Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் ஓய்வு பெற வேண்டாம்: சங்கக்காராவுக்கு மேத்யூஸ் வேண்டுகோள்
 

 

உலகக்கோப்பைக்கு பிறகு சங்கக்காரா ஓய்வு பெறக் கூடாது என்று அவரிடம் தான் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்வதாக இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் கூறியுள்ளார்.

2015 உலகக்கோப்பை முடிந்த பிறகு சங்கக்காரா ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். சங்கக்காராவுக்கு வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே ஏகப்பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சங்கக்காரா. இலங்கையின் சிறந்த பேட்ஸ்மென்/விக்கெட் கீப்பர் என்ற பெயரையும் சங்கக்காரா தட்டிச் சென்றுள்ளார், கிரிக்கெட் ஆட்டத்தின் சிறந்த தூதர் சங்கக்காரா என்பது குறிப்பிடத்தக்கது.

 

நடப்பு உலகக்கோப்பையில் 496 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் அவரது ஓய்வு இலங்கை கேப்டன் மேத்யூஸை உணர்வு ரீதியாக பாதித்துள்ளது, “நான் அவரிடம் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன் ஓய்வு பெற வேண்டாம் என்று. ஆனாலும் அவரது ஆசையையும், முடிவையும் பெரிதும் மதிக்கிறேன். நாட்டுக்காக அவர் ஒவ்வொரு முறை சிறப்பாக ஆடியதற்கு அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம்.” என்றார் மேத்யூஸ்.

 

இந்நிலையில் தனது முடிவில் மாற்றமில்லை என்று கூறிய சங்கக்காரா, “ஓய்வு பெறுவது என்பது ஒருவரது ஃபார்ம் தொடர்பான விஷயமல்ல. சரியான உணர்வு மற்றும் கால நேரமே ஓய்வை தீர்மானிக்கும். நாம் விளையாட முடியுமா அல்லது இல்லையா என்பது பற்றியது அல்ல ஓய்வு முடிவு என்பது.” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/article6982742.ece

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

2cdium8.jpg

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து மீது நிறவெறிப் புகார் சுமத்திய மாஜித் ஹக் நீக்கம்
 

 

ஸ்காட்லாந்து அணி நிர்வாகத்தின் மீது நிறவெறிப் புகார் சுமத்திய ஆஃப் ஸ்பின்னர் மாஜித் ஹக் அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டு நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் இன்று ஸ்காட்லாந்து அணி வீரர் மாஜித் இடம்பெறவில்லை. இவருக்குப் பதிலாக மைக்கேல் லீஸ்க் தேர்வு செய்யப்பட்டார். மைக்கேல் லீஸ்க் இன்று 7 ஓவர்களில் 63 ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் ஆத்திரமடைந்த மாஜித் ஹக் தனது ட்விட்டர் பதிவில், “சிறுபான்மையினராக இருந்தால் கடினம்தான், நிறம், இனம்..” என்று நிறவெறிப் புகார் தொனிக்க கூறியிருந்தார். பின்னர் இந்த ட்வீட் அகற்றப்பட்டது.

 

இதனையடுத்து அணியின் நடத்தை விதிகளை மீறியதாக ஸ்காட்லாந்து அணி நிர்வாகம் அவரை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.

இது குறித்த விசாரணை முடியும் வரை அடுத்த அறிவிப்பு எதுவும் இல்லை என்று ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

32 வயதாகும் மாஜித் ஹக்கின் முழு நீளப்பெயர் ரானா மாஜித் ஹக் கான். இவர் ஒருநாள் போட்டிகளில் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஒருமுறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

அவரது அந்த ட்வீட் அகற்றப்பட்டாலும் வேறு வாசகம் இன்னும் இடம்பெற்றுள்ளது: "நீங்கள் செல்லும் படகில் நீங்கள் கவனியாத தருணத்தில் அனைவரும் துடுப்பு போடுகின்றனரா அல்லது படகில் ஓட்டைப் போடுகின்றனரா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்...உங்கள் வட்டத்தை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.” என்ற வாசகம் இன்னமும் அவரது ட்விட்டர் பக்கத்தில் இருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6982853.ece

  • தொடங்கியவர்

மொயீன் அலி, வோக்ஸ் நீக்கம்

 

சிட்னி: ஆப்கன் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் காயம் காரணமாக மொயீன் அலி, வோக்ஸ் நீக்கப்பட்டனர்.

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றது. முதலில் பங்கேற்ற 4 லீக் போட்டிகளில், ஒன்றில் மட்டும் (ஸ்காட்லாந்து) வென்றது. கடந்த போட்டியில் வங்கதேசத்திடம் வீழ்ந்ததால், காலிறுதி வாய்ப்பையும் இழந்தது.

 

நாளை கடைசி மற்றும் தனது 6 வது லீக் போட்டியில் ஆப்கனை சந்திக்கிறது. இரு அணிகளும் காலிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றிக்காக களமிறங்குகின்றன.

 

இதனிடையே, மொயீன் அலி (வலது பக்க வலி), வோக்ஸ் (இடது கால் பாதம்) இருவரும் காயத்தால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டதால், பயிற்சியில் பங்கேற்கவில்லை.

 

இருப்பினும், முக்கியத்துவம் இல்லாத போட்டி என்பதால், அடுத்து வரும் தொடர்களை கணக்கில் கொண்டு (வெஸ்ட் இண்டீஸ் பயணம்) இங்கிலாந்து அணியில் இருந்து இந்த இரு வீரர்களும் நீக்கப்பட்டனர்.

 

http://sports.dinamalar.com/2015/03/1426095866/CricketWorldCupEnglandChrisWoakesMoeenAliout.html

  • தொடங்கியவர்

காலிறுதியில் நான்கு ஆசிய அணிகள்
 

 

உல­கக்­கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­சி­லாந்தில் கடந்த மாதம் 14ஆம் திகதி தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது. எதிர்­வரும் 15ஆம் திக­தி­யுடன் லீக் போட்­டிகள் முடி­வ­டை­கின்­றன. ஒவ்­வொரு பிரி­விலும் ஏழு அணிகள் இடம்­பெற்­றுள்­ளன.

ஒவ்­வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்­றொரு அணி­யுடன் தலா ஒரு முறை மோத­வேண்டும். அதன்­படி ஏறத்­தாழ அனைத்து அணி­களும் 5 போட்­டி­களில் விளை­யாடி உள்­ளன.

இதன் அடிப்­ப­டையில் ஆசி­யாவைச் சேர்ந்த இலங்கை, இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் ஆகிய அணிகள் காலி­று­திக்கு தகு­தி ­பெற்­றுள்­ளன. இந்த நிகழ்வு அனை­வ­ரையும் ஆச்­ச­ரியப்பட வைத்­துள்­ளது.

ஏனெனில் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­சி­லாந்து மண்ணில் ஆசிய அணிகள் சிறப்­பாக விளை­யா­டி­யது கிடை­யாது. இதனால் ஆசிய அணிகள் இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2015/03/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

  • தொடங்கியவர்

தென் ஆப்ரிக்கா
v
ஐக்கிய அரபு அமீரகம்
(14:00 local | 01:00 GMT | 02:00 CET)

  • தொடங்கியவர்

ei75tt.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஹாமில்டன்: அஸ்வின் இப்படி பந்து வீசினால் நாங்கள் எப்படி ரன் எடுப்பது என்று அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்டர்பீல்ட் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் போட்டி குறித்து அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு கூறுகையில்,

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-vs-ireland-ashwin-was-tricky-says-william-porterfield-222533.html

  • தொடங்கியவர்

SA 341/6 in 50overs

UAE 14/0 after 3.4 overs

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யு.ஏ.இ.-க்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 341 ரன்கள் குவிப்பு
 

 

யு.ஏ.இ. அணிக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 341 ரன்களைக் குவித்துள்ளது.

டாஸ் வென்ற யு.ஏ.இ அணி, தென் ஆப்பிரிக்காவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. துவக்க வீரராக களமிறங்கிய ஆம்லா, அதிரடியாக தனது ஆட்டத்தை துவக்கினார். ஆனால் 3-வது ஓவரிலேயே 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

அடுத்து களமிறங்கிய ரூஸோவும் வேகமாகவே ரன் சேர்த்தார். 16-வது ஓவரில் ஸ்கோர் 85 ரன்கள் என்றிருந்த நிலையில், தொடர்ந்து இந்தத் தொடரில் மோசமாக ஆடி வரும் டி காக் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

அடுத்து டி வில்லியர்ஸ் களமிறங்க, ரூஸோவ் 43 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். இதன் பின் டி வில்லியர்ஸுடன் ஜோடி சேர்ந்தார் மில்லர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 108 ரன்களை எடுத்தனர். அதிரடி ஆட்டத்துக்கு புகழ்பெற்ற இருவர் களத்தில் இருந்தாலும், நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

36-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 200 ரன்களைக் கடந்தது. 37-வது ஓவரில் மில்லர் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர் ப்ளே ஓவர்கள் என்பதால் டி வில்லியர்ஸ் தனது வழக்கமான பாணியில் ஆடத் துவங்கினார். 82 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 99 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக கேட்ச் கொடுத்து டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார்.

 

மறுமுனையில் இருந்த டுமினியும் அடுத்த சில ஓவர்களில் 23 ரன்களுக்கு வீழ்ந்தார். தொடர்ந்து வந்த ஃபிலாண்டர், பெஹார்டீனுடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை 300 ரன்களைத் தாண்டி எடுத்துச் சென்றார்.

கடைசி 5 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்கப்பட்டன. இதில் கடைசி ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரி உட்பட 25 ரன்கள் எடுக்கப்பட்டன. பெஹார்டீன் 27 பந்துகளில் அரை சதம் கடந்தார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 341 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%8F%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-341-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6985579.ece

  • தொடங்கியவர்

2vk0pqf.jpg

  • தொடங்கியவர்

என் வழி, தனி வழி.. சீண்டாதிங்க...! அதிரடி வீரர் மில்லர் பேட்டிங் செய்ய எப்படி வந்தார் பாருங்க...

 

 வெலிங்டன்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா காட்டிய அதிரடியைவிடவும், அந்த அணி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் மைதானத்திற்குள் பிரவேசித்த விதத்தைதான் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். வெலிங்டனில் இன்று யு.ஏ.இ மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப் பரிட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 341 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 48 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து, அவுட் ஆனார்.

23hx5r6.jpg

ஒரு ரன்னில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனால், இதைப்பற்றியெல்லாம் யார் பேசுகிறார்கள்?, டேவிட் மில்லரின் பேட்டிங் பற்றி பேசுவதைவிட, அவரின் ஜம்பிங் பற்றிதான் சமூக வலைத்தளங்கள் அதிகமாக கவலைப்படுகின்றன. ரில்லே ரோச்சவ் அவுட் ஆனதும், 4வது விக்கெட்டாக களமிறங்கினார் டேவிட் மில்லர். ஆனால், வீரர்கள் வரும் வரிசையில் பாதிவரை நடந்து வந்த மில்லர், திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை, பவுண்டரி எல்லையை அடுத்த தடுப்பு சுவரை தாண்டி குதித்தார். மில்லரின் இந்த திடீர் நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.

 

ஏன் இப்படி குதித்தார் என்பதை பற்றியெல்லாம் யாரும் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால் அவரது ரசிகர்களோ, அவர் ஒரு புலி, இல்லையில்லை.. சிங்கம் என்கிற ரேஞ்சுக்கு புகழ்ந்து வருகின்றனர். ஆனால் கேலி பேர்வழிகளோ, ஒருவேளை ஒழுங்கான பாதையில் நடந்து வந்திருந்தால், அரை சதம் அடித்திருப்பார் என்று நக்கல் செய்கின்றனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/david-miller-make-this-unusual-entry-when-he-went-to-bat-222573.html

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இணைப்பதற்கு நன்றி நவீனன்.

  • தொடங்கியவர்

146 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

 

வெலிங்டன்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது. இரண்டாவது பேட்டிங் செய்த எமிரேட்ஸ் 195 ரன்களுக்கு சுருண்டதால், தென் ஆப்பிரிக்கா 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலக கோப்பையில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா-யு.ஏ.இ அணிகள், வெலிங்டனில் இன்று பலப் பரிட்சை நடத்தின. 146 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா! டாசில் வெற்றி பெற்ற யு.ஏ.இ, ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

 

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. ஹசிம் ஆம்லா 12 ரன்களிலும், டி காக் 26 ரன்களிலும் அவுட் ஆகியதால், தென் ஆப்பிரிக்கா பெரிய தொடக்கத்தை பெற முடியவில்லை. இருப்பினும் ரில்லீ ரோச்சவ் 43 ரன்கள், டி வில்லியர்ஸ் 99 ரன்கள், டேவிட் மில்லர் 49 ரன்கள் குவித்து, அணியை மீட்டனர். 82 பந்துகளில் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டி வில்லியர்ஸ் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். உலக கோப்பை வரலாற்றில், ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்ட 3வது வீரர் டி வில்லியர்ஸ் ஆகும். இதனிடையே, இறுதி கட்டத்தில் ஃபர்கான் பெகார்டியன் 31 பந்துகளில் 64 ரன்கள் விளாசியதால், ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 341 ரன்கள் குவித்தது. அணியில் ஒருவரும் சதம் அடிக்காமலேயே, இவ்வளவு அதிக ரன்களை ஒரு அணி குவித்தது இதுதான் முதல் முறையாகும். இதையடுத்து பேட் செய்ய வந்த யு.ஏ.இ அணியிலும் தொடக்கத்தில் விக்கெட்டுகள் குறிப்பிட்ட இடைவெளியில் சரிந்தபடியே இருந்தன.

 

இருப்பினும் சைமான் அன்வரின் 39 ரன்கள் மற்றும் ஸ்வப்னில் பாட்டிலின் 57 ரன்கள் உதவியுடன் அந்த அணி ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோரை எட்டியது. 47.3 ஓவர்களில் 195 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஏனெனில் பபகத் அலாஷ்மி காயம் காணமாக, களமிறங்க முடியவில்லை. இதையடுத்து 146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி வாகை சூடியது. தென் ஆப்பிரிக்க தரப்பில், மோர்கல், பிளேண்டர், டி வில்லியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டெயின் மற்றும் இம்ரான் தாகிர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை டி வில்லியர்ஸ் தட்டிச் சென்றார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-south-africa-post-341-against-uae-222564.html

  • தொடங்கியவர்

ஆஹா.. அனல் பறக்குமே..! உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா-நியூசிலாந்து மோத வாய்ப்பு!

 

சிட்னி: உலக கோப்பை அரையிறுதியில், இந்தியாவும், நியூசிலாந்தும் பலப் பரிட்சை நடத்த வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளனவாம். நடப்பு உலக கோப்பை பி பிரிவில் இந்தியாவும், பி பிரிவில் நியூசிலாந்தும் முதலிடத்திலுள்ளன. இதுவரை இவ்விரு அணிகளுமே, தத்தம் பிரிவில் தோல்வியே காணவில்லை. ஆஹா.. அனல் பறக்குமே..! உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா-நியூசிலாந்து மோத வாய்ப்பு! ஏ பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணியுடன், பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணி, காலிறுதியில், மோத வேண்டும் என்பது விதிமுறை. தற்போதுள்ள நிலைப்படி, ஏ பிரிவில் வங்கதேசம் கடைசியில் இருப்பதால், அதனுடன்தான், இந்தியா பலப் பரிட்சை நடத்தும் என்று தெரிகிறது. அதேபோல நியூசிலாந்து, பி பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணியுடன் காலிறுதியில் மோதும். பி பிரிவில் கடைசி இடம் யாருக்கு என்பது இன்னும் முடிவாகவில்லை.

 

பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகள் அந்த இடத்தை பிடிக்க போராடிவருகின்றன. எப்படி இருந்தாலும், வங்கதேசத்தை இந்தியாவும், பி பிரிவில் கடைசி இடம் பிடிக்கும் அணியை, நியூசிலாந்தும் துவம்சம் செய்யப்போவது உறுதி என்கின்றனர் கிரிக்கெட் நிபுணர்கள். 2வது காலிறுதி போட்டியில், இந்தியா விளையாட உள்ள நிலையில், 4வது காலிறுதியில் நியூசிலாந்து ஆடுகிறது.

 

ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியல்படி, 2வது காலிறுதியில் வெற்றி பெறும் அணிதான், 4வது காலிறுதியில் வெற்றி பெறும் அணியுடன் அரையிறுதியில் மோத வேண்டும். எனவே, இந்தியாவும், நியூசிலாந்தும் ஒருவேளை காலிறுதியில் வெற்றி பெற்றால், இவ்விரண்டு அணிகளும்தான் அரையிறுதியில் பலப் பரிட்சை நடத்த வேண்டிவரும் என்கிறது ஐசிசி ரூல்ஸ். இவ்விரு அணிகளுமே உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால், இப்போதே பல்ஸ் எகிறுகிறது ரசிகர்களுக்கு.

 

(குறிப்பு: முன்பு இருந்த ஐசிசி அட்டவணைப்படி, இந்தியாவும், ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தானும்தான் அரையிறுதியில் மோதும் வாய்ப்பு இருந்தது.ஆனால் லேட்டஸ்டாக மாற்றப்பட்ட அட்டவணை அடிப்படையில், ஒன்இந்தியா இந்த செய்தியை அனைவருக்கும் முன்பாக முதலில் வெளியிட்டுள்ளது.)

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-india-vs-new-zealand-semi-final-likely-222594.html


ICC அடிக்கடி இப்படி மாற்றுவது கூடாது :D:lol:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அஸ்வினுக்கு உதவிய முரளிதரன், ராகுல் திராவிட்
 

 

நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக வீசி வரும் அஸ்வின் பந்துவீச்சு எழுச்சியின் பின்னணியில் முரளிதரன், ராகுல் திராவிட் இருப்பதாக அஸ்வின் பயிற்சியாளர் சுனில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் பந்துவீச்சில் பெரிய மாற்றம் என்னவெனில் பந்துகளை நிறைய காற்றில் தூக்கி வீசுவதும், துல்லியமான ஆஃப் ஸ்டம்ப் திசையும், லெந்த்தும், பந்தின் வேகமாற்றமும் ஆகும்.

 

2013-14 கிரிக்கெட் தொடர்களில் அஸ்வின் தனது பந்துவீச்சு முறையில் ஏகப்பட்ட பரிசோதனைகளைச் செய்தார். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு விதமாக வீசி தனக்குத்தானே சிக்கல்களை உருவாக்கிக் கொண்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அயல்நாட்டு தொடர்களிலும் இவரது பரிசோதனை முயற்சிகள் தொடர விக்கெட்டுகள் என்பது அஸ்வினுக்கு நெடுந்தொலைவாக இருந்தது. முன்னாள் ஸ்பின்னர்களான மணீந்தர் சிங், பிரசன்னா உள்ளிட்டோர் அஸ்வின் செய்யும் தவறுகள் பற்றி சுட்டிக்காட்டிய படியே இருந்தனர்.

 

இந்நிலையில் அஸ்வினின் நீண்டகால பயிற்சியாளரும், முன்னாள் தமிழ் நாடு ரஞ்சி அணியின் ஸ்பின்னருமான சுனில் சுப்ரமணியம் கூறும் போது, “இந்தியா-இங்கிலாந்து தொடரின் போது ராகுல் திராவிட் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் அஸ்வின் நீண்ட உரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது முரளிதரன், அஸ்வினிடம் 'எப்போதும் வீசும் திசையில் பரிசோதனை செய்து மாற்றிக் கொண்டேயிருந்தால் விரும்பியதை செயல் படுத்த முடியாது, திசை மற்றும் அளவில் எப்போதும் சீரான அணுகுமுறை தேவை’ என்று கூறியுள்ளார்.

 

அதன் பிறகு அஸ்வின் என்னிடம் கூறிய போது, ஒரே இடத்தில் சீராக வீசுவதில்தான் இனி கவனம் செலுத்தப்போகிறேன் என்றார்.

பெரிய தொடர்களில் சிறப்பாக வீசுவதே ஒரு பவுலரின் திறமைக்கு எடுத்துக்காட்டு, அஸ்வின் ஒவ்வொரு சமயத்திலும் இதனை வெளிப்படுத்தி வருகிறார்.” என்றார் சுனில் சுப்ரமணியம்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/article6986788.ece

  • தொடங்கியவர்

நியூசீலாந்து
v
பங்களாதேஷ்
(14:00 local | 01:00 GMT | 02:00 CET)

 

ஆப்கானிஸ்தான்
v
இங்கிலாந்து
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

கால் இறுதி போட்டி நடைபெறும் இடங்கள்

 

Wed Mar 18 (50 ovs) 14:30 local (03:30 GMT | 04:30 CET)
1st Quarter-Final - TBC v Sri Lanka Sydney Cricket Ground LIVE D/N
Sunny19 - 30° C

 

Thu Mar 19 (50 ovs) 14:30 local (03:30 GMT | 04:30 CET)
2nd Quarter-Final - TBC v Bangladesh Melbourne Cricket Ground LIVE D/N


Fri Mar 20 (50 ovs) 14:00 local (03:30 GMT | 04:30 CET)
3rd Quarter-Final - Australia v TBC Adelaide Oval LIVE D/N


Sat Mar 21 (50 ovs) 14:00 local (01:00 GMT | 02:00 CET)
4th Quarter-Final - New Zealand v TBC Westpac Stadium, Wellington LIVE D/N

 

 

  • தொடங்கியவர்

BAN 288/7 after 50 overs

  • கருத்துக்கள உறவுகள்

NZ 85/2.Macallum out for 8. Go Bangla!!!

  • கருத்துக்கள உறவுகள்

Quarter finals between Srilanka Vs South Africa !!!

Quarter finals between Srilanka Vs South Africa !!!

  • தொடங்கியவர்

NZ 133/2 after 23.4 overs

 

  • தொடங்கியவர்

சிக்கலில் இலங்கை.. காயத்தால் அவதிப்படும் மேத்யூஸ்: காலிறுதியில் களமிறங்குவாரா?

 

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் உபாதை காரணமாக அவதிப்படுவதாக தெரிய வருகிறது.

ஸ்காட்லாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் விளாசிய மேத்யூஸ் உபாதைக்குள்ளானார். இதனால் அவர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை.

இது குறித்த மேத்யூஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

 

‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணி நிர்வாகம் மற்றும் பிசியோதெரபிஸ்டின் அறிவுறுத்தலின் பேரில் களத்தடுப்பிற்கு வரவில்லை.

காயத்தன்மையை அறிவதற்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த சில தினங்களுக்கு காயம் எந்தளவுக்கு சரியாகிறது என்பதை பார்க்க வேண்டும். உலகக்கிண்ண தொடரிலிருந்து விலக வேண்டி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை’ என்றார்.

 

எனினும் மேத்யூஸ் காலிறுதியில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. காயம் காரணமாக இலங்கை அணியில் இதுவரை 4 வீரர்கள் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

http://yarlsports.com/?p=1373&cat=16

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து 39 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களைப் பெற்றிருக்கிறது. வெற்றிபெறுவதற்கு இன்னும் 79 ஓட்டங்களை 10 ஓவர்களில் ஓவர் ஒன்றிற்கு 7.3 ஓட்டங்கள்படி பெறவேண்டும். பார்க்கலாம். 

 

பல அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய மக்கலத்தை வெறும் 8 ஓட்டங்களுடனேயே பவிலியனுக்குத் திருப்பி அனுப்பியது அபாரம் !

  • தொடங்கியவர்

ரகு, இன்று பங்களாதேஷ் வென்றால் ஸ்ரீலங்கா இந்தியாவோடு கால் இறுதி போட்டியில் விளையாட வேண்டும்


NZ 219/5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.