Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்திரேலியா ,இங்கிலாந்து, இந்தியா முத்தரப்பு தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

முத்தரப்பு போட்டி: இந்தியா - ஆஸ்திரேலிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
 

 

முத்தரப்பு ஒருநாள் தொடரில், இந்தியா ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற ஆட்டம், மழையால் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழக்கப்பட்டன.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இன்று சிட்னியில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸி. அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.

 

 

இரண்டு ஓவர்கள் முடிந்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டதால், 44 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. துவக்க வீரர்கள் ரஹானே, தவான் இருவரும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். 7-வது ஓவரில் தவான் 8 ரன்களுக்கு ஸ்டார்க் வீசிய பந்தில் வீழ்ந்தார்.

அடுத்து களமிறங்கிய ராயுடு சற்று வேகமாக ரன் சேர்க்க முற்பட்டார். அவர் 24 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது மார்ஷின் பந்தில் அதிரடியான ஷாட் ஒன்றை அடிக்க முற்பட, டேவிட் வார்னர் அதை அற்புதமாக பிடித்து ராயுடுவை ஆட்டமிழக்கச் செய்தார்.

 

 

தொடர்ந்து கோலி களமிறங்க, அடுத்த சில ஓவர்களிலேயே மீண்டும் மழை வர, ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை ஓயாமல் இருக்க, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு, இந்த இரு புள்ளிகளால் சாதகமே. இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தை இந்தியா வென்றால், இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/article6823756.ece
 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்கு 0 புள்ளிதான் கிடைத்திருக்கும்.. :D

  • தொடங்கியவர்

கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்களை அடிக்க வேண்டும்: தோனி
 

 

பெர்த்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டத்தில் நாளை இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் சூழ்நிலை நிலவுகிறது.

 

இந்நிலையில் போட்டிக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் தோனி கூறியதாவது:

ஜோடி சேர்ந்து ரன்களை எடுப்பதுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் குவிப்பை கொடுக்கும். போதிய ரன்கள் இல்லாமல் 2 போட்டிகளில் பந்து வீச நேரிட்டது. வீரர்கள் தங்களது சிறு தொடக்கத்தை பெரிய இன்னிங்சாக மாற்றத் தவறுகின்றனர். இந்த 2 போட்டிகளில் இதனை நாங்கள் செய்யவில்லை. கடைசி ஓவர்களில் அதிக ரன்களை எடுக்க முடியாமல் போனது.

 

இதனை சரி செய்ய பல உத்திகளை, சேர்க்கைகளை பரிசீலனை செய்து வருகிறோம்.

மேலும் விராட் கோலியை 4-ஆம் நிலையில் களமிறக்குவதற்குக் காரணம், ஜடேஜா இல்லாததால் அக்சர் படேலை அணியில் விளையாடச் செய்கிறோம், அவர் துணைக் கண்டத்தில் விளையாடியவர். எனவே மிடில் ஆர்டர் மற்றும் கீழ்வரிசை பேட்டிங்கை கோலியைச் சுற்றி திட்டமிட்டுள்ளோம்.

நான், மற்றும் ரெய்னா அப்போதுதான் அடித்து ஆட முடியும், பெரிய ஷாட்களுக்குச் செல்ல முடியும். கோலி ஒரு முனையைத் தக்க வைத்தால் மறு முனையில் நானும் ரெய்னாவும் ஷாட்களை விளையாட முடியும்.

 

 

கடைசி 10 அல்லது 12 முக்கிய ஓவர்களில் ரன்களை கூடியமட்டும் அதிகம் குவிப்பது நல்லது. ஆனால் இந்த 2 போட்டிகளில் அதனைச் செய்ய முடியாமல் போனது. விராட் கோலியை 4-ஆம் நிலையில் களமிறக்க இதுவே காரணம்.

 

கடைசி 10 ஓவர்கள் ரன் குவிப்பு மிக முக்கியமானது அதற்காக பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.” என்றார் தோனி.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும் மிகப்பெரிய வாய்ப்பை பெற இந்தியாவை நாளை வீழ்த்த வேண்டும், அதற்கு மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும், கடந்த 3 நாட்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். அணி வீரர்கள் இறுதிக்குள் நுழைந்து ஆஸி.-யைச் சந்திக்க ஆர்வமாக உள்ளனர்.’ என்றார்
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-10-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6834541.ece

  • தொடங்கியவர்

"ஒன் டவுன்"ல இறக்கியும் சோபிக்காத கோஹ்லி.. !

 

பெர்த்: அணியில் எந்த இடத்தில் ஆடுவது என்பது குறித்து எந்த வீரரும் கவலைப்படக் கூடாது. ஒட்டுமொத்த நல்லதை மட்டுமே அவர்கள் பார்க்க வேண்டும். இதற்காக தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்று விராத் கோஹ்லிக்கு கேப்டன் டோணி மறைமுகமாக கொட்டு வைத்துள்ளார். இந்த நிலையில் கோஹ்லியை இன்று ஒன் டவுனில் அதாவது 3வது வீரராக களம் இறக்கியும் கூட அவர் சொதப்பி விட்டார். இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெறும் 8 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.

 

 

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி 3வது வரிசையில் இறங்கி ஆடவே விரும்புவார். ஆனால் அவரை டோணி, தற்போது 4வது இடத்திற்குத் தள்ளி விட்டுள்ளார். அந்த இடத்தில் ஆட முடியாமல் கோஹ்லி திணறி வருகிறார். நடப்பு முத்தரப்புத் தொடரிலும் அவர் 4வது இடத்தில் சரியாக ஆட முடியாமல் தள்ளாடிக் கொண்டுள்ளார். முதல் 3 போட்டிகளிலும் அவர் மொத்தமாக 16 ரன்களே எடுத்திருந்தார். கடந்த மூன்று போட்டிகளிலும் அவர் சரிவர ஆடாமல் அவுட்டாகி விட்டார். கோஹ்லியை 3வது வரிசையில் இறக்க வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர்.

 

 

ஆனால் அந்த இடத்தை கோஹ்லி மறந்து விட வேண்டும் என்று கேப்டன் டோணி அதிரடியாக கூறியுள்ளார். பெர்த் நகரில் இன்று தொடங்கிய இங்கிலாந்துடனான மோதலுக்கு முன்னதாக அவர் அளித்த பேட்டியில், எந்த வீரர் எந்த இடத்தில் ஆடுவது என்பது இங்கு முக்கியமல்ல. அணியின் வெற்றிக்கு எது நல்லது என்பதுதான் இங்கு முக்கியமானது. எனவே நமக்குப் பிடித்தமான இடத்தில் ஆட வேண்டும் என்று வீரர்கள் ஆசைப்படக் கூடாது. தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். விளையாடும் இடத்தை விட விளையாடும் ஓவர்கள்தான் முக்கியமானது.

 

தொடக்க ஆட்டக்காரர்கள் 38வது ஓவர் வரை நின்று விட்டார்கள் என்றால், பின்னால் வரும் வீரர்கள் 7வது இடத்தில் விளையாடவே விரும்புவார்கள். யாரும் 3வது இடத்திற்கு ஆசைப்பட மாட்டார்கள் என்றார் டோணி. 3வது வீரராக இறக்கியும் சொதப்பிய கோஹ்லி இருப்பினும் இன்றைய இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் இந்தியா சொதப்பி வருகிறது. கோஹ்லியை இன்று ஒன்டவுனில் இறக்கினார் டோணி. ஆனாலும் கோஹ்லி சரியாக ஆடவில்லை. வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/boss-mahendra-singh-dhoni-hints-virat-kohli-has-sacrifice-219986.html

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கர் தவான் இந்திய ஆடுகளங்களில் ஓட்டங்களை குவிப்பவர் போல.. அவுஸில் அந்தத் தடவு தடவுறார்.. :o இவரும் உலகக்கிண்ணப் போடடிகளில் விளையாடுறார்.. :icon_idea:

  • தொடங்கியவர்

பேட்டிங்கில் மீண்டும் சொதப்பி கோட்டைவிட்ட இந்தியா: போராடி இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

 

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது. பெர்த் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து.

பெர்த்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் கடைசி லீக் போட்டியில் 201 ரன்கள் இலக்கைத் துரத்திய இங்கிலாந்து போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

 

 

ஆனாலும் 201 ரன்களை எடுக்க இங்கிலாந்து திணறியது. கடைசியில் டெய்லர், பட்லர் இணைந்து ஸ்கோரை 191 ரன்களுக்குக் கொண்டு வந்தும் இருவரும் ஆட்டமிழந்தவுடன் சிறு பதட்டம் நிலவியது. கடைசியில் 46.5 ஓவர்களில் 201/7 என்று 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

66/5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை கதிகலக்கிய இந்திய அணி அதன் பிறகு ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் டெய்லர் ஆகியோரின் நிதானமான பேட்டிங்கை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜோஸ் பட்லர் 21 ரன்களில் இருந்த போது ரெய்னா ஸ்லிப்பில் விட்ட கேட்ச் இந்திய அணியின் வாய்ப்புகள் ஆணியறைந்து விட்டது. ஒருவேளை இந்த கேட்சைப் பிடித்திருந்தால் நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

 

 

பவர் பிளே 36-வது ஓவர் தொடங்கும் போது இங்கிலாந்து 141/5 என்று வெற்றியின் சாயலை அடைந்திருந்தது. பவர் பிளேயில் ஏதாவது டிரிக் நிகழுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொகமது ஷமி, அக்சர் படேல் ஆகியோர் வீசிய ஓவர்களை ஜேம்ஸ் டெய்லர், ஜோஸ் பட்லர் நிதானமாகக் கையாண்டனர். காரணம் தேவைப்படும் ரன் விகிதம் எப்போதும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. இது போன்ற சூழல்களில் தேவைப்படும் தீவிரம் இந்திய பவுலர்களிடத்தில் இல்லை. ஜடேஜா நீண்ட நாட்கள் கழித்து வந்து பந்து வீசியதில் அவரால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

 

 

ஒரு ஆட்டம் மழை காரணமாக நடைபெறாததால் 2 புள்ளிகள் பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றால் இறுதிக்குச் செல்லும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் 200 ரன்களையே எடுத்திருந்த இந்திய அணி நிச்சயம் இறுதிக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.

ஸ்டூவர்ட் பின்னியின் 3 விக்கெட்டுகள்:

அந்த அணியின் முக்கிய வீரர் இயன் பெல் 10 ரன்கள் எடுத்திருந்த போது மோஹித் சர்மா வீசிய பந்து சரேலென உள்ளே ஸ்விங் ஆனதோடு தாழ்வாக வந்தது. பெல் அதனை கால்காப்பில் வாங்க நடுவர் எல்.பி. என்று தீர்ப்பளித்தார்.

 

மொயின் அலி, ரூட் ஆகியோர் 14/1 என்ற நிலையிலிருந்து ஸ்கோரை 40 ரன்களுக்கு உயர்த்தினர். மொயீன் அலி தனது வழக்கமான பாணி ஆட்டத்தை ஆட முடியவில்லை. பிட்ச் ஒரு காரணம், பந்து வீச்சும் ஒரு காரணம். 17 ரன்களை அவர் 34 பந்துகளில் எடுத்திருந்த போது அக்சர் படேல் பந்தை தேவையில்லாமல் மேலேறி வந்து தூக்கி அடிக்க அம்பாட்டி ராயுடு அபாரமாக கேட்ச் பிடித்தார்.

மற்றொரு அபாய வீரரான ஜோ ரூட் 3 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டூவர் பின்னி வீசிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை டிரைவ் ஆட அதனை கட்டுப்படுத்தத் தவறினார் பந்து நேராக பின்னியிடமே கேட்ச் ஆனது. 50 ரன்கள் எடுக்கும் முன்னரே 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.

கேப்டன் மோர்கன் 2 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டூவர்ட் பின்னி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை வீச மோர்கன் தனது ஷாட்டை சற்றே செக் செய்ய பந்து மிட் ஆனில் தவனுக்கு எளிதான கேட்சாக முடிந்தது.

பொபாரா 4 ரன்கள் எடுத்த நிலையில் பின்னி வீசிய பந்தை கட் செய்தார் ஆனால் பாயிண்டில் நெஞ்சுயர கேட்சாக அது ஜடேஜாவிடம் தஞ்சமடைந்தது.

பேட்டிங்கில் சொதப்பிய ரெய்னா கேட்சையும் கோட்டை விட்டார்:

 

 

66/5 என்று திணறி வந்த நிலையில் ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் டெய்லருடன் இணைந்து ஸ்கோரை 101 ரன்களுக்கு உயர்த்தினார் அப்போது பட்லர் 21 ரன்களில் இருந்த போது 27-வது ஓவரை ஜடேஜா வீச 4-வது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றார் பட்லர், பந்து ஆனால் பந்து ஸ்லிப்பில் கேட்சாகச் செல்ல ரெய்னா அதனை கோட்டை விட்டார்.

ஏற்கெனவே இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி பீல்டிங்கில் கோட்டை விட்டதனால் பவுண்டரி அடித்திருந்தார் பட்லர்.

இந்த பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. ஜேம்ஸ் டெய்லர் (82) ஜோஸ் பட்லர் (67) ஆகியோர் இணைந்து 23.2 ஓவர்களில் 125 ரன்களைச் சேர்த்தனர். இந்த ஜோடி மிகச்சிறப்பாக ஆடியது என்று கூறுவதை விட இலக்கு அதிகமில்லாததும், இந்தியப் பந்து வீச்சில் தாக்கம் ஏற்படுத்தும், அச்சுறுத்தும் பவுலர்கள் இல்லாததும் அவர்கள் வெற்றிக்கு உதவின என்று கூறுவதே பொருந்தும். கடைசியாக ஸ்கோர் 191 ரன்களை எட்டிய போது ஜேம்ஸ் டெய்லர், மோஹித் சர்மா பந்தை டாப் எட்ஜ் செய்ய பந்து நேராக டீப் பைன்லெக் திசையில் பின்னியிடம் கேட்சாக அமைந்தது.

 

 

தோனியின் விளங்காத கேப்டன்சி

ஜடேஜா மோசமாக வீசியும், எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையிலும் அவருக்கு 10 ஓவர்களை வீசக் கொடுத்து, ஸ்டூவர்ட் பின்னிக்கு முன்னால் தோனி முடித்ததன் ரகசியம் என்னவென்று அவரிடம்தான் கேட்க வேண்டும். குறைந்த ரன்கள் இலக்கில் தனது அன்றைய தின சிறந்த பவுலரை வீசச் செய்வதுதான் எல்லா கேப்டன்களின் அணுகுமுறையாக இருக்கும். ஆனால், நம் தோனி வித்தியாசமாக சிந்திப்பவராயிற்றே.. கடைசி வரை பின்னியை அவரது 8 ஓவர்களுக்குப் பிறகு தோனி பந்து வீச கொண்டு வரவில்லை!

 

 

கடைசியில் வெற்றிக்கு 7 ரன்கள் இருக்கும் நிலையில் ஜோஸ் பட்லர் (67 ) மொகமது ஷமி பந்தை டீப் கவர் திசையில் தூக்கி அடித்து ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இங்கிலாந்து 193/7 என்று ஆனது. கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் இணைந்தனர். இருவரும் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

8 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டூவர்ட் பின்னியின் முழு 10 ஓவர்கள் முடிக்கப்படவில்லை. மாறாக ஜடேஜா 9.5 ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்காமல் 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். மோஹித் சர்மா 10 ஓவர்கள்ல் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். படேல் நன்றாக வீசி 39 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

 

 

நன்றாகத் தொடங்கி 200 ரன்களுக்குச் சுருண்ட இந்திய அணி

பெர்த்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா 83/0 என்ற நிலையிலிருந்து 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பசுந்தரை ஆட்டக்களத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அஜிங்கிய ரஹானே, ஷிகர் தவன் தொடக்க நிச்சயமின்மைகளுக்குப் பிறகு நன்றாக விளையாடி ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.

கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுலிங்கைத் தொடங்க பந்துகள் பயங்கரமாக எகிறின. தவன் சற்றே திணறினாலும் நிற்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆடி 38 ரன்கள் எடுத்தார். முதல் பவுண்டரியே ஆட்டத்தின் 6-வது ஓவரில்தான் வந்தது. தவன் தனது வழக்கமான கட் ஷாட்டில் பவுண்டரி அடித்தார். பிறகு பிராட் பந்தில் ஒரு சைனீஸ் கட் ஷாட் பவுண்டரி. அதன் பிறகு ஒரு அபாரமான கவர் டிரைவ் என்று 65 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து கட் ஷாட்டில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வோக்ஸ் பந்தில் வெளியேறினார்.

20 ஓவர்களில் இந்தியா 83 ரன்கள் என்ற தொடக்கத்தைப் பெற்றது. டவுன் ஆர்டர் பிரச்சினையில் தோனியினால் நிலையான முடிவு எடுக்க முடியாத நிலையில் இன்று கோலி களமிறக்கப்பட்டார். ரஹானே முதலில் சாதாரண பிட்ச் என்று நினைத்து சில ஷாட்களை ஆடினார். ஆனால் அவையெல்லாம் பீல்டர்களைக் கடந்து சென்று விழுந்ததால் பிழைத்தார்.

 

 

விராட் கோலி 8 ரன்கள் எடுத்து மொயீன் அலியிடம் வீழ்ந்தார். தேவையில்லாத ஷாட். ரெய்னா, பிரிஸ்பனில் அவுட் ஆனது போலவே மொயீன் அலியை மேலேறி வந்து ஆட முயன்றார். அவர் ஆஃப் ஸ்டம்ப் லைனில் மேலேறி வந்திருந்தால் அவரது கவர் திசையில் முயற்சி செய்த ஷாட் மாட்டியிருக்கலாம். ஆனால் லெக் ஸ்டம்ப் லைனில் அவர் மேலேறி வந்ததால் எட்ஜ் எடுத்து 1 ரன்னில் அவுட் ஆனார்.

ராயுடு களமிறங்கி பிராட் பந்தில் ஒரு டென்னிஸ் ஷாட் பவுண்டரியை நேராக அடித்தார். ஆனால் தேர்ட் மேன் திசையில் அடித்து விட்டு சுலபமாக 1 ரன் எடுக்கலாம் என்ற துணைக்கண்ட முயற்சியை இந்திய வீரர்கள் கைவிட்டால் நல்லது என்றே தோன்றுகிறது. 12 ரன்கள் எடுத்து அவர் பிராட் பந்தை அவ்வாறு ஆட முயன்று கூடுதல் பவுன்ஸ் காரணமாக பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர் பிளே தொடங்க இன்னும் சில பந்துகளே இருக்கும் போது ராயுடு அவுட் ஆனார். இதுதான் பிரச்சினை. பவர் பிளேயிற்கு கொஞ்சம் பந்துகளே இருக்கும் போது நின்று ஆட முடியாமல் அவுட் ஆனால் தோனி களமிறங்கி என்ன செய்வதென்று தெரியாமல் திணறியதுதான் நடந்தது.

இடையே ரஹானே ஒரு அபாரமான ஹூக் ஷாட்டில் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்சரை அடித்து 101 பந்துகளில் 73 ரன்களை எட்டியிருந்தார். தோனியும் அவரும் நிலைத்து ஆடுவார்கள் என்ற நிலையில் ரஹானேயும் தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்து ஃபின் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

 

 

பின்னி 7 ரன்களில் மீண்டும் அதே ஷாட்டில் இம்முறை பெல்லின் அபார ஸ்லிப் கேட்சிற்கு வெளியேறினார். வலது புறம் நன்றாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் பெல். தோனி 3 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது பவுன்சர் ஒன்று அவரது ஹெல்மெட்டைத் தாக்கியது. ஆனால் ஒரு பந்து அதே லெந்த்தில் விழுந்து தாழ்வாக எல்.பி.ஆனார். ஜேம்ஸ் ஆண்டர்சன் தோனியை வழியனுப்பினார்.

ரவீந்தர் ஜடேஜா மிகவும் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தார். நீண்ட நாட்கள் கழித்து களமிறங்கிய அவர் முதலில் நின்று ஆடியிருக்க வேண்டும், பிட்ச் அவர் விளையாடும் இந்திய பிட்ச் என்று நினைத்து விட்டார் போலும். பிராட் பந்தை மேலேறி வந்து அசிங்கமாக தூக்கி அடித்து 5 ரன்னில் வெளியேறினார்.

அக்சர் படேல் 1 ரன்னில் ஃபின் பந்தில் அவுட் ஆனார். ஆனால் மொகமது ஷமி கடைசியில் சில அபாரமான ஷாட்களை விளையாடி 3 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 25 ரன்கள் எடுக்க இந்தியா 165/9 என்ற நிலையிலிருந்து 200 ரன்களை எட்டியது. மோஹித் சர்மா 7 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஃபின் 3 விக்கெட்டுகளை எடுக்க, வோக்ஸ், பிராட், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மொயீன் அலி மீண்டும் பிரமாதமாக வீசி 35 ரன்களையே 10 ஓவர்களில் விட்டுக் கொடுத்தார். இன்னும் 20 அல்லது 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் இங்கிலாந்தை கொஞ்சம் டென்ஷன் படுத்தியிருக்கலாம்.

உலகக்கோப்பை ஆட்டங்களுக்குள் இந்திய அணி தனது ஆட்டத்தை பல மடங்கு உயர்த்த வேண்டியுள்ள நிலையில் இருக்கிறது. தாக்கம் செலுத்தும் வீரர்கள் இல்லை. கோலி போன்ற வீரர்களை நிலையான டவுன் ஆர்டரில் இறங்க விடாமல் மாற்றி மாற்றி களமிறக்கி அவரது ஆட்டத்தையும் காலி செய்யும் தோனியின் கேப்டன்சி குறித்து நிறைய கேள்விகள் எழுகின்றன.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6839191.ece

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக இந்தியாவுக்காக விளையாடிய ஒரே வீரர்..

வருண பகவான். :D

  • தொடங்கியவர்

இந்த முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக இந்தியாவுக்காக விளையாடிய ஒரே வீரர்..

வருண பகவான். :D

உண்மைதான்
  • தொடங்கியவர்

ஜடேஜா தன் விக்கெட்டைத் தூக்கி எறிந்தார்: கங்குலி காட்டம்
 

 

பெர்த்தில் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஜடேஜா பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தது வர்ணனை செய்து கொண்டிருந்த கங்குலியின் கோபத்தைக் கிளப்பியது.

ஆட்டத்தின் 43-வது ஓவர் கடைசி பந்தில் தோனி, ஆண்டர்சன் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். ஜடேஜா அதற்கு அடுத்த ஓவரிலேயே தனது விக்கெட்டைத் தூக்கி எறிந்தார்.

ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தை எந்த வித இலக்குமில்லாமல் மேலேறி வந்து தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பிட்சில் இருந்த பவுன்ஸ் காரணமாக பந்து மட்டையில் சிக்காமல் ஃபின்னிடம் கேட்ச் ஆனது. 5 ரன்னில் ஜடேஜா வெளியேறினார். இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவைத் தந்தது.

 

 

அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த கங்குலி, "இப்படியொரு ஷாட்டை அவர் ஏன் ஆடினார் என்று அவரிடம் கேட்பது அவசியம். இன்னும் 7 ஓவர்கள் விளையாட வேண்டிய நிலையில் இப்படிப்பட்ட ஷாட்டை அவர் ஆட வேண்டிய அவசியம் என்ன?

 

இப்படிப்பட்ட போட்டிகளில் அவர் பொறுப்பாக ஆடக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக திகழ முடியும்.” என்ற கங்குலி அணி நிர்வாகம் அவர் ஆடிய அந்த ஷாட் தேர்வு குறித்து அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்றார்.

ஹர்ஷா போக்ளே என்ற சக வர்ணனையாளர் அவரிடம் நீங்கள் கேப்டனாக இருந்தால் என்ன கூறியிருப்பீர்கள் என்று கேட்டதற்கு கங்குலி மேற்கண்டவாறு கூறினார்
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6839409.ece

  • கருத்துக்கள உறவுகள்

ஜடேஜாவும் காரணமில்லை.. ஆடுகளமும் காரணமில்லை.. இது ஒரு உக்கல் அணி என்பதே காரணம்.. :icon_idea::D

  • தொடங்கியவர்

முத்தரப்பு கிரிக்கெட் பைனல்: சரிவில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியா 278 ரன்கள் குவிப்பு!

 

பெர்த்: முத்தரப்பு கிரிக்கெட்டில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 278 ரன்களை குவித்துள்ளது. ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணி, மேக்ஸ்வெல்லின் பொறுப்பான ஆட்டத்தால் மீண்டது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் 15 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியாவும், 9 புள்ளிகளுடன் இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஒரு வெற்றியும் பெறாத இந்தியா வெளியேறியது.

 

முத்தரப்பு கிரிக்கெட் பைனல்: சரிவில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியா 278 ரன்கள் குவிப்பு! இந்நிலையில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெர்த் நகரில் இன்று நடைபெறுகிறது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் வேகப்பந்து வீச்சு தான் தாறுமாறாக எடுபடும். போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பிஞ்ச் 3 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய 12 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். பெய்லியும் 2 ரன்களில் அவுட் ஆனார். ஸ்டீவன் ஸ்மித் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடி 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 

அப்போது ஆஸ்திரேலியா 18வது ஓவரில் 60 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் ஐபிஎல் ஹீரோவான கிளென் மேக்ஸ்வெல்லும், மிட்சேல் மார்ஷும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். 98 பந்துகளில் 95 ரன்களை குவித்த மேக்ஸ்வென், பிராட் பந்து வீச்சில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

 

மார்ஷ் 60 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். பிராட் ஹட்டின் 9 ரன்களில் அவுட் ஆனார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு, 278 ரன்களை குவித்தது. 8வது விக்கெட்டாக களமிறங்கிய ஜேம்ஸ் பாக்னர் 24 பந்துகளில் அதிரடியாக 50 ரன்களை குவித்து, இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஆன்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/australia-scores-278-runs-the-tri-series-final-220093.html


முத்தரப்பு கிரிக்கெட் பைனலில் 112 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

 

Read more at: http://tamil.oneindia.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.