Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை என்கிறது ஆஸி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த நடவடிக்கை என்கிறது ஆஸி!

 

 

SEAN_KELLY_1756874f-300x200.jpgஇந்தியாவின் பாண்டிச்சேரியிலிருந்து படகில் சென்ற நிலையில் நடுக்கடலில் வைத்து வழிமறிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர், நாரு தீவிலுள்ள தடுப்பு முகாம்களில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 157 பேரினதும் புகலிடக் கோரிக்கையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இந்தியாவின் தென்பகுதி கரையோர பிரதேசமான பாண்டிச்சேரியில் இன்று நடைபெற்ற புகைப்பட கண்காட்சியொன்றில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய அரசின் தென் இந்தியாவிற்கான துணை தூதர் சீயான் கெலி இந்தத் தகவலை கூறியுள்ளார்.

அகதிகளை அவுஸ்திரேலியா ஒருபோதும் நிராகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர்இருவ ஆனால் ஆட்கடத்தல்களையும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதையும் அவுஸ்திரேலியா கடுமையாக நிராகரிப்பதுடன் அவற்றை தடுக்க கடும் நடவடிக்கைகளை கடைபிடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாண்டிச்சேரியிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் ஆபத்தான படகுப் பயணத்தை ஆரம்பித்திருந்த குழ்ந்தைகள், பெண்கள் அடங்களாக 157 இலங்கை அகதிகள் சென்ற படகை கிறிஸ்மஸ் தீவிற்கு அருகிலுள்ள ஆழ்கடலில் வைத்து கடந்த யூன் மாதம் அவுஸ்திரேலிய கடற்படையினர் வழிமறித்திருந்த நிலையில் அகதிகளை உடனடியாக இலங்கை கடற்படையிடம் அல்லது இந்தியாவிற்கே திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த அகதிகள் குறித்த விபரங்களை ஆரம்பத்தில் ரகசியமாக வைத்திருந்த அவுஸ்திரேலிய அரசு, ஆழ்கடலிலேயே தடுத்து வைத்திருந்ததுடன், அவசர அவசரமாக அகதிக் கோரிக்கைகளை ஆராய்ந்திருந்ததுடன், உடனடியாக இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

எனினும் அவுஸ்திரேலிய ஊடகங்களும், அகதிகளின் உரிமைகளுக்காக போராடும் அமைப்புக்களும் அவுஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கையை பகிரங்கப்படுத்திய அதேவேளை நாடு கடத்தலுக்கு எதிராக அகதிகள் சார்பில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கமைய அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கையை கைவிடுமாறு உத்தரவிட்டதற்கு அமைய தற்போது, நாரு தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் 157 பேர் தொடர்பிலேயே அவுஸ்திரேலியாவின் தென் இந்தியாவிற்கான துணை தூதர் சீயான் கெலி இந்தத் தகவலை கூறிவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.com/?p=43695

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.