Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோட்டக்காணியை சுவீகரித்து இராணுவ முகாம்! – மலையகத்திலும் பரவுகிறது நிலஅபகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ruwan-wanigasoorya-200-2-news.jpg

இங்கிரிய, றைகம் தோட்டத்தில், இராணுவ முகாமொன்றை நிர்மாணிப்பதற்காக, அந்த தோட்ட மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை, இராணுவம் சுவீகரித்துள்ளது. இருப்பினும், தாம் இந்த காணி சுவீகரிக்கப்படவில்லை என்றும் அது விலைக்கு வாங்கப்பட்டது என்றும் இராணுவ தரப்பு விளக்கமளித்தது. இந்த காணியை இராணுவம் அபகரித்துள்ளது என்றும் அந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, குறித்த தோட்ட மக்கள், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

   

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மேற்படி காணி சுவீகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, குறித்த காணியை இராணுவம் சுவீகரித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை' என்று விளக்கினார்.

இங்கிரிய - றைகம் தோட்டப் பகுதி காணியை இராணுவம் சுவீகரிப்பதாகக் கூறப்படும் செய்தி பொய்யானதாகும். இந்த காணியை இராணுவம் சுவீகரிக்கவில்லை. கொட்டகலை பிளான்டேஷன் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மேற்படி 20 ஏக்கர் காணி, அந்நிறுவனத்துக்கு பணம் கொடுத்தே கொள்வனவு செய்யப்பட்டது. அரசாங்கத்தால் இராணுவத்துக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தே இந்த காணி கொள்வனவு செய்யப்பட்டது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட காணியில், இராணுவ முகாமொன்று நிர்மாணிக்கப்படும். வடக்கு, கிழக்கில் சேவையாற்றும் இராணுவத்தினரின் ஒரு பிரிவினரே இந்த முகாமில் நிலைநிறுத்தப்படுவர். தனியாருடைய நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகளில் இராணுவத்தினர் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள். வடக்கிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என கூறுகின்றனர். ஆனால், அவர்களை வேறு இடங்களில் நிலைநிறுத்தும்போது, அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

'றைகம் தோட்டத்தின் 20 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள படைமுகாமில், புதிதாக இராணுவத்தினர் எவரும் கொண்டு வரப்படுவதில்லை. வடக்கிலுள்ள இராணுவத்தினரில் சிலரே இங்கு வரவழைக்கப்படவுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த ஒரு இடத்திலும் இராணுவத்தினர் முகாம்களை அமைக்க முடியும். இதற்காக அரச காணிகள் பயன்படுத்தப்பட்டாலும் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரமே தனியார் நிலங்களை அதற்காக பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனாலும், தனியார் இடங்களை இராணுவம் ஓருபோதும் அபகரிக்கவில்லை.எவ்வளவு இராணுவத்தினர் இங்கு நிலைநிறுத்தப்டுவார்கள் என்று கூறு முடியாது. 20 ஏக்கர் நிலப்பரப்பில் முகாம் அமைக்கப்படுவது உறுதி.

இராணுவ முகாம் நிர்மாணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் அம்மக்களுக்கு போதிய தெளிவின்மையே இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குக் காரணமாகும். எது எவ்வாறாயினும், இராணுவம் தனியாருக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்கவில்லை என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.

இதேவேளை, செட்டிக்குளம், ஆண்டியா புளியங்குளம் பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவ தேவைக்காக கைப்பற்றியதாக கூறப்படுகின்றது. இந்த செய்தியும் பொய்யானது' என இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

http://seithy.com/breifNews.php?newsID=122434&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.