Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிக்குப் புறம்பான கொலைகளுக்குத் தீர்வு !

Featured Replies

வவுனியாவில் துணை இராணுவக்குழுவினரால் 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை

[ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 05:22 ஈழம்] [ம.சேரமான்]

வவுனியாவில் மூன்று இளைஞர்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சமலங்குளத்தில் முச்சக்கர வாகனத்தில் சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்று கொண்டிருந்த மூன்று இளைஞர்களை வழிமறித்த ஆயுதக்குழுவினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த நபர் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கொல்லப்பட்டோர் வைத்திலிங்கம் மகேந்திரன், நடராசா நவராசா, நவநீதன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த ரூபன் என்பவர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வவுனியா நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார்.

வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினருடன் தனது மகனுக்கு முரண்பாடு இருந்ததாக கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் ஒருவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து ஏகே-47 துப்பாக்கியின் வெற்றுத்தோட்டாக்களை வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் கைப்பற்றினர்.

http://www.eelampage.com/?cn=29309

வவுனியாவில் 3 சிங்களவர் சுட்டுக்கொலை

[ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 18:00 ஈழம்] [ம.சேரமான்]

வவுனியா கந்தபுரத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் மூன்று சிங்களவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

வாகனம் ஒன்றில் முஸ்லிம் நபர் ஒருவருடன் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பயணித்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் வாகனத்தை மறித்துள்ளனர்.

முஸ்லிம் நபரை அங்கிருந்து செல்ல அனுமதித்து விட்டு சிங்களவர் மூவரையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கடந்த 3 நாட்களில் வவுனியாவில் மட்டும் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சிங்களவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

http://www.eelampage.com/?cn=29319

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.