Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸ் தாக்குதல்: மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு, மசூதிகள் மீதும் தாக்குதல்

Featured Replies

150108043724_paris_protrst_charlie_hebdo
 
பாரிஸ் தாக்குதலில் கொல்லப்படோர்க்கு அஞ்சலி நிகழ்வு
 
பிரான்சில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மானுவெல் வால்ஸ் கூறியிருக்கிறார்.
நையாண்டி இதழான , " சார்லி எப்தோ" மீது நடத்தப்பட்ட துப்பாக்கித்தாக்குதல் சமப்வம் தொடர்பாக போலிசார் இரண்டு சகோதரர்களைத் தேடிவருகின்றனர்.
சேட் அண்ட் ஷெரிப் குவாச்சி ஆகிய இரு சந்தேக நபர்களையும் ஏற்கனவே உளவுத்துறையினர் தெரிந்தே வைத்திருந்தார்கள் வால்ஸ் கூறினார்.
ஷெரிப் குவாச்சி இரக்குக்கு ஜிஹாதி போராளிகளை அனுப்பியது தொடர்பான வழக்கொன்றில் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தார்.
 
150108022522_kouachi_brothers_624x351_fr
பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள்
 
இந்த இரண்டு பேருடன் தொடர்புடைய ஏழு பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
மூன்றாவது சந்தேக நபர் தான் சம்பவம் நடந்த போது வேறு இடத்தில் இருந்ததாகக் கூறி சரணடைந்திருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
 
மற்றொரு தாக்குதல்
இதனிடையே, பாரிஸுக்கு தெற்கே இன்று வியாழன் காலை நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்திருப்பதாக பிரெஞ்சு போலிசார் கூறினர்.
இதில் ஒருவர் போலிஸ் அதிகாரி என்றும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பிரெஞ்சு உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காஸெனெவு, இந்த தாக்குதலை நடத்தியர் இன்னும் பிடிபடவில்லை என்று கூறினார். இந்த சம்பவமும் நேற்று பாரிஸில் நடந்த சம்பவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை.
மசூதிகள் மீது தாக்குதல்
 
பிரான்ஸில் 'சார்லி எப்தோ' இதழ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, பிரான்சின் பல பகுதிகளில் பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளதாக பிரான்சில் நீதித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாரிசுக்கு மேற்கே லெ மான்ஸ் பகுதியில் உள்ள மசூதி ஒன்று கையெறி குண்டுகளால் தாக்கப்பட்டது.
பிரான்சில் இந்த சம்பவத்துக்கு பிறகு தங்கள் சமுதாயத்துக்கு எதிரான எதிர்தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என்று அஞ்சுவதாக சில முஸ்லீம் பிரமுகர்கள் கூறியிருக்கின்றனர்.
 
அஞ்சலி நிகழ்வுகள்
இதனிடையே, பிரான்சில் , நேற்று பாரிஸ் தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் முகமாக, தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. நண்பகலில் ஒரு நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்படும். நோத்ர டேம் தேவாயலயத்தின் மணிகள் முழங்கும்.
நேற்றிரவு, பல்லாயிரக்கணக்கானோர் பிரான்ஸ் நெடுகிலும் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றனர். பிரான்ஸில் முஸ்லீம் தலைவர்கள் இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர். உலகெங்கும், பல தலைவர்கள் பாரிஸ் தாக்குதல்களைக் கண்டித்துள்ளனர்.
 
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இது ஒரு வர்ணிக்க முடியாத கொடூரம் என்று கூறினார்.
 
சிட்னியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலை ஒப்புமை காட்டிப் பேசிய அவர், இஸ்லாமிய அரசு அமைப்பு உலகின் மீது போர் தொடுத்திருக்கிறது என்றார்.
மலேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசேன் இந்தக் கொலையாளிகள் இஸ்லாத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்றார்.
 
ஆனால் இரானின் பிரஸ் டிவி ஊடகம் வேறு மாதிரியான கருத்தை வெளியிட்டது.
பிரான்ஸில் அதிகரித்துவரும் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துணர்வு குறித்து பிரெஞ்சு அரசு கடைப்பிடித்துவரும் மௌனம்தான் நாட்டின் முஸ்லீம்கள் தாங்கள் அந்நியப்படுவதாக உணர்வதற்குக் காரணம் என்று அது கூறியது.
 
  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டிலிருந்து ஐஎஸ் ஐஎஸ் சுடன் இணைந்து போராட சுமார் நாற்பதுபேரளவில்  ஈராக் சென்றதாக நாட்டின் புலனாய்வுத்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதில் ஓரிருவர் திரும்பவும் வந்துவிட்டதாகவும் தங்கள் கண்காணிப்பில் உள்ள இவர்களை எதிர்காலத்தில் என்ன செய்வது என் அரசு திண்டாடி வருகின்றது. மீண்டும் சமூகத்துடன் இணைத்துக்கொண்டால், இவர்களது எதிர்காலச் செயற்பாடு எப்படி இருக்கும் என எதிர்வுகூறமுடியாது என அச்சம் கொள்கின்றனர்.

 

எனது பக்கத்துவீட்டிலோ அன்றேல் அயலவனாகவோ ஒரு ஐஎஸ் ஐஎஸ்  தீவிர இஸ்லாமிய மதப்பயங்கரவாதி இருப்பதை நான் விரும்பவில்லை.

alqaeda_image_001.jpg

 

இன்று டுவிட்டர் பக்கத்தில் அல்கொய்தா அமைப்பினர் புதிய படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதில் பல்வேறு தலைவர்கள், பிரமுகர்களின் படங்கள் மற்றும் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக இப்படத்தில் சார்லி ஹெப்டோ இதழ் ஆசிரியரின் படத்தை கிராஸ் செய்து வெளியிட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டிலிருந்து ஐஎஸ் ஐஎஸ் சுடன் இணைந்து போராட சுமார் நாற்பதுபேரளவில்  ஈராக் சென்றதாக நாட்டின் புலனாய்வுத்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதில் ஓரிருவர் திரும்பவும் வந்துவிட்டதாகவும் தங்கள் கண்காணிப்பில் உள்ள இவர்களை எதிர்காலத்தில் என்ன செய்வது என் அரசு திண்டாடி வருகின்றது. மீண்டும் சமூகத்துடன் இணைத்துக்கொண்டால், இவர்களது எதிர்காலச் செயற்பாடு எப்படி இருக்கும் என எதிர்வுகூறமுடியாது என அச்சம் கொள்கின்றனர்.

 

எனது பக்கத்துவீட்டிலோ அன்றேல் அயலவனாகவோ ஒரு ஐஎஸ் ஐஎஸ்  தீவிர இஸ்லாமிய மதப்பயங்கரவாதி இருப்பதை நான் விரும்பவில்லை.

 

 

கவனம் அப்பா என மகனிடமிருந்து வந்த செய்தி அறிக்கை

 

Gare du Nord க்கு பக்கத்தில் கடை இருப்பதால்..

 

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

One of the 3 suspects surrenders in Paris Terror Attack

https://www.youtube.com/watch?v=UsC9FXRQPbM#t=21

 

 

நேற்றிரவு இவர்களுடன் தொடர்புடைய 18 வயது மாணவன் ஒருத்தன் சரணடைந்துள்ளான்

அதைத்தான்  சொல்கிறார்கள்

காவல்த்துறையின் சந்தேகம் இவர்மீது அறிவிக்கப்படதை அறிந்து

தான் சரணடைந்ததாகவும் சந்தேக நபர்கள் தனது உறவினர்கள் என்றும்

மற்றம்படி தனக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனவும் மறுத்தள்ளதுடன்

சம்பவம் நடந்த நேரம் தான் பாடசாலையில் இருந்ததாகவும் கூறியுள்ளார்

அதை இவரது பாடசாலை  நண்பர்கள் உறுதிப்படத்தியும் உள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்
இவர்களும் அவர்களும் மாறி மாறி சுடுகிறார்கள் ?
 
யார் பயங்கரவாதிகள்?
யார் நல்லவர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.