Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்

 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடத்துகின்றோம். நம்பிக்கையுடனேயே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேசுகின்றோம். எனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்துடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.

Nimal-Siripala-De-Silva1_0.jpg

நல்லாட்சி குறித்து பேசும் நவீன் திசாநாயகக தனக்கு 100 மிலலியன் ரூபா கொடுப்பதற்கு முன்வந்தது யார் என்பதனை கூறவேண்டும். பொலிஸ் முறைப்பாட்டையாவது மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனக்கு 100 மில்லியன் ரூபா வழங்குவதற்கு முன்வந்ததாக கூறுகின்றார். யார் எப்போது வழங்க முன்வந்தனர் என்று கூறவேண்டும். நல்லாட்சி குறித்தும் பேசும் அவர் இதனை செய்யவேண்டும். குறைந்த பட்சம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கலாமே? பெயர் விபரஙகளை குறிப்பிடவேண்டும்.

கேள்வி: பொலிஸ் மீது நம்பிக்கையில்லை என்று அவர் கூறியுள்ளாரே?

பதில்: அவ்வாறு கூற முடியாது. முறைப்பாடு செய்திருக்கலாம். அவ்வாறு பொலிஸ் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு இருக்க முடியாது. முழு நாட்டு மக்களும் பொலிஸாரை நம்பாமல் இருக்கின்றரா?

கேள்வி: அரசாங்கம் யாரையும் பணம் கொடுத்து நிறுத்தவில்லையா?

பதில்: அவ்வாறு பணம் கொடுத்து எம்.பி. க்களை நிறுத்தவேண்டிய தேவை இல்லை. அவர்கள் ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கலாம். ஆனால் அவ்வாறு எதிர்க்கட்சிக்கு செல்வது தற்கொலை செய்துகொள்வதற்கு சமனாகும்.

கேள்வி: தங்களுக்கு பாரிய வெற்றி கிடைக்கும் என்று எதிரணி கூறியுள்ளதே?

பதில்: எதிர்பார்ப்பை யாரும் வைத்திருக்கலாம். அது ஜனநாயக உரிமையாகும். எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அவர்களுக்கு வெற்றிகிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் எதிரணியிடம் எந்தவொரு நிகழ்சிசித்திட்டமும் இல்லை. கொள்கை இல்லை. பிரிவுகள் மட்டுமே உள்ளன.

கேள்வி: ஜாதிக ஹெல உறுமய சென்றுவிட்டது. முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?

பதில்: ஜாதிக ஹெல உறுமயவுடன் தொடர்ந்து பேச்சு நடத்தினோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காமல் திருத்தம் செய்தால் போதும் என்று அவர்கள் கூறினார்கள். தேர்தலின் பின்னர் அது குறித்து ஆராயலாம் என்று கூறினோம். ஆனால் இறுதியில் அவர்கள போய்விட்டார்கள். உண்மையில் அவர்கள் போயிருக்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் போனமை குறித்து கவலையடைகின்றோம்.

இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடத்துகின்றோம். நம்பிக்கையுடனேயே முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேசுகின்றோம். சந்தேகத்துடன் பேச்சு நடத்த முடியாது. எனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எங்களுடன் இருககும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

கேள்வி: மாகாண சபைகள் பறிபோகும் அபாயம் உள்ளதா?

பதில்: சில மாகாண சபைகளில் எதிர்க்கட்சிக்கு ஆதரவு இருந்தால் அவர்கள் சத்தியகடதாசி மூலம் தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கலாம். வெறுமனே பேசிக்கொண்டிருப்பதைவிடுத்து ஊவா மாகாண சபையில் பெரும்பான்மை பலம் இருந்தால் நிருபியுங்கள் பார்க்கலாம்.

http://www.virakesari.lk/articles/2014/12/04/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் கட்சியில்தான், முஸ்லீம் கட்சிகள் இருக்கும் என்பது,
நிமால் சிறிபால டி. சில்வாவுக்கு, புரிய இன்னும் கனகாலம் எடுக்கும் போலுள்ளது. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிற்குறிப்பு: மகிந்தவுடனான முஸ்லிம் காங்கிரசின் பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் மகிந்தவால் ரத்து செய்யப்பட்டதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.