Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – மைத்திரிபால சிறிசேன - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – மைத்திரிபால சிறிசேன - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:-
04 ஜனவரி 2015
Flash%20news1_CI.jpg

கடுமையான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பக்கமுன பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கும் பாரியளவில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எமது பிணங்களின் மீதேறி வன்முறைகள் மூலம் தேர்தலை வெற்றிகொள்ள மஹிந்த ராஜபக்ஸ முயற்சிக்கின்றார் என்றால் அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களை படுகொலை செய்து ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முயற்சித்தால் அது, வரலாற்றில் இடம்பிடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் இராணுவத்தளபதியை கொலை செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றியீட்டினார் என வரலாற்றில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 8ம் திகதி வரையில் கடுமையான உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளர், காவல்துறை மா அதிபர் ஆகியோரிடம் இதுவா ஜனநாயகம் என தாம் கேள்வி எழுப்பியதாகத் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களின் போது விசேட அதிரடிப்படையினரும் காவல்துறையினரும் நிர்க்கதியான நிலையில் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115144/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு மரணபயம். மற்றவருக்கு தோ்தல்பயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு மரணபயம். மற்றவருக்கு தோ்தல்பயம்.

 

அரசியல்ல.... இதெல்லாம், சகஜமப்பா...... :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்திருந்தால் அவர்கள் சார்பில் ஒரு குண்டை வெடிக்க வைத்திருப்பார்கள்..! :D

 நாட்டில் அமைதி வேணும் நாட்டின் சகல பிரஜைகளின் பாதுகாப்பு உறுதிப்படுதப்படவேண்டும்.அதைவிட சீனக்கம்யூனிசத்தைச் சார்ந்த எமது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தாரக மந்திரமான தனிமனித சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும்.இவையாவும் இல்லையேல் எதற்கு ராணுவம்?தளபதியாரே உங்களிடம் இன்று முதல் இன் நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கின்றேன்.மைத்திரியாரின் மரண பயத்தை நீக்கிவிடுங்கள்.இது சாத்தியமா? :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.