Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு ஆதரவு திரட்டும் மோடியின் ஆலோசகருக்கு 100 மில்லியன் ரூபா கட்டணம்

Featured Replies

மகிந்தவுக்கு ஆதரவு திரட்டும் மோடியின் ஆலோசகருக்கு 100 மில்லியன் ரூபா கட்டணம் DEC 29, 2014 | 3:51by கார்வண்ணன்in செய்திகள்

Arvind-Gupta-300x200.jpgசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திப் பரப்புரை மேற்கொள்வதற்காக, வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் அரவிந்த் குப்தாவுக்கு 100 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைத்தளப் பரப்புரைகளுக்குப் பொறுப்பாக இருந்தவருமான அரவிந்த் குப்தா, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உதவுவதாக, தி ஹிந்து நாளிதழ் கடந்தவாரம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில், சிறிலங்கா அதிபருக்கு ஆதரவான பரப்புரையின் ஒருகட்டமாக சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க, அரவிந்த் குப்தாவை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவான குழுவொன்று வாடகைக்கு அமர்த்தியுள்ளதாகவும், அவருக்கு 100 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த நொவம்பர் மாதம் 21ம் நாள், தமது நான்கு சகபாடிகளுடன் கொழும்பு வந்த அரவிந்த் குப்தா, சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவற்றுள் சிறிலங்கா தொழலத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபையினால் தடைசெய்யப்பட்டுள்ள ஊடகங்களும் அடங்கியுள்ளன.

ராஜபக்சவினால், பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது உண்மையா என்று அரவிந்த் குப்தாவிடம் ஊடகம் ஒன்று எழுப்பியதற்கு, தான் சுதந்திரமானவர் என்றும், எவருக்காகவும் தன்னால் பணியாற்ற முடியும் என்றும் ஒரே வரியில் பதிலளித்துள்ளார்.

அதேவேளை, அரவிந்த் குப்தா தலைமையிலான குழு அலரி மாளிகையில் இருந்து இயங்குவதாக சில வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேறு சில தரப்புகள், இந்தக் குழுவினருக்கு சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபையில் தனியான இடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

இந்தக் குழுவினர், சிறிலங்கா அதிபர் செயலக உள்ளூர் ஊடக அதிகாரிகளுக்கு உதவி வருவதாகவும், அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://www.puthinappalakai.net/2014/12/29/news/2210

எனினும், இந்த செயற்பாடு குறித்து தாம் அறியவில்லை என்று தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு அதிகாரசபை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து இந்தியா மைத்திரியை முன்னுக்கு கொண்டுவர விரும்புகிறது என்பது தெரிகிறது.

சிங்களவனுக்கு இரண்டு பூச்சாண்டிகளை காட்டி அரசியல் செய்யலாம். ஒன்று இந்தியா.. இரண்டாவது தமிழர்..

மோடியின் ஆலோசகர் உதவி; சல்மான்கான் வருகை போன்ற செய்திகள் கிராமப்புற சிங்களவருக்கு பயத்தையே உண்டுபண்ணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.