Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியேறத் தயாராகிறது முஸ்லிம் காங்கிரஸ்! – கிழக்கு மாகாணசபை கவிழும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வெளியேறத் தயாராகிறது முஸ்லிம் காங்கிரஸ்! – கிழக்கு மாகாணசபை கவிழும்? 
[saturday 2014-11-29 08:00]
SLMC-logo-150.jpg
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராகி வருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிங்கள பௌத்த கடும்போக்குடைய அமைப்பான பொதுபல சேனா அண்மையில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தது.

முஸ்லிம்களுக்கு பல்வேறு வழிகளில் நெருக்குதல்களையும், அழுத்தங்களையும் கொடுத்த பொதுபல சேனா அமைப்பு ஆளும்கட்சிக்கு ஆதரவளிப்பதனை முஸ்லிம் காங்கிரஸ் விரும்பவில்லை. பொதுபல சேனா ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் அதிஉயர் பீட உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரி வருகின்றனர்.முஸ்லிம்களை தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்த பொதுபல சேனா ஆதரவளிக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது துரோகச் செயல் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இது தொடர்பில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு பலர் தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் நேற்றிரவு ரவூப் ஹக்கீமின் வீட்டில் விசேட கூட்டமொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை முஸ்லிம் காங்கிரஸ் வாபஸ் பெற்றுக்கொண்டால் கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தையும் அரசாங்கம் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நேரம் மட்டும் அரசுடன் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, யார் ஆட்சிக்கு வருகினமோ அவர்களின் காலை பிடிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.