Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பலவீனமே தமிழ்மக்கள் மீதான அரச அடக்குமுறைக்குக் காரணம்! – ஜேவிபி குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
sunil-handunneththi-300-news.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நலிவடைந்த, பலவீனமான காரணிகளே அரசாங்கம் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கு காரணமாக இருப்பதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் வடபகுதி மாத்திரமன்றி அனைத்து மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றார்கள். சிறுவர்கள்கூட கடன்காரர்களாக இருக்கின்றார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, எம் நாட்டின் சாபக்கேடு.

   

இன்று இலங்கையின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தினை கையாளும் போது, காணி மற்றும் உற்பத்திகள் அனைத்தும் பல்தேசிய கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற நிலமை ஏற்பட்டுள்ளது. எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 81 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அதிலுள்ள அனைத்து நட்டங்களும் மக்கள் மீது சுமத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையை வட கிழக்கு மக்கள் மட்டுமன்றி முழு இலங்கை மக்களும் அனுபவிக்கின்றார்கள்.

ஜனநாயகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கும் மக்கள் அதிகம் முகங்கொடுத்து வருகின்றார்கள். ஆரசாங்கம் நினைப்பதை மக்கள் நினைப்பார்களாயின், அரசாங்கம் பேசுவதையே மக்களும் பேசுவார்களாயின் அதுவே இந்த அரசாங்கத்தின் ஜனநாயகம். அந்தவகையில் இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டம் என்பது அடிப்படை உரிமை. அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். ஆனால் நாட்டின் அரசியலமைப்பு, சட்டம், மற்றும் நீதித்துறை குழி தோண்டிப் புதைக்கப்பட்டு, உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை மறைக்குமுகமாக நாட்டில் களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. வீதிகள் காபற் போடப்படுகின்றன, உயர் போக்குவரத்து வீதிகள் அமைக்கப்படுகின்றன. களியாட்ட நிகழ்வுகளின் மூலம் மக்களின் சிந்தனைகளை திசை திருப்புகின்றனர். வடகிழக்கு மக்களை பொறுத்தவரையில் பலர் காணாமல் போய் பலர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கு 50 சதவீதமானவர்கள் கொட்டில்களில் வாழ்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் பூர்த்தியாகி 6ஆவது வருடம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதுவரை எவையும் பூர்த்தியாக்கப்படவில்லை.

வடக்கில் 49 ஆயிரத்திற்கு அதிகமான விதவை பெண்கள் இருக்கின்றார்கள், 28 ஆயிரத்திற்கு அதிகமான சிறுவர்கள் பெற்றோர்களை இழந்து இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையை மாற்றும் ஏதுவான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்றால் அதுவும் கிடையாது. இவ்வாறான செயற்பாடுகள்தான் இன்று வடமாகாணத்தில் நிலவுகின்றன. இவற்றிற்று தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டிய அரசாங்கம், மக்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துக் கொண்டு இருக்கின்றது.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நலிவடைந்த, பலவீனமான காரணிகள் காரணமாக அரசாங்கம் வட பகுதி மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றது. இந்நிலையில் இனவாதம் மற்றும் மதவாதம் அல்லாத தேசத்தினைக் கட்டியெழுப்புவதற்கும் ஒன்றிணைந்து போராடுவதற்கும் முன்வரவேண்டுமென்று வடகிழக்கு மக்களுக்கு அழைப்பு விடுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=120895&category=TamilNews&language=tamil

ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதையாக இருந்தாலும் கூட்டமைப்பின் நிலை இப்படியாக போச்சு 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் பலவீனமே தமிழ்மக்கள் மீதான அரச அடக்குமுறைக்குக் காரணம்! – ஜேவிபி குற்றச்சாட்டு.

 

குற்றச்சாட்டு சரி

ஆனால் பலமாக இருந்த  தமிழரை ஆதரித்தீர்களா??

 

கூட்டமைப்பின் இன்றையநிலைக்கு காரணமே நீங்கள் தானே...... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.