Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிநபர்கள்- LTTE- TROவினது சொத்துக்களை ஏலம் விடும் அரசாங்கம் பிரபாகரனின் சொத்துக்கள் என பிரச்சாரம்

Featured Replies

அரசாங்க செய்தியை பல தமிழ் ஊடகங்களும் அச்சடித்தன:- குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

ltte%20new_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெற்கின் ஊடகங்கள அரசாங்கத்தின்  செய்திகளை வெளியிட்டுள்ளன. இதனை தமிழ் ஊடகங்களும் அப்படியே பிரதி பண்ணி வெளியிட்டன.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடமொன்று, ஆடைத் தொழிற்சாலையொன்று, கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள பாரிய காணியொன்று, ட்ரோலர் ரக படகுகள் உட்பட சில படகுகள், என அடையாளப்படுத்தப்பட்டவை புலிகள் அமைப்பிற்கு சொந்தமானவை. இவை புலிகளின் ஆதரவாளர்களது பெயரில் வாங்கப்பட்டவை. ஆவற்றில் எந்த பதிவிலும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரோ அவரது குடும்ப அங்கத்தவர்களது பெயரோ இல்லை.

மற்றும் கொழும்பு உள்ள அச்சகம் யசீககரன் - மற்றும் திஸநாயகம் கைது செய்யப்பட்ட போது வைப்பற்றப்பட்ட யந்திரங்கள். அதிலும் அந்தக் கட்டடம் அவர்களால் வாடகைக்கு எடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அச்சகம் புலிகள் அமைப்பின் ஆதரவில் வெளிவந்த பத்திரிகைகளுக்குரிய அச்சகம். ஆவற்றிலும் பிரபாகரன் பெயரோ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர்கள் பெயரோ இல்லை.

இதேவேளை கொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டு வங்கியொன்றின் கணக்கிலிருந்த 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் சமாதான காலத்தில் சுனாமி நிதியத்திற்கு கிடைக்கப்பெற்ற பணம் வுசுழு என்ற அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கணக்கு. அதுபோல் மற்றும் தேசிய வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டுள்ள மூன்று கோடியே 50 இலட்சம் ரூபாய் பணமும் சமாதான காலத்தில் சட்டரீதியாக புலிகளின் அமைப்பு உப அமைப்புகளின் பேரில் உருவாக்கப்பட்டவை.

இவை இப்படி இருக்க புலிகள் அமைப்பின் தலைவரது சொத்துக்கள் 200 கோடி என அரசாங்கம் உருவாக்கிய செய்தியை தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டமை தவறு என கொழும்பின் நிதி மற்றும் வங்கி சார்ந்த முக்கியஸ்த்தல் குளோபல் தமிழ்ச் செய்திகறிக்கு தெரிவித்தார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114053/language/ta-IN/article.aspx

 

அட அப்புடியா? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.