Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் நான்கு இலட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிப்பு! – மட்டக்களப்பிலேயே மோசம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் நான்கு இலட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிப்பு! – மட்டக்களப்பிலேயே மோசம். photo.png

[Tuesday 2014-12-23 09:00]
flood-350-news2.jpg

வெள்ளப்பெருக்குக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சார்ந்த 4 இலட்சத்து 4 ஆயிரத்து 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 96 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 9 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சேர்ந்த 33 ஆயிரத்து 276 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

  

மட்டக்களப்பில் 88,925 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 78 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7ஆயிரத்து 794 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 608 பேர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 997 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு தற்காலிக முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

வடமத்திய மாகாணத்தின் பொலன் னறுவை மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 969 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 361 பேரும் அநுராதபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 224 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 884 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் ஆயிரத்து 980 குடும்பங்களைச் சேர்ந்த ஆறு ஆயிரத்து 608 பேரும், மத்திய மாகாணத்தில் 227 குடும்பங்களைச் சேர்ந்த 826 பேரும், வட மேல் மாகாணத்தில் ஆயிரத்து 615 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 672 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்குக் காரணமாக நாடு முழுவதிலும் 1914 வீடுகள் முழு அளவில் சேதமடைந்திருப்பதுடன், 6,561 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 1879 வீடுகள் முற்றாகவும், 5578 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 241 குடும்பங்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், தெரிவித்தார். கோரக்கண்கட்டு, பன்னங்கட்டி, கிளிநொச்சி நகரத்தின் ஒருபகுதி, ஸ்கந்தபுரம் மணியந்தோப்பு, ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.

பரந்தன் முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 92 குடும்பங்களும் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 10 குடும்பங்களும் பன்னங்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 13 குடும்பங்களும் கண்ணகிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 45 குடும்பங்களும் ஆனைவிழுந்தான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 73 குடும்பங்களும் ஸ்கந்தபுரம் இல 01 பாடசாலையில் 08 குடும்பங்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கான உடனடி சமைத்த உணவுகள் மற்றும் இதர தேவைகள் அனைத்த முகாமைத்து அமைச்சினால் மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்ட நிதி மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன், அனர்த்த பாதிப்பு, இதர நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனைத்து திணைக்களங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

 

flood-231214-seithy%20%281%29.jpg

 

flood-231214-seithy%20%282%29.jpg

 

flood-231214-seithy%20%283%29.jpg

 

flood-231214-seithy%20%284%29.jpg

 

flood-231214-seithy%20%285%29.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=123212&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.