Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகல மக்களின் ஆதரவும் எனக்கு உண்டு - மைத்திரி

Featured Replies

இந்த அரசாங்கத்தில் இருந்து செய்ய முடியாதவற்றை செய்வதற்காகவே பொது வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளேன். சகல மக்களின் ஆதரவும் எனக்கு உண்டு என தெரிவித்த மைத்திரிபால சிறிசேன இன்று தொடக்கம் எனது மக்கள் பணி ஆரம்பிக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

 

z_fea800.jpg

 

பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று கோட்டை நாக விகாரையின் விகாரதிபதி மாதுளுவாவே சோபித தேரரை சந்தித்து ஆசி பெற்றிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்;

 

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிப்பது அதிகாரப் பகிர்வினூடாக ஜனநாயகத்தின் பாதையில் நாட்டை கொண்டு செல்வது என்ற கோட்பாட்டினை ஆரம்பித்தவர் மாதுளுவாவே சோபித தேரரே. எனவே, அவர்கள் காட்டிய வழியில் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக நான் எனது நம்பிக்கையான நண்பர்களுடன் பொது வேட்பாளராக களத்தில் குதித்துள்ளேன். என் மூலமாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் மாற்றம் ஒன்று ஏற்படவுள்ளது. சர்வாதிகாரமாக சென்று கொண்டிருக்கும் இவ்ஆட்சியினை ஜனநாயகத்தின் பக்கம் கொண்டு செல்ல என்னால் முடியும்.

அதேபோல் சகல தரப்பினரும் என்னை நம்புகின்றனர். அரசாங்கத்துடன் நான் இருக்கும் போது பல தடைகளைத் தாண்டி எனது சேவையினை செய்தேன். எனினும் இப்போது அந்தத் தடைகள் நீங்கியுள்ளது.

 

ஐ.தே.க. விற்கு நன்றி

அதேபோல் தான் அரசாங்கத்தில் இருந்து என்னால் செய்ய முடியாத சேவைகளை பொது வேட்பாளராக களமிறங்கி செய்வேன். என்னை பலர் ஆதரித்துள்ளனர். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிகப் பெரிய தியாகத்தினை செய்துள்ளார். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தொழிற்சங்கங்கள் என அவர்களும் என்னை ஆதரித்துள்ளனர். எனவே, இவர்கள் அனைவரும் என்னை நம்பி என்னிடம் இந்தப் பொறுப்பினை வழங்கியிருக்கின்றனர். அதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

 

தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு

மேலும், மூவின மக்களையும் உள்ளடக்கியதே இலங்கை என்ற நாடு. இங்கு மூவின மக்களுக்கும் சம உரிமை உண்டு. எனவே, சிங்கள பௌத்தத்தினை பாதுகாப்பதுடன் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மதத்தவர்களையும் இணைத்துக்கொண்டு முன்செல்ல தயாராகவே உள்ளேன். அதேபோல் தமிழ் முஸ்லிம் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி அவைகளின் உதவியுடன் எனது பயணத்தினை ஆரம்பிக்க தயாராகி விட்டேன்.

 

மக்கள் என் பின்னால்

மக்களை நம்பியே நான் பொது வேட்பாளராக களமிறங்கி இறங்கியுள்ளேன். மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. அதை செய்வதற்கான மக்கள் பலம் என் பின்னால் உள்ளது. அந்த நம்பிக்கையில் போட்டிக்கு தயாராகி விட்டேன். எனவே, இன்றில் இருந்து எனது சேவையும் மக்கள் பணியும் ஆரம்பமாகின்றது எனவும் குறிப்பிட்டார்.

    

http://virakesari.lk/articles/2014/11/24/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.