Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிகாவின் காலத்தில் தான் 11,500 படையினர் கொல்லப்பட்டனர் – பௌத்த பிக்கு பதிலடி

Featured Replies

சந்திரிகாவின் காலத்தில் தான் 11,500 படையினர் கொல்லப்பட்டனர் – பௌத்த பிக்கு பதிலடி DEC 19, 2014 | 1:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

Chandrika-Kumaratunga-300x200.jpgஒட்டுமொத்த போரிலும் கொல்லப்பட்ட 23 ஆயிரம் படையினரின் பாதிப் பேர், முன்னாள் அதிபர் சந்திரிகாவின் காலத்தில் தான், உயிரிழந்தனர் என்று, சிறிசம்புத்தலோக விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் இத்தட்டேமலியே இந்திரசார தேரர், நேற்று கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அங்கு அவர், தாமே போரின் 75 வீதத்தை முடித்து வைத்ததாக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க உரிமை கோரியது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“போரில் 23ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர். இவர்களில் பாதிக்கும் மேலானவர்கள், சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக்காலத்திலேயே உயிரிழந்தனர்.

அவரது ஆட்சிக்காலத்தில் தான் முக்கியமான பொருளாதார இலக்குகளான, மத்திய வங்கி, கொலன்னாவ எண்ணெய்க் குதம், கட்டுநாயக்க விமான நிலையம் என்பன தாக்கப்பட்டன.

போர் வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக இருந்தாலும், கொழும்பிலுள்ள மக்கள் அதனால் பெரிதும் பாதிப்புகளை சந்தித்தனர்.

ரெலிகொம், மத்திய பேருந்து நிலையம், மத்திய வங்கி, மருதானை, கலதாரி குண்டுவெடிப்புகளின் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே இதற்கெல்லாம் முடிவு கட்டினார்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2014/12/19/news/1930

 

அண்ணே பிக்கு அண்ணே , மகிந்தவின் காலத்தில் எத்தனை பேர் என்று சரியான கணக்கு இருக்கா . எண்ணி பாரும் உமக்கு மண்டை விறைக்கும் . இன்னும் கணக்கு கட்டாமலே காணமல் போனவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளிர்கள் . கோத்தவை ஆம்பிள ஏன்டா உண்மையை சொல்லசொள்ளு . பரவாயில்லை அம்மையாரின் காலத்தில் கொஞ்சம் தான் மகிந்தவின் காலத்தில் 50000 இணை விட தாண்டி இருக்கும் . வீட்டில் வேற வேலை இருக்கும் போய் அதனை பாரும் .....

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவின் காலத்தில் தான் 11,500 படையினர் கொல்லப்பட்டனர் – பௌத்த பிக்கு பதிலடி

 

இன்னும்  கனக்க பதிலடிகள் மாறிமாறி  வரும்

 

புலிகள் என்னத்தை   கிழித்தவை

புலம் பெயர் தமிழர் என்னத்தை புடுங்கினவை என்று கேட்போருக்கும் தலை விறைக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.