Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திணறும் மகிந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
pol-cartoon4.jpg
 
மகிந்த சிந்தனை 2, 2010 தேர்தலில் வந்திருக்க வேண்டும். வெற்றியில் பெரு நம்பிக்கை கொண்டதால், அது குறித்து அவர் அலட்டிக் கொள்ள வில்லை.
 
இம்முறையும் அது குறித்த கவலை இல்லாமல் தான் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். மைத்திரியின் பிரவேசம் மகிந்த சிந்தனை இரண்டினை அவசரம் அவசரமாக கொண்டு வர வைத்து விட்டது.
 
டிசம்பர் 26 ம் திகதி வெளியிட இருந்த அதனை, தீடீரென, அடடா, தபால் மூல வாக்களிப்பு 23ம் திகதி அல்லவா என்று நினைவுபடுத்த, முதல் நாளே அவசர அவசரமாக பல குளறு படிகளுடன் வெளியிடப் பட்டது.
 
ஆங்கிலத்தில் இல்லாத சிங்களத்தில் மட்டும், சிங்கள வாக்காளரை பயமுறுத்தும் வகையில், 'அங்கே உலகம் முழுவதும், உறுமியபடி, தகுந்த தருணம் வரும் வரை, தமது இரையினை கவ்வ புலிப் பயங்கரவாதிகள் இன்னமும் இருகின்றார்கள். ஒரு வித்தியாசம் அவர்கள் கையில் ஆயுதம் இல்லை. ஆனால் நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை இந்த நாடு பாதுகாப்பாக இருக்கும். அவர்கள் எண்ணம் ஈடு ஏறாது'  என்று சொல்கின்றார்.
 
அவரது பிரச்னை என்னெவெனில், யுத்தத்தினை முடித்த இவரது அரசின் முக்கிய உறுப்பினர் மைத்திரி. மே 17 அன்று மகிந்தர், ஜோர்டனில் இருந்த போது, மைத்திரியே, பதில் பாதுகாப்பு அமைச்சர். ஆகவே யுத்தத்தினை முடித்த தனது அரசின் பெரும் நாட்டுக்கான  'கடமையில்' அவரும் அல்லவா பங்கு கேட்கிறார். - அட போங்கப்பா.
 
ரணில் மட்டும் எதிர்த்து நின்றால் இந்த தேசிய கடமையை சொல்லியே, 'புலித்தோழர்' ரணிலை மண் கவ்வ வைத்திருக்க முடியும் இலகுவாய்... இப்ப என்ன செய்வது?
 
கிளம்பி அடுத்த பக்கம் போக விரும்பிய கூட்டத்தினை காசை கொடுத்து மடக்க, அவர்களோ காசையும் வாங்கிப் போட்டு உள்ள இருந்தே கழுத்தறுப்பு வேலை பார்கிறார்கள். விமல் வீரவன்ச அனுப்பிய குண்டர்கள் கூட்டம் UNP தலைமை அகம் முன் நடாத்திய அராஜகம், அதனைப் பொலிசார் தடுக்காமல் சும்மா பார்த்துக் கொண்டிருந்ததும், , மகிந்தவின் எதிரணி சொல்லும் 'இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை' என்பதை உறுதி செய்கிறது..அவனவன் வீடியோ எடுத்து youtube மூலம் மானத்தினை வாங்கி விட்டார்கள்.
 
தான்தான் சூத்திரதாரி என தெரிய வந்ததால், அவர்கள், UNP யின் ஜனநாயக விரோத செயல் பாடுகள் குறித்து அமைதியாக, ஆட்சேபம்  தெரிவிக்க போனவர்கள் என்கிறார், வீரவன்ச.
 
போதாகுறைக்கு ஒரு அடிபாட்டுக் கோஸ்டி பிரதி அமைச்சர், நீதிமன்ற பிடியாணை இருக்கையில் டிமிக்கி கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இவர் வெளியேறுவதை பார்த்த ஒருவர் அவசர போலீஸ் இலக்கத்துக்கு போன் செய்து, இவர் தப்பி ஓடுவது குறித்து சொல்லியும் ஒரு நடவடிக்கையும் விமான நிலையத்தில் எடுக்கவில்லை. மிகப் பாரிய damage உண்டான பின், அவரை உடனடியாக நாடு திரும்ப உத்தரவு damage control ஆக போக, வந்து இறங்கியதும் கைதானார்.-  இது போதாதா எதிரணிக்கு, நோகாம நொங்கு தின்ன.
 
அம்பாந்தோட்டை மேஜர் அடித்த அட்டகாசத்தில், கைதாகி நீதி மன்ற பிணையில் வெளியில் இருக்கின்றார். மகிந்தரின் சொந்த மாவட்டத்தில் அவருக்கு நிகழ்ந்த நெகடிவ் விளம்பரம்.
 
திஸ்ஸ அத்தநாயக்க என்ற ஒருவர் UNP ல் இருந்து பாய்ந்து வந்து, வாங்கிய பணத்துக்காக, மைத்திரி, ரணில் ஒப்பந்தம் என்று ஏதோ ஒன்றைக் காட்டி சீன் போட, அது போலி என்று அவர்கள் போலிசுக்கு போக, இது வேறையா என்று மகிந்தர் தலையில் அடித்துக் கொள்ளாக் குறையில் இருக்கிறார்.
 
உண்மையில் மகிந்தர் தனது நம்பகத் தன்மையை (credibility) முழுவதுமாக உள்ளும், புறமுமாக இழந்து விட்டார். சீனா கூட இவர் மீது நம்பிக்கை வைப்பது பாது காப்பானதோ என சிந்திக்கும் அளவுக்கு இவர் கொடுத்த வாக்குகள் எதனையும். பகிரங்கமாகவே நிறைவேற்றுவதில்லை, அது குறித்த கவலை படுவதோ, அல்லது காரணத்தினை நியாயப் படுத்துவதோ இல்லை.
 
காசுக்கு வந்த அடிபாட்டுக் கோஸ்டிகள், அடுத்த பக்கம் காசு காட்டினால் ஓடிப் போய் விடும். உதாரணம்: ரிசார்ட் பதியுதீன் எனும் அடாவடி அரசியல் வாதி. இன்னுமொருவர், மேர்வின்: மகனின் வழக்கு பிரச்சனையால் பாயாமல் இருக்கிறார், தற்சமயம்.
 
இதுவே இவரது மிகப் பெரிய பலவீனம்.
 
சிங்கள பெளத்த வாக்குகளை நம்பி அவர்களை திருப்திப் படுத்தினால் போதும் 50% மேல் சுளையாக அள்ளலாம் என கணக்குப் போட்டு, பொது பல சேனவை உருவாக்கி, முஸ்லிம் உடமைகளை அழித்து, பர்மாவில் இருந்து கொலைகார பிக்கரையும் வரவழைத்து மகாநாடும் வைத்து,  கடைசியில் அவர்களிடம் 'போகாதே, நில்' என்று கெஞ்சும் நிலை.
 
மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்காமல், சந்திரஸ்ரீயினை மாத்துவதாக சொல்லி பிறகு 'பேய்க்காட்டிய' மகிந்தர் TNA என்ன நிலைப்பாடு எடுத்தாலும், யாழ் தேவி KKS போனால் தமிழர் வாக்கு எனக்கே என்ற ஒரு குருட்டு நம்பிக்கை, அதனால் அந்த நம்பிக்கையுடன் டக்லஸ் கையினை பிடித்தபடி வடக்கு வருகின்றார் ஜனவரி 2ம் திகதி.
 
உயிரை கையில் பிடித்தபடி, கிலாலியூடாக பயணம் செய்தவர்கள் சொல்வார்கள், யாழ் தேவி ஒரு பொருட்டு அல்ல, ஆயினும் அது  இந்திய (அரசின்) மக்களின் கொடை, மகிந்தர் வீட்டு பணம் அல்ல. மேலும் இலவச சேவையும் அல்ல அது.
 
ஆயுதப் படைகளில் உள்ளோருக்கு, அவர் தம்  குடும்பங்களுக்கு தபாலில் அனுப்ப,மகிந்தருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், அவர்களது அயலவர்களையும் அவருக்கே வாக்களிக்க கோர வேண்டும் என்று சொல்லும் பல கோடி செலவில் அச்சடிக்கப் பட்டு வழக்கப் பட்ட புத்தகமும், அரச சேவை என்ற முத்திரை அடிக்கப் பட்ட உறையும், தேர்தல் ஆணையாளரின் உத்தரவின் பேரில், தபால் மா அதிபரினால் விநியோகத்துக்கு தடை விதிக்கப் பட்டு உள்ளது.
 
அரச வாகனங்களை அரசியல் கட்சிக்கு வாடைக்கு விடுவோர் அதற்கான பணம் வாங்கிய ரசீது காட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டு உள்ளார், தேர்தல் ஆணையாளர்.
 
கிழக்கே கருணா, வடக்கே டக்லஸ், மகிந்தருக்கு எதிரலை முழுமையாக வீசும் பகுதிகளில் வாக்காளரை  பயமுறுத்தி, வாக்குச் சாவடிக்கு செல்வதை தடுக்கலாம் என சொல்லப் பட்டதும், தேர்தல் எங்காவது தடுக்கப் பட்டால் முழுத் தேர்தலும் ரத்து செய்யப் படும் என அறிவித்ததுடன், இம்முறை, முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பு, அரச தகவல் நிலையத்திடம் இருந்து தேர்தல் திணைக்களமே பொறுப்பு எடுப்பதாக அறிவித்து உள்ளார்.
 
இதில் என்ன விசயம் எண்டால், மகிந்தருடன் கூட நின்று தேர்தல் கள்ள விளையாட்டுகளில் கை தேர்ந்த கோஸ்டிகள் எல்லாம் அந்தப் பக்கம். அதில் முக்கியமானவரே மைத்திரி தானே.
 
ஆக, அண்ண தம்பி மாருக்கு உள்ள ஒரே வழி, ஆயதப் படைகளை சந்தோசமாக வைத்திருக்கும் தம்பி கோத்தா தான். ஆனால் தம்பி, அவ்வளவு ரிஸ்க் எடுப்பார் எனில், தான் ஏன், நாட்டின் தலைமைப் பதவிக்கு வரக் கூடாது என சிந்தித்தால் , மகிந்தருக்கு மிஞ்சுவது பட்டை நாமம் தான். அதே வேளை மகிந்தரிலும் பார்க்க, தனது மூர்க்கத்தனத்தினால் உள்நாட்டிலும், சர்வ தேச ரீதியிலும் பெரும் எதிரிகளை உருவாக்கி வைத்துள்ளார் கோத்தா.
 
ஜனநாயக வழிமுறைக்கு வெளியே உள்ள ஆபத்தான வழிமுறையினை நாடும் அளவுக்கு இளமையானவர் அல்ல, 70 வயதை நெருங்கும் மகிந்தர். மறு புறத்தே, ஆனானப் பட்ட ரசிய வல்லரசையே, பொருளாதார தடைகள் மூலம் ஆட்டம் காண வைத்திருக்கும் அமெரிக்க தலைமையிலான மேற்குலகு, சீன சார்பு இலங்கை தவறான வழியில் சென்றால், தடுக்க பெரும் சிரமம் எடுக்கப் போவதில்லை.  இந்த, மேற்குலகு சம்பத்தப் பட்ட மெல்லிய நூலிலையில் தான் எமக்கான தீர்வுக்கான விதையும் உள்ளது.
 
ஜனவரி 9ல் விடை தெரியும். பார்க்கலாம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.