Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களும்: புதிய திசைகள்

Featured Replies

newdirections.jpg
பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீதோ அல்லது அந்த "ஜனநாயகத்தின்" மகுடத்தை அலங்கரிக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை மீதோ நம்பிக்கை வைத்து இலங்கை மக்கள் வாக்களிப்பதில்லை. இவ்வகை தேர்தல்கள் மக்களின் தேர்வுகளுமல்ல. மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான எந்த ஜனநாயக ரீதியான தேர்வு முறைகளும் இலங்கையில் இதுவரை இருந்ததில்லை.

1978ம் ஆண்டு தொடக்கம் இருந்து வரும் இந்த ஜனாதிபதி ஆட்சிமுறை இலங்கையில் உருவாக்கிய அழிவுகள், ஒடுக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள் எண்ணிலடங்காதவை. புலிகளின் அழிவு, தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு ஆகிய இரண்டு அடித்தளத்தில் இருந்து கொண்டு சிங்கள மக்களின் ஜனநாய உரிமைகளை பறிப்பதுடன் ஜனாதிபதி ஆட்சி மூலம் இதுவரைகாலம் பயனடைந்து வந்த ஆளும் மறுபிரிவின் உரிமைகளும், கொள்ளையிடலில் பங்கும் இந்த ராஜபக்ச அரசினால் பறிக்கப்படுகிறது.

மக்களின் உரிமை பறிக்கப்படுகிறதே என்ற கரிசனையிலிருந்து இன்றைய ஜனாதிபதி முறை மாற்றமோ அல்லது தேர்தல் கோரிக்கையோ வைக்கப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்கின்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு நடத்தப் படும் குடும்ப ஆட்சிக்கெதிரான ஆளும்பிரிவில் உள்ளவர்களின் குரல் முக்கியமானதாகவும், குடும்ப சர்வாதிகாரத்தால் இருந்த மிச்ச சொச்ச உரிமைகளையும் இழந்து வரும் மக்களின் ஜனநாயக குரலையும் இணைத்து ஒரு கருத்துருவாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஒப்பீட்டு அடிப்படையிலேயே மக்கள் ஜனநாயகத்தை தெரிவு செய்ய முடிகிறது.

கால காலமாக தேர்தல்கள் கொள்கைக்காக புறக்கணிக்கப்படுவதும், தந்திர ரீதியாகவும், பெரும் பண கைமாறல்களினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. கொள்கைக்கான புறக்கணிப்புகள், அதற்கான மாற்றீடுகளை உருவாக்குவதில் இதுவரை வெற்றி காணாமையினால் அவை மக்கள் தேர்வுகளாக மாற முடியவில்லை. தந்திரம், ஊழல் வகைப் புறக்கணிப்புகள் இதுவரை பேயை துரத்தி விட்டு பிசாசை ஆட்சிக்கு கொண்டு வந்த வரலாற்றையே கொண்டிருக்கின்றன.

இன்று இருக்கும் இந்த ஜனநாயக ஆட்சிமுறைக்கு மாற்றான ஒரு மக்கள் ஜனநாயகத்தை யாரும் முன் வைக்காத வரை மக்களை தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் படி கோருவது எம்மை போன்ற சக்திகளின் ஒரு தேர்வாக அமைய முடியாது. அதே நேரம் இத் தேர்தல் காலங்களில் மக்கள் அரசியல் ரீதியில் அதிகம் விழிப்பாக இருக்கும் சூழ்நிலை காணப்படுவதால் தங்கள் உரிமைகளை தேவைகளை உயர்த்திப்பிடித்து, குரலெழுப்பும், போராடும் வகையில் ஊக்கிவிக்கப்படுவது சாத்தியமானதாகும்.

குறிப்பாக தமிழ் மக்கள் வரும் ஜனாதிபதி தேர்தலில் தங்கள் தமிழ் பிரதிநிதிகளை நோக்கியும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரிவுகளை நோக்கியும் குறைந்தபட்சமாக கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைக்கலாம் என்பது எமது முன்மொழிவு.

1. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப் பட வேண்டும்
2. இராணுவ முகாம்கள் நீக்கப் பட்டு உள்நாட்டு யுத்தத்திற்கு முந்தைய காலத்து நிலைக்கு இராணுவ நிலைகள் நகர்த்தப் படவேண்டும்
3. சிறுபான்மையினர் மீதான நில ஆக்கிரமிப்பு நிறுத்தப் பட வேண்டும்
4. காணாமல் போனோர் விபரம் திரட்டப் பட்டு நியாயமான விசாரணை மேற்கொள்ளப் பட வேண்டும்
5. அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப் படவேண்டும்
6. புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் துரிதப் படுத்தப் பட வேண்டும்

இந்த முன்மொழிவுகளைத் தழுவிய பல்வேறு விதமான உரிமைக் கோரிக்கைகள் தமிழர் வாக்குகளைக் குறி வைத்து வருவோர் முன் பகிரங்கமாக வைக்கப் பட வேண்டும். திரை மறைவில் நடக்கக் கூடிய பேரம் பேசல்கள், அரசியல் சாணக்கியர்களின் காய்நகர்த்தல்களில் நம்பிக்கை வைப்பது இனிவருங் காலங்களில் தமிழ் மக்கள் முன் செல்லுபடியாகப் போவதில்லை. இந்த வகைக் குறைந்த பட்சக் கோரிக்கைகளைக் கொள்கையளவில் கூட ஏற்க முடியாத தரப்பினரை மக்கள் சுலபமாக இனங் கண்டு கொள்ள முடியும்.

http://www.kural.co.uk/2014/news/election

Edited by Alternative

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.