Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புலம்பெயர் தேச நிகழ்வுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு

 

Belgium-141214-antonbala-350.jpg

தமிழீழ வீர விடுதலைப் போராட்டத்தில் ஈடு செய்யமுடியாத மாபெரும் அரசியல் ஞானியாக திகழ்ந்து தேச விடுதலைக்கு தனது அர்பணிப்பை செய்து தேசத்தின் குரலாக விளங்கிய மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு பெல்ஜியம் மக்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. வணக்கநிகழ்வில் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்துக்கு ஒன்றுகூடிய மக்களுக்கு சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

   

 

Belgium-141214-antonbala%20(1).jpg

 

 

Belgium-141214-antonbala%20(2).jpg

 

 

Belgium-141214-antonbala%20(3).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=122705&category=TopNews&language=tamil

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் நடைபெற்ற தேசத்தின்குரல் நினைவு

 

 

14.12.14 அன்று தேசத்தின்குரல் பாலா அண்ணாவின் நிகழ்வு மண்டபம் நிறைந்த மக்களோடு மிக  சிறப்பாக நடைபெற்றுள்ளது.அகவை பேதமின்றி கலந்து கொண்ட மக்கள் மண்ணின் விடுதலைக்காக அயராது உழைத்த தேசத்தின்குரலுக்கு மலர்வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினர்.

no1%20(2).jpg

இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலாநிதி முருகர் குணசிங்கத்தின் நூல் வெளியீடும் இடம்பெற்றது.

no2.jpg

no6.jpg

இந்த உலகத்தில் ஏராளமான தத்துவஞானிகள் உலகை பலகோணங்களில் விமர்சனம் செய்திருக்கின்றார்கள் இந்த தத்துவஞானிகள் மேற்கத்தேய நாடுகளில் அதிகமாக வாழ்ந்திருக்கின்றார்கள் வாழ்ந்துவருகின்றார்கள்.

ஆனால் தமிழர்களின் தத்துவஞானியான தேசத்தின் குரல் பாலா அண்ணா மேற்கத்தேய நாட்டில் வாழ்ந்துவந்த போதும் தன் இனத்தின் விடுதலைக்காக எல்லாவற்றையும் துறந்து ஒரு போராளியாக  தன்னை மாற்றி உலக தத்துவஞானிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக தமிழரின் இதயத்திலும் உலகமகான்களின் மனசாட்சியிலும் தேசத்தின் குரல் நிரந்தரமாக வாழ்ந்துகொணடிருக்கின்றார்.

no3.jpg

no4.jpg

உலகத்தை மாற்றி அமைக்கவும் அறிவியற் பரப்பை உயர்த்துவதர்க்கும் அரும்பாடுபட்டு வரும் தத்துவமேதைகள் அழகான நாற்கலியில் அமர்ந்துகொண்டு கருத்து சுதந்திரம் கொண்ட நாடுகளின் அரவணைப்பில் செல்லப்பிள்ளைகளாக இருந்து கொண்டு கருத்துக்களையும் எழுத்துக்களையும் பதிவுசெய்கின்றார்கள்.

ஆனால் பாலா அண்ணா அவர்கள் முற்றிலும் மாறுபட்ட சூழலில் இருந்துகொண்டு தமிழரின் தலைவிதியை சதிகளில் இருந்து விடுவித்து விடுதலைபெற்ற இனமாக வாழ்வதர்க்கு ஒயாது உழைத்தார்.

no5.jpg

20141214_182241.jpg

குறிப்பாக இரத்தமும் சதையும் வியர்வையும் புழுதியும் இடப்பெயர்வும் அகதிவாழ்வும் பசியும் நோயும் ஏமாற்றங்களும் துரோகங்களும் தீரமும் தியாகங்களும் நிறைந்த சூழலில் பாலா அண்ணாவின் பேச்சும் எழுத்தும் இருந்து வந்ததோடு மட்டுமல்லாமல் தலைவர் அவர்களின் நம்பிக்கையின் சிகரமாகவும் அரசியல்ஞானியாகவும் செயல்ப்பட்டுவந்துள்ளார்.

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் எழுத்தானது வெறும் அரசியலோடு மட்டும் முடங்கிவிடாது சமூகவியல் உளவியல் பொருளியல் மெய்யியல் வரலாற்றியல் மானிடவியல் போன்ற அறிவியற் பரப்புகளையும் பதிவு செய்திருக்கின்றது இந்த அறிவியற் பரப்புக்கள் தலைவர் தளபதிகள் போராளிகளின் விடுதலைப்பணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்திருக்கின்றது.

20141214_180958.jpg

no8%20(2).jpg

ஏறத்தாள முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் தமிழீழவிடுதலைக்கான போரில் சமாதான காலகட்டங்களில் சாணக்கினாக விளங்கிய இவர் தமிழீழப்போராட்டத்தை சமாதானம் என்ற போர்வையில் நசுக்க முனைந்த சூத்திரதாரிகளின் சூட்சுமவினாக்களையெல்லாம் சூட்சுமமாகவென்று தமிழீழத்தை பாதுகாத்து வந்துள்ளார்.

அந்த அற்புதமான அறிவியற் போர்த்தளத்தை இழந்தபோதுதான் தமிழீழீழ விடுதலைப்போராட்டத்தில் இட்டு நிரப்ப முடியாத வெளியொன்றை சந்திக்கநேர்ந்தது இவரின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத தமிழினம் கலங்கிப்போனது.

லண்டன் எக்ஸ்எல் மண்டபத்தில் இதயம் உடைந்து விழிசொரிய தேசத்தின்குரல் அன்ரன் பலா அண்ணாவின் வித்துடலுக்கான இறுதிவணக்கம் நடைபெற்று பல்வாயிரக்கணக்கான மக்களின் விழிநீர் பூக்களின் வணக்கத்தோடு தமிழீழ தாகத்தை தாங்கி நின்ற புலிவீரனின் பூதவுடல் தீயில் சங்கமாகியது.

எந்தக்கனவோடு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் உடலின் நோயை பொருட்படுத்தாது கடல் மேடு காடு என ஒயாது உழைத்தாரோ அதே கனவோடு நாமும் தொடர்ந்து பயணிப்போம்.

                                                     தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

 

 

http://www.pathivu.com/news/36077/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்கில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வு

 

டென்மார்கில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நிகழ்வு

தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் 2 ஆம் லெப் மாலதி அவர்களும் வீரவணக்க நாள் நிகழ்வு டென்மார்கில்  13.12.14 அன்று நடைபெற்றது.

dk1.jpg

dk2.jpg

dk3.jpg

dk5.jpg

dk6.jpg

 

http://www.pathivu.com/news/36073/57/8/d,article_full.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டாரில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 8-ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

 

‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம்  ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். 


அவரின்  8-ஆண்டு நினைவு நாள் இன்று கட்டாரில் வாழும் தமிழர்களால் எழுச்சியுடன் நினைவு கூறப்பட்டது.
doka-1.JPGdoka-2.JPGdoka-3.JPGdoka-4.JPG
 

 


தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் – யாழ்.பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிப்பு! 

 

 

 

bala-jaffna-200-news.JPG

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நாள் இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 11 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக புதிய கட்டடத் தொகுதியில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்துக்கு தீபம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

   

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார்.

தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

 

bala-jaffna-141214-seithy.JPG
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.