Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மோதல்கள் உக்கிரமடைகின்றன

Featured Replies

இலங்கையில் புலிகளின் இரு பிரதான தாக்குதல்களை அடுத்து இராணுவ மோதல்கள் உக்கிரமடைகின்றன

0000

இலங்கை இராணுவத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த மூன்று நாட்களுக்குள் தொடுத்த இரு பிரதான தாக்குதல்கள், கடந்த ஜூலையில் இருந்து துரிதமடைந்துவரும் பகிரங்க உள்நாட்டு யுத்தம் மேலும் உக்கிரமடையும் ஆபத்தை தோற்றுவித்துள்ளது.

கடந்த திங்களன்று, தலைநகர் கொழும்பில் இருந்து வடக்கு கிழக்காக 170 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹபரனை பிரதேசத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 102 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கடற்பனையினராகும். இந்த இடம், கிழக்குத் துறைமுகமான திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் இராணுவ முகாங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கடற்படையினரும் இராணுவத்தினரும் இடம்மாறும் இடமாகும்.

கிட்டத்தட்ட 350 கடற்படை சிப்பாய்களை ஏற்றிவந்த சுமார் 20 பஸ்கள் இந்தப் பிரதேசத்தில் தரித்து நின்ற போது, ஒரு தற்கொலை குண்டுதாரி குண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு டரக் வண்டியை அந்த இடத்திற்குள் ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்துள்ளார். தற்கொலைத் தாக்குதல்களில் நீண்ட வரலாறு கொண்ட புலிகள் இந்தத் தாக்குதலுக்கு உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்காவிட்டாலும், நிச்சயமாக அவர்களாலாலேயே இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்க முடியும்.

நேற்று, வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட பல படகுகளுடன் எல்லாமாக ஐந்து படகுகள் தெற்கு நகரான காலியில் உள்ள கடற்படைத் தளத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளன. விபரங்கள் இன்னமும் குறைவானதாக உள்ள போதிலும், இரு கடற்படைப் படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. இராணுவத்தின் படி, இரு படையினர் உயிரழந்துள்ளதோடு பல பொது மக்கள் உட்பட மேலும் 26 பேர் காயமடைந்துள்ளனர். 15 தாக்குதல்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

கொழும்பு அரசாங்கம் உடனடியாக இந்தத் தாக்குதலை கண்டனம் செய்தது. பாதுகாப்பு பேச்சாளர் கேஹேலியே ரம்புக்வெல்ல ஹபரன தாக்குதலை "காட்டுமிராண்டி பயங்கரவாத நடவடிக்கை" என வகைப்படுத்தினார். "புலிகளின் நிகழ்ச்சி நிரலில் சமாதானம் இல்லை என்பதையும் அவர்கள் சர்வதேச கருத்துக்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது."

இராணுவம் இஸ்ரேல் தயாரிப்பான கிபீர் ஜெட் விமானங்களை பயன்படுத்தி புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது பதில் தாக்குதல்களை நடத்தியது. இந்த கிபீர் விமானங்களில் ஒன்று மேலெழுந்து சிறிது நேரத்தின் பின்னர் நிலத்தில் வீழ்ந்தது. புலிகளின் செய்திகளின்படி, இந்தத் தாக்குதலில் இரு இளம் யுவதிகள் உட்பட பல பொது மக்கள் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் சேதமடைந்தவற்றில் புலிகளின் வானொலி நிலையமும் ஒலிபரப்பு கோபுரமும் அடங்கும். காலியில் நடந்த மோதல்களை அடுத்து மேலும் விமானத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

இந்த மோதல்கள் அக்டோபர் 28-29ம் திகதிகளில் ஜெனீவாவில் சமாதானப் பேச்சுக்கள் நடத்துவதற்கான தயாரிப்புகளின் மத்தியிலேயே நடந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை சந்திக்க திங்களன்று ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி கொழும்பை வந்தடைந்துள்ள அதேவேளை, நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பவர் மற்றும் அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் ஆகியோரும் இந்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

ரம்புக்வெல்லவும் ஏனைய பேச்சாளர்களும், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் புலிகளின் மீது அழுத்தம் கொடுக்க பெரும் வல்லரசுகளின் ஆதரவை பட்டியலில் சேர்ப்பதற்காக இந்த புதிய தாக்குதலை சுரண்டிக்கொள்ள முயல்கின்றனர். ஆயினும் யுத்தம் உக்கிரமடைவதற்கான பிரதான பொறுப்பு, புலிகளின் பிராந்தியத்தில் உள்ள மாவிலாறு தண்ணீர் அணைக்கட்டைக் கைப்பற்றுவதற்காக கடந்த ஜூலையில் ஒரு பிரதான தாக்குதலை முன்னெடுத்த இராஜபக்ஷ அரசாங்கத்தையே முற்றிலும் சாரும்.

ஹபரன "பயங்கரவாத நடவடிக்கை" சம்பந்தமான ரம்புக்வெல்லவின் சீற்றமும் மற்றும் சமாதானப் பேச்சுக்களுக்கான ஆதரவை பிரகடனம் செய்வதும் முற்றிலும் பாசாங்குத்தனமானதாகும். கடந்த வாரம், ஜெனீவா பேச்சுக்களுக்கான உடன்படிக்கைகள் எட்டப்படுவதற்கு சற்று முன்னர், இராணுவம் வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான குறுகிய தரை மார்க்கமான முகமாலையில் உள்ள புலிகளின் நிலைகளுக்கு எதிராக கணிசமான இன்னுமொரு தாக்குதலை ஆத்திரமூட்டும் வகையில் முன்னெடுத்தது.

அரசாங்கம் இராணுவத்தின் நடவடிக்கைகள் "தற்காப்புக்கானவை" என ஆரம்பத்தில் கூறிக்கொண்டது --கடந்த மூன்று மாதங்களாக அது முன்னெடுத்த தாக்குதல்களுக்கான உத்தியோகபூர்வ சாக்குப் போக்கு இதவேயாகும். இந்தக் குற்றச்சாட்டு ஒரு பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. புலி போராளிகள் தீவிர கண்காணிப்பில் இருந்து ஒரு பிரதேசத்திற்குள் படையினர் நுளைந்த நிலையில், இந்தத் தாக்குதல் பேரிடராகியது. பின்வாங்குவதற்கு முன்னதாக நடந்த கடுமையான மோதல்களில் 130 படையினர் கொல்லப்பட்டதோடு 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிரிழந்த படையினரின் அரைவாசிப்பேரின் சடலங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தன. புலிகள் அந்த சடலங்களை உத்தியோகபூர்வமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இராணுவத்திடம் கையளித்தனர். யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழு, இராஜதந்திர ரீதியில் தெரிவித்ததாவது: "புலிகள் உயிரிழந்த 75 துருப்புக்களின் சடலங்களை கண்டெடுத்திருப்பார்களானால், எதிரிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் அவர்களின் பிரேதசத்திற்குள் இராணுவம் புதிய தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதையே காட்டுகிறது."

சந்தேகத்திற்கிடமின்றி அரசாங்கம் புதிய கதையைக் கட்டிவிட்டுள்ளது: இந்தத் தாக்குதலுக்கும், அதனால் விளைந்த தோல்விக்கும், ஒரு போக்கிரித்தனமான அதிகாரியே பொறுப்பு. மிகவும் விரிவுபடுத்தப்பட்ட கூற்று ஒன்றை, கடந்த வார சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான தனது வழமையான நிலவர அறிக்கையில், இராணுவத்துடன் நெருக்கமான தொடர்புகள் வைத்துள்ள பத்திரிகையாளரான இக்பால் அத்தாஸ் அமைத்திருந்தார். இந்த இராணுவத் தாக்குதல் பற்றி ஜனாதிபதியும் தேசியப் பாதுகாப்புப் பேரவையும் அறிந்திருக்கவில்லை என்பது தனக்கு நிச்சயாமாகத் தெரியும் என்பது போலவே அத்தாஸ் எழுதுகின்றார்.

"உண்மையில் ஒரு விவகாரமாகத் திரும்பிய ஒரு பிரதான இராணுவத் தாக்குதலை (முகமாலையில்) பற்றி, அரசியல் தலைமைத்துவத்திற்கு தெரியாது. அதேபோல், சேவை விஸ்தரிப்பை எதிர்பார்த்திருந்த ஒரு 'அதி ஆர்வமுள்ள' இராணுவ அதிகாரியை, மேலும் முன்செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய ஒருவர் விடாமல் அனைத்து இராணுவ உயர்மட்ட அதிகாரிகளும் கூட இதை அறிந்திருக்கவில்லை." கட்டுரை பூராவும் அத்தாஸ் இதே விடயத்தை பல தடவைகள் திருப்பித் திருப்பி எழுதியுள்ளார்.

எவ்வாறெனினும், இந்தத் தாக்குதல் ஒன்றும் பெரும் இரகசியமானது அல்ல. கவச வாகனங்கள் மற்றும் விமானங்களின் ஆதரவுடன் பெருந்தொகையான துருப்புக்களைக் கொண்டு நடந்த இந்தத் தாக்குதலுக்கான தயாரிப்புகள் பற்றி, தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே புலிகள் கண்காணிப்புக் குழுவிடம் கவலை தெரிவித்திருந்தனர். புலிகளின் எச்சரிக்கை உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. இராஜபக்ஷவும் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் ஊடகங்களை வாசித்த போதும், குறிப்பாக அது அண்மையில் நடைபெறவுள்ள சமாதானப் பேச்சுக்களை பாதிக்கும் என தெரிந்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுவது நகைப்புக்கிடமானதாகும்.

இந்த வலிமையற்ற கதை ஒரு பெரும் தடுமாற்றத்தை மூடிமறைக்க கட்டப்பட்டது என்பதே உண்மை. அத்தாஸே குறிப்பிட்டுள்ளபடி: "எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் தலைமைத்துவத்திற்கு தெரியாமலும் சிரேஷ்ட அதிகாரிகளின் குறிக்கோளுக்கு எதிராகவும் புதன் கிழமையன்று முன்னெடுக்கப்பட்ட தக்கமுறையில் திட்டமிடப்படாத தாக்குதல் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தை தடுமாறச் செய்துள்ளது தெளிவு. சர்வதேச சமூகத்தின் கண்களின் முன்னால் அதன் நம்பகத் தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.