பிரகடனம், மனித உரிமை ஒப்பந்த ஆவணம் human rights instruments ஆகியவற்றின்படி மீளாய்வு செய்யப்படும். இப்போதைய கூட்டத் தொடரில் செக் குடியரசு, ஆர்ஜெண்டீனா, கபன், பெரு, குவாட்டமாலா, பெரு, கொரியக் குடியரசு, சுவிட்சலாந்து, பாக்கிஸ்த்தான், ஜாம்பியா, ஜப்பான், உக்ரேய்ன், இலங்கை ஆகிய 14 நாடுகள் மீளாய்வு செய்யப்படவிருக்கின்றன.

மீளாய்வின் நோக்கங்கள்

மனித உரிமைகள் தொடர்பான அகில காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review)உறுப்பு நாடுகளின் மனித உரிமையை மேம்படுத்தவும் உறுப்பு நாடுகள் மனித உரிமை தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர் கொள்ளும் சவாலகளை அறிந்து கொள்ளவும் அதற்கான உதவிகளைச் செய்யவும், நாடுகள் தமக்கிடை மனித உரிமை தொடர்பான செயற்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் நாடுகளிடையும் கழகத்துடனும் மனித உரிமை தொடர்பான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் செய்யப்படுகிறது.

மீளாய்வு செய்யப்படும் விவகாரங்கள்:

Accountability and impunity – பொறுப்புக் கூறலும் குற்றத்தில் இருந்து தப்புதலும்

Asylum seekers, refugees and internally displaced persons புகலிடம் கோருவோர்,             அகதிகள், உள்ளக இடப்பெயர்வுக்குள்ளானோர்.

Counter-terrorism measures – பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகள்

Death penalty – இறப்புத் தண்டனை

Detention, including arbitrary detention and prison conditions – தடுத்து வைத்தல்(காரணமின்றித் தடுத்து வைத்தல் உட்பட) சிறைச்சால நிலைமை.

Development – அபிவிருத்தி

Due process protections -உரிய பாதுகாப்பு செயல்முறை

Education – கல்வி

Elections – தேர்தல்

Employment – வேலைவாய்ப்பு

Enforced disappearances – கட்டாய காணமற் போதல்

Environment – சுற்றாடல்

Extrajudicial executions – நீதிக்குப் புறம்பான கொலைகள்

Freedom of association – ஒன்று கூடும்(கூட்டம் நடாத்தும்) உரிமை

Freedom of opinion and expression, including media freedom – கருத்து, பேச்சு, ஊடக சுதந்திரம்,

Freedom of movement – பிரயாணம் செய்யும் சுதந்திரம்

Freedom of religion and belief – மத நம்பிக்கைச் சுதந்திரம்

Gender equality – ஆண் பெண் சமத்துவம்

Health – ஆரோக்கியம்

Housing – வீடமைப்பு

Human rights defenders – மனித உரிமைப் பாதுகாவலர்கள்.

Human rights education and training – மனித உரிமைக் கல்வியும் பயிற்ச்சியும்.

Human trafficking – மனிதக் கடத்தல்

Indigenous peoples – உள்நாட்டு மக்கள்

International humanitarian law, including the protection of civilians in armed conflict – பன்னாட்டு மனிதாபிமானச் சட்டம், படைக்கல முரண்பாட்டின் போது பொது மக்கள் பாதுகாப்பு

Judiciaries and justice systems – நீதி நிர்வாக முறைமை

Migrant workers – வெளிநாட்டு ஊழியர்கள்

Minorities – சிறுபான்மையினர்

National human rights mechanisms, including the establishment of NHRIs மனித உரிமைகளுக்கான கட்டமைப்பு

Non-discrimination, including on the bases of ethnicity, race, sex, and sexual orientation and gender identity – இன பால், சாதி வேறுபாட்டின்படி பாகு பாடு காட்டுதல்

Persons with disabilities – மற்றுத் திறனாளிகள்

Police and military – காவற்துறையும் படையினரும்

Ratification of/accession to international human rights instruments – பன்னாட்டு மனித உரிமை ஆவணங்களை ஏற்றுக்கொள்ளலும் சம்மதித்தலும்

Torture and other cruel, inhuman and degrading treatment or punishment – வதையும் கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையிலும் நடாத்துதல்

Violence against women. – பெண்களுக்கு எதிரான வன்முறை.

இவை தொடர்பாக ஒவ்வொரு நாடும் என்ன செய்தது என்பது பற்றி மீளாய்வு செய்யப்படும்.

மூவர் குழு Troika

ஒவ்வொரு நாட்டினதும் மனித உரிமைகள் தொடர்பான மீளாய்வு தொடர்பாக உதவுவதற்கு என மூன்று நாடுகள் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுகிறது. இக்குழு இரசிய மொழியில் Troikaஎன அழைக்கப்படும். மற்ற நாடுகள் மூவர் குழு மூலமாக தமது கேள்விகளையும் சந்தேகங்களையும் தெரிவிக்கலாம்.

விளைவு அறிக்கை

மூவர் குழு       1. மீளாய்வு செய்யப்படும் நாடு சமர்ப்பிக்கும் இருபது பக்க அறிக்கை. 2. ஐநா மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை. 3. மீளாய்வு செய்யப்படும் நாட்டின் குடிசார் அமைப்புக்கள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளைச் சுருக்கி ஐநா

மனித உரிமைப் பணிமனை சமர்ப்பிக்கும் பத்துப் பக்க அறிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து மீளாய்வு செய்யப்படும் நாட்டுடன் இணைந்து விளைவு அறிக்கையைதாயாருக்கும். இவ் விளைவு அறிக்கை 47 நாடுகளைக்கொண்ட மனித உரிமைகள் கழகத்தின் செயற்குழுவால் விவாதித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். விவாதத்தின் போது மீளாய்வு செய்யப்படும் நாட்டின் கருத்துக்கள் அறிக்கை தொடர்பான ஆட்சேபங்கள் கேட்டறியப்படும்.

மனித உரிமைகளை மீறும் நாடு தண்டிக்கப்படுமா?

ஒரு நாட்டுக்கு எதிராக மோசமான அறிக்கை சமர்பிக்கப்பட்டால் அது தண்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு மனித உரிமைக் கழகம் பதில் கூறவில்லை.  தொடர்ந்து மீறல்கள் செய்யும் நாட்டிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையிட்டு 47 நாடுகளைக் கொண்ட செயற்குழு முடிவு செய்யும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.

இலங்கையும் அகில காலாந்தர மீளாய்வும் (Universal Periodic Review)

இலங்கை 2008 ஆண்டு மீளாய்வு செய்யப்பட்ட போது Adopt measures to strengthen the rule of law, prevent human rights violations, including enforced disappearances, extrajudicial executions and torture, ensure punishment of those responsible, and include, inter alia, systematic review of all detention areas. establish an independent complaint mechanism in prisons, and prompt, impartial investigation into allegations of torture as well as protection for witnesses and others alleging torture or ill-treatment against reprisals, intimidation and threats என்ற பரிந்துரை இலங்கைக்குச் செய்யப்படது. இது நிறைவேற்றப்பட்டதா? இலங்கை தொடர்பான தற்போதைய மீளாய்வு 10-09-2012இல் தொடங்கிய கூட்டத்தொடரில் நவம்பர் முதலாம் திகதி ஆய்வு செய்யப்படவிருக்கிறது. இலங்கை தனது அறிக்கையைச் சமர்ப்பித்து விட்டது. இதன் உண்மைத் தன்மையை யார் உறுதி செய்யப்போகிறார்கள். மனித உரிமைக் கழகத்தின் செய்முறையில் உண்மையை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லை. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா? மீளாய்வு செய்யும் மூன்று நாடுகள் கொண்ட குழுவில் இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகள் இடம்பெருகின்றன. இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை தான் எடுத்தால்இலங்கை சீனாபக்கம் சாய்ந்து விடும் என்று பயந்து நடுங்கும் அல்லது அப்படி பொய் சொல்லி இலங்கையில் தமிழர்களைக் கொன்றொழிக்க உதவி செய்த இந்தியா எப்படிப்பட்ட அறிக்கையைத் தயாரிக்கும்? விளைவு அறிக்கை தயாரிக்கும் போது இந்த மூன்று நாடுகளுடன் இலங்கையும் இணைந்து கொள்ளும் போது இந்தியாவும் இலங்கையும் இணைந்து மற்ற இருநாடுகளையும் தமது பக்கத் திருப்பலாம். மனித உரிமைக் கழக ஆணையாளரின் பணிமனையும் பன்னாட்டு மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு போன்றவற்றின் நிலப்பாடு எப்படி இறுதி விளைவு அறிக்கையில் இடம்பெறும்?

இறுதியில் நாம் உணரப் போவது:

UPR – Useless politicians’ Review

http://veltharma.wordpress.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.