Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவுக்கு ஏழு நாள்கள் அவகாசம்! சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியது

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஆதவளிப்பது தொடர்பில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவற்றை நிறைவேற்ற 7 நாள்கள் அவகாசம் வழங்கியிருக்கிறது.
 
எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஆளும் கட்சியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போட்டியிடுகிறார். இந்நிலையில் முக்கிய அமைச்சர்களும், எம்.பிக்களும் பொது வேட்பாளரான மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
 
ஆனால் அக்கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசனலி ஆகியோர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அலரி மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினர். இதன்போது சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே ஜனாதிபதிக்கு தேர்தலில் ஆதரவு வழங்குவோம் என அறிவித்தனர். இதற்காக எழு நாட்கள் அவகாசமும் வழங்கினர்.
 
 
 
  • தொடங்கியவர்

ஜனாதிபதிக்கு ஹக்கீம் ஏழு நாள் அவகாசம் - முஸ்லீம் மக்களை ஏமாற்றுவதற்கான தந்திரோபாயமா?

 

Hakeem_CI.jpg



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஏழு நாள் அவகாசம் வழங்கியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பது குறித்து நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர்.


இந்த சந்திப்பின் போது சில கோரிக்கைகைள முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளது. ஏழு நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகள், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.


இந்த வாரத்தில் மீளவும் ஓர் சந்திப்பை நடாத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமக்கு வாக்குறுதி அளித்தார் என கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்காவிட்டால் மாற்று வழிகள் பற்றி யோசிக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தக் கால அவகாசம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பின் முக்கிய முஸ்லீம் தரப்புகள் இது முஸ்லீம் மக்களை ஏமாற்றுவதற்கான தந்திரோபாயம் எனவும் - வழமையான அரசியல் பித்தலாட்டம் எனவும் தெரிவித்த அதேவேளை முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு ஒரு போதும் வெளியேறாது என தெரிவித்துள்ளன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114044/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஏழுநாட்கள்......நடிப்பவர்கள்...மகிந்தா+கக்கீம்.....ரசிகர்கள் முஸ்லிம்மக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன டிராமா போட்டாலும் முசுலீம்கள் இம்முறை மகிந்தவுடன் இல்லை. கக்கீம் தொடர்ந்து நிண்டால் கட்சி உடையும். ஜப்னா முஸ்லீம்மில் மகிந்தவுக்கு ஆதரவில்லை என்று (ஹசன் அலி?) சொன்னதாக வந்திருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.