Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருக்கும் நண்பர்களையும் இழக்க வேண்டாமே......

Featured Replies

ஒஒஒ அது மட்டும் தான் யாழ் களத்தின் பணியா? செல்லிட்டிங்கல..மோகன் அண்ணா இந்த சமயல் பகுதி பொழுது போக்கு நகைச்சுவை போன்ற பகுதிகளை எடுத்து விடுங்க அண்ணா.. :oops: :oops:

சுண்டல்

இங்கு வாசகன் எழுதியதை நீங்கள் முற்றாக புரிந்து கொள்ளாமல் நீங்களும் ஏதேதோ எழுதுகின்றீர்கள்.

தான் எழுதிய விடயத்திலிருந்து இங்கு சிலரால் விடயம் திசை திருப்பப்பட்டு, அதனால் விடயம் திசைமாறி எங்கோ சென்று கொண்டிருக்கின்றுது. அதனையே அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அதனாலேயே "இனிமேல் இப்படியான கருத்துக்கள் என் தலைப்பின் கீழ் வேண்டாம். வேண்டுமானால் புது தலைப்புக்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள்" என்று வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இனிமேலாவது ஒரு கருத்திற்குப் பதிலெழுத முன் எழுதிய கருத்துக்களை முற்றாக வாசித்துப் புரிந்து விட்டு எழுதுங்கள்.

  • Replies 157
  • Views 11.8k
  • Created
  • Last Reply

சுண்டல் பெரிசுகள் எல்லாம் என்னவோ சொல்லினம் அதன்படி நடக்க வேண்டும் சரியோ

:wink: :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ வம்பு அண்ணா அவர் கூறியது இங்கு அதாவது யாழ்களத்தில அமது போராட்ட நியாயங்களை கூறி ஆதரவு திரட்டுவதேயாகும் என்று அவர் இங்கு என்று குறிப்பிட்டது யாழ் களத்தையே அன்றி இந்த தலைப்பை பற்றி கூறவில்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகன் எழுதியது: .....ஆனால் எமது சில இந்திய நண்பர்கள் சிலர் கருத்து எழுதுவதை தவிர்த்து உள்ளார்கள்......

தமிழின், தமிழீழத்தின் நண்பர்கள், ஒரு சில தனிப்பட்ட அரசியல் தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டவர்கள். தமிழீழத்திற்கு உறுதியான மனச்சுத்தியுள்ள நண்பர்களே தேவை! ஈழத்தமிழருக்கு, எல்லைச் சுவரில் குந்திக்கொண்டிருக்கும் மந்திகள் போன்ற ஆதரவாளர்களால் ஆபத்தே! (மதில் மேல் பூனையென்பது பழையது)! தமிழகத்தில் முதலைகண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகளிலும், கட்சி சார்பற்ற பத்திரிகையாளர்களே எமக்கு நண்பர்கள்! இவர்கள் மிகவும் சிலரே!. இக்களத்தில் தென்படும் ஓரிரு இந்திய கள உறுப்பினர்களும் கட்சி சார்புள்ளவர்களே! மாற்றுக் கட்சியினரை தாம் விரும்பியபடி திட்டலாம், ஆனால் தன் கட்சியினர யாரும் குறை கூறக்கூடாது! இப்படியான கருத்துள்ளவர்களால் யாழ்களம் நன்மை பெறாது! சில சில அரசியல் நக்கல்களையும் (Political Satire) ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஒரு "அரசியல் கட்சி ஆதரவாளருக்கு" தேவை என்பது இன்றைய "அரசியல் நாகரீகம்" ஆகிவிட்ட தன்மையில் ஒரு சிலரின் "வெட்டுக் கொத்து"க்குப் பயந்து சினிமா போன்ற மற்றய களப்பிரிவுகளில் ஓடி ஒளிந்து கொள்வது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் இவர்களால் எப்படி தமிழீழத்திற்கு தம் கருத்துக்களால் உதவ முடியும்!

இப்படியான ஆயிரம்பேரைக் கொண்ட கருத்துக்களத்திலும் பார்க்க ஓரிரு ஆக்க பூர்வமான கருத்தாளர்கள் கொண்ட களம் பலரால் பார்வையிடப்படும். அப்படியான ஒரு நிலையிலேயே நானும், என் பல நண்பர்களும் இக்களத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக வாசகர்களாகவே இருந்தோம், இன்னும் இருக்கிறார்கள். சில வசதிக் குறைவாலேயே அநேகர் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கு பெறாமல் ஒரு மேல் கண்ணோட்டமாக சில முக்கிய கருத்துக்கள் என தாங்கள் கருதுவதை தெரிவு செய்து வாசித்து அறிந்து கொள்கிறார்கள். மற்றயவற்றை விட்டுவிடுகிறார்கள். இதை என் பல தமிழக நட்புறவுகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே இங்கே புறமுதுகு காட்டும் "நண்பர்களின்" நட்பு தேவையா?

  • தொடங்கியவர்

ஹலோ வம்பு அண்ணா அவர் கூறியது இங்கு அதாவது யாழ்களத்தில அமது போராட்ட நியாயங்களை கூறி ஆதரவு திரட்டுவதேயாகும் என்று அவர் இங்கு என்று குறிப்பிட்டது யாழ் களத்தையே அன்றி இந்த தலைப்பை பற்றி கூறவில்லை...

வசம்பு அண்ணா புரிந்து கொண்ட மாதிரி தலைப்புற்குட்பட்ட வகையில் வாதங்கள் அமையவேண்டும். வேறு வாதங்களை கருத்துக்களை வைக்க விரும்பினால் அதற்குரிய தலையங்கங்களின் கீழ் அல்லது அதற்கான தலையங்கங்களை உருவாக்கி அதற்கு கீழ் வைக்கவேண்டும் என்பதை சற்று உறுதிப்பட தெரிவிக்க விரும்பிய நான் பிள்ளையார் பிடிக்கப் குரங்கான கதை மாதிரி அதை தவறான வசனங்கள் மூலம் பதிந்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டேன்.

தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சுண்டல் ஜமுனா

நன்றி வசம்பு அண்ணா எதை நான் மனதில் கொண்டு எழுதினேனோ அதைச் சரியாக புரிந்து கொண்டதற்கு.

  • தொடங்கியவர்

அல்லிகா தமிழ்நாட்டை பொறுத்த மட்டில் பெரும்பாலான மக்கள் ஒவ்வொருத்தரும் எதாவது ஒரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களே. அங்குள்ள அரசியல் தலைவர்களும் அவப்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுப்பதும் அதை பெரும்பாலான தொண்டர்கள் ஏற்றுக்கொள்வதும் சதாரணமாக நடப்பதான். தங்கள் தலைவர்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் அதற்கு காரணம். கட்சி சார்பற்றவர்களின் ஆதரவுதான் எமக்கு தேவை என்று சொல்வோமானால் எத்தனை பேர் தேறுவார்கள் என்று எனக்கு தெரியாது. நீங்கள் கூறுவது போல் நிச்சயமாக சில இந்திய நண்பர்கள் இருக்கிறார்கள்.

கட்சிகளுக்கு அப்பால் தமிழர்கள் என்ற நிலையில்தான் எமக்கான ஆதரவை பெருக்கிக் கொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை. மக்கள் ஆதரவு பெருகும் போது கட்சிகளும் அதற்கேற்ப செயல்படும் காலம் உருவாகலாம்.

91 க்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் ஈழமக்களுக்கான ஆதரவு பெருகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. அவர்களின் தலைவர்களை விமர்சிப்பதன் மூலம் நாம் அடையபோகும் பலன் என்ன? தொண்டர்கள் சிலரின் ஆதரவு நிலைப்பாட்டை கெடுப்பதுவாகத்தானே முடியும்.

ஒன்றுமே ஆதரவு இல்லாததற்கு அரைகுறை ஆதரவாவது இருப்பதால் எதுவும் பெரிய தீமை விளைந்து விடுமா???

எனக்கு எப்போதும் தலைவர் ஈழம் அப்புறந்தான் தமிழ்நாடு. அதேமாதிரித்தானே அவர்களுக்கும் தங்கள் தலைவர்கள் தமிழ்நாடு இந்தியா அதற்கு அப்பால்தானே ஈழம்.

உங்களுக்கு இதற்கும் பல விளக்கங்கள் இருக்கலாம். குறிப்பிட்ட விமர்சனங்களால் சில பாதிப்புகள் ஏற்படுமானால் அதை செய்யாதவிடத்து கிடைக்கும் உங்கள் வார்த்தையில் சொன்னால் அரைகுறை ஆதரவையாவது தக்க வைத்துக் கொண்டால் என்ன?

வாசகன் முதலில் பொதுப்படையாக எழுதுவதை நிற்பாடினால் இந்த குழப்பம் வராது என நினைக்கிறேன். நீங்கள் இந்தக் களத்தில் எங்கே யார் எங்கே என்ன சொல்லி இருகிறார்கள் அது ஏன் பிழை என்று மேற்கோள்கள் உதாரங்களுடன் காடினீர்கள் என்றால் இந்தக் குழப்பம் வராது.கீழ்த் தரமான வார்த்தை பிரயோகங்களை மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் வைப்பதை நான் எதிர்கிறேன் ஆனால் அதற்காக நியாயமான விமர்சனக்களை அதுவும் எமது போராட்டத்தைப் பாதிக்கும் விடயங்களை அவை ஒரு அரசியற் தலைவரின் பிழையான செயற்பாட்டை நோக்கி வைப்பதைத் தடுப்பது அவ்வாறான ஒரு பிழையான போக்கை ஆதரிப்பதாக அமையும்.எமது போராட்டத்தை ஆரோக்கியமான வகையில் எவ்வாறு மற்றவர்கள் விமர்சிகிறார்களோ அதே வகையில் அவர்களின் போக்கயும் விமர்சிப்பது பிழைகள் ஏற்படாமலும் பிழைகளை இனங்காணவும் உதவும்.ஆனால் பொதுவாகவே அவசரப்படு ஆராயமால் மேற்போக்காக கருதுக்களை எழுதுவதை எல்லோரும் தவிர்த்தால் பல பிரச்சினகள் ஏற்பட வாய்ப்புக்கள் குறைவாக இருக்கும்.

அல்லிகா நீங்கள் குறிப்பாக எந்தப் பகுதிகளை வாசிபீர்கள் களத்தில் எது பிரயோசனமானதகா இருக்கிறது என்பதையும் எழுதுங்கள், அதன் மூலம் அவ்வாறான எழுதுக்களுக்கு ஊக்கம் அதிகரித்து அவை பரவ வாய்ப்பு ஏற்படும்.வெறுமனே குறைகளைச் சொல்லாமல் நிறைகளை அடயாளம் காண்பதுவும் அவற்றை ஊக்குவிப்பதுவும் களத்தின் வளர்ச்சிக்கு உதவும்.

அரசியலில் எவரையும் விமர்சிக்கலாம் எவரையும் நக்கலாக எழுதலாமென்ற கோட்பாட்டுடன் இங்கே விமர்சனம் செய்வதென்றால் அவ்விமர்சனம் எல்லோருக்கும் பொதுவானதாக அமைய வேண்டும். ஆனால் இங்கு எமது அரசியலையும் மற்றவர்கள் விமர்சிக்கவோ நக்கலாகவோ எழுதினால் உடன் கொதித்தெழுவது ஏனோ?? இங்கே அரசியல் நாகரீகம் என்பதை பொதுவாக வைத்து நாகரீகமாக விமர்சனம் செய்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அதைவிடுத்து ஏதோ அரசியல் சாணக்கியர்கள் போல இன்னொரு நாட்டின் அரசியலை கிண்டல் செய்து அவர்களுக்கு பாடம் புகட்ட முனைந்தால் பாதிப்படைவது எம்மவரே. எமக்குள் ஆயிரம் பிரைச்சினைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களின் பிரைச்சினைகளை சுட்டிக் காட்ட முனைவதில் யாருக்கு என்ன இலாபம். அதனால் அடுத்தவரை விமர்சிப்பதை விட்டுவிட்டு அதற்குரிய தகுதி முதலில் எமக்கு உண்டா என்பதை சிந்திப்பதே உசிதமானது.

வசம்பு,

இங்கே நக்கலாக எழுதலாம் என்று எவரும் கூறவில்லை.கூறாத விடயங்களைக் கூறி பிரிவினையை உண்டு பண்ணும் வேலையை நீங்கள் வெகு நாட்களாக இங்கு நடாத்தி வருகிறீர்கள்.குறிப்பாக தமிழக உறவுகளுடன். நேர்மையான விமர்சனத்தை நேர்மையாகவே இங்கே எதிர் கொண்டுள்ளோம்.ஏளனமான விடயங்களே பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன இரு பக்கத்திலும். நீங்கள் அவற்றைச் சாட்டாக வைத்து விமர்சனக்களே தேவை இல்லை என்று சிண்டு முடிகிறீர்கள்.அதற்குக்காரணம

  • கருத்துக்கள உறவுகள்

வாசகன் அவர்களே!

நீங்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காக தலைப்பமைப்பது வேறு. ஆனால் இந்திய நண்பர்கள் வராததற்கு, ஏதோ பதில் கருத்து எழுதியவர்கள் தான் பொறுப்பு என்ற பாணியில் சாடியது சரியானதா? அவர்களும் நிகராகத் தான் விவாதித்தார்கள். இருக்க, ஏதோ, தானோ என்று ஒரு தரப்பை மட்டும் சாடியது சரியான விடயமல்லவே!

அது கள உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் விடயமும் ஆகாது!

அதைவிடுத்து ஏதோ அரசியல் சாணக்கியர்கள் போல இன்னொரு நாட்டின் அரசியலை கிண்டல் செய்து அவர்களுக்கு பாடம் புகட்ட முனைந்தால் பாதிப்படைவது எம்மவரே. எமக்குள் ஆயிரம் பிரைச்சினைகளை வைத்துக் கொண்டு மற்றவர்களின் பிரைச்சினைகளை சுட்டிக் காட்ட முனைவதில் யாருக்கு என்ன இலாபம். அதனால் அடுத்தவரை விமர்சிப்பதை விட்டுவிட்டு அதற்குரிய தகுதி முதலில் எமக்கு உண்டா என்பதை சிந்திப்பதே உசிதமானது

:lol::lol:
  • தொடங்கியவர்

வாசகன் அவர்களே!

நீங்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காக தலைப்பமைப்பது வேறு. ஆனால் இந்திய நண்பர்கள் வராததற்கு, ஏதோ பதில் கருத்து எழுதியவர்கள் தான் பொறுப்பு என்ற பாணியில் சாடியது சரியானதா? அவர்களும் நிகராகத் தான் விவாதித்தார்கள். இருக்க, ஏதோ, தானோ என்று ஒரு தரப்பை மட்டும் சாடியது சரியான விடயமல்லவே!

அது கள உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் விடயமும் ஆகாது!

விவாதிக்கும் விடயங்கள் பற்றி தீர்க்கமான தெளிவு இல்லாமல் பதில் விவாதமாக கூட இல்லாமல் பதில் தாக்குதலாக நடத்துவது எந்தளவுக்கு உறுப்பினர்களை ஒன்றினைக்கும்????

வாசகன் அது இந்தியச் சகோதரர்கள் மீது மட்டும் அல்ல ஈழச்சக்தோரர்களிடையேயும் நடந்துள்ளது.ஆகவே இங்கே பிரித்துப் பேசுவது பிரிவினைகளையே உண்டாக்கும்.உண்டாக்கி இருக்கிறது.இப்படியான பிரிவினைகளை இங்கே உருவாக்க வேண்டாம்.

தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு திருத்தபடா விட்டால் பிரிவினைகள் நிரந்திரமாகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

விவாதிக்கும் விடயங்கள் பற்றி தீர்க்கமான தெளிவு இல்லாமல் பதில் விவாதமாக கூட இல்லாமல் பதில் தாக்குதலாக நடத்துவது எந்தளவுக்கு உறுப்பினர்களை ஒன்றினைக்கும்????

ஒன்றிணைப்பு என்ற போர்வையில் ஒரு தரப்பைச் சாடிய முறை எவ்வாறு ஒன்றிணைப்பை ஏற்படுத்தும்?

விவாதிக்கும் விடயங்கள் தீர்க்கமா இல்லையா என்பதை அவ் விவாதங்களில் தான் சொல்ல முடியுமே, தவிர இங்கு அல்ல. எனவே, விவாதங்கள் குறித்து சீண்டு முடித்தல் வேண்டாமே!

  • தொடங்கியவர்

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு"

மோகன் அண்ணா இந்த கருத்துகளத்தை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனாலும் எல்லைகள் மதங்கள் போன்ற பலதரப்பட்ட வேற்றுமைகளை கடந்து தமிழ்ஈழம் மீது ஆர்வம் கொண்ட தமிழர்களை தமிழின் மூலம் ஒன்றினைப்பதே காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி முதலில் டென்மார்க்கிலும் பின் வேறுபல நாடுகளிலும் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கேலிசித்திரங்கள் வெளியிடப்பட்டன. அப்படியான கருத்து சுதந்திரத்தை அடிப்படை அளவிலேயே நான் வெறுக்கிறேன். ஜனநாயகத்தை பற்றி ஒரு வசனம் சொல்வார்கள் " உனது கைத்தடியை சுற்றுவது உனது உரிமை+ ஆனால் அது மற்றவரின் மூக்கை தொடாத மட்டிலும்தான்" என்று. இதையே கருத்து சுதந்திரத்துக்கு போட்டு பாருங்கள். எமக்கு சரியாக தெரியாத அல்லது விளங்காத விடயங்களுக்கு கூட நாங்கள் கற்பனை செய்து ஏதோ கருத்து எழுதி விடுகிறோம். அதனால் ஏற்படும் பாதிப்புகள்????

தலைவர் சொன்னதாக எங்கோ ஒரு பேட்டியில் படித்ததாக நினைவு. " இந்தியா எமக்கு தார்மீக ரீதியில் ஆதரவு வழங்கவேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் இந்தியாவை நம்பி எமது விடுதலைப் போராட்டதை ஆரம்பிக்கவில்லை+ எமது விடுதலையை நாமே வென்றெடுப்போம்+ எமது காலத்தில் முடியாமல் போனால் எமது சந்ததி அதை தொடரும்" ஆக எமது போராட்டம் எவரையும் நம்பி தொடங்க படவில்லை.

கருனாநிதி அவர்கள் பற்றி இங்கு பல விவாதங்கள் நடந்தது. அவர் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறிப்பினர்களை சந்திக்க வில்லை என்பது பற்றியது. அவர் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சிக்க பட்டார். எதற்காக??? மறவன்புலவு சச்சிதானத்தின் கட்டுரையின் பின் கூட்டமைப்பினரின் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் எமது சில இந்திய நண்பர்கள் சிலர் கருத்து எழுதுவதை தவிர்த்து உள்ளார்கள். எனது தலைவர் திரு பிரபாகரன் பற்றி எவராவது குறை சொன்னால் நான் பொறுத்து கொள்ள மாட்டேன். அதுமாதிரித்தான் இந்தியர்களுக்கும் தமது தலைவர்களும்.

ஓருமாதிரி உங்கள் கருத்து சுதந்திரத்தால் இந்திய நண்பர்களை விலத்தி போட்டிங்கள் இப்போ புதிசா இலங்கை மததலைவர்களை விமர்சிக்க தொடங்கி இருக்கிங்கள். எங்க கொண்டுபோய் முடிக்க போறிங்களோ???? எமக்கு தேவை நண்பர்கள்.

இங்கு ஒரு நண்பர் தனது கையெழுத்து பகுதியில் எழுதி இருந்தார் " புதிதாக நண்பரை சேர்க்காட்டிக்கு கூட பறவாய்யில்லை இருக்கும் நண்பர்களையாவது காப்பாற்றிக்கொள்" என்ற கருத்து வரும்படீ எழுதி இருந்தார். இங்கு என்ன நடக்குது???

"உள்ளதையும் கெடுத்தான் நொள்ளை கண்ணன்" இப்படித்தான் இங்கு எமது கருத்து சுதந்திரம் பாவிக்க படுகிறது.

எமது ஆதங்களை சரியான சொற்தொடர்கள் மூலம் வெளிக்காட்டினால் பறவாயில்லை. எங்களில் சிலர் அடிமட்ட சொற்களை பாவிக்கின்றோம். அப்படியான சொற்களால் நாம் வெல்லபோவது ஒன்றும் இல்லை

தூயவன்

முழுமையாக படித்துவிட்டு கருத்து சொல்ல முயற்சி செய்யுங்கள்.

எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்ள சிலர் முயற்சிப்பதாலேயே இங்கு பல பிரச்சனைகள் ஆரம்பமாகிறது.

தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டு திருத்தபடா விட்டால் பிரிவினைகள் நிரந்திரமாகி விடும்.

நிச்சயமாக அதனால் தான் பிரிவினைகளை உருவாக்கும் கருதுக்களைச் சுட்டிக் காட்டி உள்ளேன்.தேவயற்ற பிரிவினைகளை உருவாக்கதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வசம்பு அவர்கள் அடுத்தவரை விமர்சிக்க வேண்டாம் என்பதைச் சொல்லுகிறாரே தவிர அதை வைத்து கருத்துக்களை விமர்சிக்க வேண்டாம் என்று எப்படிச் சொல்வது. வசம்புவின் கருத்தை திரிக்கும் வடிவத்தைப் பாருங்கள். இப்படியான திரிவுகளும் சீண்டு முடிதலும் எப்படி கருத்தாளர்களிடையே நட்புறவுச் சூழலை உருவாக்கும். :?: :roll:

  • தொடங்கியவர்

நிச்சயமாக அதனால் தான் பிரிவினைகளை உருவாக்கும் கருதுக்களைச் சுட்டிக் காட்டி உள்ளேன்.தேவயற்ற பிரிவினைகளை உருவாக்கதீர்கள்.

விதையை அழிக்காமல் செடியை மறைக்க சொல்லூறீங்கள் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்

முழுமையாக படித்துவிட்டு கருத்து சொல்ல முயற்சி செய்யுங்கள்.

எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்ள சிலர் முயற்சிப்பதாலேயே இங்கு பல பிரச்சனைகள் ஆரம்பமாகிறது.

நிச்சயமாக. எல்லாம் தெரிந்தவன் போலக் காட்டி, ஒன்றுபடுத்துகின்றேன் என்று தொடங்கி, ஒரு தரப்பைச் சாடுவதாலும் தான் பிரச்சனைகள் உருவாகின்றன.

விதையை அழிக்காமல் செடியை மறைக்க சொல்லூறீங்கள் அண்ணா.

விதை செடி என்று பொதுப்படையாக எழுத்தமாற்றாக எழுதாமல் எதாவது பிரச்சினை இருந்தால் நேரடியாக மேற் கோள்களுடன் எழுதுங்கள்,உங்கள் கருதுக்கள் வீண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன.

  • தொடங்கியவர்

கருனாநிதி கூட்டமைப்பினர் சந்திப்பு பற்றி நடந்த விவாதங்களில் முதலில் கருனாநிதி அவர்கள் விமர்சிக்கப்பட்டது. அந்த சந்திப்பு பற்றி மறவன்புலவு அவர்கள் கட்டுரையில் கூட்டமைப்பினர் செயல்பாடு பற்றி வெளி வந்த விடயங்கள்.

அவசரமான சரியாக அறிந்துகொள்ளும் முன் செய்யப்பட்ட விமர்சனத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பு பற்றியே நான் குறிப்பிட்டிருந்தேன்.

உண்மையில் நீங்கள் என்ன எழுதுகின்றேன் என்ற தெளிவில்லாமல் தான் களத்தில் எழுதுகின்றீர்களா என்ற சந்தேகம் வருகின்றது. இந்திய நண்பர்கள் விலத்துவதற்கும், மறவன்புலவின் கட்டுரைக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கின்றதா?

இந்திய நண்பர்கள் விலத்துவதற்கும் மறவன்புலவின் கட்டுரைக்கும் சம்மந்தம் இருப்பதாக நான் எங்கே எழுதினான்???

தூயவன் உங்களுக்கு ரொம்பத்தான் தெளிவு போங்கள். :lol::lol::lol:

  • தொடங்கியவர்

கருனாநிதி அவர்கள் பற்றி இங்கு பல விவாதங்கள் நடந்தது. அவர் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறிப்பினர்களை சந்திக்க வில்லை என்பது பற்றியது. அவர் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சிக்க பட்டார். எதற்காக??? மறவன்புலவு சச்சிதானத்தின் கட்டுரையின் பின் கூட்டமைப்பினரின் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் எமது சில இந்திய நண்பர்கள் சிலர் கருத்து எழுதுவதை தவிர்த்து உள்ளார்கள். எனது தலைவர் திரு பிரபாகரன் பற்றி எவராவது குறை சொன்னால் நான் பொறுத்து கொள்ள மாட்டேன். அதுமாதிரித்தான் இந்தியர்களுக்கும் தமது தலைவர்களும்.

இதுதான் விதை. லக்கிலுக் வாக்கெடுப்பு நடத்துறாரே அதுதான் செடி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.