Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலட்சிய உறுதி மிக்க எங்கள் மீது பூசப்படும் அவதூதுறுப் பரப்புரைகளைக் கண்டிக்கின்றோம்! மறுக்கின்றோம்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Featured Replies

கடந்த 2ம் திகதி இணையத்தளமொன்றில் எமது கட்சி ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவுக்கு ஆதரவாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட போகின்றது என்றும் அதற்காக இராஜபக்சவிடமிருந்து பெருந்தொகைப் பணத்தினைப் பெற்றிருப்பதாகவும் அவதூறான செய்தி ஒன்றினை திட்டமிட்டுப் பரப்பியிருக்கின்றது.

இச்செய்தியினை எமது கட்சி வன்மையாக மறுப்பதுடன் இது போன்ற மக்களைக் குழப்புகின்ற செய்திகளை வெளியிடுகின்றமைக்கு நாம் எமது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாம் இத் தேர்தல் தொடர்பில் எமது நிலைப்பாட்டினைத் தெளிவாக ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தோம். ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வென்றும், தமிழ் மக்களிற்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகள், போர்க் குற்றங்கள் என்பவற்றிற் கெதிராக விசாரணை எதுவும் நடாத்தப் போவதில்லை என்றும் கூறி பௌத்த சிங்களப் பேரினவாதத் தளத்தின் உச்சாணியில் இருந்து இத் தேர்தலை எதிர் கொள்ளும் இரு வேட்பாளர்களையும் ஆதரிக்கப்போவதில்லை என்ற எமது உறுதியான நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் இல்லை.
மகிந்த அரசின் அட்டூழியங்கள் மற்றும் இன அழிப்புச் செயற்பாடுகளுகளிற்கெதிராக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் உறுதியுடன் போராடும் ஒரே அரசியற் கட்சி நாம் மட்டுமே. எமது கட்சி இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் விசாரணைகளிற்கு தாயகத்திலுள்ள மக்கள் சாட்சியங்கள் வழங்குவதற்கு ஊக்குவித்து, சாட்சியங்களை நேரடியாக திரட்டி அனுப்பியதுடன், நாம் நேரடிச் சாட்சியங்களையும் வழங்கியிருந்தோம் என்பது மக்கள் அனைவரும் அறிந்ததே. எமது இலட்சிய உறுதிமிக்க மக்கள் நலன் சார்ந்த இத்தகைய செயற்பாடுகளை குழப்பும் தீய நோக்கம் கொண்ட அரச இயந்திரத்துடன் சேர்ந்து இயங்கும் ஊடகமே இத்தகைய பொய்யான செய்திகளை பரப்பிவருகின்றது.

நாம் அறிந்த வகையில் இச் செய்தியைப் பரப்பிய இணையத்தளம் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சொந்த சகோதரனினால் வெளிநாட்டில் இருந்து நடாத்தப்படும் இணையத்தளமாகும். இந்த இணையத்தளம் கடந்த காலங்களிலும் எமக்கெதிரான அவதூறுகளைப் பரப்பியிருந்தது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் எமது நியாயமான கருத்துக்களை கருத்துக்ளால் வெல்ல முடியாதவர்களால் இத்தகைய மக்களைக் குழப்பிவிடும் பொய்யான பரப்புரைகள் திட்டமிட்டுப் பரப்பப்படும் என்பதால் இத்தகைய போலிச் செயதிகளை மக்கள் நம்ப வேண்டாம் என நாம் தாழ்மையாகத் கோருகின்றோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்                
தலைவர்

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

 

http://www.pathivu.com/news/36648/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நாம் அறிந்த வகையில் இச் செய்தியைப் பரப்பிய இணையத்தளம் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சொந்த சகோதரனினால் வெளிநாட்டில் இருந்து நடாத்தப்படும் இணையத்தளமாகும். இந்த இணையத்தளம் கடந்த காலங்களிலும் எமக்கெதிரான அவதூறுகளைப் பரப்பியிருந்தது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் எமது நியாயமான கருத்துக்களை கருத்துக்ளால் வெல்ல முடியாதவர்களால் இத்தகைய மக்களைக் குழப்பிவிடும் பொய்யான பரப்புரைகள் திட்டமிட்டுப் பரப்பப்படும் என்பதால் இத்தகைய போலிச் செயதிகளை மக்கள் நம்ப வேண்டாம் என நாம் தாழ்மையாகத் கோருகின்றோம்.

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்                

தலைவர்

செ.கஜேந்திரன்

பொதுச் செயலாளர்

 

 

உந்தக் கறுப்பாடும் கூட்டமைப்புக்குள் தான் பதுங்கி இருக்கோ. இவர்களை மக்கள் முன் அடையாளப்படுத்த வேண்டும். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரனின் சகோதரர் சிறீகுகனால் நடத்தப்படும் தமிழ்வின் இணையத்தளம் அண்மைக்காலமாக ஆதாரம் அற்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

சிறீதரன் கூட்டமைப்புக்குள் தனக்கு விரும்பாதவர்கள் தொடர்பான செய்தியினைக் கூட தமிழ்வின் ஊடாக வெளிவரச் செய்து பின்னர் அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றார். அதாவது, பிளாக்மெய்ல் வேலைகளை செய்தும் வருகின்றார்.

இவ்வாறான செயற்பாடுகளை தனது சகோதரரின் ஊடகத்தினை பாவித்து தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஏதோ ஒரு விதத்தில் சிறீதரனுக்கு பயந்து இருப்பதாக யாழ். ஊடகவியாளர்கள் தெரிவித்தனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது வாக்கு வங்கிக்கு சேதாரம் விளைவிக்கக் கூடிய பிற உறுப்பினர்களை கழுத்தறுக்கின்ற வேலையினை தற்போது இருந்தே மேற்கொண்டு வருகின்றார். முன்னதாக ஆனந்தசங்கரிக்கு எதிரான வேலையினை இவரே மேற்கொண்டு இருந்தார். (ஆனந்தசங்கரி சரியானவரோ பிழையானவரோ என்பதற்கு அப்பால் கூட்டமைப்பால் நியமிக்கப்பட்ட வேட்பாளர் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்)

கூட்டமைப்பிடம் தலையினை வைத்துக் கொண்டு வாலினை மகிந்தவிடம் வைத்து இருக்கின்றார். அவர் தன்னை இன்னொரு சுமந்திரனாக உள்ளுரில் வெளிக்காட்டி வருகின்றார்.

கிளிநொச்சியில் தனது செல்வாக்குக்கு குந்தமாக இருக்கக்கூடிய கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிரான செய்தியினையும் நேற்று முன்நாள் தனது சகோதரரின் இணையத்தில் வெளிவரச் செய்தும் இருந்தார்.

அதாவது, நாட்டை விட்டு ஓடிவிட்டார் என்று.

மூன்று இல்லங்களில் 300 பிள்ளைகளை வைத்து பராமரிக்கும் ஒருவர் தானாகவே தப்பியோட முற்பட மாட்டார். அரசாங்கம் வெளியேற்றினாலே தவிர. ஆகவே, எந்தவொரு விடயத்தினை வெளியிடுவதற்கு முன்னர் புறச்சூழ்நிலைகளை ஆராய்ந்து செய்தி வெளியிட வேண்டும்.

தமிழ் ஊடகங்கள் (இணையத்தளங்கள்) எதுவும் தற்போது பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்து கொள்வதாக இல்லை. இது கவலைக்குரிய விடயமும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரன் மீது அவதூறு பேச தமிழ்வின்னை அண்ணன் நொச்சி பாவிச்சுக்கிறார். இவர் என்ன கேபியின் பினாமியாக செயற்படுபவரா. ஊரைப் பார்த்து புலிப் பினாமி எனும்.. இவரின் செயற்பாடுகள்.. கே பி பினாமி போல உள்ளனவே. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

லெட்டர் பேட் கட்சிக்கு அறிக்கை ஒரு கேடு.

முதல்ல போய் ஒரு உள்ளூராட்சி சபையை வெல்லுங்கள் - பிறகு கதைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.