Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மற்றொரு பதவிக் காலத்துக்கான பிரகடனத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

Featured Replies

3(226).jpg
மற்றொரு பதவிக் காலத்துக்காக  ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/134136-2014-11-20-07-57-49.html


14 கட்சிகள் ஜனாதிபதிக்கு ஆதரவு: 1.30க்கு வர்த்தமானி
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 14 கட்சிகள் ஆதரவளித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் 1.30க்கு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 
  • தொடங்கியவர்
யார் கடும் தோல்வியை அடையப்போகிறார்கள் என்பதை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் - ஜனாதிபதி
 
 
ஜானாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பிலான அறிவித்தல் வழங்கும் பத்திரத்தில் இன்று கையொப்பம் இட்டு அதனை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
 
இது ஜனநாயக நாடு. அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பொறுப்பினை மக்களுக்கு நான் வழங்கியுள்ளேன்.
 
ஒரு சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று நம் நாட்டில் ஆட்சி மாற்றத்தை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
ஆனால் இங்கு ஜனாதிபதியை மக்கள்தான் தெரிவு செய்ய வேண்டும். என்னோடு போட்டியிடப் போகின்றவர் யார் என்பதை நான் எதிர்பார்த்திருக்கிறேன். யார் கடும் தோல்வியை அடையப் போகிறார்கள் என்று காத்திருக்கிறேன். எதிர்க்கட்சிகளால் இன்றுவரை என்னுடன் போட்டியிட ஒருவரைக்கூட நியமிக்க முடியவில்லை.
 
 
 
1.50 PM
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்ட பிரகடனம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
 
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சோதிடர்களின் ஆலோசனைப்படி நண்பகல் 1.30 க்கு பின்னர் வெளியிடவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான அறிவிப்பில் ஜனாதிபதி கையொப்பமிட்டார் 

 
இதன் காரணமாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தற்போது அலரி மாளிகை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்ந்து அரசாங்கத்தரப்பினருக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களும் அலரிமாளிகையை முற்றுகையிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இதற்கிடையே ஜனாதிபதியின் தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நாடு முழுவதிலும் இருந்து சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் ஆரவார வரவேற்பு வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று பிற்பகல் 1.30 அளவில் அறிவிக்கப்பட உள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட உள்ளது.
 
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி பெரும்பாலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
 
10609438_10152818077474030_8645836389759
 
 
 
mahinda_sign_001.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=286943657320627308#sthash.MyDRVWvN.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.