Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் வாதாட அனுமதி கேட்ட சு.சுவாமி, எதிர்ப்பு தெரிவித்த ஜெ. தரப்பு! ஹைகோர்ட் நாளை முடிவு

 

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வாதிட்டார். இதற்கு ஜெயலலிதா தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முடிவை நாளை அறிவிப்பதாக கூறினார் நீதிபதி குமாரசாமி. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருட சிறையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நிலையில், வழக்கின் மேல் முறையீடு தற்போது ஹைகோர்ட் சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன்னிலையில், நடந்து வருகிறது.

 

 

ஜெ. வழக்கில் வாதாட அனுமதி கேட்ட சு.சுவாமி, எதிர்ப்பு தெரிவித்த ஜெ. தரப்பு! ஹைகோர்ட் நாளை முடிவு இதனிடையே, வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு வாதிட அனுமதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி ஒரு மனு தாக்கல் செய்தார். இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, "நான்தான் இந்த வழக்கின் முதல் புகார்தாரர். எனவே எனக்கு வாதிட அனுமதி தர வேண்டும். உச்ச நீதிமன்றமும், என்னை வாதிட அனுமதித்துள்ளது" என்றார். ஆனால், இதற்கு ஜெயலலிதா தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் அப்படியெல்லாம் உத்தரவிடவில்லை என்றும், ஏற்கனவே சென்னை நீதிமன்றம், இவருக்கு வாய்ப்பு மறுத்துள்ளது என்றும் வாதிட்டார்.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமாரசாமி, சுப்பிரமணியன் சுவாமியை பார்த்து, 'உங்களை வாதிட அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை காண்பியுங்கள்' என்று கேட்டார். ஆனால், சு.சுவாமியோ, உத்தரவு எழுத்துப்பூர்வமாக தரப்படவில்லை. வாய்மொழியாக கூறப்பட்டதுதான் என்றார். வாய்மொழியாக கூறுவது எப்படி வழக்கிற்கு பொருந்தும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி குமாரசாமி, இதுதொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-case-fate-swamy-s-petition-will-dicide-on-tomorrow-220307.html

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சூடுபிடித்தது ஜெ., அப்பீல் வழக்கு விசாரணை: சுப்ரமணியசாமி, அன்பழகனை வழக்கில் சேர்க்க கடும் ஆட்சேபம்

 

 

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், மூன்றாவது பார்ட்டியாக, பா.ஜ., பிரமுகர் சுப்ரமணியசாமி, தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் சேர்க்கப்படுவார்களா என்பது இன்று தெரியும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று, 21வது நாளாக நடந்தது. காலை, 10.30 மணிக்கு, நீதிபதி குமாரசாமி, தனது இருக்கையில் வந்தமர்ந்தார். அப்போது, பா.ஜ., பிரமுகர், சுப்ரமணியசாமி எழுந்து, "இவ்வழக்கில், என்னையும், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று, மனு செய்துள்ளேன். எனது வாதத்தை, உங்கள் முன்பு வைக்கிறேன்,” என்றார்.

 

 

நீதிபதி: உங்கள் வாதத்தை துவக்கலாம்.

சுப்ரமணியசாமி: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை, தமிழக முதல்வராக பதவி வகித்தார். அப்போது, தனது பதவியை பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்த விவரம் எனக்கு தெரியவந்தது. இது குறித்து, விசாரித்து, ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நான், மத்திய அமைச்சராகவும், எம்.பி.,யாகவும். ஜனதா கட்சி தலைவராகவும் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால், இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், வழக்கின் போக்கை, உற்று கவனித்து வந்தேன். இவ்வழக்கில், என்னை, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்து, எனது வாதத்தை கேட்க வேண்டும். வழக்கை தொடர்ந்தவன் என்ற முறையில், நான் வாதிட உரிமை உள்ளது. எனக்கு தெரிந்த விவரங்களை சொல்ல, என்னை அனுமதிக்க வேண்டும். பொது சேவையாக எண்ணி, வாதிட வந்துள்ளேன். முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வர் அந்துலே வழக்கில், அவர் மீது, ஊழல் புகார் கொடுத்தவரை, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு, வாதிட, நீதிமன்றம் அனுமதிளித்தது போல், எனக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

 

நீதிபதி: வழக்கு துவங்கி, 20 ஆண்டுகளுக்கு பின், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்கிறீர்கள். இவ்வளவு நாள், ஆர்வம் காட்டாதது ஏன்?


சுப்ரமணியசாமி: அரசியல் பணியில் ஈடுபட்டிருந்ததால், அவகாசம் கிடைக்கவில்லை.

ஜெ., வக்கீல் குமார்: சுப்ரமணியசாமி வழக்கு தொடர்ந்தவுடன், விசாரித்து நீதிமன்றத்தில், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, மெட்ராஸ் உயர் நீதிமன்றம், அப்போதைய போலீஸ் ஐ.ஜி., லத்திகா சரணுக்கு உத்தரவிட்டது. இவ்வழக்கை விசாரித்து கொண்டிருக்கும்போதே, ஐ.ஜி.பி., பெருமாள், வழக்கை விசாரணைக்கு எடுத்து, அவசரமாக எஃப்.ஐ.ஆர்., போட்டார். இவ்வழக்கில், ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சுப்ரமணியசாமிக்கு, எந்த தொடர்பும் இல்லை. அந்துலே வழக்கில், புகார் கொடுத்த நபர், ஆதாரங்களை, போலீசிடம் கொடுத்து, எஃப்.ஐ.ஆர்., போட வைத்தார். இதனால், அந்த நபர், மூன்றாவது பார்ட்டியாக சேர்க்கப்பட்டார். ஆனால், இவ்வழக்கில், போலீஸிடமோ, நீதிமன்றத்திலோ சுப்ரமணியசாமி, எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. ஜெயலலிதா மீது சந்தேகத்தின் பேரில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இதேபோன்று, 1997ல், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில், வழக்கில் தன்னையும் மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று, சுப்ரமணியசாமி மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி ராமன், அவரிடம், 'நீங்களும், அரசு வக்கீலும் வாதிடும் போது, வெவ்வேறு கருத்தை தெரிவித்தால், எதை எடுத்துக் கொள்ள முடியும்' என்று கூறி, சாமி மனுவை, தள்ளுபடி செய்தார். இவ்வழக்கில், அரசு வக்கீல், தனது கடமையை, செய்து வருகிறார். எனவே, மூன்றாவது பார்ட்டியாக சேர்த்து வாதிட அனுமதிக்க கூடாது. எந்த வழக்கிலும் அனுமதித்ததில்லை.


நீதிபதி: (அரசு வக்கீல் பவானி சிங்கை பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

அரசு வக்கீல்: எனக்கு, யாருடைய உதவியும் தேவையில்லை. வழக்கின் முழு விவரங்களும், தெரியும். சுப்ரமணியசாமிக்கு, எழுத்து பூர்வமான வாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதித்தால், எனக்கு ஆட்சேபனையில்லை.


நீதிபதி: தீர்ப்பை, நாளை (இன்று) அறிவிக்கிறேன். இதையடுத்து, தி.மு.க., பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த, மூன்றாவது பார்ட்டியாக, வழக்கில் சேர்த்து கொண்டு, தன் வாதங்களை கூற அனுமதிக்க வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை துவக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.

அன்பழகன் வக்கீல் சரவணன்: இவ்விசாரணையை வரும், 9 ம் தேதி, தள்ளி வைக்க வேண்டும்.


நீதிபதி: (சரவணனிடம்) தற்போது வாதிடுவதில் என்ன தயக்கம்.

அன்பழகன் வக்கீல்: எங்களின் சீனியர் நாகேஷ், வேறு நீதிமன்றத்தில் உள்ளார்.


நீதிபதி: இதுவும் நீதிமன்றம்தான். உங்கள் சீனீயர் இல்லாவிட்டால், நீங்களே வாதிடலாம்.

சசிகலா வக்கீல் மணிசங்கர்: இவ்வழக்கில், அவர்கள் அரசியலை நுழைக்கின்றனர்.


அன்பழகன் வக்கீல்: இதில், நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள். நீதிமன்றத்தில், எனது கருத்தை சொல்லும்போது, நீங்கள் அனாவசியமாக தலையிட வேண்டாம்.

சசிகலா வக்கீல்: உங்கள் தலையீடும் தேவையில்லாததுதான். இதில், நீங்கள் அரசியல் செய்கிறீர்கள்.


நீதிபதி (சரவணனிடம்): உங்கள் வாதங்களை, மதியம், 2.30 மணிக்கு துவக்க வேண்டும். நாளைக்குள் (இன்று), இந்த மனு இரண்டையும் முடித்து விட வேண்டும். வழக்கை இழுத்தடிக்கக் கூடாது

மதியம் இடை வேளைக்கு பின்னர், 2.30 மணிக்கு, நீதிமன்றம் மீண்டும் கூடியது.


நீதிபதி: (அன்பழகன் வக்கீலை பார்த்து) உங்கள் வாதத்தை துவக்கலாம்.

அன்பழகன் வக்கீல்: இந்த வழக்கு, இங்கு நடக்க காரணமாக இருந்தவரே, அன்பழகன்தான்.


நீதிபதி: அவர், அரசியல் தலைவர் அல்லவா?

அன்பழகன் வக்கீல்: ஆம். இவ்வழக்கில், எங்களுக்கு தெரிந்த விபரங்களை சொல்ல, அனுமதிக்க வேண்டும். வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே, எங்கள் நோக்கம். இதில் அரசியலை நுழைப்பதாக கூறுவது தவறு. 2004ல், தமிழகத்தில் இவ்வழக்கு நடந்து கொண்டிருந்தது.


அப்போது, அ.தி.மு.க., ஆட்சி நடந்ததால், அவர்கள் ஆட்சியில், சரியான தீர்ப்பு கிடைக்காது என்று கருதி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றி உத்தரவிட்டது.

முந்தைய சிறப்பு நீதிமன்றத்திலும், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டிய போது, எங்களின் எழுத்து பூர்வமான வாதத்தை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். இதேபோன்று, தற்போதும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


ஜெ., வக்கீல்: இவ்வழக்கில், அரசு வக்கீலாக பவானி சிங் பணியாற்றி வருகிறார். அவர் இருக்கும்போது, மூன்றாவது நபர் வாதிடுவது ஏற்கதக்கதல்ல.

ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், அரசியல் லாபம் பெற முயற்சிப்பதற்கு, நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.


பவானி சிங்: இந்த மனு மீது, நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தாலும், அதை ஏற்றுக் கொள்கிறேன்.

நீதிபதி: சுப்ரமணியசாமி, அன்பழகன் மனு மீதான தீர்ப்பு (நாளை) இன்று வழங்கப்படும்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1176475

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் சு.சுவாமி எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதாட அனுமதி, நேரடியாக முடியாது- நீதிபதி அதிரடி!

 

 

பெங்களூரு: ஜெயலலிதா மேல் முறையீட்டு விசாரணையில், சுப்பிரமணியன் சுவாமி நேரடியாக வாதிட அனுமதிக்க முடியாது என்று கூறிய கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு பெஞ்ச், அவர் பவானிசிங்கிற்கு உதவியாக எழுத்துப் பூர்வமாக வாதத்தை முன்வைக்க அனுமதி கொடுத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது.

 

நேற்று விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கில் தன்னை 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்து இருந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜெ. வழக்கில் சு.சுவாமி எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதாட அனுமதி, நேரடியாக முடியாது- நீதிபதி அதிரடி! அதில் அன்பழகன் மனுவை முற்றாக புறக்கணித்த நீதிபதி குமாரசாமி, சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கையில் ஒரு பகுதியை நிராகரித்து, ஒரு பகுதிக்கு அனுமதி கொடுத்தார். நீதிபதி குமாரசாமி கூறியதாவது:

 

சுப்பிரமணியன் சுவாமி வழக்கின் முதல் புகார்தாரர் என்று குறிப்பிடப்படுவதால், அவரை வழக்கில் இணைத்துக்கொண்டு 3வது நபராக செயல்பட அனுமதிக்கலாம். அரசு வக்கீலுக்கு அவர் உதவிகரமாக செயல்படலாம். ஆனால் தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாகவே அவர் அளிக்க வேண்டும். வாய்மொழியாக வாதிட அனுமதி கிடையாது. இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

Subramanian Swamy        ✔ @Swamy39
Follow

The Karnataka HC has accepted one of my two prayers viz., can file Written Submissions in the case.But not oral arg. I will go to SC on this
11:24 AM - 5 Feb 2015

 

இதனிடையே, வாய்மொழி வாதாடலுக்கு அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளதாக சு.சுவாமி கூறியுள்ளார். அன்பழகன் தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-karnataka-hcourt-permitted-subramanian-swamy-assi-220406.html

  • தொடங்கியவர்

ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் 3வது நபராக சேர்க்க கோரிய அன்பழகன் மனு தள்ளுபடி! 

 

பெங்களூரு: சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களை 3வது நபராக சேர்க்கக்கோரி க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தாக்கல் செய்து இருந்த மனுக்கள் மீது இன்று மதியம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அன்பழகன் கோரிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்தார். சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கி தினமும் நடைபெற்று வருகிறது.

 

நேற்று விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கில் தன்னை 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்து இருந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் 3வது நபராக சேர்க்க கோரிய அன்பழகன் மனு தள்ளுபடி! அப்போது மனுதாரரும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி நேரில் ஆஜராகி வாதிட்டார். தான்தான் முதல் புகார்தாரர் என்பதால் தன்னையும் மேல் முறையீட்டு வழக்கில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் தன்னையும் இந்த வழக்கில் 3வது நபராக சேர்க்க வேண்டும் என்று தாக்கல் செய்து இருந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. க.அன்பழகன் சார்பில் ஆஜரான வக்கீல் சரவணன், ஹைகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நகலை நீதிபதியிடம் தாக்கல் செய்து வாதிட்டார். அரசு வக்கீலுக்கு உதவ எங்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டார்.

 

ஆனால் ஜெயலலிதா தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமி, அன்பழகன் தரப்பு வாதத்தையும், ஜெயலலிதா தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி குமாரசாமி இன்று தீர்ப்பளிப்பதாக தெரிவித்தார். இன்று காலையிலும் வாதம் தொடர்ந்ததால், மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு தீர்ப்பளிப்பதாக குமாரசாமி அறிவித்தார்.

 

இதைத் தொடர்ந்து குமாரசாமி அளித்த உத்தரவு: திமுகவின் அன்பழகன், இந்த வழக்கில் இருந்து அரசு வக்கீல் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று கேட்டு ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, அது விசாரணையில் இருந்துவருகிறது. இந்த நிலையில், அன்பழகன் தரப்பையும் வாதிட அனுமதித்தால், பவானிசிங்குடன் இணைந்து எப்படி அவரால் செயல்பட முடியும்? மேலும் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அன்பழகனையும் இணைத்துக்கொள்வது சரியாக இருக்காது. எனவே அவரது கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-subramaniyan-swamy-k-anbazhagan-seeking-permision-220398.html

  • தொடங்கியவர்

ஜெ. மேல்முறையீடு விசாரணையில் பவானிசிங் ஆஜராக முடியுமா? முடியாதா?: நாளை தீர்ப்பு

 

 

பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராக முடியுமா, முடியாதா என்பது குறித்த தீர்ப்பு நாளை வெளியாகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சக குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடந்துவருகிறது. ஜெ. மேல்முறையீடு விசாரணையில் பவானிசிங் ஆஜராக முடியுமா? முடியாதா?: நாளை தீர்ப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராகிவருகிறார்.

 

 

அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டுகிறது திமுகவின் அன்பழகன் தரப்பு. மேலும், பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமிக்கும் ஆணையை கர்நாடக அரசுக்கு பதிலாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அளித்துள்ளது செல்லாது என்பதும் அன்பழகன் தரப்பு வாதம். எனவே பவானிசிங்கை இவ்வழக்கில் இருந்து நீக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. நீதிபதிகள் குமார், வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. ஜெயலலிதா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பவானிசிங் ஆஜராவது சட்டவிரோதம் என க. அன்பழகன் தரப்பு வாதம் செய்தது. அன்பழகன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வி.நாகேஷ் வாதிட்டார். விசாரணை நீதிமன்றத்தில் மட்டுமே பவானி ஆஜராக கர்நாடக அரசு அனுமதித்திருந்தது.

 

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. வழக்கில் அரசு தரப்பில் பவானி ஆஜராக கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நாகேஷ் வாதத்தை முன்வைத்தார். பவானிசிங் தரப்பு வழக்கறிஞரோ, இதில் வாதிட பவானிசிங்கிற்கு அனுமதி உள்ளதாக கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இதுதொடர்பான தீர்ப்பை புதன்கிழமை (நாளை) வழங்குவதாக அறிவித்தனர்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-removal-judgement-on-tomorrow-220743.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கு விசாரணையில் பவானிசிங் ஆஜராகலாம்: அன்பழகன் மனு டிஸ்மிஸ்!

 

பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையில் பவானிசிங் அரசு வக்கீலாக ஆஜராக அனுமதித்த கர்நாடக உயர் நீதிமன்ற பெஞ்ச், திமுகவின் அன்பழகன் மனுவை தள்ளுபடி செய்தது. சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சக குற்றவாளிகள் 3 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்னிலையில் நடந்துவருகிறது.

 

ஜெ. வழக்கு விசாரணையில் பவானிசிங் ஆஜராகலாம்: அன்பழகன் மனு டிஸ்மிஸ்! சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராகிவருகிறார். அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டுகிறது திமுகவின் அன்பழகன் தரப்பு. மேலும், பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமிக்கும் ஆணையை கர்நாடக அரசுக்கு பதிலாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அளித்துள்ளது செல்லாது என்பதும் அன்பழகன் தரப்பு வாதம். எனவே பவானிசிங்கை இவ்வழக்கில் இருந்து நீக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. நீதிபதிகள் குமார், வீரப்பா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது. ஜெயலலிதா வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பவானிசிங் ஆஜராவது சட்டவிரோதம் என க. அன்பழகன் தரப்பு வாதம் செய்தது.

 

அன்பழகன் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.வி.நாகேஷ் வாதிட்டார். விசாரணை நீதிமன்றத்தில் மட்டுமே பவானி ஆஜராக கர்நாடக அரசு அனுமதித்திருந்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. வழக்கில் அரசு தரப்பில் பவானி ஆஜராக கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நாகேஷ் வாதத்தை முன்வைத்தார். கர்நாடக அரசிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டது ஹைகோர்ட். கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் பதில் தாக்கல் செய்தார். அதில், பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை என்று கூறியிருந்தார். அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர். அதன்படி மாலை 4.15 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், ஏ-1 மற்றும் ஏ-2 குற்றவாளிகள் (ஜெயலலிதா மற்றும் சசிகலா) தரப்பு வாதங்கள் ஹைகோர்ட்டில் நிறைவடைந்துவிட்டன.

 

வழக்கு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த நேரத்தில் அரசு வக்கீலை மாற்றம் செய்வது வழக்கின் தன்மையை பாதித்துவிடும். ஏற்கனவே, இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது. எனவே வழக்கில் தலையிட்டு அதை தாமதப்படுத்த ஹைகோர்ட் விரும்பவில்லை. பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமித்த விவகாரத்தில், கர்நாடக அரசு, மனுதாரர் (அன்பழகன்) ஆகிய தரப்புக்குமே அதிருப்தியுள்ளது தெரிகிறது. எனவே அவர்கள் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறி, அன்பழகன் மனுவை தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே வழக்கில் 3வது நபராக தங்களை சேர்க்க வேண்டும் என்று ஹைகோர்ட் சிறப்பு அமர்வு முன்னிலையில் அன்பழகன் தாக்கல் செய்த மனுவும் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/spp-appointment-anbazhagan-asked-move-sc-220753.html

  • தொடங்கியவர்

'ஜெ.வுக்காக ஏன் வாதிடுகிறீர்கள்? இளவரசிக்காக மட்டும் வாதாடுங்கள்': வக்கீலுக்கு நீதிபதி கண்டிப்பு 

 

பெங்களூரு: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையின்போது, இளவரசி சார்பாக வாதிடுவதைவிடுத்து ஜெயலலிதா சார்பாக வாதிட்டு கோர்ட் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று இளவரசி வழக்கறிஞருக்கு ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி கண்டிப்பு தெரிவித்தார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி முன்னிலையிலான பெஞ்சில் நடந்து வருகிறது. ஏ-1 குற்றவாளியான ஜெயலலிதா மற்றும் ஏ-2 குற்றவாளியான சசிகலா ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இளவரசி தரப்பு வாதம் இருதினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது.

 

'ஜெ.வுக்காக ஏன் வாதிடுகிறீர்கள்? இளவரசிக்காக மட்டும் வாதாடுங்கள்': வக்கீலுக்கு நீதிபதி கண்டிப்பு இளவரசி சார்பாக, வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டு வருகிறார். இவர் பெரும்பாலும், சொத்துக் குவிப்பு வழக்கிற்கு ஆதாரம் இல்லை, ஜெயலலிதாவுக்கு சம்மந்தம் இல்லை என்பது போன்ற வாதங்களை முன்வைத்து வந்தார். இந்நிலையில், நீதிபதி குமாரசாமி இன்று பொறுமை இழந்து வழக்கறிஞரிடம் கடிந்து கொண்டார். நீதிபதி கூறுகையில், "ஊழல் வழக்குகளில் எதை ஆதாரமாக கொண்டு வாதிட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? ஆதாரமே இல்லாமல் ஊழல் வழக்கை பதிவு செய்ய முடியுமா? அப்படியே பதிவு செய்தாலும், அதுதான் 18 வருட காலம் நடைபெற முடியுமா? உங்கள் கட்சிக்காரர் மீது கூட்டு சதி செய்ததாகவும், குற்றத்திற்கு தூண்டியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

 

அதை மறுப்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால் எடுத்து வையுங்கள். அதைவிடுத்து, ஜெயலலிதா சார்பில் வாதிடுவது ஏன்? நீங்கள் இளவரசி தரப்புக்கு மட்டும் வாதிடுங்கள். வழக்கில் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளவரிடமிருந்து, 2வது மற்றும் 3வது எதிரிகளின் வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த வங்கி பண பரிமாற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் தாருங்கள். அதைவிடுத்து, கோர்ட் நேரத்தை வீணடிக்காதீர்கள். இவ்வாறு நீதிபதி குமாரசாமி கேள்விக் கணைகளை தொடுத்தார். சுமார் 45 நிமிட நேரம், இளவரசி வக்கீலிடம் கேள்விகளாக கேட்டு நீதிபதி துளைத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-asset-case-don-t-waste-court-time-says-karnataka-high-court-judge-220867.html

  • தொடங்கியவர்

1 ரூபாய் சம்பளம் வாங்கியதால் ஜெயலலிதா ஒரு அரசு ஊழியரே.. கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி திட்டவட்டம்

 

பெங்களூரு: ரூ.1 சம்பளம் வாங்கிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 66 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்தது எப்படி என்பது குறித்து வாதத்தை முன்வைக்குமாறு, கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மீண்டும், ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் குமார் வாதிடுகிறார். வழக்கு விசாரணையின் 28வது நாளான இன்று குமார்வாதிடுகையில், இது அரசியல் காரணங்களால் தொடரப்பட்ட வழக்கு என்றார். 1 ரூபாய் சம்பளம் வாங்கியதால் ஜெயலலிதா ஒரு அரசு ஊழியரே.. கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி திட்டவட்டம் அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி "இவ்வாறு பொதுவாக ஒரு வாதத்தை முன்வைக்காதீர்கள் என்று பலமுறை உங்களிடம் கூறிவிட்டேன். அரசியல் சார்பான ஒரு குற்றச்சாட்டு என்றால் வழக்கு எப்படி 18 வருடங்கள் நடந்திருக்க முடியும்? அப்படியே நீங்கள் கூறுவது உண்மைதான் என்றாலும், அதற்கான ஆதாரத்தையாவது முன்வையுங்கள்.

 

மேலும், ஜெயலலிதா ரூ.1 சம்பளம் பெற்று முதல்வராக பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளீர்கள். அப்படியிருக்கும்போது, ரூ.66 கோடி சொத்துக்களை எப்படி சம்பாதித்தார், அதற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்து வாதத்தை முன்வையுங்கள். ஜெயலலிதா சம்பளமே வாங்காமல் பணியாற்றினால் அது வேறு. ஆனால் ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதால் அவர் அரசு ஊழியராகவே கருதப்படுவார். எனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின்போது, அரசு ஊழியர் ஒருவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாகவே பார்க்க வேண்டிவரும்" என்று நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து வாதம் நடந்தது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalitha-will-be-consider-as-public-servant-high-court-221074.html

  • தொடங்கியவர்

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: சுதாகரன் வக்கீலுக்கு குட்டு வைத்த நீதிபதி குமாரசாமி!

 

பெங்களூர்: பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் சுதாகரனின் வழக்கறிஞருக்கு நீதிபதி குமாரசாமி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். பெங்களூரு நீதிமன்றத்தில் 29-வது நாளாக ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. சுதாகரன், இளவரசி தரப்பில் 4வது நாளாக இறுதி வாதம் நடைபெற்று வருகிறது.

 

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: சுதாகரன் வக்கீலுக்கு குட்டு வைத்த நீதிபதி குமாரசாமி! இந்நிலையில் இன்று ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் வாதாடும் சுதாகரனின் வழக்கறிஞர் சுந்தரத்துக்கு நீதிபதி குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்றைய விசாரணையின் போது, நீதிபதி குமாரசாமி முன் சுதாகரனின் 4 ஆண்டு சொத்துப் பட்டியலை அவரது வழக்கறிஞர் அளித்தார். சுதாகரன் வருமானம் ரூ. 2,12,47,978 செலவு ரூ. 1,84,73,019 பணம் வகையிருப்பு ரூ. 27,74,959 இருந்ததாகவும் எங்கள் மீது சொத்துக் குவிப்பு எந்த விதத்திலும் இல்லை. மேலும் தாங்கள் வருமானத்திற்கு நிகரான சொத்துக்களை சேர்த்து கையிருப்பு பணத்துடன் தான் இருந்தோம் எனவும் சுதாகரன் வழக்கறிஞர் வாதாடினார்.

 

ஆனால் வருமான வரித்துறையிடம் அளித்த கணக்குக்கு மாறான தகவலை தருவது ஏன் என்று சுதாகரன் வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார். மேலும் நீதிமன்றத்தின் நேரத்தை தேவையின்றி வீணடிக்க வேண்டாம். நீதிமன்றத்துக்கு தவறாக தகவலைத் தர வேண்டாம் என்றும் நீதிபதி குமாரசாமி கண்டனம் தெரிவித்தார். அத்துடன் கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துப்பட்டியல் வேறாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். சுதாகரன் வழக்கறிஞரை ஒரு மணி நேரம் கேள்விக்கணைகளால் நீதிபதி குமாரசாமி துளைத்தெடுத்தார். 18 ஆண்டாகத் தாக்கல் செய்யாத புதிய சொத்துக்களைத் தருவது ஏன் என்றும் சரியான வாதங்களை மட்டுமே முன்வைக்குமாறு வழக்கறிஞர் சுந்தரத்துக்கு நீதிபதி குமாரசாமி அறிவுறுத்தினார். சரியாக வாதிடாவிடில் தாமே முடிவு செய்து தீர்ப்பு எழுத வேண்டியிருக்கும் என்றும் நீதிபதி குமாரசாமி எச்சரித்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-judge-warns-sudhakaran-lawyer-221252.html

  • தொடங்கியவர்

'கேள்வி கேட்பது பிடிக்கலையா?'
 

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி, 'நான், கேள்வி கேட்பது பிடிக்கவில்லையா' என, சுதாகரன் வழக்கறிஞர் சுதந்திரத்திடம் கேட்டார்.

 

ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று, சுதாகரன் வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் சுதந்திரம், சுதாகரன் வருவாய், செலவு விவரங்கள் குறித்து தெரிவித்தார். உடனே, நீதிபதி குமாரசாமி குறுக்கிட்டு, 'ஆதாரங்களை காட்ட வேண்டும்; ஆதாரமின்றி வாதிடுவதில் பயனில்லை. உங்கள் கட்சிக்காரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு; இது, எப்படி வந்தது; அதன் மூலதனம் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்' என்றார். அதற்கு, 'ஆதாரங்களை சமர்ப்பிக்கிறேன்' என வழக்கறிஞர் கூறியதும், 'சரி, காட்டுங்கள்' என்றார் நீதிபதி. பின், வழக்கறிஞர், முணுமுணுத்துக்கொண்டே, தன் உதவியாளரிடம், 'ஆதாரத்தை கொடுப்பா' என்றார். இதைக்கண்ட நீதிபதி, 'நான், கேள்வி கேட்பது பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்கள்; எதுவும் கேட்கமாட்டேன்' என்றார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1187689

  • தொடங்கியவர்

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: இளவரசி வக்கீலுக்கும் குட்டு வைத்த நீதிபதி குமாரசாமி 

 

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது இளவரசியின் வழக்கறிஞருக்கும் சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி கண்டனம் தெரிவித்தார்.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இம்மேல்முறையீட்டு மனு மீது தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன் தினமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: இளவரசி வக்கீலுக்கும் குட்டு வைத்த நீதிபதி குமாரசாமி இதுவரை ஜெயலலிதா, சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் இறுதி வாதத்தை நிறைவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர் சுதந்திரம் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நேற்று நீதிமன்றம் கூடியதும் சுதாகரன், இளவரசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதந்திரம் தனது வாதத்தை தொடர்ந்தார். இளவரசி சம்பந்தப்பட்ட சொத்து விவரங்கள் மற்றும் வருமானங்கள் குறித்து அவர் தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

 

"குற்றவியல் நடைமுறை சட்டம் 313-ன்படி அரசு தரப்பில் 107 முதல் 120-வது சாட்சிகள் வரை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எங்களிடம் கேள்விகள் கேட்கப்படவில்லை" என்றார் சுந்தரம். இதற்கு பதிலளித்த நீதிபதி குமாரசாமி, "வாக்குமூலத்தை எடுத்து பாருங்கள்.

 

எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன" என்று கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர் சுதந்திரம், "650 கேள்விகள் கேட்கப்பட்டன" என்றார். பின்னர் நீதிபதி, அதில் அந்த சாட்சிகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. ஏன் இல்லை என்று தவறாக சொல்கிறீர்கள். நீங்கள் வாக்குமூலத்தை முழுமையாக படிக்கவில்லையா? நீங்கள் வாய்மொழியாக கூறும் தகவல்களை ஏற்க முடியாது.

 

எதை சொன்னாலும் அதற்கு ஆவணங்களை ஆதாரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும். ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே நான் தீர்ப்பு எழுத முடியும். வெறும் வாதத்தை விட ஆவணங்களை தாக்கல் செய்து வாதிடுவது தான் மிக முக்கியம். கீழ்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் வாதிடுங்கள் என்று காட்டம் காட்டினார்.

 

அப்போது அசராத வழக்கறிஞர் சுதந்திரம், இளவரசியின் வீடு ரூ.5.75 கோடியில் கட்டப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதலாக மதிப்பிட்டுள்ளனர். இது தவறானது என்றார், உடனே நீதிபதி, சரி, இதற்கு ஆவணங்கள் இருந்தால் தாருங்கள். கூடுதலாக மதிப்பிட்டுள்ள தொகையை நீக்கி விடுகிறேன். ஏ1 முதல் ஏ4 வரை 4 பேருமே தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று அவரவர்களின் வழக்கறிஞர்கள் சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் உள்ளன. ஆனால் நீங்கள் அனைவரும் குற்றத்தை ஒட்டுமொத்தமாக மறுக்கிறீர்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தவறான முறையில் பணம் சம்பாதித்து மற்ற 3 பேர்களின் பெயர்களில் சொத்துகளை சேர்த்தார் என்பது லஞ்ச ஒழிப்புத்துறையின் குற்றச்சாட்டு. இதை மறுத்து அதற்கான ஆவணங்களுடன் நீங்கள் வாதிட வேண்டும் என்று மீண்டும் சுட்டிக்காட்டினார்.

 

இதைபற்றியெல்லாம் கவலைப்படாத வழக்கறிஞர் சுதந்திரம், இந்த வழக்கு தவறாக போடப்பட்டுள்ளது என்றார். கடுப்பாகிப் போன நீதிபதி, தவறு என்றால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என்று மீண்டும் காட்டமாக கூறினார். இந்த வழக்கு விசாரணை இன்றும் நடைபெறுகிறது. இன்றுடன் வழக்கறிஞர் சுதந்திரம் தனது வாதத்தை நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நிறுவனங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிடுவர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-judge-warns-elavarasi-s-lawyer-221340.html

  • தொடங்கியவர்

'ஒருவர் எவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் குற்றமல்ல':ஜெ., வழக்கில் நீதிபதி குமாரசாமி கருத்து

 

பெங்களூரு:“ஒருவர் எவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் அது குற்றமல்ல. ஆனால், அந்த சொத்து முறையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும். கணக்கு காண்பித்து வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும்,” என்று நீதிபதி கூறினார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நேற்று, 30வது நாளாக, விசாரணை நடந்தது.சுதாகரன், இளவரசி ஆகியோரது வக்கீல் சுதந்திரம்: சிறுதாவூர் பங்களாவை 1996 செப்டம்பரில் பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் மதிப்பீடு செய்தனர். பங்களாவுக்கு பயன்படுத்திய கலர் மார்பிள் ஒரு சதுர அடிக்கு 20 ஆயிரத்து 675 ரூபாய் என்றும் வெள்ளை மார்பிள் ஒரு சதுர அடிக்கு 20 ஆயிரத்து 775 ரூபாய் என்றும் அதிகப்படுத்தி மதிப்பிட்டுள்ளனர்.அரசு வக்கீல் பவானி சிங்: ஒரு சதுர அடிக்கு அல்ல. ஒரு சதுர மீட்டருக்கு மதிப்பீடு செய்யப்பட்டது.

சுதாகரன், இளவரசி வக்கீல்: இதுவும் அதிகம்தான்.

 

நீதிபதி: நீங்கள் சொல்வது எவ்வளவு.சுதாகரன், இளவரசி வக்கீல்: 2,000 ரூபாய்.

நீதிபதி குமாரசாமி: கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்திய பொருட்கள், 'சுப்ரீம் மெட்டீரியல்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள், மும்பை சென்று மாடசாமி என்பவரிடம் பில் வாங்கினர். இதில் என்ன தவறு?

 

சுதாகரன், இளவரசி வக்கீல்: அவர்கள் வாங்கி வந்த பில்லை, சமர்ப்பிக்கவில்லை. தாங்களாகவே மதிப்பீடு செய்து கொண்டனர். இந்த வேளையில் பங்களா கட்டி முடிக்கவில்லை. ஜெயலலிதா பதவி காலத்துக்கு பின் 1997ல் தான் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் பொதுப்பணித்துறையினரோ தாங்கள் ஆய்வு செய்த 1996 செப்டம்பரிலேயே கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

இதற்கு செலவான தொகை ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்.

ஆனால் ஊழல் தடுப்பு போலீசார் ஐந்து கோடியே 40 லட்சம் ரூபாய் என்று மதிப்பிட்டுள்ளனர். சென்னையிலுள்ள மஹா சுப்புலட்சுமி கல்யாண மண்டபம் வாங்கும்போது கனரா வங்கியிலிருந்து 70 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கப்பட்டது.

இக்கடனுக்கு இதுவரை மூன்று லட்சத்து 84 ஆயிரத்து 400 ரூபாய் வட்டி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. அசல் அப்படியே உள்ளது.

இந்த கல்யாண மண்டபத்தை மதிப்பீடு செய்து சொத்து மதிப்பாக காட்டும்போது வங்கி கடனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. சொத்து மதிப்பில் கடனை குறைத்திருக்க வேண்டும்.

 

நீதிபதி: ஜெயலலிதா பணத்தை சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் வாங்கி வீடு கட்டிக் கொண்டு கம்பெனிகளை வாங்கினர் என்பதுதான் ஊழல் தடுப்பு போலீசார் சுமத்தும் முக்கிய குற்றச்சாட்டு. இவைகளை மறுத்து உங்கள் ஆதாரங்களை காண்பியுங்கள்.

இதுவரை இதற்கு நீங்கள் பதில் கூறவில்லை. ஒருவர் எவ்வளவு சொத்து வைத்திருந்தாலும் அது குற்றமல்ல. ஆனால் அந்த சொத்து முறையாக சம்பாதித்ததாக இருக்க வேண்டும். கணக்கு காண்பித்து வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும்.

சுதாகரன், இளவரசி வக்கீல்: 'சூப்பர் டூப்பர்' கம்பெனியில் ஒரு பங்கு 10 ரூபாய். சுதாகரனும் சசிகலாவும் மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து 30 ஆயிரம் பங்கு வாங்கியுள்ளனர். இதுதான் அவர்களின் முதலீடு. பின்னர் கேபிள் ஆப்ரேட்டர்களிடமிருந்து தலா 5,000 ரூபாய் வாங்கப்பட்டது. இந்த ரசீது புத்தகத்தை ஊழல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்து விட்டனர்.

 

அரசு வக்கீல்: 10 லட்சம் கேபிள் ஆப்ரேட்டர்களிடமிருந்து வாங்கி வேறு காரணங்களுக்காக அதை செலவழித்துக் கொண்டனர்.சுதாகரன், இளவரசி வக்கீல்: வேறு என்ன காரணம் சொல்லுங்கள்?அரசு வக்கீல்: நான் வாதிடும்போது சொல்கிறேன்.இத்துடன் வாதம் முடிந்தது. இன்று தனது வாதத்தை முடித்துக் கொள்வதாக வக்கீல் சுதந்திரம் கூறியுள்ளார்.ஜெ., வக்கீல்கள் செந்தில், பரணி குமார், செல்வகுமார், திவாகர், நாகராஜன், ஜெயராமன், சுந்தர பாண்டியன், அம்பிகை தாஸ் ஆகியோரும் ஆஜராகினர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1188712

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கு: அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் க. அன்பழகன் மனு!

 

டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கி 4 ஆண்டு சிறப்பு தண்டனை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

 

ஜெ. வழக்கு: அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை நீக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் க. அன்பழகன் மனு! தனிநீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராகிவருகிறார். அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியது திமுகவின் அன்பழகன் தரப்பு. மேலும், பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமிக்கும் ஆணையை கர்நாடக அரசுக்கு பதிலாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அளித்துள்ளது செல்லாது என்பதும் அன்பழகன் தரப்பு வாதம். இதனால் பவானிசிங்கை இவ்வழக்கில் இருந்து நீக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் தரப்பு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது. இம்மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த 11-ந் தேதி அன்பழகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

இதனைத் தொடர்ந்து தற்போது பவானிசிங்கை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் க. அன்பழகன் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அன்பழகன் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், பவானிசிங் ஆஜரானால் வழக்கின் போக்கு மாறக் கூடும். இதனால் வேறு ஒருவரை அரசு வழக்கறிஞராக கர்நாடகா அரசு நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/dmk-leader-anbazhagan-files-appeal-on-spp-jayalalithaa-case-221396.html

  • தொடங்கியவர்

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- மேல்முறையீட்டு விசாரணை முடிகிறது: 2 வாரங்களில் தீர்ப்பு?

 

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முடிவுக்கு வர இருக்கிறது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் 2 வாரங்களில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படலாம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சசிகலா ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இதனால் முதல்வர் பதவியை பறிகொடுத்தார் ஜெயலலிதா.

 

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு- மேல்முறையீட்டு விசாரணை முடிகிறது: 2 வாரங்களில் தீர்ப்பு? தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை தினமும் நடைபெற்று வருகிறது. தற்போது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது வழக்கறிஞர்கள் வாதம் நிறைவடைந்து விட்டது. மொத்தம் 31 நாட்கள் இவர்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர்.

 

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய 6 நிறுவனங்கள் வழக்கறிஞர்கள் வாதம் நேற்று தொடங்கியது. இந்த வழக்கறிஞர்கள் வாதம் முடிந்ததும் நீதிபதி குமாரசாமி, தனியார் நிறுவனங்களின் வாதத்தை வருகிற 23-ந் தேதியுடன் முடித்துக் கொள்ளுமாறும், அதன் பிறகு இறுதி வாதத்தை அரசு வழக்கறிஞர் பவானி சிங் தொடங்க வேண்டும். அவரது வாதமும் முடிந்து விட்டால் தீர்ப்பு தேதியை அறிவித்து விடுவேன் என்றார். உடனே அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதி வாதம் தொடர்வதற்கு 5 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டார். அதை ஏற்க மறுத்த நீதிபதி வருகிற 23-ந் தேதி 6 நிறுவனங்களின் வாதம் முடிந்ததும் 24-ந் தேதி முதல் நீங்கள் வாதத்தை தொடங்கலாம் என்றார். ஏற்கனவே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் இறுதி வாதம் முடிந்து விட்ட நிலையில் பவானி சிங்கும் அடுத்த வாரத்துக்குள் தனது இறுதி வாதத்தை முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மார்ச் முதல் வாரத்தில் நீதிபதி குமாரசாமி இந்த மேல் முறையீட்டு வழக்கில் தனது தீர்ப்பை வழங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூற 18 ஆண்டுகள் ஆன நிலையில், மேல் முறையீட்டு மனு மீது விசாரணையை 3 மாதத்தில் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதை கருத்தில் கொண்டு தான் நீதிபதி குமாரசாமி இந்த வழக்கில் பல்வேறு தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்க மறுத்து வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தினார். அவர் தனது விசாரணையின் முதல் நாளில் குறிப்பிட்ட படி 31 நாளில் இறுதி வாதத்தை முடிக்க வைத்துள்ளார். இன்னும் 2 வாரத்தில் தீர்ப்பு கூறும் நிலையை வழக்கு எட்டியுள்ளது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/jaya-asset-case-judgement-day-nears-221437.html

  • தொடங்கியவர்

முடக்கப்பட்ட 6 கம்பெனிகளும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதல்ல: கம்பெனிகளின் வக்கீல்கள் வாதம்

 

பெங்களூரு:"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், முடக்கப்பட்ட ஆறு கம்பெனிகளும், வங்கி கடனில் தான் இயங்கின. ஜெயலலிதாவுக்கு சொந்தமானதல்ல,” என, கம்பெனிகளின் வக்கீல் உதயஹொல்லா வாதாடினார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், முடக்கி வைக்கப்பட்ட, மெடோ அக்ரோ பார்ம், ரிவர்வே அக்ரோ, இண்டோடோகா, சயனோரா, லெக்ஸ் பிராபர்ட்டி, ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் ஆகிய, ஆறு கம்பெனிகள், 'சீல்' வைத்தது குறித்த வழக்கு விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

வக்கீல் உதய ஹொல்லா: சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், ஆறு கம்பெனிகளுக்கும் எந்த தொடர்புமில்லை. இக்கம்பெனிகள் தில்லை நாயகம், சண்முகம், குமார், செந்தமிழ் செல்வனுக்கு சொந்தமானது. கம்பெனிகளில் ஒன்றான, இண்டோ டோகா வுக்கு, அசையா சொத்துகளே கிடையாது. இதை தெரிந்து கொள்ளாமலேயே, கம்பெனிக்கு சொந்தமான, அசையா சொத்துகளை, பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிபதி குமாரசாமி: கம்பெனியின், இரு இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதன் நிர்வாக இயக்குனர் யார்?
உதயஹொல்லா: யாருமில்லை. கம்பெனி, தொழிலாளர்களால் நடத்தப்படுகிறது. இக்கம்பெனிகள், 1986 முதல் இயங்கி வருகிறது. வங்கி கடனில் நடத்தப்படுகிறது. ஜெயலலிதாவின் பணத்தில் நடத்தப்படவில்லை.

நீதிபதி: இத்தனை ஆண்டுகளாக, நீதிமன்றத்தில் ஏன் முறையிடவில்லை.
உதயஹொல்லா: மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திலும், முந்தைய சிறப்பு நீதிமன்றத்திலும் எங்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கம்பெனிகள் மீது வங்கி கடன் உள்ளது. கம்பெனி முடக்கப்பட்டு விட்டதால், கடன்களை செலுத்த இயலவில்லை. தொழிலாளர்கள், வேலை இழந்துள்ளனர். எனவே, கம்பெனியை மீண்டும் இயக்க, அனுமதிக்க வேண்டும்.

வக்கீல் ஜெய்குமார் பாட்டீல்: 'சயனோரா' உரிமையாளர் சண்முகம், கம்பெனியை, பாஸ்கர ராவ், நாராயணராவ் என்பவரிடமிருந்து, விலைக்கு வாங்கி நடத்தி வருகிறார். எந்த நோட்டீஸூமின்றி முடக்கி விட்டனர். இது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. இது போன்ற நிலையில், கம்பெனிகளுக்கு நோட்டீஸ் கொடுத்து, விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விஷயம், இவ்வழக்கில், பின்பற்றப்படவில்லை.

வக்கீல் குலசேகர்: முடக்கப்பட்டுள்ள, ஆறு கம்பெனிகளுக்கும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எந்த தெடர்பும் இல்லை. அவர்கள் பங்குதாரர்கள் என்பதால், கம்பெனிகளே, அவர்களுக்கு சொந்தம் என்பது ஏற்க தக்கதல்ல. ஒரு கம்பெனியின் சொத்து, எந்த தனி மனிதருக்கும் சொந்தமல்ல. கம்பெனிக்கு மட்டுமே உரிமையானது. எனவே, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.விசாரணை, வரும், 23 ம் தேதி தொடர்கிறது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1189311

  • தொடங்கியவர்

ஜெ.வின் ரூ.66 கோடி சொத்துக்கு என்ன ஆதாரம்.. 'டீட்டெய்ல்' கேட்ட நீதிபதி – 'டைம்' கேட்ட பவானிசிங்!

 

பெங்களூரு: ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்து குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

 

அப்போது சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் இறுதிவாதத்தை தொடங்க மீண்டும் ஒருவார காலம் அவகாசம் கேட்டார் பவானி சிங். இதற்கு மறுத்த நீதிபதி குமாரசாமி உடனடியாக விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டார்.

 

சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்குபேர் தரப்பிலான இறுதிவாதம் கடந்த வாரம் நிறைவடைந்தது.

 

6 நிறுவனங்கள்

இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மெடோ அக்ரோ ஃபார்ம்,ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆதித்யா சோந்தி, குலசேகரன் ஆஜராகி கடந்த 3 நாட்களாக வாதிட்டனர்.

 

ஆதாரங்கள் என்ன?

இந்த வாதத்தின்போது நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி குவித்ததாக கணக்கிட்டது எப்படி? என்றும், இந்த அளவுக்கு சொத்துக்குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன என்றும், அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு மதிப்பீடு செய்த சொத்து மதிப்பீடு பட்டியல் எங்கே என்றும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் கேள்வி எழுப்பினார்.

 

பவானிசிங் பதில்

 

இதற்கு பதில் அளித்த பவானி சிங், சாட்சிகளின் அடிப்படையிலும், குறிப்பிட்ட ஆவணங்களின் படியும் சொத்துக்களை மதிப்பீடு செய்தோம் என்று தெரிவித்தார்.

 

பட்டியல் தயார்

 

இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக்களின் மதிப்பீடு பட்டியலை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.

 

அவகாசம் கேட்ட பவானிசிங்

 

இதனையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதிவாதத்தை தொடங்க மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டார்.

 

நீதிபதி நிராகரிப்பு

 

இதனை நிராகரித்த நீதிபதி குமாரசாமி உச்சநீதிமன்ற அறிவுறத்தல் பெயரில் தினந்தோறும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். ஆகவே இறுதிவாதத்தை உடனே தொடங்குமாறு பவானி சிங்கிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 

ரூ.66 கோடி எப்படி வந்தது

 

குற்றவாளிகள் தரப்பு இறுதிவாதம் முடிவு பெற்ற நிலையில் 66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பது பற்றி அரசு தரப்பு நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என்று நீதிபதி குறிப்பிட்டார். இல்லையெனில் நீதிமன்றமே இந்த தொகை எப்படி வந்தது என்பது பற்றி கணக்கிட்டு தீர்ப்பளிக்க நேரிடும் என்று கூறியதோடு, சொத்துக்களை மதிப்பீடு செய்தற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

 

மார்ச் மாதம் தீர்ப்பு

 

நீதிபதியின் உத்தரவை அடுத்து பவானிசிங் தனது இறுதிவாதத்தை தொடங்கியுள்ளார். அவர் வரும் வாரத்தில் தனது வாதத்தை முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வரும் மார்ச் மாதம் நீதிபதி குமாரசாமி சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தனது தீர்ப்பை வழங்குவார் என கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-da-case-justice-kumaraswamy-seeks-details-jay-221628.html

  • தொடங்கியவர்

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் திணறல்

 

பெங்களூரு: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், ஜெ., கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டது எப்படி? சம்பந்தப்பட்டவர் இல்லாமல் அவரது வீட்டில் சோதனை செய்ய சட்டத்தில் இடமுண்டா? ஜெ., எந்த வழக்கில் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

 

இந்த வழக்கில் மேலோட்டமாக வைத்துக்கொண்டு வாதம் செய்ய வேண்டாம் என நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார். இந்த கேள்விகள் உட்பட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பதிலளிக்க முடியாமல் திணறினார். இந்த வழக்கில் ஜெ., தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஜெ.,வை கைது செய்யப்பட்டதற்கு முதல் நாள் திட்டமிட்டு சோதனை உத்தரவு பெறப்பட்டது. கலர்டிவி முறைகேடு தொடர்பாக ஜெ.,வை கைது செய்தனர் என கூறினார்.

 

இதனையடுத்து, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மீதான விசாரணை நாளையும் தொடரும் என நீதிபதி குமாரசாமி கூறினார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1191849

  • தொடங்கியவர்

சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி குமாரசாமி கேட்ட 10 கேள்விகள்; பதில் சொல்லாத பவானிசிங்

 

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் சரமாரி கேள்வியால் பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 34வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்றுடன் நிறைவடைந்தது.

 

இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கின் வாதம் நடைபெற்று வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி குமாரசாமி கேட்ட 10 கேள்விகள்; பதில் சொல்லாத பவானிசிங்

 

கேள்விகளை அடுக்கிய நீதிபதி

கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி, நீதிபதி பவானிசிங்கிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஜெயலலிதா வழக்கின் அடிப்படைத் தன்மை என்ன என்பதாவது தெரியுமா எனவும் கேட்டார்.

 

போயஸ்தோட்டம்

வழக்குகாலத்துக்கு முன்பே ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் வாங்கப்பட்டுள்ளது. போயஸ் தோட்டத்தை சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்த்தது ஏன் என்றும் கேட்டார்.

 

பணப்பரிவர்த்தனை ஆதாரம்

ஜெயலலிதா வங்கிக் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு பணப்பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றும், எந்தெந்த தேதியில் எவ்வளவு பண பரிவர்த்தனை நடந்தது என்பதற்கு விளக்கம் தாருங்கள் என்ற பவானி சிங்கிடம் கேள்வி எழுப்பினார்.

 

பினாமிகளா?

மேலும், சசிகலா உள்பட 3 பேர் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா? என்றும் வினா எழுப்பிய நீதிபதி, பினாமி சட்டப்படி வழக்கு தொடராமல் சொத்து குவிப்பு என வழக்கு ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

பதில் தராத பவானிசிங்

நீதிபதி குமாரசாமியின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.

 

தாம் கேட்ட 10 கேள்விகளுக்கும் பவானி சிங் பதில் தராததால் நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

நல்லமநாயுடுவின் பதில்

போயஸ் இல்லம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசிடம் நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார். போயஸ் இல்லத்தை அழகுப்படுத்த ரூ. 7 கோடி செலவிடப்பட்டதே வழக்கில் போலீசார் சேர்த்து உள்ளனர். நல்லநாயுடுவின் சாட்சிய பதிவை முழுமையாக படிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalaitha-da-case-hc-puts-searching-questions-spp-221697.html

  • தொடங்கியவர்

'கதை சொல்லாதீங்க; நிரூபிச்சு காட்டுங்க': நீதிபதி காட்டம்

 

பெங்களூரு: "ஜெயலலிதாவுக்கு, 66.65 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதை விளக்கமாக கூற வேண்டும். கதை சொல்வதை விட்டுவிட்டு, நிரூபிக்க வேண்டும்,'' என, நீதிபதி குமாரசுவாமி காட்டமாக கூறினார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை, 33வது நாளாக, நேற்றும் நடந்தது.

இதில், நீதிபதி குமாரசுவாமி கூறியதாவது: உங்கள் தரப்பில் (ஜெ., வழக்கறிஞர் குமாரிடம்), சொத்து மதிப்பு எவ்வளவு, வருமானம், செலவு எவ்வளவு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். செலவை அதிகமாக கணக்கிட்டதாக கூறுகிறீர்கள்.

 

எதில் அதிகமாக கணக்கிட்டு உள்ளனர் என்பதை கணக்கிட்டு, பட்டியலை எனக்கு தர வேண்டும்; இல்லையேல், நான் கணக்கிட வேண்டி வரும். நீங்கள் (அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிடம்) எப்படி, 66.65 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றம் சாட்டியுள்ளீர்கள். அந்த, 66.65 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பதை, ஒரு பைசா பாக்கியில்லாமல், எனக்கு விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில், எனக்கு கதை தேவையில்லை; குற்றச்சாட்டு கூறுவது பெரிதல்ல; அதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு கிளைமேக்ஸ்: திருடிய பணத்தில் வருமான வரி கட்டினால் ஏற்க முடியுமா?

 

பெங்களூரு: திருடன் ஒருவன் தான் திருடிய பணத்தை பாதுகாத்து கொள்வதற்காக வருமான வரி செலுத்தினால் ஏற்றுகொள்ள முடியுமா? என்று அரசு வழக்கறிஞர் பவானிசிங் கேள்வி எழுப்பினார்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா தான் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் பெற்றுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி சுதாகரன், ஆகியோர் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் நடைபெற்று வருகிறது.

 

வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் தரப்பு வாதங்கள் முடிந்துவிட்டன. கம்பெனிகள் தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. வழக்கு விசாரணை கிளைமாக்ஸை எட்டியுள்ளது. விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுவதால் போயஸ் கார்டன் வட்டாரத்தில் மீண்டும் திகில் பரவ ஆரம்பித்துள்ளது.

 

விடுமுறைக்குப் பின் விசாரணை மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 35 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் சிலநாட்கள் அரசு வழக்கறிஞரான பவானி சிங் விடுமுறை கேட்டார். இதை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு, நேற்று மீண்டும்

 

கம்பெனிகளுக்கு நிலங்கள் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இயக்குனர் மற்றும் பங்குதாரர்களாக உள்ள மெடோ ஆக்ரோ பாரம் மற்றும் ரிவர்வே ஆக்ரோ பாரம் ஆகிய நிறுவனங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 400 ஏக்கர் நிலமும், நெல்லை மாவட்டம், திருவைகுண்டம் தாலுகா, மீராகுளம் மற்றும் சேரகுளம் ஆகிய கிராமங்களில் ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் வாங்கியதாக தெரிவித்தார்.

 

ஜெயலலிதாவின் பணம் மேலும் அந்த நிலம் வாங்குவதற்கான பணம் முதல் குற்றவாளியான ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகம் சேர்த்த பணத்தை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

 

பணம் கொடுப்பட்டதன் ஆதாரம் அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நிலம் வாங்க முதல் குற்றவாளியின் பணம் எப்படி பயன்படுத்தப்பட்டது? நிலம் கொடுத்தவர்களுக்கு பணமாக கொடுக்கப்பட்டதா? அல்லது காசோலை, வங்கி வரையோலையாக கொடுக்கப்பட்டதா? அப்படி கொடுத்திருந்தால் அதற்கான ஆதாரங்கள் கொடுங்கள் என்றார். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், என்னிடம் ஆதாரமுள்ளது. அதை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்கிறேன் என்றார்.

 

கணக்கு கொடுத்த ஜெ அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நான் கேட்கும் எந்த கேள்விக்கும் உடனடியாக பதிலளிக்காமல், தாமதம் செய்கிறீர்கள், எந்த குற்றத்திற்கும் சட்டப்படியான ஆதாரமும், சாட்சி இருந்தால் மட்டுமே தீர்ப்பளிக்க முடியும்? இதை புரிந்துகொண்டு செயல்படுங்கள். மேலும் ஜெயலலிதா கடந்த 1971ம் ஆண்டு தன்னிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சொத்து இருப்பதாக வருமானவரித்துறையிடம் கணக்கு கொடுத்துள்ளார்.

 

தாக்கல் செய்யவில்லை மேலும் அவருக்கு வழக்கு காலத்திற்கு முன் எவ்வளவு சொத்து இருந்தது? வழக்கு காலம் மட்டும் அவரது பெயரில் இருந்த சொத்து எவ்வளவு? என்ற விவரம் தாக்கல் செய்யும்படி பலமுறை நான் கேட்டும், இரு தரப்பும் தாக்கல் செய்யவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார். மேலும் தேவையில்லாமல் சாட்சிகளின் வாக்குமூலத்தை படித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். முக்கிய சாட்சிகளை மட்டும் எடுத்து கூறுங்கள் என்று கூறினார்.

 

டிவி நிறுவனம் அதை தொடர்ந்து வக்கீல் பவானிசிங் சூப்பர்-டூப்பர் டி.வி. நிறுவனம் தொடர்பான சாட்சியை படித்தபோது, குறுக்கிட்ட நீதிபதி அரசியல் கட்சி தலைவர்கள் டி.வி.நிறுவனம் தொடங்குவது தவறா? அப்படி தவறு என்றால் அதற்கான காரணத்தை ஆதாரமாக கொடுங்கள் என்றார். அதற்கு பதிலளித்த வக்கீல் சிங், நாங்கள் டி.வி.சேனல் தொடங்கியதாக குற்றம்சாட்டவில்லை. கேபிள் டி.வி. நிறுவனம் தொடங்கியதாக மட்டுமே கூறியுள்ளோம் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இரண்டும் ஒன்று தான் என்றார்.

 

சொத்து வாக்கிய விபரம் மேலும் ஜெயலலிதா உள்பட குற்றவாளிகள் தமிழகம், ஆந்திர மாநிலத்தில் நிலம் வாங்கியதாக கூறியுள்ளீர்கள். மும்பை, கொல்கத்தா மாநகரங்களில் ஏதாவது சொத்து வாங்கியுள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வக்கீல் சிங் இல்லை என்று பதிலளித்தார். மேலும் நான் கேட்கும் பல ஆவணங்களை கொடுக்கவில்லை.

 

தீர்ப்பு வழங்கப்பட்டது எப்படி? தனி நீதிமன்றத்திலும் இப்படி தான் செயல்பட்டீர்களா? போதிய ஆதாரங்களை பரிசீலிக்காமல் தனிநீதிமன்றம் சந்தேகத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, கம்பெனிகளை சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாக கூறுங்கள் என்றார். மேலும் தனிநீதிமன்றத்தில் தி.மு.க. பொதுசெயலாளர் க.அன்பழகன் சார்பில் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்த ஆவணங்களை டிவிஏசி அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுகொண்டார்.

 

வேறு யாருக்காவது தண்டனை விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதி, இந்திய ஊழல் தடுப்பு சட்டம் 1988, 13 (1) (இ) பிரிவின் கீழ் நாட்டில் எந்த மாநில முதல்வர்களோ அல்லது அமைச்சர்களோ வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்த வழக்கு தொடுத்து தண்டனை வழங்கப்பட்டுள்ளதா? என்று கேட்டார்.

 

ஜெயலலிதா மட்டுமே அதற்கு பதிலளித்த வக்கீல் பவானிசிங், இதற்கு முன் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இருந்த மாயாவதி மீது வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்தாக வழக்கு தொடரப்பட்டது. ஆனால், போதிய சாட்சி, ஆதாரமில்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் வந்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், நாட்டில் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்ற ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே என்றார்.

 

திருடன் திருடிய பணம் தொடர்ந்து வாதிட்ட பவானிசிங், நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்திற்காக சந்தா மூலம் ரூ.14 கோடி திரட்டியதாக குற்றவாளிகள் தரப்பில் சொல்வது சட்ட விரோதமானது. சந்தா வசூலிக்க வேண்டுமானால் முறைப்படி இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற வேண்டும். அதை செய்யவில்லை. மேலும் திரட்டிய பணத்திற்கான வருமான வரியை வழக்கு காலத்தில் செலுத்தியுள்ளனர். திருடன் ஒருவன் தான் திருடிய பணத்தை பாதுகாத்து கொள்வதற்காக வருமான வரி செலுத்தினால் ஏற்றுகொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

 

தீர்ப்பு எப்போது? பவானிசிங்கின் வாதம் இன்றும் தொடர்கிறது. அவரது வாதம் முடிந்த பின்னர், நீதிமன்றத்தை நீதிபதி ஒத்தி வைக்கலாம். கர்நாடக உயர் நீதிமன்ற விதிமுறைகளின்படி ஒரு வழக்கின் விசாரணை முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும் என்பது முக்கிய விதி. இதைச் சொல்லித்தான் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பை விரைந்து அளித்தார். அதேபோல் நீதிபதி குமாரசாமியும் தனது தீர்ப்பை விரைந்து அளிக்கத் திட்டமிட்டுள்ளாராம். அநேகமாக மார்ச் இறுதிக்குள் தீர்ப்பு வாசிக்கப்படலாம் என்று பெங்களூரு நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தடைகள் என்ன? அரசு வழக்கறிஞராக இருக்கும் பவானி சிங்கை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்திருந்த மனு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்க்கும் மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரியும் க. அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

 

உச்சநீதிமன்றத்தில் விசாரணை உச்ச நீதிமன்றம் கூறும் தீர்ப்பை பொறுத்து இந்த வழக்கின் போக்கு மாற வாய்ப்புள்ளது. ஒருவேளை பவானி சிங்கை மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டால், புதிய அரசு வழக்கறிஞர் வந்து, வாதங்களை வைத்து, அவரிடம் நீதிபதி கேள்விகளைக் கேட்டு மீண்டும் காலதாமதம் ஆக வாய்ப்பு உள்ளது. உச்சநீதிமன்றம் எந்த தடையையும் போடவில்லை எனில் மார்ச் இறுதிக்குள் தீர்ப்பு வருவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. எனவே தீர்ப்பை எண்ணி மீண்டும் திகிலடித்துப்போயுள்ளது போயஸ்கார்டன்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-s-poser-da-case-222179.html

  • தொடங்கியவர்

அரசு வழக்கறிஞர் பவானி சிங் இருக்கையில் மந்திரித்த எலுமிச்சை: ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கில் பரபரப்பு

 

பெங்களூர்: மாஜி முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் இருக்கையில் கறுப்பு மற்றும் வெள்ளை மை தடவிய எலுமிச்சை பழம் வைக்கப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டு வருகிறார்.

 

விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலத்தைப் படிக்கும்போது நீதிபதி கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் பவானி சிங் பதில் சொல்லாததால் ஊடகங்கள் பவானி சிங்கை வறுத்தெடுத்து வருகின்றன. அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி கண்டனம் என்று வெளியிடுகின்றன. இதனையடுத்து நீதிபதி குமாரசாமி பத்திரிகைகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். சில நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் கடந்த 4ம் தேதியில் இருந்து வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஒவ்வொரு வாக்குமூலத்தை வாசிக்கும் போதும் நீதிபதி மீண்டும் கேள்விகள் கேட்டு அரசு வழக்கறிஞரின் பதிலையும் பதிவு செய்து வருகிறார்.

 

யாகம், பூஜை வழக்கின் போக்கு எந்தப்பக்கம் திரும்பும் என்று ஊகிக்க முடியாத நிலையில் பவானிசிங் மேஜையில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

 

எலுமிச்சை புதன்கிழமையன்று பவானி சிங்கின் இருக்கையில் கறுப்பு மற்றும் வெள்ளை மை தடவிய எலுமிச்சை பழம் வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, அதை யார் கொண்டு வந்து வைத்தார்கள் என தெரியவில்லை என்று கூறினார்.

 

நேரா உருட்டுங்க இதே போல முன்பு ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் சிலர் நீதிபதிக்கு நேராக அமர்ந்து கொண்டு தங்களது பாக்கெட்டில் மந்திரித்த எலுமிச்சை பழத்தை உருட்டுவதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

சண்டி யாகம் வழக்கில் இருந்து விடுபடமகா சண்டியாகம் எல்லாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாயமந்திரம் என்று இறங்குவார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/tantric-lemon-creates-flutter-spp-s-office-jaya-case-222241.html

  • தொடங்கியவர்

ஜெ.வின் பையனூர், சிறுதாவூர், கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: கர்நாடகா ஹைகோர்ட்

 

பெங்களூர்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பையனூர், சிறுதாவூர் மற்றும் கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தனி பெஞ்ச் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது.

 

ஜெ.வின் பையனூர், சிறுதாவூர், கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: கர்நாடகா ஹைகோர்ட் அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவிடம் இருந்து மற்றவர்களுக்கு பணம் சென்றதற்கு நேரடி ஆதாரம் இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைமுகமான ஆதாரங்களையும், ஆவணங்களையும் கொண்டு ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடுத்தனர். அவர்கள் எனக்கு கொடுக்கும் ஆவணங்களை கொண்டே என்னால் வாதிட முடியும் என்றார். இதையடுத்து பவானி சிங், சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களாவை மதிப்பீடு செய்த பொறியாளர் கோவிந்தன் அளித்த அரசு தரப்பு சாட்சியத்தை வாசித்தார். அதில், 1993-ல் பையனூரில் சசிகலா இரண்டு அடுக்கு பங்களா கட்டினார்.

 

பிறகு அந்த கட்டிடம் பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு புதிய சலவை கற்கள் பதிக்கப்பட்டன. இதற்காக மும்பையில் இருந்து இத்தாலி சலவை கல், வெள்ளை சலவை கல் உள்ளிட்ட பல வகையான விலை உயர்ந்த சலவை க‌ற்கள் வாங்கப்பட்டன. பையனூர் பங்களாவின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி ஆகும் என்றார். அப்போது குறுக்கிட்ட சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், பையனூர் பங்களா, போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உள்ள கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.29 கோடி என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளனர். அங்கு சுமார் ரூ.100, 150 விலையுள்ள சலவை கற்களை எல்லாம் ரூ.5,919 என மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளனர் என்றார். அதற்கு பவானி சிங், இவ்வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அதிகாரிகள் சரியாக விசாரிக்கவில்லை.

 

கட்டிடம், நிலத்தை மிகைப்படுத்தி மதிப்பீடு செய்தனர். இதனால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவர்களது மதிப்பீட்டை ஏற்காமல் 20 சதவீதம் சலுகை கொடுத்தது. வழக்கை பதிவு செய்துவிட்டு குற்றச்சாட்டை தேடியுள்ளனர் என்றார். உடனே நீதிபதி குமாரசாமி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சம்பந்தத்தை அழைத்து, எதன் அடிப்படையில் சொத்துகளை மதிப்பீடு செய்தீர்கள். கட்டிடங்களை மதிப்பிட்ட பொறியாளர்களில் 2 பேரை வருகிற 9-ம் தேதி நீதிமன்றத்திற்கு வர சொல்லுங்கள். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எதற்காக ஜெயலலிதா தரப்புக்கு மதிப்பீட்டில் 20% சலுகை அளித்தது? 50% முதல் 60% வரை தந்திருக்கலாமே? என்றார்.

 

இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங், இவ்வழக்கில் சாட்சியம் அளித்துள்ள பொறியாளர்களின் வாக்குமூலம் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கிறது. அதையெல்லாம் படித்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை'' எனக் கூறி,தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தத்தை படிக்க வைத்தார். இறுதியில் ஜெயலலிதாவின் பையனூர், சிறுதாவூர் மற்றும் கொடைக்கானல் சொத்துகளை மறுமதிப்பீடு செய்ய நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/reassess-value-jayalalithaa-properties-says-high-court-222225.html

  • தொடங்கியவர்

சொத்துக்குவிப்பு வழக்கு: பவானிசிங் வாதம் நிறைவு- நெருங்கும் கிளைமேக்ஸ் 

 

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து இன்று மாலையில் தீர்ப்பு தேதியை நீதிபதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 38-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

 

பவானிசிங் நிறைவு அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் 6-வது நாளாக இறுதி வாதத்தில் ஈடுபட்டார். உணவு இடைவேளைக்கு முன்னதாக இறுதி வாதத்தை நிறைவு செய்தார் .

திருப்தியில்லையே நீதிபதி குமாரசாமி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பதில் அளிக்காததால் அவரது வாதம் திருப்தி அளிப்பதாக இல்லை என நீதிபதி கூறினார்.

 

எழுத்துப்பூர்வ பதில் அதற்கு பதிலளித்த பவானி சிங், "பதில் அளிக்காத கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கிறேன். இப்போது என் வாதத்தை நிறைவு செய்து கொள்கிறேன்" என தெரிவித்தார்.

இறுதி தொகுப்புரை பவானிசிங்கிற்குப் பின்னர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர் ராவ் இறுதி தொகுப்புரை வழங்கி வருகிறார். இன்று மாலையே அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடையும் என்று கூறப்படும் நிலையில் வழக்கின் மீது தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/da-appeal-case-end-soon-spp-completes-his-argument-222256.html

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையும் இல்லைக் குட்டியும் இல்லை.
இவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தும் என்ன பயன்.
கோடு கேஸ் என்று அலையும் நிலைதான்.

  • தொடங்கியவர்

ஜெ. சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு தேதி... நீதிபதி குமாரசாமி அறிவிப்பு

 

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றுள்ளதையடுத்து வழக்கு கிளைமேக்ஸை எட்டியுள்ளது. தீர்ப்பு தேதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி கூறியுள்ளதால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 38-வது நாளாக இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் வாதங்கள் நிறைவு பெற்றதையடுத்து கடந்தவாரம் அரசு வழக்கறிஞர் பவானிசிங் தனது இறுதிவாதத்தை தொடங்கினார். அவ்வப்போது நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பவானிசிங், சில நாட்கள் விடுமுறை கேட்டார்.

 

பவானிசிங் நிறைவு சிலதின விடுமுறைக்குப் பின்னர் புதன்கிழமை முதல் வாதம் செய்த பவானிசிங் ஆறாவது நாளாக இன்றும் இறுதிவாதம் செய்தார். ஒருவழியாக உணவு இடைவேளைக்கு முன்னதாக தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார் பவானிசிங்.

திருப்தியில்லையே நீதிபதி குமாரசாமி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் பதில் அளிக்காததால் அவரது வாதம் திருப்தி அளிப்பதாக இல்லை என நீதிபதி கூறினார்.

 

இறுதி தொகுப்புரை பவானிசிங்கிற்குப் பின்னர் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர் ராவ் இறுதி தொகுப்புரை வழங்கினார். அனைத்து தரப்பு வாதங்களும் ஒருவழியாக நிறைவடைந்தன.

 

தீர்ப்பு எப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அடுத்த வாரம் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

அரசியலில் பரபரப்பு நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பினை அடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா தனது எம்.எல்.ஏ பதவி, முதல்வர் பதவியை இழந்தார். இதனையடுத்து தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார். நீதிபதி குமராசாமி அளிக்கப்போகும் தீர்ப்புதான் அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் தீர்ப்பாகும். தண்டனையில் இருந்து தப்புவாரா ஜெயலலிதா? அல்லது மீண்டும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கே செல்வாரா? அடுத்தவாரம் தெரியவரும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/da-appeal-case-end-soon-spp-completes-his-argument-222256.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.