Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் - சர்வதேச ஆய்வு நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் - சர்வதேச ஆய்வு நிறுவனம்
18 நவம்பர் 2014
institute%20og%20economics%20&peace_CI.j
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச ஆய்வு நிறுவனமொன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பில் உலகளாவிய ரீதியில் ஆய்வு நடத்தும் நிறுவனமொன்று இந்த ஆய்வினை நடத்தியுள்ளது.

பொருளாதாரம் மற்றும் சமாதானம் என்ற அமைப்பே இந்த ஆய்வினை நடத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடர்ச்சியாக பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஏனைய தரப்பினரால் இந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.அங்கோலா, பங்களாதேஸ், புருண்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, எத்தியோப்பியா, ஈரான், மாலி, இஸ்ரேல், மெக்சிக்கோ, மியன்மார், உகண்டா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல், வன்முறைகள் மற்றும் குழு நிலை உறவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு முதல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.2012ம் ஆண்டு முதல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத சம்பவங்கள், இழப்புக்கள், காயங்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்கள் போன்ற காரணிகளும் கவனத்திற் கொள்ளப்பட்டு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதிகளவு உயிரிழப்புக்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113611/language/ta-IN/article.aspx

 

இலங்கையில் அரசபயங்கரவாதம் என்று சொல்லுங்கோவன் . அதுதான் உண்மை.

IEP%2087878789.jpg

 

இலங்கையில் போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டபோதும் பயங்கரவாத அச்சுறுத்தல் அங்கு தொடர்கிறது. மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் வாய்ப்புக்களும் காணப்படுகிறது. இவ்வாறு தனது வருடாந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது பொருளாதாரம் மற்றும் சமாதானத்திற்கான நிறுவகம்.
 
இந்த வருடத்துக்கான உலக சமாதானச் சுட்டி அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை நோபல் பரிசு பெற்றவர்கள், சர்வதேச தலைவர்கள் உட்பட பலர் அங்கீகரித்துள்ளனர். அந்த அறிக்கையில், இலங்கை உட்பட பல நாடுகளில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இலங்கை உட்பட 13 நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு பயங்கரவாத நடவடிக்கைக்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
 
அங்கோலா, பங்களாதேஷ், புருண்டி, ஈரான், மத்திய ஆபிரிக்க குடியரசு, பித்ஜண், டிதியோப்பியா, இஸ்ரேல், ஈரான், மாலி,மெக்சிகோ, மீயன்மார், இலங்கை ஆகிய 13 நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அரசியல், வன்முறை உட்பட பல சுட்டிகளை அடிப்படையாக வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 166 நாடுகளில் 2010 முதல் 13 வரையான காலப்பகுதியில் காணப்பட்ட போக்குகளை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன.
 
2013 இல் பயங்கரவாதத்தால் இடம்பெற்ற 80 வீதமான மரணங்கள் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், சிரியா, ஈரான், நைஜீரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இந்த 5 நாடுகளுக்கு அப்பாலும் பயங்கரவாதம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ந்துள்ளது. - என அந்த அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது. -
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.