Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருக்கும் நண்பர்களையும் இழக்க வேண்டாமே......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதை கூறியது யார்?

nedukkalapoovan எழுதியது:

narathar எழுதியது:

வாசகன் நீர் என்பது எப்படி ஒருமை ஆகும்.உமக்குத் தமிழிலையும் பிரச்சினையா? நீ என்பது தான் ஒருமை, நீர் என்பது அல்ல.மேலும் கருத்துக்கு கருத்து எழுதும் பொய்க் குற்றச்சாடுக்களை எழுதி தப்பிக்காதையும் உமது நோக்கம் இப்போது மிகத்தெளிவாக அடையளம் காட்டப்பட்டுள்ளது.

என்ன களத்திலதான் கருத்திலதான் பம்மாத்து என்றால் தமிழ் இலக்கணத்திலுமா?

நீ நீர் (முன்னிலை ஒருமைகள்)

நீங்கள் (முன்னிலை பன்மை)

இலக்கணத்துக்கே சிபார்சழிப்பவர், மற்றவரை குடையை மடக்க சொல்லுவதும்,பிடிக்க சொல்லுவதும் அழகா? :P :P :P

நாங்கள் குறிப்பிட்டதில் எந்தத் தவறும் இல்லை.

நீ நீர் ( முன்னிலை ஒருமைகள்)

நீங்கள் ( முன்னிலைப் பன்மை)

விக்கிபீடியா கூறுகிறது

நீ நீர் ( முன்னிலை ஒருமைகள்)

நீர் நீங்கள் ( முன்னிலைப் பன்மைகள்)

சிவத்தம்பி கூறுகிறார்

நீ ( முன்னிலை ஒருமை)

நீர் நீங்கள் ( முன்னிலைப் பன்மைகள்- உயர்வுப் பன்மை)

மொத்தத்தில் இதில் எங்கே இலக்கணம் சீரழிகிறது என்பதை தீர்மானிப்பதற்கு முதல் குழப்பமே இல்லாமல் நீங்கள் என்பது மரியாதைக்குரிய பன்மையாக இருக்கிறது என்பதையும் அதுவே மரியாதையாக விளிக்கப் பாவிக்கப்பட வேண்டும் என்பதுமே சொல்லப்பட்டிருக்கிறது.

மல்லுக்கட்டலோ சீரழிவோ சண்டையோ அல்ல. நீங்கள் அநாவசியமாக இந்த விடயத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கு வேறு கற்பனைகள் காரணமாக இருக்கலாம். அதற்கு நாம் தயார் இல்லை. :idea:

  • Replies 157
  • Views 11.8k
  • Created
  • Last Reply

தமிழ் நயம் எல்லாம் பேச - வரல யாரும் , இங்க திரு. நெடுக்கலபோவான் அவர்களே..........

தமிழில - யாரும் நிறைய பேசமுடியுமா?

அது கஸ்டமான மொழி -

தெரியும்.... முடியாது சாதரணமானவர்களால..

நீங்கதான்......... வட்டாரம்... அது இது ..

நீர் - நீங்கள் .....

நிறைய வேறுபாடு இருக்கு எண்டீங்க...

அதை தெளிவு படுதிட்டு - போகலாமே முழுமையா....... :oops:

//நீர் மீதான அதீத கவனமும் நீர் பாவனைக்கு அவர்கள் வழங்க முனையும் அங்கீகாரமும் தான் இங்கு எழுத வேண்டி வந்தது. நீர் என்பது குழப்பகரமான சொல்//

நீர் குழப்பகரமான சொல் இல்லை மோனை.. நீர் தான் சும்மா குழப்புகிறீர்..

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அவர்கள் எழுதியது...

தனிப்பட்டவர்கள் சம்பந்தமான சந்தேகங்களை பொதுக்களத்தில் எழுதித் தான் தீர்க்க வேண்டுமாயின் அப்படித் தோன்றும் எல்லோரது சந்தேகங்களையும் இங்கு எழுதித் தீர்த்துக் கொள்ள முடியுமா?? சிலரின் சந்தேகங்களை தீர்க்க இங்கு எழுதும் போது அவரிடமே இது பற்றி நேரடியாக கேட்டுத் தீர்த்துக் கொள்ளுமாறு நிர்வாகம் கூறி அது சம்பந்தமான கருத்தையும் நீக்கி விடுகின்றார்கள். ஏன் அப்படியாயின் தனிப்பட்டவர்கள் பற்றிய எல்லாச் சந்தேகங்களையும் அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பொதுவாகவே கூறலாமே. இதனாலேயே இங்கு சிலர் தம் மனம் போனபடி தனிநபர் தாக்குதலையும் கற்பனைச் செய்திகளைப் புகுத்துவதிலும் முன்னிற்கின்றார்கள்.

ஆமாம் வசம்பு அப்படி தனிநபரை சாடுவது ஓரு ஆரோக்கியமன கருத்தாடல் ஆகாதுதான்.

திரு.வசம்பு என்பவரை சாடுவதுபிழையானது.

யாழ்கள கருத்தாளன் திரு.வசம்பு என்பவருக்கும் முன்னையவருக்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது ஆனாலும் இருவரும் ஒருவர்தான். அதாவது தமக்கனெ ஒரு பெயரை சமுகத்தில் இருந்து பெற்றால் பின்பு சமுகத்தின் கேள்விகளுக்கு பதில் கூறியாக வேண்டும். அது கடமை அதை நிராகரிக்க முடியாது. அன்றி அதை தனிநபர் சாடல் என்று சாயம் புூசவும் முடியாது. மக்கள் சில துண்டுதல்களால் புலிகளை பார்த்து கேட்கலாம் ஏவுகணை வாங்க காசு அல்லாது விடின் ஏன் போராட தொடங்கினீர்கள் என்று. ஆனால் புலிகள் மக்களை சாடமுடியாது நீங்கள் ஏவகணை வாங்க காசு தரவில்லையென்று. அதாவது சமூக பொறுப்பில் இருப்பன் பல சுமைகளை சுமக்க துணிந்தவனாகவும் இருக்க வேண்டும். சமூகத்தில் முட்டாள்கள் இருப்பதையும் அவனாகத்தான் தவிர்க் வேண்டும். முடிந்தவரையில் சமூகத்தை அறிவுள்ள சமுதாயமாக்க வேண்டும். யாழ்களத்தில் சில கருத்தாடல்கள் எவ்வளவு தரங்கெட்டவையாக இருக்கின்றதே என்று பலமுறை சாடுபவர்கள்...... பிற ஊடகங்களை வானோலிகளை தொலைக்காட்சிகளை பற்றி தாம்பாட்டுக்கே விமர்சிப்பார்கள் இதை நான் பல முறை பார்திருக்கிறேன். ஒருவன் எதுவுமே செய்யாதிருக்கிறான் ஒருவன் முடிந்நத அளவிலாவது முயற்சிசெய்கிறான் என்ற எண்ணம் அவர்களி;டம் இருப்பதில்லை. இப்போது கூட புலம்பெயர்ந்தவர்கள் சரியாக ஊடகதுறையை முன்னேற்றவில்லையாம் என்று ஒரு விவாதம் நல்லா சுட்டுகொண்டிருக்கிறது. இதை உணர்ந்து ஒருவன் செய்ய துணிந்தால் எத்தனை பேர் அவனுக்கு ஆதரவு கொடுப்பார்கள்??? அவன் ஏதாவது எழுதினால் இவர்கள் அவர் நேரில போய் பார்த்தவரோ என்பார்கள்...... ஆகவே கல்எறி வாங்க துணிந்தால் மட்டுமே காய்க்க வேண்டும் என்றுதான் எனக்கு படுகின்றது....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நயம் எல்லாம் பேச - வரல யாரும் , இங்க திரு. நெடுக்கலபோவான் அவர்களே..........

தமிழில - யாரும் நிறைய பேசமுடியுமா?

அது கஸ்டமான மொழி -

தெரியும்.... முடியாது சாதரணமானவர்களால..

நீங்கதான்......... வட்டாரம்... அது இது ..

நீர் - நீங்கள் .....

நிறைய வேறுபாடு இருக்கு எண்டீங்க...

அதை தெளிவு படுதிட்டு - போகலாமே முழுமையா....... :oops:

வட்டார வழக்கு என்பது சமூகக் குழுமங்களிடையே உள்ள பேச்சு மொழியின் அடிப்படையில் எழுகிறது.

யாழ்ப்பாண பேச்சுத் தமிழுக்கும் மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கும் இடையில் உள்ள வேறுபாடு போன்று யாழ்ப்பாணத்துக்கு உள்ளேயும் மொழிப் பாவனையில் அதாவது சொற்பாவனையில் வேறுபாடுண்டு.

யாழ்ப்பாண சமூக அமையில் இடங்களுக்கு ஏற்ப பேச்சு வழக்கு மாறுபடும். சிலர் நீ நான் வா போ என்பதையே அதிகம் பேசுவார்கள் அவர்களுக்கு மரியாதை நிமித்தம் என்பது கிடையாது. அந்த வகையில் நீர் என்பது புகுந்து கொள்கிறது.

நாங்கள் வாழ்ந்த யாழ் நகரை அண்டிய பகுதிகளில் நீ நான் நீர் என்பதெல்லாம் மரியாதைக்குரிய வகையிலன்றி பேச்சுக்குப் பயன்படும். மரியாதைக்கு என்று நீங்கள் நீங்க தான் பயன்படும். நாவலர் தமிழ் இலக்கணத்தை எழுமைப்படுத்திய போது இந்த சொற்கூட்டங்களை வகைப்படுத்தும் போது நீர் என்பதை இலக்கணப்பாகுபாட்டிற்கு உட்படுத்தி நீர் என்பதை ஒருமையில் இட்டுள்ளார். காரணம் வசன அமைப்பில் நீர் வினையோடு பன்மை விகுதி பெறாது என்பதால். நீர் பன்மைக்குப் பாவிக்கப்பட்டு வசனங்கள் எழுதப்படுவதில்லை. நீங்கள் தான் பாவிக்கப்படும்.

சிவத்தம்பி ஐய்யாவின் ஆய்வு தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டது. நாவலரின் எளிமைப்படுத்தல் தொல்காப்பியத்தை மட்டுமன்றி சமூக வழக்கங்களையும் கொண்டு உள்ளது. அந்த வகையில் எளிமையான தமிழ் மொழி இலக்கணமாக நாவலரின் இலக்கண வடிவமே எம்மால் படிக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டது போல நீர் என்பது ஒருமைக்கு என்றும் அமைகிறது.

நீங்கள் மட்டுமே மரியாதைக்குரிய சரியான பன்மை. நீங்க என்பது பேச்சு வழக்குக்குரியது மட்டும். :idea:

  • கருத்துக்கள உறவுகள்

//நீர் மீதான அதீத கவனமும் நீர் பாவனைக்கு அவர்கள் வழங்க முனையும் அங்கீகாரமும் தான் இங்கு எழுத வேண்டி வந்தது. நீர் என்பது குழப்பகரமான சொல்//

நீர் குழப்பகரமான சொல் இல்லை மோனை.. நீர் தான் சும்மா குழப்புகிறீர்..

சரி உங்களைப் பொறுத்தவரை நீர் குழப்பம் இல்லாமல் இருக்கட்டும். எங்களைப் பொறுத்தவரை அது தரக்குறைவான சொல். எம்மை நோக்கி விளிக்கும் போது அப்படி எழுதுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். சரியா! :idea:

சரி உங்களைப் பொறுத்தவரை நீர் குழப்பம் இல்லாமல் இருக்கட்டும். எங்களைப் பொறுத்தவரை அது தரக்குறைவான சொல். எம்மை நோக்கி விளிக்கும் போது அப்படி எழுதுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். சரியா! :idea:

ஹலோ. ஹலோ.. என்ன என்ன் சரியா...சரியா.. என்னை பொறுத்தவரையில் நீர் சரியான. சொல். என்ன .சரியா......, :twisted: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பில் இருந்து கருத்தாடப்படும் விடயங்கள் விலகி செல்வதால் இப்பகுதி மூடப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.