Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவை குப்பையில் எறியாதிருக்க சரஸ்வதியைப் பயன்படுத்தும் மகிந்தவின் தேர்தல் உத்தி! தற்போதைய அரசாங்கம் தன்னாலான அனைத்துப் பிரிவுகளிலும் தமது பிரசாரப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. சட்டரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் தனது பிரசாரங்களை ம

Featured Replies

19b2674528b4d5fa396dcc8c20062871_L.jpg

தற்போதைய அரசாங்கம் தன்னாலான அனைத்துப் பிரிவுகளிலும் தமது பிரசாரப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

சட்டரீதியாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் தனது பிரசாரங்களை முன்னெடுத்து வருவதுடன் தற்போது மத, இன உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும் இந்தப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக தமிழர்களின் வாக்குகள் தற்போதைய அரசாங்கத்திற்கு கிடைக்காது என்பதால் மகிந்த ராஜபக்விற்கு வாக்களிக்க வலியுத்தி ஏராளமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு கோரி விநியோகிக்கப்படும், துண்டுப் பிரசுரங்கள், தேர்தல் அட்டைகள் உடனடியாக எறியப்படுவதால் தமிழர்கள் இதனை தன்னுடன் வைத்துக்கொள்ளும் வகையில் தற்போது இந்துக்களின் கடவுளின் படங்களையும் தேர்தல் அட்டைகளில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறிப்பாக இவ்வாறு மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு கோரி விநியோகிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார அட்டை ஒன்றில் ஒருபுறம் இந்துக்கள் வணக்கும் கல்வித் தெய்வமான சரஸ்வதியின் படத்தையும், மறுபுறத்தில் மகிந்த ராஜபக்சவின் படத்தையும் பொறித்து இந்த அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவ்வாறு விநியோகிக்கும் அட்டைகளை தம்மால் எறிந்துவிட முடியாமல் இருப்பதாகவும் அதேநேரம் இதனை உடன் வைத்துக்கொள்ள முடியாத சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த அட்டையப் பெற்றுக்கொண்ட பொதுமகன் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு விநியோகிக்கப்பட்ட அட்டையொன்றின் புகைப்படத்தையே இங்கே இணைத்துள்ளோம்.

எவ்வாறாயினும், மத உணர்வுகளைப் பயன்படுத்தி இவ்வாறு தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் அளவிற்கும் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார உத்தி கீழ்நிலைக்குச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சியின் தமிழ் அரசியல்வாதியொருவர் தெரிவித்தார்.

http://www.tamil.srilankamirror.com/

 

 

இந்த கொலைகார மிருகத்தினை துக்கி எறியலாம் சரஸ்வதி கோபித்து கொள்ளமாட்டா , சேர்ந்து இருந்தால் தான் இன்னும் கோபம் கொல்வா . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.