Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பந்தத்தை மீறுகிறது இலங்கை! – உறவு பாதிக்கலாம் என்று இந்தியா எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
india-sri-lanka-flag-150-news.jpg

சீன நீர்முழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தர்த்து நிற்கின்றமை குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இந்த செயல் 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இதனால் இந்திய - இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் இந்தியா எச்சரித்துள்ளது. இலங்கைக்கு சீனா, விமான நிலையம் , வீதிப் போக்குவரத்து, ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறது. மேலும் சீனாவிடம், இலங்கை மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் நட்பு நாடாக இலங்கை இருந்த போதிலும் இலங்கை கடந்த சில நாட்களுக்கு இந்திய நிதி உதவியுடன் போர் பாதித்த தமிழர்கள் பகுதியில் மீண்டும் ரயில் போக்குவரத்து சேவையை தொடக்கியது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்த வியட்நாம் பிரதமர் நௌகூன் டாங்டூன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு சீனா நீர்முழ்கி கப்பலை அனுப்பி எச்சரித்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சீனா தனது சான்ஷெங்க்-2 என்ற நீர்முழ்கி கப்பல் இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திக்கொள்ள இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அனுமதியளித்தார். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இந்தியாவின் நலனுக்கு எதிரானது எனவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இலங்கை பாதுகாப்பு செயலரிடம் கண்டனம் தெரிவித்தார்.

இதேசமயம் இராணுவ பயன்பாட்டிற்காகதான் நீர்முழ்கி கப்பலை நிறுத்த அனுமதிக்கபட்டது எனவும் இது வழக்கமான ஒன்றுதான் என இலங்கை கூறியுள்ளது. இலங்கையின் இந்த செயலை இந்திய அரசு கண்டித்துள்ளது. இது 1987 ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் இதனை அனுமதிக்க முடியாது எனவும் கண்டனம் தெரிவித்தது. சீன உதவியுடன் இந்தியாவை மிரட்டுவதற்காக இலங்கை செயற்படுவதை காட்டுவதாகவும் கூறியுள்ளது. இதையடுத்து இந்திய - இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=120263&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

india-sri-lanka-flag-150-news.jpg

 இந்தியாவின் நட்பு நாடாக இலங்கை இருந்த போதிலும் இலங்கை கடந்த சில நாட்களுக்கு இந்திய நிதி உதவியுடன் போர் பாதித்த தமிழர்கள் பகுதியில் மீண்டும் ரயில் போக்குவரத்து சேவையை தொடக்கியது. ...

இதேசமயம் இராணுவ பயன்பாட்டிற்காகதான் நீர்முழ்கி கப்பலை நிறுத்த அனுமதிக்கபட்டது எனவும் இது வழக்கமான ஒன்றுதான் என இலங்கை கூறியுள்ளது. இலங்கையின் இந்த செயலை இந்திய அரசு கண்டித்துள்ளது. இது 1987 ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் இதனை அனுமதிக்க முடியாது எனவும் கண்டனம் தெரிவித்தது. சீன உதவியுடன் இந்தியாவை மிரட்டுவதற்காக இலங்கை செயற்படுவதை காட்டுவதாகவும் கூறியுள்ளது. இதையடுத்து இந்திய - இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.

http://seithy.com/breifNews.php?newsID=120263&category=TamilNews&language=tamil

600 மீனவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, இப்பொழுது 5 மீனவர்களுக்கு தூக்கு விதிக்கும் நாட்டை நட்பு நாடு என அழைக்க வெட்கமாக இல்லை? :o

இந்த கள்ளக்காதல் உறவு எப்போ பாதிப்படையும்? அனைவரும் விரும்புவது அஃதே! சீக்கிரம் முறிங்கோப்பா. :(:huh:

பெரிய  விட்டுக்காதல் முறிவடையலாம்

முகம் சுழிக்கலாம்

ஆனால்  சின்னவீட்டுக்காதல்..... :(

உங்கள் எதிர்பார்ப்பு வீண்....? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.