Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் அந்தரிப்பு - நடராசா வினோதரன்

Featured Replies

jaffna_train_sri_lanka_mahinda1_CI.jpg

அப்போது எங்கள் ஊருக்குள்ளால் யாழ்தேவி ஓடிக்கொண்டிருக்கும் .

எண்பத்துமூன்று கலவரத்துக்கு பின்னர் பிறந்த நாங்களெல்லாம் முப்பது வயதுகளை கடந்தோம் என்பது ஒன்றும் இயல்பாய் நடந்துவிடவில்லை. ஒவ்வொரு கணங்களும் இயல்புக்கு மிஞ்சி நாங்களும் இந்த உலக மாந்தர் என்பதை ஒப்புவித்தே வருகிறோம்.

அந்நேரம் எம் மந்து தெருவைத்தாண்டி ஊர்ப்பள்ளி கனவுகளுடன் வந்தோம் . எம் ஊர்த்தெருவெல்லாம் இந்தியன் ஆமிகளை நிறைத்து வைத்திருந்தீர்கள். அரிவரி பள்ளிக்கு போகமுன்னம் எம் ஊரெல்லாம் உங்களால் அநியாயமாய் செத்தவர்களுக்காய் அழுதோம்

சீக்கியனும், குறுக்காசும் கண்டபடி சுட்டுக்கொண்டெ போகும் போதெல்லாம் அட்டாங்கமாய் விழுந்துதானே படுத்தோம். எங்கள் தென்னை மரங்களின் சாய்நது நிற்கிற உங்களை எண்ணிக்கொண்டே மருந்துக்குக் கூட போய் வருவோம்.

பிள்ளைகளான எங்களுடைய பாதுகாவலரான அப்பாக்களுக்கு நாங்களே காவலர்களாக கூடத் திரிந்தோம் . குழந்தைகளை கண்டு நீங்கள் கொஞ்சம் உங்கள் பிள்ளைகளை நினைப்பார்கள் என்று நினைத்தோம். அதற்கிடையில் உங்கள் கைகள் எங்கள் அடுப்படி வரை நீண்டிருக்கும் . எங்கள் அப்பாக்களை பலவந்தமாய் உங்கள் பச்சடிபோடவும் இளநீர் பிடுங்கவும் பணித்தீர்கள். எங்கள் நாசிகளில் ஒட்டிய உங்கள் சப்பாத்தியையும் வெறுக்க வைத்தீர்கள். கதறக்கதற இத்தனை அநியாயங்களையும் செய்துவிட்டு உங்கள் ஊர்களுக்கு 'வீர ர்களாக ?' சென்று சேர்ந்தீர்கள்

அதற்கிடையில் யாழ்தேவி நின்று போனது!

அதற்குப்பிறகு புக்காராவுக்கும், அவ்ரோவிற்கும், முதலைக்ஹெலிகளுக்கும் பயந்து பயந்து எங்கள் புத்தகப்பைகளைத் தொலைத்தொம். வானில் நீங்கள் நஎறிந்திட்டு போகிற குண்டுகள் எம் ஊரெங்கும் ஒப்பாரியை , கதறலை தொடர்ந்து தந்து மகிழ்ந்தீர்கள். 

எத்தனை தடைகளை தந்து பார்த்தீர்கள் . ஒரு சொட்டு மண்ணெண்ணை இல்லாமல் சிக்கன விளக்கில் படித்தோம். காவோலைகளை கொழுத்தி சுத்தியிருந்து சாப்பிட்டோம். நூற்றியம்பது ரூபாய் விற்ற சவரக்காரகட்டிகளை வாங்க அவதிப்பட்டு பனங்களியினால் எமது சீருடைகளை துவைத்தோம்.சீருடைகளை மாடுகள் தின்றுவிட்டு போக மாற்றுடை இன்றி நின்றோம். புத்தகங்களும் எழுது கோல்

களும் இல்லாத உங்கள் 'இலவச கல்வியோடு' கிடந்தோம்.

அதற்குப்பிறகு சமாதானம்

கொண்டு வருவதாக சொல்லிச் சொல்லியே ஊரடங்குச் சட்டம் போட்டீர்கள் . சுற்றி வளைத்தீர்கள் . தலையாட்டினீர்கள். ஊருக்கொரு சோதனைச்சாவடி . அடி , உதை , கைது , பாலியல் வல்லுறவு , கடத்தல் , சூடு , சித்திரவதை அத்தனை காட்டேரிகளின் அகோர தாண்டவம் எம் சனங்கள் மிதே நடந்தது.ஊடகர் வாயிலும் இரட்டைக்குழலை திணித்து சங்காரம் ஆடினீர்கள். நீங்கள் போட்ட ஊரடங்குச் சட்டங்கிடையே எங்களுடைய ஒரு குப்பி விளக்கை நோக்கி தாறுமாறாய் சுட்டீர்கள் . எங்கள் இரத்தங்களால் எங்களை எழுதிப்படித்தோம். இருபத்தியோராம் நூற்றாண்டில் இருபத்திநாலு மணி நேரமும் இருட்டை தந்தீர்கள் . நீங்கள் தந்த மின்சார வெளிப்பில் செம்மணி வெளியெங்கும் நீங்கள் கொலைசெய்து போட்ட எங்கள் சவங்களை தானே கண்டோம். 

உள்ளூரில் மாறி மாறி அலைக்கழிந்தோம். உருக்குலைந்து இடம்பெயர்ந்து களைத்தோம். உயிருக்கு எந்த உத்தரவாதமும் அற்று கலைந்தோம். எங்கள் நிலத்திலிருந்து எங்களை பிடுங்கி பிடுங்கி எறிந்தீர்கள். அத்தனை தடவையும் எங்கள் நிலத்தை நோக்கித்தனே ஓடி வந்தோம் . அது எங்கள் ஊர் எங்கள் நிலம் . எங்கள் மொழி பேசா நீங்கள் ஏன் எங்கள் ஊர்களுக்கு வல்வளைத்து வருகிறீர்கள் ? எங்களை எங்கள் பாட்டிலேயே விட்டிடுங்கள்!

பிறகு எங்கள் பாதையை நீங்களே திறந்தீர்கள். பிறகுமொரு சமாதானம் என்றீர்கள் . இப்போது எம்மூரில் கோயில்கள் , வீடுகள் , பள்ளிகளை எங்களிடம் தரவே மறுத்தீர்கள். எம் ஊரெங்கும் எங்களை விட நீங்களே நிறைஞ்சு நிறைஞ்சு எம் உயிர்நாடிகளை சிதைத்தீர்கள். 

உம் முன்னே குனிந்து கும்பிட மறுத்தவரை எந்த கேட்டுக்கேள்வியுமின்றி கொன்று புதைத்தீர்கள்.

பிறகு வந்ததுதான் ' சமாதானத்திற்கான யுத்தம் !'

இத்தோடு மானிட ஆத்மா கலங்க திகழ்ந்ததுதான் இறுதி யுத்தம் . என் சனங்களை குரூரமாக, கொடூரமாக அந்தரிக்க அந்தரிக்க இலட்ச கணக்கில் கொன்று தொலைத்தீர்கள். தடைசெய்யப்பட்டது அத்தனை ஆயுதங்களையும் நிராதரவான எங்கள் குழந்தைகளிடத்தில் ஏவினீர்கள். கருக்கினீர்கள் கருவறுத்தீர்கள். இந்த நூற்றாண்டின் மிகப்பெரும்

என்னின அழிப்பு, சன நாயகம் பேசும் உலகம் முன்னே நிகழ்ந்த சூனியவெளி. உங்களூர் வைத்தியசாலை பிண அறைகளில்இன்னும் இன்னும் எங்கள் உறவுகளை தேடுகிறோம்.இத்தனை ஓலங்களும் அவலங்களும் இன்னும் இன்னும் உங்களுக்கும், உலகுக்கும் கேட்காதபடு செய்துவிட ஏத்தனை பிரயத்தனங்களையும் பண்ணி தொலைகிறீர்கள். 

இன்னுமொன்று! 

பதின்மூன்று வருடங்கள் பட்டிழுத்து படித்த கல்வி எம் ஆத்ம தாகத்தை அளக்கவில்லை. ஐந்து வருட பல்கலைக்கழக கல்வியும் அந்தரிக்கும் மானிட உணர்வுக்கு கிட்ட கூட வரவில்லை. அகதியாக உலகெல்லாம் ஓடி ஓடி உலைந்தாலும் இந்த பிறப்புணர்வு மறுக்கும் யாருடனும் மண்டியிட்டு சமரச படவும் முடியவில்லையே 

இப்போதும் எம் ஊருக்குள்ளால் யாழ் தேவி ஒடத் தொடங்கியிருக்கிறதாம்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114253/language/ta-IN/article.aspx

இரண்டு மரநாய் களும்  (மகிந்த & டக்களஸ் ) ஏதோ இல்லாததை உருவாக்கின மாதிரி படம் கட்டுரான்கள் ,
நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்துட்டு ஏதோ புதுசா உருவாக்கினமாதிரி கை அசைக்கிறங்கள் .
 
ஏண்டா நீங்களே அழிப்பியலாம் பிறகு கொடுக்கிற மாதிரி காட்டுவியல் . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.